என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mamata Banerjee"

    • முதலீடுகளை ஈர்ப்பதற்காக 6 நாள் பயணமாக சென்றார்.
    • பக்கிங்ஹாம் அரண்மனை பகுதி முதல் ஹைட் பூங்கா வரை அவரின் நடைப்பயிற்சி நீண்டுள்ளது.

    முதலீடுகளை ஈர்ப்பதற்காக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி 6 நாள் பயணமாக கடந்த சனிக்கிழமை இங்கிலாந்து பயணமானார்.

    தற்போது லண்டனில் உள்ள மம்தா பானர்ஜி காலையில் தனது பாதுகாலவர்களுடன் ஜாகிங் மற்றும் பேக் வாக் செய்து உடற்பயிற்சி மேற்கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    லண்டனில் பக்கிங்ஹாம் அரண்மனை பகுதி முதல் ஹைட் பூங்கா வரை அவரின் நடைப்பயிற்சி நீண்டுள்ளது. இந்த வீடியோக்களை பகிர்ந்த திரிணாமுல் காங்கிரசின் அதிகாரபூர்வ எக்ஸ் தளம், 'நடைப்பயிற்சி அல்ல, வெறும் வார்ம்-அப் என்று கேப்ஷன் இட்டுள்ளது.

    மேலும் அவர் பின்னோக்கி நடக்கும் பேக் வாக் எனப்படும் பயிற்சி மேற்கொண்ட வீடியோவும் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோக்கள் இணையத்தில் தீயாக பரவி வருகிறது. இதற்கிடையே லண்டன் இந்தியா ஹவுசில் நடந்த தேநீர் விருந்திலும் மம்தா பானர்ஜி கலந்துகொண்டார்.  

    • பாஜக ஆட்சிக்கு வந்தால், மேற்கு வங்க சட்டமன்றத்தில் இருந்து தி.காங்கிரஸ் முஸ்லிம் எம்.எல்.ஏ.-க்கள் வெளியேற்றப்படுவார்கள்- சுவேந்து அதிகாரி
    • இந்து தர்மத்தைப் பாதுகாக்க எனக்கு உரிமை உண்டு. ஆனால் உங்களுடைய பாணியில் பாதுகாக்க முடியாது.

    மேற்கு வங்கமாநிலத்தில் சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. எதிர்க்கட்சி தலைவரும், பாஜக தலைவருமான சுவேந்து அதிகாரி பேசும்போது "பாஜக ஆட்சிக்கு வந்தால், மேற்கு வங்க சட்டமன்றத்தில் இருந்து திரணாமுல் காங்கிரஸ் முஸ்லிம் எம்.எல்.ஏ.-க்கள் வெளியேற்றப்படுவார்கள்" எனத் தெரிவித்திருந்தார்.

    இதற்கு ம்தா பானர்ஜி கடுமையான வகையில் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக மம்தா பானர்ஜி பேசியதாவது:-

    நீங்கள் (பாஜக) இறக்குமதி செயத இந்து தர்மத்தை வேதங்கள் மற்றும் எங்களுடைய ஞானிகள் ஆதரிக்கவில்லை. முஸ்லிம்கள் குடியுரிமையை நீங்கள் எப்படி மறுக்க முடியும்?. இது மோசடியை தவிர வேறு ஒன்றுமில்லை. நீங்கள் போலி இந்துத்துவத்தை இறக்குமதி செய்து கொண்டிருக்கிறீர்கள்.

    இந்து தர்மத்தைப் பாதுகாக்க எனக்கு உரிமை உண்டு. ஆனால் உங்களுடைய பாணியில் பாதுகாக்க முடியாது. தயவுசெய்து இந்து என்ற கார்டை வைத்து விளையாட வேண்டாம்.

    இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

    • இல.கணேசனின் மூத்த சகோதரர் பிறந்தநாள் நவம்பர் 3-ந்தேதி வருகிறது.
    • நிகழ்ச்சியில் பங்கேற்க எண்ணற்ற மூத்த அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    கொல்கத்தா :

    மணிப்பூர், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களின் கவர்னர் இல.கணேசனின் மூத்த சகோதரர் பிறந்தநாள், நவம்பர் 3-ந்தேதி வருகிறது. இல.கணேசனின் சென்னை இல்லத்தில், இந்த பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது.

