என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "mani mandapam"
- தஞ்சாவூர் பெரிய கோவிலில் இன்று மாமன்னன் ராஜராஜசோழன் 1038-வது சதய விழா நடந்தது.
- காவிரி உரிமை மீட்பு குழு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் பெரிய கோவிலில் இன்று மாமன்னன் ராஜராஜ சோழன் 1038-வது சதய விழாவை முன்னிட்டு அவரது சிலைக்கு தமிழ் தேசிய பேரியக்கம், காவிரி உரிமை மீட்பு குழு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
அப்போது உடையா ளூரில் மாமன்னன் ராஜராஜ சோழனுக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியில் தமிழ் தேசிய பேரியக்கம் நிர்வாகிகள் வைகறை, பழ. ராஜேந்திரன், சீனிவாசன், தனசேகரன், பாலன், தீன் தமிழன், காவிரி உரிமை மீட்பு குழு நிர்வாகிகள் சாமி கரிகாலன், வெள்ளா பெரம்பூர் ரமேஷ், செந்தில் வேலன், விஜய் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- பரமக்குடியில் இம்மானுவேல் சேகரனுக்கு சிலையுடன் கூடிய மணிமண்டபம் ரூ.3 கோடி மதிப்பீட்டில் அமைத்திட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
- இதையடுத்து தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. சென்னையில் முதல்-அமைச்சரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.
சங்கரன்கோவில்:
கடந்த 11-ந் தேதி தியாகி இம்மானு வேல் சேகரனின் 66-வது நினைவு தினத்தை முன்னிட்டு நீண்ட நாள் கோரிக்கையான பரமக்குடி யில் அவருக்கு சிலையுடன் கூடிய மணிமண்டபம் ரூ.3 கோடி மதிப்பீட்டில் அமைத்திட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இதையடுத்து தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை தென்காசி மாவட்ட தேவேந்திரகுல வேளாளர் சமுதாய மக்கள் சார்பில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. சென்னையில் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்துக் கொண்டார்.
அப்போது அமைச்சர்கள் ராஜகண்ணப்பன் மற்றும் கயல்விழி செல்வராஜ் , சண்முகையா எம்.எல்.ஏ. ஆகியோர் உடனிருந்தனர்.
- அண்ணாநகர் பகுதியில் ரூ. 99 லட்சம் மதிப்பீட்டில் நினைவு மண்டபம் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
- பல்வேறு பிரச்சினைகளால் கட்டுமானப் பணியில் தொய்வு ஏற்பட்டு கடந்த ஆண்டு நினைவு மண்டபம் கட்டி முடிக்கப்பட்டது.
அச்சரப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கோழியாளம் கிராமத்தில் பிறந்தவர் இரட்டைமலை சீனிவாசன். இவர் விடுதலைக்கு முன்பே ஆங்கிலேயர் காலத்தில் தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக போராடியவர். இவரின் பிறந்த நாளான ஜூலை 7 -ந் தேதி அரசு விழாவாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இரட்டைமலை சீனிவாசனுக்கு அவர் பிறந்த மாவட்டத்தில் நினைவு மண்டபம் அமைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதைத்தொடர்ந்து சென்னை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அச்சரப்பாக்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட அண்ணாநகர் பகுதியில் ரூ. 99 லட்சம் மதிப்பீட்டில் நினைவு மண்டபம் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
பின்னர் இதற்கான நிதி ஒதுக்கப்பட்டு கடந்த 2020-ம் ஆண்டு இரட்டைமலை சீனிவாசனுக்கு நினைவு மண்டபம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கின.
இதைத்தொடர்ந்து பல்வேறு பிரச்சினைகளால் கட்டுமானப் பணியில் தொய்வு ஏற்பட்டு கடந்த ஆண்டு நினைவு மண்டபம் கட்டி முடிக்கப்பட்டது.
