என் மலர்
நீங்கள் தேடியது "Mamallapuram accident"
மாமல்லபுரம் அடுத்த சாலவான்குப்பம் பகுதியை சேர்ந்தவர் வேணுகோபால். இவரது மனைவி ராணி(வயது60). தயிர் வியாபாரம் செய்து வந்தார். இவர் புதிய எடையூர் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது சென்னையில் இருந்து பாண்டிச்சேரி நோக்கி சென்ற கார் திடீரென ராணி மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராணி உயிரிழந்தார்.
விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சென்னையில் இருந்து பாண்டிச்சேரி நோக்கி சென்ற சொகுசு கார் ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி அடுத்தடுத்து நின்ற 2 ஆட்டோக்கள் மீது பயங்கரமாக மோதியது.
- இதில் அருகில் நின்ற சாம்ப லால், உண்ணாமலை ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் அடுத்த தேவநேரி பகுதியில் உள்ள தோட்டத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்தவர் சாம்ப லால் (வயது40). வட மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார்.
வாயலூர் கிராமத்தை சேர்ந்த உண்ணாமலை(52). இன்று காலை இவர்கள் இருவரும் தேவநேரி பகுதியில் உள்ள பஸ் நிறுத்தத்தில் வேலைக்கு செல்ல ஷேர் ஆட்டோவுக்காக காத்திருந்தனர்.
அப்போது ஒன்றன்பின் ஒன்றாக 2 ஆட்டோக்கள் பஸ் நிறுத்தத்தில் வந்து நின்றன. அதில் இருந்த டிரைவர்களிடம் அவர்கள் பேசிக்கொண்டு இருந்தனர்.
அந்த நேரத்தில் சென்னையில் இருந்து பாண்டிச்சேரி நோக்கி சென்ற சொகுசு கார் ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி அடுத்தடுத்து நின்ற 2 ஆட்டோக்கள் மீது பயங்கரமாக மோதியது.
இதில் அருகில் நின்ற சாம்ப லால், உண்ணாமலை ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் ஆட்டோக்களில் இருந்த 5 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களில் 2 பேர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
சொகுசு காரில் 3 பேர் இருந்ததாக தெரிகிறது. இது குறித்து மாமல்லபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாமல்லபுரம்:
திருப்போரூரை அடுத்த மானாமதிபகுதியை சேர்ந்தவர் வீரராகவன் (வயது58) கொத்தனார். இவர் தன்னுடன் வேலை பார்க்கும் வாணியுடன் மோட்டார் சைக்கிளில் மாமல்லபுரம் அடுத்த தேவநேரிக்கு கட்டிட வேலைக்கு சென்றார்.
கிழக்கு கடற்கரை சாலை சந்திப்பில் வந்த போது சென்னையில் இருந்து பாண்டிச்சேரி நோக்கி சென்ற கார் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே வீரராகவன் பலியானார் படுகாயம் அடைந்த வாணிக்கு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.