    அதில் பங்கேற்க வருமாறு மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜிக்கு இல.கணேசன் அழைப்பு விடுத்துள்ளார். அதை ஏற்று, சென்னையில் அந்த நிகழ்ச்சியில் மம்தா பானர்ஜி பங்கேற்பார் என்று மேற்கு வங்காள அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில் பங்கேற்க எண்ணற்ற மூத்த அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    • கவர்னர் இல.கணேசனின் மூத்த சகோதரர் 80-வது பிறந் நாள் விழா நாளை சென்னையில் நடைபெறுகிறது. இதில் மம்தா பானர்ஜியும் கலந்து கொள்கிறார்.
    • தனது சென்னை பயணத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசுகிறார்.

    சென்னை:

    தேர்தல் நெருங்கும் நேரங்களில் அரசியல் கட்சிகள் கூட்டணி கணக்குகளை போட தொடங்கும். அந்த வகையில் 2024 பாராளுமன்ற தேர்தலுக்கு இப்போதே ஒவ்வொரு கட்சியும் காய்களை நகர்த்த தொடங்கிவிட்டன.

    மத்தியில் வலுவான நிலையில் இருக்கும் பா.ஜனதாவை வீழ்த்த பலமான கூட்டணியை அமைத்தால் மட்டுமே முடியும் என்பதையும் பா.ஜனதாவுக்கு எதிரான எல்லா கட்சிகளும் உணர்ந்துள்ளன.

    எனவே கூட்டணிக்கான வியூகங்களை வகுப்பதில் எல்லா கட்சிகளும் ஒன்றோடு ஒன்று பேசி வருகின்றன. காங்கிரஸ், பா.ஜனதா அல்லாத ஒரு அணியை உருவாக்க வேண்டும் என்று தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் ஒரு முயற்சி எடுத்தார்.

    இதற்காக பல தலைவர்களை நேரிலும் சந்தித்தார். சென்னை வந்து முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். அதே நேரம் ஆம்ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் தி.மு.க. நட்பு பாராட்டி வருகிறது.

    பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமாரை முன்னிலைப்படுத்தி ஒரு கூட்டணியை உருவாக்கவும் முயற்சிகள் நடக்கிறது. அதேநேரம் அகில இந்திய அளவில் தவிர்க்க முடியாத தலைவர்களில் ஒருவராக மேற்குவங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜியும் உள்ளார்.

    அவரும் பா.ஜனதாவுக்கு எதிராக வலுவான அணியை உருவாக்குவதில் முனைப்பு காட்டினார். ஆனால் திரிணாமுல் காங்கிரஸ் மந்திரி வீட்டில் கோடிக்கணக்கில் பணம் பிடிபட்டது. அமைச்சர்களின் வீடுகளில் நடந்த சோதனைகளுக்கு பிறகு மத்திய அரசுடனான மோதல் போக்கிலும் மென்மையான அணுகுமுறையை கடைபிடிப்பதாக கூறப்படுகிறது.

    அதை உறுதிப்படுத்தும் வகையில் முந்தைய கவர்னருடன் மோதல் போக்கை கடைபிடித்த மம்தா தற்போதைய பொறுப்பு கவர்னரான இல.கணேசனுடன் நட்பு பாராட்டி வருகிறார்.

    இந்த நிலையில் கவர்னர் இல.கணேசனின் மூத்த சகோதரர் 80-வது பிறந் நாள் விழா நாளை சென்னையில் நடைபெறுகிறது. இதில் மம்தா பானர்ஜியும் கலந்து கொள்கிறார்.

    தனது சென்னை பயணத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பின் போது தேசிய அளவிலான அரசியல், கூட்டணி பற்றியும் விவாதிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கடந்த தேர்தலின்போது ராகுல்தான் பிரதமர் வேட்பாளர் என்று முதலில் முன்மொழிந்தது மு.க.ஸ்டாலின் தான்.