தற்போது மணி மண்டப கட்டுமானப்பணிகள் முழுவதும் நிறைவடைந்து ஒரு ஆண்டுக்கு மேலாகியும் திறக்கப்படாமல் புதர் மண்டி காட்சி அளிக்கிறது. மேலும் அங்கிருந்த கழிவறையை மர்ம நபர்கள் உடைத்தும் சேதப்படுத்தி உள்ளனர்.
இரட்டைமலை சீனிவாசன் மணிமண்டபம் திறக்கப்படாமல் உள்ளதால் சமூகவிரோதிகளின் கூடாரமாக மாறத்தொடங்கி இருக்கிறது.
எனவே இரட்டைமலை சீனிவாசனின் மணிமண்டபத்தை திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக போராடிய இரட்டை மலை சீனிவாசனுக்கு எங்கள் பகுதியில் மணிமண்டபம் கட்டப்பட்டு இருப்பது மகிழ்ச்சி. ஆனால் மணி மண்டபம் பணிகள் முடிந்து அதனை திறப்பதற்கான எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. ஒரு ஆண்டுக்கு மேல் மணிமண்டபம் புதர் மண்டி காணப்படுகிறது. இரவு நேரங்களில் அப்பகுதி சமூக விரோதிகளின் கூடாராமாக மாறி வருகிறது. மணிமண்டபத்தை சுற்றியுள்ள முட்பதர்களை அகற்றி இயற்கையான சுற்றுச்சூழலில் இரட்டைமலை சீனிவாசன் நினைவு மண்டபத்தை உடனே திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
- தியாகி இமானுவேல் சேகரனாருக்கு மணிமண்டபத்திற்கு அரசு அறிவிப்புக்கு முன்னாள் கவுன்சிலர் பொன்னையாபுரம் மனோகரன் வரவேற்பளித்தார்.
- ரூ.3 கோடி செலவில் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும் என தமிழக முதல மைச்சர் மு.க.ஸ்டா லின் அறிவித்துள்ளார்.
ராமநாதபுரம்
தியாகி இமானுவேல் சேகரனாரின் 66-வது நினைவு தினம் நேற்று பர மக்குடியில் அனுசரிக்கப்பட் டது. இதையொட்டி அவரது நினைவிடத்தில் பி.பி.எப்.டி. அமைப்பின் நிறுவன தலை வரும், முன்னாள் கவுன்சில ருமான பொன்னையாபுரம் மனோகரன் தனது ஆதரவா ளர்களுடன் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தியாகி இமானுவேல் சேகரனாருக்கு ரூ.3 கோடி செலவில் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும் என தமிழக முதல மைச்சர் மு.க.ஸ்டா லின் அறிவித்துள்ளார். அவ ருக்கு எங்கள் அமைப் பின் சார்பில் நெஞ்சார்ந்த நன் றியை தெரிவித்துக் கொள் கிறோம்.இந்த அறிவிப்பு மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. சுதந்திரப் போராட்டத்தை போல் இது நீண்ட போராட் டமாக இருந்தது. இதற்கு முழு முயற்சி மேற்கொண்ட அனைவருக்கும் எங்கள் அமைப்பின் சார்பில் நன் றியை தெரிவித்துக் கொள் கிறோம் என்றார்.
நினைவஞ்சலி நிகழ்ச்சி யில் அண்டக்குடி முருகே சன், காயாம்பு பாண்டியன், காளிதாஸ் பாண்டியன், சீதக்காதி, மோகன், முருகன், மகாலிங்கம், விஜயகாந்த், சுரேஷ், கதிர், முரளி, தனுஷ் பிரபாகரன், மதி இளமாறன், ராமநாத பிரபு, சரோன் இளமாறன் உள்ளிட்ட பி.பி.எப்.டி. அமைப்பின் நிர் வாகிகள் திரளாக கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தி னர்.
- ஆவின் நிறுவனத்திற்கு சொந்தமான இடத்தில் மணிமண்டபம் அமைப்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
- இடஒதுக்கீடு போராட்டத்தில் மரணித்த 21 சமூக நீதி போராளிகளுக்கு அரங்கம் அமைக்க ஆய்வு மேற்கொண்டார்.
