என் மலர்
நீங்கள் தேடியது "manipur issue"
- வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மெய்தி சமூகத்தினருக்கும் பழங்குடி இன மக்களுக்கும் இடையே இம்மாதம் தொடக்கத்தில் மோதல் ஏற்பட்டது.
- மீண்டும் அங்கு வன்முறை வெடித்து உள்ளதால் பதற்றமான சூழ்நிலை உருவாகி உள்ளது.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மெய்தி சமூகத்தினருக்கும் பழங்குடி இன மக்களுக்கும் இடையே இம்மாதம் தொடக்கத்தில் மோதல் ஏற்பட்டது. இது வன்முறையாக மாறியது. வாகனங்கள் ,வீடுகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. இந்த கலவரத்தில் பலர் இறந்தனர். கலவரத்தை அடக்க ராணுவத்தினர் குவிக்கப்பட்டனர். அதன்பிறகு அங்கு நிலைமை கட்டுக்குள் வந்தது.
இந்த நிலையில் மீண்டும் அங்கு வன்முறை வெடித்து உள்ளதால் பதற்றமான சூழ்நிலை உருவாகி உள்ளது. இதையடுத்து ராணுவத்தினர் அங்கு குவிக்கப்பட்டு உள்ளனர். ராணுவ தளபதி மனோஜ்பாண்டே இன்று மணிப்பூர் சென்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். வன்முறை சம்பவங்கள் மேலும் பரவாமல் தடுக்க மேலும் 5 நாட்களுக்கு மணிப்பூர் மாநிலத்தில் இணையதள சேவைகள் அனைத்தும் முடக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
- பழங்குடியினர் மற்றும் பழங்குடி அல்லாதவர்களுக்கு இடையே வன்முறை வெடித்திருக்கிறது.
- மணிப்பூரில் ஏற்பட்டுள்ள வன்முறையைக் கட்டுக்குள் கொண்டுவந்து, அம்மக்கள் நிம்மதியாக வாழ்வதற்கு ஒன்றிய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் இட ஒதுக்கீடு சம்மந்தமான நீதிமன்ற தீர்ப்பின் காரணமாக மலை பழங்குடியினர் மற்றும் பழங்குடி அல்லாதவர்களுக்கு இடையே வன்முறை வெடித்திருக்கிறது. பத்தாயிரம் ராணுவ வீரர்களைக் குவித்தும் வன்முறையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. நூற்றுக்கணக்கானவர்கள் படுகொலை செய்யப்பட்டு, ஆயிரக்கணக்கான வீடுகள் எரிந்து, பொது அமைதி கெட்டு கடந்த 22 நாட்களாக சின்னஞ் சிறிய மணிப்பூர் மாநிலம் பற்றி எரிகிறது..
ரஷ்யா-உக்ரைன் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நாட்டாண்மை செய்யும் பிரதமர் மோடி, மணிப்பூர் மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட முயற்சி எடுக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருப்பது கவலை அளிக்கிறது. அசாம் சென்ற உள்துறை அமைச்சர் அமித்ஷா, மணிப்பூர் சென்று அமைதியை உருவாக்க முயற்சிக்காதது ஏன்?
உள்நாட்டு கலவரத்தால் பாதிக்கப்பட்டிருந்த மணிப்பூர், சில ஆண்டுகளுக்கு முன்பு அமைதி வழிக்குத் திரும்பி, வளர்ச்சியை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. தற்போது மீண்டும் அமைதி சீர்குலைக்கப்பட்டு, இணையதளம் முடக்கப்பட்டு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, மணிப்பூரில் ஏற்பட்டுள்ள வன்முறையைக் கட்டுக்குள் கொண்டுவந்து, அம்மக்கள் நிம்மதியாக வாழ்வதற்கு ஒன்றிய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- கடந்த மாதம் 30-ந்தேதி தொடங்கிய வன்முறை இன்னும் முடிந்தபாடில்லை வன்முறை தொடர்ந்து நீடித்து வருகிறது.
- காண்டோ சபல் கிராமத்துக்குள் நுழைந்த ஒரு கும்பல் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டது.
இம்பால்:
மணிப்பூர் மாநிலத்தில் மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியின சமூகத்தினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக வெடித்தது.