    எனவே இந்த தேர்தலில் தி.மு.க.வின் நிலைப்பாடு பற்றி இரு தலைவர்களும் விவாதிக்கிறார்கள். மம்தாவும் தனது கூட்டணி கணக்கு பற்றி மு.க.ஸ்டாலினுடன் விவாதிக்கிறார். அதற்கு மு.க.ஸ்டாலின் சொல்லும் விடையை பொறுத்தே அடுத்த கட்ட நகர்வுகள் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கூட்டணி சேருவது, பிரதமர் வேட்பாளர் என்பதில் ஒவ்வொரு கட்சிக்கும் மாறுபட்ட கருத்துக்கள் இருப்பதால் முதலில் கூட்டணி அமைத்து வெற்றி காண்பது, அதன் பிறகு பிரதமர் வேட்பாளரை தேர்வு செய்து கொள்ளலாம் என்ற முடிவுடன் மம்தா பேசுவார் என்று கூறப்படுகிறது.

    • மேற்கு வங்காள ஆளுநர் இல.கணேசனின் இல்ல விழாவில் பங்கேற்பதற்காக மம்தா பானர்ஜி வருகை
    • கொல்கத்தா இனிப்பு வகைகளை முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கினார்.

    சென்னை:

    மேற்கு வங்காள முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி இரண்டு நாள் பயணமாக இன்று மாலை சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவரை அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன் ஆகியோர் வரவேற்றனர்.

    மேற்கு வங்காள ஆளுநர் இல.கணேசனின் இல்ல விழாவில் பங்கேற்பதற்காக வந்துள்ள மம்தா பானர்ஜி, சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். அப்போது கொல்கத்தா இனிப்பு வகைகளை முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கினார். இந்த சந்திப்பு தேசிய அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 

    • ஸ்டாலினை சந்திக்காமல் சென்னையில் இருந்து நான் எவ்வாறு செல்வது?
    • கவர்னர் விவகாரம் குறித்து நாங்கள் ஆலோசிக்கவில்லை என மம்தா தகவல்

    சென்னை:

    மேற்கு வங்காள கவர்னர் (பொறுப்பு) இல.கணேசனின் இல்ல விழாவில் பங்கேற்பதற்காக மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி இன்று சென்னை வந்துள்ளார். சென்னை வந்துள்ள மம்தா பானர்ஜி ஆழ்வார்பேட்டையில் உள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இல்லத்திற்கு சென்றார். அங்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மம்தா பானர்ஜி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பிற்கு பின் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

    அப்போது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- மேற்குவங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி பல முறை சென்னைக்கு வந்துள்ளார். மேற்குவங்காள பொறுப்பு கவர்னராக இருக்கக்கூடிய இல.கணேசன் இல்லத்தில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் பங்கேற்க மம்தா பானர்ஜி சென்னைக்கு வந்திருக்கக்கூடிய சூழ்நிலையில் மரியாதை நிமித்தமாக என்னுடைய இல்லத்திற்கு வருகை தந்து என்னை சந்தித்துள்ளார். அதேநேரத்தில் நீங்கள் அவசியம் மேற்குவங்காளத்திற்கு என்னுடைய விருந்தினராக வர வேண்டும் என்று மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளார். அந்த அழைப்பை நான் ஏற்றுக்கொண்டுள்ளேன். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு தான்... தேர்தல் சந்திப்பு அல்ல... தேர்தல் குறித்து எதுவும் பேசவில்லை. அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை. எனவே, மரியாதை நிமித்தமான சந்திப்பிற்காகவே வந்தாரே தவிர வேறு எதற்கும் அல்ல. இது குறித்து அவரே (மம்தா பானர்ஜி) கூறுவார். இவ்வாறு அவர் பேசினார்.

    இதனை தொடர்ந்து மேற்குவங்காள முதல்வர் மம்தா பானர்ஜி பேசியதாவது:-

    மு.க.ஸ்டாலின் எனது சகோதரர் போன்றவர். நான் தனிப்பட்ட முறையில் அவரை சந்தித்தேன். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு. எனது மாநில கவர்னர் என்னை அவரது இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்கும்படி வேண்டுகோள் விடுத்த நிலையில் அதற்காக நான் சென்னை வந்தேன். இந்த சந்திப்பு நிகழ்ச்சி ஏற்கனவே திட்டமிடப்படவில்லை. ஆனால், ஸ்டாலினை சந்திக்காமல் சென்னையில் இருந்து நான் எவ்வாறு செல்வது? ஆகையால், மு.க.ஸ்டாலினை சந்திப்பது எனது கடமையாக நான் கருதுகிறேன். அவருடன் ஒரு கோப்பை தேநீர் குடிப்பது எனது கடமை.. சென்னையில் மிகவும் பிரபலமானது என்ன? தேநீர் குடிப்பது...