விழுப்புரம்:
உயர்கல்வித்துறை அமைச்சர்பொன்முடி , மாவட்ட கலெக்டர் பழனி,தலைமையில், விக்கிரவாண்டி எம்.எல்ஏ. புகழேந்தி , விழுப்புரம் எம்.எல்.ஏ டாக்டர் லட்சுமணன் ஆகியோர் முன்னிலையில், விழுப்புரம் மாவட்டம், இடஒதுக்கீடு போராட்டத்தில் மரணித்த 21 சமூக நீதி போராளிகளுக்கு அரங்கமும், முன்னாள் அமைச்சரும் ஏழை எளியோரின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக பெரும் பங்காற்றி மறைந்த தலைவர் ஆ.கோவிந்தசாமிக்கு திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் விழு ப்புரம் நகராட்சிக்குட்பட்ட திருச்சி - சென்னை நெடுஞ்சாலையில் வழுதரெட்டி கிராமத்தில், ஆவின் நிறுவனத்திற்கு சொந்தமான இடத்தில் மணிமண்டபம் அமைப்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது அமைச்சர் பொன்முடி கூறியதாவது ,
தமிழ்நாடு முதல்- அமைச்சர் 2.9.2021 அன்று நடைபெற்ற சட்டமன்ற பேரவைத் தொடரில், சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் 1987-ம் ஆண்டு இடஒதுக்கீட்டு போராட்டத்தில் காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டிற்கு பலியான 21 சமூக நீதி போராளிகளின் தியாகத்தை மதிக்கக்கூடிய வகையில் ரூ.5.45 கோடி மதிப்பீட்டில், விழுப்புரம் மாவட்டத்தில் சமூக நீதி தியாகிகள் அரங்கம் அமைத்திட அறிவித்தார்கள்.
மேலும், 6.9.2021 சட்டமன்ற பேரவை கூட்டத்தொடரில், 2021- 2022 -ம் ஆண்டிற்கான செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையின் போது செய்தித்துறை அமைச்சர், முன்னாள் அமைச்சரும் ஏழை எளியோரின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக பெரும் பங்காற்றி மறைந்த தனிப்பெரும் தலைவரும், அண்ணா மற்றும் கருணாநிதி அமைச்ச ரவையில் சிறப்புடன் பணியாற்றியவருமானஆ.கோவிந்தசாமி யின் நினைவாக விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.3.75 கோடி மதிப்பீட்டில் திருவுருவச்சிலையுடன் கூடிய நினைவு அரங்கம் அமைத்திட அறிவித்தார். அதனடிப்படையில், விழுப்பு ரம் நகராட்சிக்குட்பட்ட திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், வழுதரெட்டி கிராமத்தில், ஆவின் நிறுவனத்திற்கு சொந்தமான 1.12.0 ஹெக்டேர் பரப்பாவில் மணிமண்டபம் அமைப்பது தொடர்பான வரைபடம் உள்ளிட்டவை தயார் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் ெபான்முடி கூறினார்.
ஆய்வின்போது, மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் ஜெயச்சந்திரன், விழுப்புரம் முன்னாள் நகர சபை தலைவர் ஜனகராஜ் மாநில தி.மு.க. விவசாய பிரிவு அமைப்பாளர் அன்னியூர் சிவா ,வருவாய் கோட்டாட்சியர் குமாரி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பரிதி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்)சிவா, உதவி செயற்பொறியாளர் விஜயா, உதவி பொறியாளர் பாலாஜி, விழுப்புரம் தாசில்தார் வேல்முருகன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி)கலையாமணி உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- கள் இறக்குவதற்கு தமிழகத்தில் அனுமதி வழங்க வேண்டும்.
- நிகழ்ச்சியில் மாநில நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
சென்னை:
சிலம்பு செல்வர் ம.பொ.சிவஞானத்தின் 118-வது பிறந்த நாள் கிராமணி மக்கள் முன்னேற்ற சங்க நிறுவனத் தலைவர் டாக்டர் கே.வி.எஸ். சரவணன் தலைமையில் தியாகராய நகரில் கொண்டாடப்பட்டது.