கடந்த மாதம் 30-ந்தேதி தொடங்கிய வன்முறை இன்னும் முடிந்தபாடில்லை வன்முறை தொடர்ந்து நீடித்து வருகிறது. கலவரத்துக்கு இதுவரை 120-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். 300- க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். பா.ஜனதா மந்திரிகளின் அலுவலகங்களுக்கு தீவைக்கப்பட்டன. புதிய வன்முறை காரணமாக ராணுவ வீரர்கள் கடந்த 2 தினங்களாக கொடி அணிவகுப்பு நடத்தினர்.
இந்த நிலையில் நேற்று இரவு காண்டோ சபல் கிராமத்துக்குள் நுழைந்த ஒரு கும்பல் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டது. இதில் ராணுவ வீரர் ஒருவர் காயம் அடைந்தார். அவர் லீமோகாங் ராணுவ மருத்து வமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.கிராம மக்களை குறி வைத்துதான் அந்த கும்பல் தாக்க வந்தது. ராணூவ வீரர்களை பார்த்ததும் அவர்கள் மீது தாக்குதல் நடத்திவிட்டு ஓடிவிட்டனர்.
- பா.ஜனதா தலைவர்களின் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது.
- மணிப்பூரில் மீண்டும் துப்பாக்கி சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இம்பால்:
மணிப்பூர் மாநிலத்தில் மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே ஏற்பட்ட வன்முறை இன்னும் முடிந்தபாடில்லை. 45 தினங்களுக்கும் மேலாக கலவரம் நீடித்து வருகிறது.
மணிப்பூர் கலவரத்தில் 120-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். 300-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டு இருந்தாலும் அமைதி நிலவவில்லை.
பா.ஜனதா தலைவர்களின் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது. அலுவலகம் சூறையாடப்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்பு மர்ம கும்பல் 9 பேரை சுட்டுக் கொன்றது. 2 நாட்களுக்கு முன்பு துப்பாக்கி தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர் காயம் அடைந்தார்.
இந்த நிலையில் மணிப்பூரில் மீண்டும் துப்பாக்கி சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது. நேற்று இரவு 2 இடங்களில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.
மணிப்பூர் கிழக்கில் உள்ள தாங்ஜிங்கில் நேற்று இரவு 11.45 மணியளவில் ஒரு கும்பல் 15 முதல் 20 ரவுண்டுகள் வரை துப்பாக்கி யால் சுட்டது.
செல்ஜன் மற்றும் சிங்டா பகுதியில் இரவு 8 மணி முதல் 9.30 மணி வரை துப்பாக்கிசூடு நிகழ்ந்தது. அசாம் ரைபிள் வீரர்கள் இந்த இரண்டு இடங்களுக்கும் சென்று காயம் அல்லது உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதா? என்று ஆய்வு செய்து வருகிறார்கள்.
- மணிப்பூர் கலவரம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது.
- பெண்களின் முற்றுகை போராட்டத்தால் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணையை தொடங்க முடியாமல் ஏமாற்றத்துடன் அந்த பகுதியைவிட்டு சென்றனர்.
இம்பால்:
மணிப்பூர் மாநிலத்தில் மைதேயி சமூகத்தினருக்கும் குகி இன பழங்குடியினருக்கும் இடையே ஏற்பட்ட வன்முறை கடந்த 45 தினங்களுக்கும் மேலாக நீடிக்கிறது.
20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு இருந்தும் அங்கு அமைதி நிலவவில்லை. கலவரம் நீடித்து வருகிறது. 120-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். 300-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். 50 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில் மணிப்பூ ரில் மந்திரியின் வீடு மற்றும் பா.ஜனதா அலுவலகத்துக்கு மர்ம கும்பல் தீ வைத்தது.
மணிப்பூர் மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு பொது சுகாதார பொறியியல் துறை, நுகர்வோர் மற்றும் உணவு விவகாரத் துறை மந்திரியாக இருப்பவர் சுசிந்த்ரோ. மைதேயி சமூகத்தை சேர்ந்த இவரது வீடு இம்பால் கிழக்கு பகுதியில் உள்ளது.
இவருக்கு சொந்தமான குடோனை நேற்று இரவு மர்ம கும்பல் தீ வைத்து கொளுத்தியது. அதோடு அவரது வீட்டுக்குள் ஒரு கும்பல் நுழைந்து கட்டிடத்துக்கும் தீ வைத்தது. பாதுகாப்பு படையினர் அங்கு வந்த மர்மகும்பலை கண்ணீர்புகை குண்டுகளை வீசி கலைத்தது. லேசாக எரிந்த தீயை அணைத்தனர். ஏற்கனவே பெண் மந்திரி வீட்டுக்கும் தீ வைக்கப்பட்டிருந்தது.