    இரு அரசியல் தலைவர்கள் சந்திக்கும்போது, அரசியல் அல்லாத மக்களின் நலன் சார்ந்த, வளர்ச்சி மற்றும் பிற விஷயங்கள் குறித்து பேசினோம். அரசியல் குறித்து பேசவில்லை. அரசியலை விட வளர்ச்சி மிகப்பெரியது என்று நான் நினைக்கிறேன். நான் எந்த ஒரு அரசியல் கட்சி குறித்தும் கருத்து தெரிவிக்கமாட்டேன். கவர்னர் விவகாரம் குறித்து நாங்கள் ஆலோசிக்கவில்லை. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடனான சந்திப்பு தனிப்பட்ட மற்றும் மரியாதை நிமித்தமான, சகோதர - சகோதரி முறையிலான சந்திப்பு. இது அரசியல் ரீதியிலான? சமூக ரீதியிலான? கலாச்சார ரீதியிலான? சந்திப்பா என நீங்களே தீர்மானித்துக்கொள்ளுங்கள்... இது அனைத்தையும் சார்ந்த சந்திப்பு. இவ்வாறு மம்தா பானர்ஜி பேசினார். 

    • உற்சாக மிகுதியில் இசை கலைஞர் ஒருவரிடம் இருந்த குச்சியை வாங்கி மம்தா பானர்ஜியும் செண்டை மேளத்தை அடித்தார்.
    • கேரளா இசைக்கேற்ப மம்தா பானர்ஜி மேளம் அடித்ததை பார்த்து அங்கு நின்றவர்கள் ஆச்சர்யப்பட்டனர்.

    சென்னை:

    சென்னை கோடம்பாக்கத்தில் மணிப்பூர் மற்றும் மேற்கு வங்காள கவர்னர் இல.கணேசன் சகோதரர் சதாபிஷேக விழா இன்று நடந்தது. விழாவில் பங்கேற்க வந்த மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மண்டபத்தின் நுழைவு வாயில் பகுதியில் கேரள பாரம்பரிய இசையான செண்டை மேளம் அடித்து அவரை வரவேற்றனர்.

    பாதுகாப்பு வீரர்களுடன் அங்கு வந்து இறங்கிய மம்தா பானர்ஜி செண்டை மேளம் அடிக்கப்படுவதையும், அதன் 'கணீர்' ஓசையையும் சிறிது நேரம் ரசித்தவாறு வந்தார். இசை கலைஞர்களை அவர் புன்னகையோடு பார்த்தார். அப்போது உற்சாக மிகுதியில் இசை கலைஞர் ஒருவரிடம் இருந்த குச்சியை வாங்கி மம்தா பானர்ஜியும் செண்டை மேளத்தை அடித்தார்.

    கேரளா இசைக்கேற்ப அவர் மேளம் அடித்ததை பார்த்து அங்கு நின்றவர்கள் ஆச்சர்யப்பட்டனர். பின்னர் சிரித்து கொண்டே குச்சியை அந்த இசை கலைஞரிடம் கொடுத்து விட்டு மண்டபத்திற்கு சென்றார்.

    • இந்தாண்டு இறுதியில் குஜராத் மாநிலத்துக்கு தேர்தல் நடைபெற உள்ளது.
    • குஜராத் தேர்தலுக்காக சி.ஏ.ஏ, என்.ஆர்.சியை பாஜக பயன்படுத்துகிறது என மம்தா பானர்ஜி குற்றம் சுமத்தினார்.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காளம், கிருஷ்ணாநகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    தேர்தல் வரும் போது எல்லாம் பா.ஜ.க. சி.ஏ.ஏ. மற்றும் என்.ஆர்.சி.யை அமல்படுத்துவோம் என்று பேசுகிறது. அடுத்த மாதம் குஜராத் மாநிலத்துக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இன்றும் ஒன்றரை ஆண்டுகளில் பாராளுமன்ற தேர்தல் வர உள்ளது. எனவே பா.ஜ.க. மீண்டும் சி.ஏ.ஏ.வை பற்றி பேசுகிறது.