பிறந்தநாளையொட்டி ம.பொ.சி. உருவப்படத்திற்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கி 1000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் சங்க நிறுவனர் டாக்டர் கே.வி.எஸ்.சரவணன் பேசுகையில், தமிழகத்தை சேர்ந்த இந்திய விடுதலை போராட்ட வீரரும் தமிழறிஞருமான சிலம்பு செல்வர் ம.பொ.சிவஞானத்தின் வரலாற்றை சிறப்பிக்கும் வகையில் அரசு அவருக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும்.
பனைத்தொழில் பாதிப்படையும் வகையில் பதனீர் இறக்கும் தொழிலாளர்கள் மீது பொய் வழக்கு போடுவதை அரசு தடுத்து நிறுத்த வேண்டும். கள் இறக்குவதற்கு தமிழகத்தில் அனுமதி வழங்க வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் மாநில நிர்வாகிகள் எம்.பி.மணி, அன்பழகன், உதயா, ஜெயசங்கர், உதய சங்கர், மற்றும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வடசென்னை, தென்சென்னை மாவட்ட நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
- கருணாநிதி ஆட்சியில் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 3 விவசாயிகள் உயிா்த் தியாகம் செய்துள்ளனா்.
- தமிழகம் முழுவதும் உயிரிழந்த 46 விவசாயிகளின் புகைப்படங்கள் வைக்கப்பட வேண்டும்.
பெருமாநல்லூர் :
திருப்பூா் மாவட்டம் பெருமாநல்லூரில் உள்ள விவசாய தியாகிகள் நினைவிடத்தில் பாஜக., மாநிலத் தலைவா் அண்ணாமலை அஞ்சலி செலுத்தினாா். பின்னா் அவா் நிருபர்களிடம் கூறியதாவது :- தமிழகத்தில் மின் கட்டணம் குறைக்க போராடிய விவசாயிகள் மீது அப்போதைய முதல்வா் கருணாநிதி ஆட்சியில் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 3 விவசாயிகள் உயிா்த் தியாகம் செய்துள்ளனா். விவசாயிகள் மீதான திமுக.,வினா் பாா்வை தற்போது வரையில் மாறவில்லை. இந்த சம்பவத்தில் உயிரிழந்த 3 விவசாயிகளுக்கு தமிழக அரசு விரைவில் மணிமண்டபம் கட்ட வேண்டும்.
பல்வேறு காலகட்டங்களில் தமிழகம் முழுவதும் உயிரிழந்த 46 விவசாயிகளின் புகைப்படங்கள் இங்கு கட்டப்படும் மணிமண்டபத்தில் வைக்கப்பட வேண்டும்.பிரதமா் மோடி அரசாங்கம் இலவச மின்சாரத்துக்கும், விவசாயிகளுக்கும் எப்போதும் துணை நிற்கும். தமிழகத்தில் கள்ளுக்கடை திறப்பதை பாஜக., ஆதரிக்கும். ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த பெருமை பிரதமா் மோடியையே சாரும் என்றாா்.இதைத் தொடா்ந்து, தியாகிகள் நினைவிடத்தில் ஒலிபெருக்கி வைக்க காவல் துறையினா் அனுமதி வழங்காததைக் கண்டித்து பா.ஜ.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
- தியாகி இமானுவேல் சேகரனுக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்று கவர்னரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
- கவர்னர் ரவி இமானுவேல் சேகரன் நினைவிடத்திற்கு சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
ராமநாதபுரம்
தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி பரமக்குடி யில் உள்ள தியாகி இமானு வேல்சேகரன் நினைவிடத் தில் மலர் அஞ்சலி செலுத்த வருகை தந்தார். அவரை தேவேந்திர பண்பாட்டுக் கழக தலைவர் பரம்பை பாலா பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
இதனை தொடர்ந்து இமானுவேல் சேகரின் மகள் சுந்தரி பிரபா ராணி பேரன்கள் ரமேஷ், கோம கன், சக்கரவர்த்தி, சந்துரு, பேத்தி லதா ஆகியோர் நினைவு பரிசு வழங்கினர்.