இதே போல அங்குள்ள பா.ஜனதா அலுவலகத்துக்கும் மர்ம நபர்கள் தீ வைத்தனர். சம்பவ இடத்துக்கு பாதுகாப்பு படையினர் உடனே வந்து தீயை அணைத்து நிலைமையை கட்டுக்கு கொண்டு வந்தனர்.
மணிப்பூர் கலவரம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள், கொள்ளை போன வழக்கு தொடர்பாக விசாரிக்க சி.பி.ஐ. குழு மணிப்பூர் போலீஸ் பயிற்சி கல்லூரிக்கு செல்ல முயன்றது.
ஆனால் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் அங்கு திரண்டு நின்று அவர்களை உள்ளே செல்லவிடாமல் தடுத்து நிறுத்தினர். பெண்களின் முற்றுகை போராட்டத்தால் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணையை தொடங்க முடியாமல் ஏமாற்றத்துடன் அந்த பகுதியைவிட்டு சென்றனர்.
மணிப்பூர் கலவரம் தொடர்பாக விவாதிக்க மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா டெல்லியில் இன்று அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளார். மாலை 3 மணியளவில் இந்த கூட்டம் நடக்கிறது.
- இது தொடர்பாக இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- வீடியோ எங்கிருந்து பதிவேற்றம் செய்யப்பட்டது என்பது குறித்தும் தீவிர விசாரணை.
மணிப்பூர் மாநிலம், இம்பால் நகரில் குகி இனத்தை சேர்ந்த 2 பெண்களை ஆடைகள் இன்றி ஊர்வலமாக இழுத்து சென்றனர். அவர்களை அவர்கள் பாலியல் பலாத்காரம் செய்து துன்புறுத்திய கொடூரமும் அரங்கேறியது. அதை தடுத்த 2 பேர் கொல்லப்பட்டனர். பெண்கள் நிர்வாணமாக ஊர்வலமாக இழுத்து வரப்பட்ட வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியது.
மே 4ம் தேதி தங்கள் சமூகத்தை சேர்ந்த மேலும் 2 பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்டதாக குகி இன தலைவர்கள் அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டனர்.
இதனால் மணிப்பூரில் கடந்த 4 நாட்களாக பதட்டம் நீடிக்கிறது. பல இடங்களில் வீடுகளுக்கு தீ வைப்பு சம்பவங்கள் நடந்தன. சில இடங்களில் பழங்குடி இனத்தவர்கள் துப்பாக்கி சூடு நடத்தியதாக கூறப்படுகிறது.
இதனால் பல கிராமங்களில் மிகப்பெரிய கலவரம் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மணிப்பூரில் வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்துவதற்காக போலீசார் மற்றும் ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 13 ஆயிரம் பேர் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
பெண்களிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட மேலும் பலர் வீடியோ காட்சி பதிவுகள் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், இந்த விவகாரத்தில், பெண்களை வீடியோ எடுத்த நபரை கைது செய்து விசாரணை அமைப்புகள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளன.
மேலும், வீடியோ எங்கிருந்து பதிவேற்றம் செய்யப்பட்டது என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்த அமைப்புகள் தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.
- திமாபூரில் இருந்து நேற்று பேருந்துகள் வந்து கொண்டிருந்தபோது சபோர்மீனாவில் பேருந்துக்கு தீ வைத்த சம்பவம் நிகழ்ந்தது.
- உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மணிப்பூரின் மக்கள்தொகையில் சுமார் 53% மானியர்கள் இம்பால் பள்ளத்தாக்கில் வாழ்கின்றனர். அதே சமயம் நாகாக்கள் மற்றும் குக்கிகளை உள்ளடக்கிய பழங்குடியினர் 40% மற்றும் முக்கியமாக மலை மாவட்டங்களில் வசிக்கின்றனர்.
இந்நிலையில், கடந்த மே மாதம் மணிப்பூரில் மைதேயி மற்றும் குகி ஆகிய இரு பிரிவினருக்கு இடையில் ஏற்பட்ட மோதல் வன்முறையாக வெடித்துள்ளது. இந்த மோதலில் இதுவரை 160-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் காயம் அடைந்தனர்.
இரண்டு பெண்களுக்கு ஏற்பட்ட கொடூரம் இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மணிப்பூரில் ஏற்பட்ட வன்முறையால் அங்கு வசித்து வந்த மக்கள் பலர் வீட்டைவிட்டு வெளியேறினர். இதனால் அங்கு ஏராளமான வீடுகள் ஆள் நடமாட்டம் இல்லாமல் உள்ளன.