    நாட்டின் குடிமக்கள் யார் என்று முடிவு செய்வதற்கு பா.ஜ.க. யார்? மதுவா சமூகத்தினர் இந்தியாவின் குடிமக்கள் ஆவார்கள். பா.ஜ.க. மேற்கு வங்காளத்தின் வடக்கு பகுதிகளில் உள்ள ராஜ்பன்சீஸ் மற்றும் கூர்கா இனத்தவர்களை தூண்டிவிட்டு பிரிவினைவாதத்தை ஏற்படுத்த முயல்கிறது. மேற்கு வங்காளத்தைப் பிரிக்க நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.

    வரும் 2024 பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு பா.ஜ.க.வால் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது. கடந்த 2019 ஆம் ஆண்டு நாட்டில் இருந்த அரசியல் சூழல், தற்போது மாறிவிட்டது. கடந்த 2019 ஆம் ஆண்டு பா.ஜ.க. பீகார், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் ஆட்சியில் இருந்தது. ஆனால், இப்போது இல்லை. பல மாநிலங்களில் பா.ஜ.க. ஆட்சியில் இல்லை. பா.ஜ.க. பல மாநிலங்களில் ஏற்கனவே இறுதி நிலையை எட்டிவிட்டது. அதனால்தான் தற்போது எதிர்க்கட்சி தலைவர்களை அவதூறாகப் பேசி கைது செய்து வருகிறது என தெரிவித்தார்.

    • ஜி.எஸ்.டி.யை அமல்படுத்த மாநிலங்கள் ஒப்புக்கொண்டுள்ளன.
    • நிதி வழங்குவது மத்திய அரசின் அரசியல் சட்ட கடமை.

    கொல்கத்தா :

    மேற்கு வங்காள மாநிலத்தில் பழங்குடியினர் நிறைந்த ஜார்கிராம் மாவட்டத்தில் சுதந்திர போராட்ட வீரர் பிர்சா முண்டா பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடந்தது.

    அதில், மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கலந்துகொண்டார். கூட்டத்தில், அவர் மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார்.

    மம்தா பானர்ஜி பேசியதாவது:-

    ஜி.எஸ்.டி.யை அமல்படுத்த மாநிலங்கள் ஒப்புக்கொண்டுள்ளன. எங்களுக்குரிய பங்கை மத்திய அரசு தந்து விடும் என்று நினைத்தோம். ஆனால், எல்லா பணத்தையும் எடுத்துக்கொண்டு, மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி. பங்கை மத்திய அரசு வழங்கவில்லை.

    மாநிலங்களுக்கு பங்கு வழங்க முடியாவிட்டால், ஜி.எஸ்.டி. முறையையே மத்திய அரசு கைவிட்டு விடலாம். இது ஒன்றும் பா.ஜனதா பணம் அல்ல. மக்கள் பணம். அதை ஜி.எஸ்.டி. மூலமாக மத்திய அரசு பறித்துக்கொள்கிறது.

    பிரதமர் மோடியை நேரில் சந்தித்து முறையிட்டேன். அதன்பிறகும் ஒன்றும் நடக்கவில்லை. அவர் காலை தொட்டு நான் பணம் கேட்க வேண்டும் என்று அவர் விரும்புகிறாரா? அவருக்கு ஒன்று சொல்லிக் கொள்கிறேன். பாக்கி தொகையை கொடுங்கள் அல்லது பதவி விலகுங்கள்.

    மேலும், மாநிலங்கள் மத்திய அரசுக்கு ஜி.எஸ்.டி. வசூலை செலுத்துவதை நிறுத்த வேண்டி இருக்கும்.

    100 நாள் வேலைத்திட்டத்துக்கான நிதியையும் மத்திய அரசு விடுவிப்பது இல்லை. நிதி வழங்குவது மத்திய அரசின் அரசியல் சட்ட கடமை. நிதி பெறுவதற்கான மாநிலங்களின் உரிமையை மத்திய அரசு பறிக்கிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர், மம்தா பானர்ஜி, அப்பகுதி மக்களுடன் உரையாடினார். மத்திய அரசு நிதி அளிக்காததால், வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு அளிக்கும் 'ஜல் ஜீவன்' திட்டத்தை செயல்படுத்த முடியவில்லை என்று அவர் கூறினார்.

