என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Maha"
- கார்த்திகை மாதம் பவுர்ணமி தினத்தில் திருக்கார்த்திகை தீப விழா அறக்கட்டளை சார்பில் மகாதீபம் ஏற்றப்பட்டது.
- இந்த தீபம் 30 கிலோமீட்டர் சுற்றளவுக்கு பிரகாசமாக தெரிந்தது. தொடர்ந்து மூன்று நாட்களுக்கு தீப விழா குழுவினர் மலைக்குச் சென்று திரிகளை மாற்றி தீபம் ஏற்றி வைத்தனர்.
திருச்செங்கோடு:
கொங்கு 7 சிவ ஸ்தலங்களில் முதன்மை ஸ்தலமாக போற்றப்படும் திருச்செங்கோடு மலை மீது அர்த்த நாரீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த மலைக்கோவிலிலிருந்து கிழக்கு புறமாக மலை உச்சிக்கு கரடு முரடான மலைப்பாதை இருக்கிறது. மலை உச்சியில் பங்கஜவல்லி சமேத பாண்டீஸ்வரர் கோவில் உள்ளது. இதை உச்சிப்பிள்ளையார் கோவில் என்று கூறுவர்.
இந்த உச்சி பிள்ளையார் கோவில் எதிரே உள்ள செங்குத்தான பாதையில் கார்த்திகை மாதம் பவுர்ணமி தினத்தில் திருக்கார்த்திகை தீப விழா அறக்கட்டளை சார்பில் மகாதீபம் ஏற்றப்பட்டது . 600 லிட்டர் நெய் பத்து மூட்டை பருத்தி நூல் கற்பூரம் பயன்படுத்தி மயில் முருகேஷ் சுவாமிகள் திண்டுக்கல் பாதாள செம்பு முருகன் அறிவாதீனம் சுவாமிகள் சிவகைலாயம் சதானந்த சுவாமிகள் ஆகியோர் மகா தீபம் ஏற்றி வைத்தனர்.
நேற்று மூன்றாவது நாளாக பொதுச்செயலாளர் திருநாவுக்கரசு தலைமையில் தீப விழா குழுவினர் மலை உச்சிக்கு சென்று திரிகளை மாற்றி விட்டு மகா தீபம் ஏற்றி வைத்தனர். தலைவர் குமரவேலு பொருளாளர் மனோகரன் துணை செயலாளர் பார்த்திபன் துணை தலைவர் வஜ்ரவேல் செயற்குழு உறுப்பினர்கள் மேஷன் மதன்குமார் சாந்தகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த தீபம் 30 கிலோமீட்டர் சுற்றளவுக்கு பிரகாசமாக தெரிந்தது. தொடர்ந்து மூன்று நாட்களுக்கு தீப விழா குழுவினர் மலைக்குச் சென்று திரிகளை மாற்றி தீபம் ஏற்றி வைத்தனர்.
தொடர்ந்து 5 நாட்களுக்கு இந்த தீபம் எரியும். மார்கழி திருவாதிரை தினத்தில் தீபக் கொப்பறையில் எஞ்சி உள்ள நெய் குழம்பு மை சிவகாமி அம்பாள் நடராஜர் சுவாமி பாதத்தில் வைத்து பூஜை செய்து பொதுமக்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் என்று பொதுச் செயலாளர் திருநாவுக்கரசு கூறினார் .
- சிம்பு, ஹன்சிகா இணைந்து நடித்துள்ள திரைப்படம் மஹா.
- இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இயக்குனர் ஜமீல் இயக்கத்தில் ஹன்சிகா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் மஹா. இதில் நடிகர் சிம்பு சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.
மாலிக் ஸ்ட்ரீம்ஸ் மற்றும் எட்செட்ரா எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்க, லக்ஷ்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் ஜூன் 10- ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டதை அடுத்து சில காரணங்களால் வெளியாகவில்லை.
மஹா திரைப்படம் போஸ்டர்
இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகிவுள்ளது. அதன்படி, ஜூலை 22-ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த போஸ்டர் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
'வாலு' திரைப்படத்திற்கு பிறகு சிம்புவும் ஹன்சிகாவும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் 'மஹா'. இத்திரைப்படம் ஹன்சிகாவின் 50-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
Team #Maha wishes you all a Merry Christmas.#Maha2ndLook@ihansika@dir_URJameel@GhibranOfficial@MathiyalaganV9@EtceteraEntert1pic.twitter.com/lgWs9ZI3Ns
— Done Channel (@DoneChannel1) December 24, 2018
👋🏻 guys,Saw all ur coments,as a director of the film my intension was 2 just create sumthing unique n not to knowingly hurt anybody's sentiments related 2 caste or religion,I believe in humanity n not in Hindu-muslim,so pls dont create caste and religion angle 🙏 @ihansika#Maha
— U.R.Jameel (@dir_URJameel) December 16, 2018
Glad to share you #maha first look. My 25th film and @ihansika 50th. Thanks a tonne to everyone for supporting me through the journey. All praises to God.#MAHAFirstLook@dir_URjameel. pic.twitter.com/aEbB19pY0D
— Ghibran (@GhibranOfficial) December 9, 2018
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்