என் மலர்
நீங்கள் தேடியது "malaysia"
- கடத்தலில் ஈடுபட்ட 2 பேர் கைது.
- அரியவகை சிவப்பு காது உள்ள அலங்கார நட்சத்திர ஆமைகள் பறிமுதல்.
ஆலந்தூர்:
மலேசிய நாட்டு தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சென்னைக்கு நேற்று காலை பயணிகள் விமானம் வந்தது. பயணிகளின் உடமைகளை சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது சென்னையைச் சேர்ந்த ரமேஷ் ஆகாஷ், தமிம் அன்சாரி முகமது ரபிக் ஆகிய இருவரும் சுற்றுலாப் பயணிகளாக, மலேசியா சென்று விட்டு வந்தது தெரிந்தது. அவர்கள் கொண்டு வந்த பெரிய அட்டை பெட்டியை சோதனை செய்தபோது அதில் அரியவகை சிவப்பு காது உள்ள அலங்கார நட்சத்திர ஆமைகள் ஏராளமானவை உயிருடன் இருந்ததை கண்டுபிடித்தனர்.
அவர்கள் நட்சத்திர ஆமைகளை கடத்தி வந்திருப்பது தெரிந்தது. இதையடுத்து மொத்தம் 5,400 சிவப்பு காது நட்சத்திர ஆமைகளை பறிமுதல் செய்தனர். இதன் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.75 லட்சம் என்று கூறப்படுகிறது.
இந்த வகை சிவப்புக் காது அலங்கார நட்சத்திர ஆமைகள் தாய்லாந்து, மலேசியா, ஐரோப்பிய நாடுகளில் அதிகமாக காணப்படுகின்றன. இவைகளை பெரிய பங்களாக்களில் அலங்கார தொட்டிகளில் வைத்து வளர்த்து வருகின்றனர். மேலும் மருந்துகள் தயாரிப்பதற்கும் பயன்படுத்தப்படுகின்றன.
பறிமுதல் செய்யப்பட்ட நட்சத்திர ஆமைகளை, மீண்டும் மலேசியா நாட்டிற்கு திருப்பி அனுப்பவும் அதற்கான செலவுகளை கடத்தலில் ஈடுபட்ட 2 பயணிகளிடமும் வசூலிக்கவும் முடிவு செய்தனர்.
அதன்படி நேற்று இரவு சென்னையில் இருந்து கோலாலம்பூர் சென்ற பயணிகள் விமானத்தில், 5,400 நட்சத்திர ஆமைகளும் மலேசிய நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஆமை கடத்தலில் ஈடுபட்ட ரமேஷ் ஆகாஷ் , தமிம் அன்சாரி முகமது ரபிக் ஆகிய 2 பேரையும் அதிகாரிகள் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- தொழில்நுட்பக் கோளாறை சரி செய்ய முடியவில்லை.
- 148 பயணிகளும் பல்வேறு ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
ஆலந்தூர்:
சென்னையில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூர் செல்லும் மலேசியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று நள்ளிரவு 12.20 மணிக்கு, சென்னையில் இருந்து கோலாலம்பூர் புறப்பட தயாராகிக் கொண்டு இருந்தது.
இதில் செலும் 148 பயணிகள், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து, அனைத்து சோதனைகளையும் முடித்துவிட்டு, விமானத்தில் ஏறுவதற்கு தயாராக இருந்தனர்.
இந்த நிலையில் அந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. நீண்ட நேரமாக முயற்சித்தும் தொழில்நுட்பக் கோளாறை சரி செய்ய முடியவில்லை. இதையடுத்து அந்த விமானம் ரத்து செய்யப்பட்டது.
விமானத்தில் பயணிக்க வந்திருந்த 148 பயணிகளும், சென்னை நகரில் உள்ள பல்வேறு ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். விமானம் தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்டு இன்று இரவு, மலேசியாவுக்கு புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- பதக்கங்களோடு திரும்பியுள்ள நம் வீரர்-வீராங்கனையரின் திறமையைப் பாராட்டுகிறோம்.
- 6 தங்கம், 13 வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 24 பதக்கங்களைக் குவித்து சாதனை படைத்துள்ளனர்.