    அங்குள்ள சாலையோர கடை ஒன்றில், மம்தா பானர்ஜி வடை சுட்டு கொடுத்தார்.

    • மாநில முதல்-மந்திரிகளின் கூட்டம் டெல்லியில் டிசம்பர் 5-ந்தேதி நடக்கிறது.
    • பிரதமர் மோடியை மம்தா தனியாக சந்திக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

    கொல்கத்தா :

    மாநில முதல்-மந்திரிகளின் கூட்டம் டெல்லியில் அடுத்த மாதம் (டிசம்பர்) 5-ந்தேதி நடக்கிறது. இதில் மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜியும் கலந்து கொள்கிறார்.

    இந்த கூட்டத்துக்கு இடையே பிரதமர் மோடியை அவர் தனியாக சந்திக்க வாய்ப்பு இருப்பதாக மாநில அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

    அவ்வாறு இந்த சந்திப்பு நடந்தால், மாநிலத்துக்கு மத்திய அரசு கொடுக்க வேண்டிய நிலுவைத்தொகைகளை, குறிப்பாக 100 நாள் வேலைத்திட்ட நிலுவையை உடனடியாக வழங்க பிரதமரிடம் மம்தா பானர்ஜி வலியுறுத்துவார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மேலும் மேற்கு வங்காளத்தின் முர்ஷிதாபாத், மால்டா, நாடியா மாவட்டங்களில் கங்கை நதியரிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுக்குமாறும் வேண்டுகோள் விடுப்பார் என்றும் அவர்கள் கூறினர்.

    • ஜி-20 உச்சி மாநாடு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் டிசம்பர் மாதம் 5-ம் தேதி நடக்கிறது.
    • இதில் பங்கேற்பதற்காக மம்தா பானர்ஜி 5-ம் தேதி டெல்லிக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.

    கொல்கத்தா:

    இந்தியா, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட 20 வளரும் மற்றும் வளர்ந்த நாடுகள் அடங்கிய ஜி-20 அமைப்பின் உச்சி மாநாடு அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியாவில் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் மற்றும் ஆலோசனைகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன.

    இந்நிலையில், அடுத்த மாதம் (டிசம்பர்) 5-ம் தேதி மாநில முதல் மந்திரிகள் கூட்டத்தை பிரதமர் மோடி நடத்துகிறார். இதில் பங்கேற்பதை மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி உறுதி செய்துள்ளார்.

    இதுதொடர்பாக, மம்தா பானர்ஜி கூறுகையில், பிரதமர் மோடியின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க 5-ம் தேதி டெல்லி செல்கிறேன். மேற்கு வங்காள முதல் மந்திரியாக அல்லாமல், திரிணாமுல் காங்கிரஸ் தலைவராக பங்கேற்பேன் என தெரிவித்தார்.

    இந்தக் கூட்டத்துக்கு இடையே பிரதமர் மோடியை அவர் சந்தித்துப் பேசுவார் என மாநில அரசு வட்டாரங்கள் ஏற்கனவே தெரிவித்து 

    • மம்தா பானர்ஜிக்கு அருகில் அமர்ந்துள்ள நபர், படகை எப்படி செலுத்துவது என்று அவருக்கு விளக்குகிறார்
    • மாணவர்களுக்கு சாக்லேட்டுகள் மற்றும் பொம்மைகளை வழங்கினார் மம்தா பானர்ஜி

    கொல்கத்தா:

    திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்காள முதல்வருமான மம்தா பானர்ஜி வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் பயணம் செய்த படகை அவரே செலுத்தினார். இது தொடர்பான வீடியோவை திரிணாமுல் காங்கிரஸ் டுவிட்டர் பக்கத்தில் வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில், மம்தா பானர்ஜிக்கு அருகில் அமர்ந்துள்ள நபர், படகை எப்படி செலுத்துவது என்று அவருக்கு விளக்குகிறார்.

    இதன்பின்னர், ஹஸ்னாபாத் பள்ளிக்கு சென்ற அவர், மாணவர்களுக்கு சாக்லேட்டுகள் மற்றும் பொம்மைகளை வழங்கினார். பின்பு, அந்த பகுதியில் கபுகுர் என்ற இடத்தில் உள்ள மக்களுக்கு குளிர்கால ஆடைகளையும் அவர் வழங்கினார். 

    ×