இதனை தொடர்ந்து கவர்னர் ரவி இமானுவேல் சேகரன் நினைவிடத்திற்கு சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி னார். பின்னர் தேவேந்திர பண்பாட்டுக் கழகம், இமானுவேல் சேகரன் குடும்பத்தினர் சார்பாக தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தை பட்டியல் இனத்தில் இருந்து வெளி யேற்ற வேண்டும், இமானு வேல் சேகரன் நினை விடத்தில் மணிமண்டபம் கட்ட வேண்டும், அவரது பிறந்தநாளை அரசு விழா வாக அறிவிக்க வேண்டும், ஓட்டப்பாலம் ரவுண்டானா வில் இமானுவேல் சேகரன் திருவுருவச் சிலை அமைக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகள் அடங்கிய மனு அளிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து முதுகுளத்தூர் தாலுகா புல்வாய்குளம் கிராமம் சார்பாகவும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்ட கவுரவ விரிவுரையாளர்கள் சார்பாக தமிழகத்தில் பணி யாற்றும் 6000-க்கும் மேற்பட்ட கவுரவ விரி வுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் தேவேந்திர பண்பாட்டு கழக செயலாளர் புண்ணிய மூர்த்தி, பொருளாளர் முருகேசன், பா.ஜனதா நிர்வாகி குமார், வழக்கறிஞர் பிரபு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- ரூ.20 லட்சத்தில் மகன்கள் கட்டினர்
- 1000 பேருக்கு மரக்கன்றுகள் வழங்கினர்
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அடுத்த பச்சூர் கொத்தூர் கிராம பகுதியை சேர்ந்தவர் நீலகண்டன் (வயது 70).
இவரது மனைவி இந்திராணி இவர்களுக்கு 3 மகன்கள் 2 மகழ்கள் உள்ளனர். நீலகண்டன் அப்பகுதி மக்களுக்கு இலவசமாக நாட்டு மருத்துவம் பார்த்து வந்தார்.
பெண் கல்வியை ஊக்குவித்து பல பெண்களுக்கு அனைத்து விதமான உதவிகளையும் செய்து அப்பகுதி மக்களிடையே பேரன்பை பெற்றிருந்தார்.
மேலும் தனது 3 மகன்களான ரமேஷ், ராஜேந்திரன், மகேந்திரன் ஆகியோரை நல்ல முறையில் படிக்க வைத்து இன்று வெளிநாட்டில் பல லட்ச ரூபாய் சம்பளம் வாங்கும் நிலைக்கு ஆளாக்கியுள்ளார்.
இந்நிலையில் நீலகண்டன் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் வெளிநாட்டில் இருந்து வீடு திரும்பிய அவரது மகன்கள் அவருக்கு சுமார் ரூ.20 லட்சம் செலவில் மணிமண்டபம் கட்டினர் பின்னர் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு ஆடு வெட்டி பிரியாணி விருந்து அளித்தனர். மேலும் சுமார் 1000 பேருக்கு மரக்கன்றுகள் வழங்கினர்.
இதுகுறித்து அவரது மகன்கள் கூறுகையில்:-
எங்களுடைய தந்தை எங்களை கஷ்டப்பட்டு படிக்க வைத்து ஆளாக்கினார். அப்பா செய்ததில் நாங்கள் சிறிது கூட அவருக்காக எதுவும் செய்யவில்லை. எங்களுடைய அப்பா அடுத்தவருக்கு உதவி செய்ய வேண்டும் என அவ்வபோது கூறி வருவார்.
அதன் காரணமாக அவருடைய நினைவு நாளில் தங்களால் முடிந்த உதவிகளை செய்வேன் என்றும் மேலும் இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் தங்களுடைய பெற்றோர்களை நல்ல முறையில் கவனித்துக் கொள்ள வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தனர்.
- டி.எம்.சவுந்தரராஜனுக்கு மதுரையில் மணிமண்டபம் அமைக்க வேண்டும்.