சென்னை:
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-
மலேசியாவில் நடைபெற்ற 10-வது ஆசிய பசிபிக் காது கேளாதோருக்கான போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 12 மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர், வீராங்கனையர் வெவ்வேறு விளையாட்டுக்களில் 6 தங்கம், 13 வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 24 பதக்கங்களைக் குவித்து சாதனை படைத்துள்ளனர்.
இப்போட்டியில், இந்தியா ஒட்டுமொத்தமாக 55 பதக்கங்களை வென்றுள்ள நிலையில், அதில் 24 பதக்கங்களை தமிழ்நாட்டு வீரர், வீராங்கனையர் குவித்திருப்பதில் மகிழ்ச்சியும், பெருமிதமும் அடைந்தோம். பதக்கங்களை வென்ற தம்பிகள் மணிகண்டன், ராக்கப்பன், வினித், சாந்தனு, கார்த்திக், முகம்மது யாசின், சுதன் மற்றும் தங்கைகள் பிரியங்கா, சுபஸ்ரீ, சமீஹா பர்வீன், ஹரினி, ஜெர்லின் அனிகா ஆகியோருக்கு வாழ்த்துகள்.
நம் வீரர்களின் பயணம் உள்ளிட்ட செலவினங்களுக்கு தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை மூலமும், - 'எலைட்' திட்டத்தின் வழியாக தங்கை ஜெர்லின் அனிகாவுக்கும் நிதியுதவி அளித்திருந்தோம். தற்போது பதக்கங்களோடு திரும்பியுள்ள நம் வீரர்-வீராங்கனையரின் திறமையைப் பாராட்டுகிறோம்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- மலேசியாவில் அதிகளவில் தமிழர்கள் வசித்து வருகிறார்கள்.
- வரும் காலத்தில் மலேசியாவிலும் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என விருப்பம் தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டத்தை பூர்விகமாக கொண்ட இலங்கையை சேர்ந்த முன்னாள் அமைச்சர் செந்தில் தொண்டமான் ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்பதில் ஆர்வமிக்கவர்.
சிவகங்கையில் உள்ள இவரது தோப்பில் 10-க்கும் மேற்பட்ட காளைகளை வளர்த்து வருகிறார். தமிழகத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டில் காளைகளை பங்கேற்க செய்து வருகிறார். காளைகளுக்காக தனி கேரவன் வசதியும் செய்துள்ளார். உலக பிரசித்தி பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் அவரது காளைகள் களம் கண்டு வெற்றி வாகை சூடியது.

ஜல்லிக்கட்டை பார்வையிட்ட செந்தில் தொண்டமான் கூறுகையில், தமிழகத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டை காண்பதற்காக வெளிநாட்டில் இருந்து அதிகளவில் வருகை தருகிறார்கள். மலேசியாவில் அதிகளவில் தமிழர்கள் வசித்து வருகிறார்கள். வரும் காலத்தில் மலேசியாவிலும் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என விருப்பம் தெரிவித்தார்.
- மலேசியாவின் சில பகுதிகளில் 700 மில்லிமீட்டருக்கும் மேல் மழை பதிவாகியுள்ளது.
- 5000-த்திற்கும் மேற்பட்டார் நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
மலேசியாவில் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
இந்த கனமழையினால் 5 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. கிட்டத்தட்ட 5000-த்திற்கும் மேற்பட்டார் தங்கள் வசிப்பிடங்களை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
மலேசியாவின் சபா மற்றும் சரவாக்கின் சில பகுதிகளில் 700 மில்லிமீட்டருக்கும் மேல் மழை பதிவானதாக அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, நாளை வரை கனமழை தொடரும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
- நஜிப் ரசாக் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமானதால் அவருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
- நஜிப்பின் மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.
கோலாலம்பூர்:
மலேசியாவில் நஜிப் ரசாக் பிரதமராக இருந்த போது, அந்நாட்டின் அரசு முதலீட்டு நிதி அமைப்பான 1 எம்.டி.பி. நிறுவனத்தில் 4,500 கோடி ரூபாய் ஊழல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. மலேசியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த புகார் தொடர்பாக அவருக்கு சொந்தமான சொத்துக்கள் மீது மலேசிய ஊழல் தடுப்பு பிரிவினர் சோதனை நடத்தப்பட்டு ஏராளமான நகை மற்றும் பணம் கைப்பற்றப்பட்டது.
இதுதொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம், நஜிப் ரசாக் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமானதால் அவருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து நஜிப் ரசாக், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். மேல்முறையீட்டு வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது நஜிப் ரசாக்கிற்கு உயர் நீதிமன்றம் விதித்த 12 ஆண்டு சிறைத்தண்டனையை உறுதி செய்து நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
உயர் நீதிமன்ற நீதிபதி அளித்த தீர்ப்பு சரியானது என்றும், நஜிப்பின் மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். அத்துடன் நஜிப்பின் தண்டனையை உறுதி செய்தனர். எனவே, நஜிப் உடனடியாக சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டும். முதல் முன்னாள் பிரதமர் ஒருவர் மலேசியாவில் சிறையில் அடைக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
- வான்வெளி தாக்குதல் பயிற்சி மற்றும் போர் உத்திகள் மேற் கொள்ளப்பட்டன.
- சுகோய் போர் விமானங்கள் வானில் பறந்து சாகசம்.
குவான்டன்:
இந்திய விமானப்படையும், மலேசியாவின் ராயல் மலேசிய விமானப்படையும் பங்கேற்ற முதல் இருதரப்பு கூட்டுப் பயிற்சி மலேசியாவின் குவான்டன் விமானப்படைத் தளத்தில் நடைபெற்றது.
உதாரா சக்தி என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த பயிற்சியில் இந்திய விமானப்படையின் சுகோய் 30-எம்கேஐ, சி-17 ரக விமானங்கள், ராயல் மலேசியன் விமானப்படை எஸ்யூ 30-எம்கேஎம் விமானங்கள் பங்கேற்றன.
நான்கு நாட்கள் நடைபெற்ற இந்த பயிற்சியில் இரு நாட்டு விமானப்படைகளும் இணைந்து வான்வெளி தாக்குதல் பயிற்சி மற்றும் போர் உத்திகளை மேற்கொண்டன. பயிற்சியின் நிறைவு விழாவில், சுகோய்-30எம் கேஐ & சுகோய் -30 எம்கேஎம் போர் விமானங்கள் வானில் பறந்து சாகத்தை நிகழ்த்தின.

இந்தப் பயிற்சி, இந்திய விமானப்படையை சேர்ந்தவர்களுக்கு, ராயல் மலேசிய விமானப்படையின் சிறந்த நடைமுறைகளை அதன் நிபுணர்களுடன் பகிர்ந்து கொள்ளுவது மற்றும் பரஸ்பர போர் திறன்கள் குறித்து விவாதிப்பதற்கான வாய்ப்பையும் வழங்கியது.
இருநாடுகளிடையேயான நீண்டகால நட்புறவை மேலும் அதிகரிப்பதுடன், பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான வழிகளை மேம்படுத்தி, இருநாட்டு பாதுகாப்பை அதிகரித்துள்ளது என்றும் இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.
தொடர்ந்து இந்திய விமானப்படை குழுவினர், ஆஸ்திரேலியாவின் டார்வின் பகுதியில் நடக்கவுள்ள பிட்ச் பிளாக் -22 விமான பயிற்சியில் கலந்து கொள்ள உள்ளனர்.
- பல்வேறு வான்வழிப் போர் பயிற்சிகளில் இரு விமானப்படைகளும் பங்கேற்பு.
- இருநாட்டு பாதுகாப்பை ஒத்துழைப்பை அதிகரிக்க நடவடிக்கை.
இந்திய விமானப்படையும்,மலேஷியாவின் ராயல் மலேசிய விமானப்படையும் பங்கேற்கும் முதல் இருதரப்பு கூட்டுப் பயிற்சி மலேஷியாவில் நடைபெறுகிறது.
உதாரா சக்தி என்ற தலைப்பில் நடைபெறும் இந்த பயிற்சியில் பங்கேற்பதற்காக இந்திய விமானப்படைப் படையின் ஒருபிரிவு, விமானப்படை விமான தளத்தில் இருந்து மலேசியாவின் குந்தன் விமானத் தளத்திற்கு புறப்பட்டுச் சென்றது.
இந்திய விமானப்படையின் எஸ்யூ 30-எம்கேஐ, சி-17 ரக விமானங்கள் இந்த வான் பயிற்சியில் ஈடுபடுகின்றன. ராயல் மலேசியன் விமானப்படை எஸ்யூ 30-எம்கேஎம் விமானம் வான் பயிற்சியில் பங்கேற்கிறது.