- அ.தி.மு.க. கவுன்சிலர் ரூபினிகுமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
மதுரை
மதுரை மாநகராட்சி கூட்டத்தில் 48-வதுவார்டு கவுன்சிலர் ரூபினிகுமார் பேசும்போது கூறியதாவது:-
மதுரை பழைய குயவர்பாளையம் பகுதியில் பல்வேறு அடிப்படை வசதிகளை மாநகராட்சி நிர்வாகம் இன்னும் முழுமையாக செய்து தரவில்லை. அதனை விரைந்து செய்ய வேண்டும்.
மேலும் மதுரைக்கு புகழ் சேர்த்த சினிமா பின்னணி பாடகர் டி.எம். சவுந்தர ராஜன் அவர்களுக்கு சிலை அமைக்கவும், மணிமண்டபம் அமைக்கவும் சட்டசபையில் முதலில் குரல் எழுப்பியவர் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அவர்கள். தற்போது தமிழக அரசு டி. எம். சவுந்தரராஜனுக்கு சிலை அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்காக சட்டசபையில் குரல் எழுப்பிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூக்கு பொதுமக்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
மேலும் மதுரையில் டி. எம்.சவுந்தரராஜனுக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்றும் சட்ட சபையில் குரல் கொடுத்த செல்லூர் ராஜூ அவர்களுக்கு நன்றிதனையும், பாராட்டுதலையும் தெரிவிக்கிறோம்.
இந்த கோரிக்கைக்கு வலுசேர்க்கும் வகையில் மதுரை மாநகராட்சியின் அடுத்த கூட்டத்தில் டி.எம். சவுந்தரராஜனுக்கு மதுரையில் மணிமண்டபம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி தமிழக அரசுக்கு அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கையும் எனது வார்டு மக்கள் சார்பாகவும் அ.தி.மு.க. சார்பாகவும் கோரிக்கையாக வைக்க விரும்புகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
- விவேகானந்தர் சொற்பொழிவு ஆற்றிய இடத்தில் நினைவு மணி மண்டபம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- மகாத்மா காந்தி யாத்திரையாக வந்த இடத்தில் மகாத்மா காந்தி சிலை உள்ளது.
மானாமதுரை
சுவாமி விவேகானந்தர் சிகாகோ மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றியபின் சிவகங்கை மாவட்டம் மானா மதுரை வந்தார். பின்னர் ராமேசுவரம், பாம்பன் சென்றார். அவரது பயண ஏற்பாட்டைசெய்த ராமநாதபுரம் மன்னருக்கு நன்றி தெரிவித்தபின் பரமக்குடி, மானாமதுரை, கும்பகோணம் சுவாமி ஆகிய இடங்கில் விவேகானந்தர் சொற்பொழிவு ஆற்றினார். அவர் மானாமதுரைக்கு வந்தபோது பொதுமக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
அந்த இடம் மானாமதுரை சுந்தரபுரம் தெருவில் உள்ளது. சொற்பொழிவு ஆற்றியபின் அந்த பகுதியில் உள்ள வீட்டில் தங்கி மறுநாள் பயணத்தை தொடர்ந்தார். சுவாமி விவேகானந்தர் வந்து பேசிய இடத்தில் நினைவு பீடம் மட்டும் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் மானாமதுரைக்கு விவேகானந்தர் வந்த நாள் மற்றும் பிறந்த நாள், நினைவு நாளில் பூமாலைகள் அணிவித்து மரியாதை செய்யப்பட்டுவருகிறது.
இதன் அருகே மகாத்மா காந்தி யாத்திரையாக வந்த இடத்தில் மகாத்மா காந்தி சிலை உள்ளது. இப்பகுதியில் நூலகம், சிறுவர் பூங்கா உள்ளது. இதேபோல் சுவாமி விவேகானந்தர் சொற்பொழிவு செய்த இடத்தில் நினைவு மணி மண்டபம் அமைக்க வேண்டும் என்று பொது மக்கள் சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்