இந்தப் பயிற்சி, இந்திய விமானப்படையை சேர்ந்தவர்களுக்கு, ராயல் மலேசிய விமானப்படையின் சிறந்த நடைமுறைகளை அதன் சிறந்த நிபுணர்களுடன் பகிர்ந்து கொள்ளுவது மற்றும் பரஸ்பர போர் திறன்கள் குறித்து விவாதிப்பதற்கான வாய்ப்பையும் வழங்கும்.
நான்கு நாட்கள் நடைபெறவுள்ள இந்தப் பயிற்சியில், இரு நாட்டு விமானப்படைகளுக்குமிடையே, பல்வேறு வான்வழிப் போர் பயிற்சிகள் இடம் பெறுகின்றன.
உதாரா சக்தி பயிற்சி இருநாடுகளிடையேயான நீண்டகால நட்புறவை மேலும் அதிகரிப்பதுடன், பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான வழிகளை மேம்படுத்தி, இருநாட்டு பாதுகாப்பை அதிகரிக்கும் என்று இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.
இந்திய பெண்கள் ஆக்கி அணி மலேசியாவில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணியுடன் 5 ஆட்டங்கள் கொண்ட போட்டித் தொடரில் பங்கேற்றது. இதில் நேற்று நடந்த 5-வது மற்றும் கடைசி ஆட்டத்தில் இந்தியா 1-0 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தியது. வெற்றிக்குரிய கோலை 35-வது நிமிடத்தில் இந்திய வீராங்கனை நவ்ஜோத் கவுர் அடித்தார். தோல்வியே சந்திக்காத இந்திய அணி இந்த தொடரை 4-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. 3-வது ஆட்டம் மட்டும் டிராவில் முடிந்தது.
வெற்றிக்கு பிறகு இந்திய அணி பயிற்சியாளர் ஜோர்ட் மர்ஜின் கூறுகையில், ‘நமது வீராங்கனைகள் பல முறை எதிரணியின் கோல் எல்லைக்குள் நுழைந்தனர். போதுமான ஷாட்டுகளை அடித்ததோடு, பெனால்டி கார்னர் வாய்ப்புகளையும் உருவாக்கினர். ஆனால் வாய்ப்புகளை கோலாக மாற்றுவதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டி உள்ளது’ என்றார். #India #Malaysia #Hockey
இந்திய பெண்கள் ஆக்கி அணி மலேசியாவில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணியுடன் 5 ஆட்டங்கள் கொண்ட போட்டி தொடரில் விளையாடி வருகிறது. இதில் இந்திய அணி முதல் 2 ஆட்டங்களில் முறையே 3-0, 5-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
3-வது ஆட்டம் 4-4 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. இந்த நிலையில் இந்தியா-மலேசியா பெண்கள் அணிகள் இடையிலான 4-வது ஆட்டம் கோலாலம்பூரில் நேற்று நடந்தது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தியது. லால்ரெம்சியாமி 55-வது நிமிடத்தில் வெற்றிக்கான கோலை அடித்தார். இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி போட்டி இன்று (வியாழக்கிழமை) மாலை 5.35 மணிக்கு நடக்கிறது.
மலேசியாவின் பிரபல சரக்கு விமான நிறுவனத்தில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்கள் 43 பேரை ஏற்றிக்கொண்டு, நாகிரி சிம்பிலான் மாகாணத்தின் நிலாய் நகரில் இருந்து தலைநகர் கோலாலம்பூருக்கு பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது.
இந்த பஸ் கோலாலம்பூரில் உள்ள சர்வதேச விமானநிலையத்துக்கு அருகே சென்றுகொண்டிருந்த போது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிக்கெட்டு ஓடியது.
பின்னர் சாலையோரம் இருந்த மழைநீர் கால்வாய் மீது பயங்கரமாக மோதியது. இந்த கோரவிபத்தில் பஸ் டிரைவர் உள்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிர் இழந்தனர்.
35 பேர் பலத்த காயம் அடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த மீட்பு குழுவினர் படுகாயம் அடைந்த அனைவரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலன் இன்றி 3 பேர் பரிதாபமாக இறந்தனர். மற்ற அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை. இது குறித்து விசாரணை நடக்கிறது. #Malaysia #BusAccident