இந்நிலையில், மணிப்பூரில் மியான்மர் எல்லைக்கு அருகில் உள்ள மோரே மாவட்டத்தில் இன்று ஒரு கும்பல் ஆளில்லா வீடுகளுக்கு தீ வைத்தது.
காங்போக்பி மாவட்டத்தில் ஒரு கும்பல் பாதுகாப்புப் படையினர் பயன்படுத்திய இரண்டு பேருந்துகளுக்கு தீ வைத்து எரித்த சம்பவம் நடந்த மறுநாளில் ஆளில்லா வீடுகளுக்கு தீ வைத்த சம்பவம் நடந்துள்ளது. இதில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
திமாபூரில் இருந்து நேற்று பேருந்துகள் வந்து கொண்டிருந்தபோது சபோர்மீனாவில் பேருந்துக்கு தீ வைத்த சம்பவம் நிகழ்ந்தது.
உள்ளூர்வாசிகள் மணிப்பூர் பதிவு எண்களைக் கொண்ட பேருந்துகளை சபோர்மேனாவில் நிறுத்தி, வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் யாராவது இருக்கிறார்களா என்று சரிபார்த்தனர். அப்போது சிலர் பேருந்துகளுக்கு தீ வைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- தி.மு.க.வினர் மீதான அனைத்து வழக்குகளையும் சட்டரீதியாக சந்தித்து வருகிறோம்.
- அண்ணாமலை கூறும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிப்போம் என ஆர்.எஸ் பாரதி கூறினார்.
திருச்சி:
திருச்சியில் தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
மணிப்பூர் விவகாரத்தை திசை திருப்பவே பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஆளுநரிடம் புகார் கொடுத்துள்ளார்.
தி.மு.க.வினர் மீதான அனைத்து வழக்குகளையும் சட்டரீதியாக சந்தித்து வருகிறோம்.
அண்ணாமலை என்ன கொடுத்தார் என யாருக்கும் தெரியாது. இந்த புகாரால் மக்கள் அண்ணாமலைக்கு வேறு வேலையே இல்லையா என நினைப்பார்களே தவிர, தி.மு.க.விற்கு எந்த அவப்பெயரும் ஏற்படாது.
நாங்கள் எதையும் சந்திக்க தயார். பிரச்சனைகளை திசை திருப்ப அண்ணாமலை கூறும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிப்போம். என தெரிவித்தார்.
- இரண்டு பெண்களுக்கு ஏற்பட்ட கொடூரம் இந்தியா முழுவதும் அதிர்ச்சி அடைய வைத்தது.
- காங்கிரஸ் எம்.பி கௌரவ் கோகாய், வந்தனா சௌஹான் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளன.
மணிப்பூரில் கடந்த மே மாதம் மைதேயி மற்றும் குகி ஆகிய இரு பிரிவினருக்கு இடையில் ஏற்பட்ட மோதல் வன்முறையாக வெடித்தது.
இந்த மோதலில் இதுவரை 160-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் காயம் அடைந்தனர்.
வன்முறை உச்சத்தில் இருந்தபோது நடந்த பாலியல் வன்கொடுமைகள், படுகொலைகள் தொடர்பான தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, இரண்டு பெண்களுக்கு ஏற்பட்ட கொடூரம் இந்தியா முழுவதும் அதிர்ச்சி அடைய வைத்தது.
மணிப்பூரில் ஏற்பட்ட வன்முறையால் அங்கு வசித்து வந்த மக்கள் பலர் வீட்டைவிட்டு வெளியேறி வருகின்றனர்.
இந்நிலையில், I.N.D.I.A கூட்டணியை சேர்ந்த எதிர்க்கட்சிகள் குழு வரும் 29, 30 ஆகிய தேதிகளில் மணிப்பூர் செல்ல உள்ளது.
எதிர்க்கட்சிகள் குழுவில் திமுக எம்.பி கனிமொழி, காங்கிரஸ் எம்.பி கௌரவ் கோகாய், வந்தனா சௌஹான் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளன.
- மணிப்பூரில் இரு பிரிவினருக்கு இடையில் ஏற்பட்ட மோதல் வன்முறையாக வெடித்தது.
- எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு குழுவில் கனிமொழி (தி.மு.க.), திருமாவளவன் (விடுதலை சிறுத்தைகள்) உள்ளிட்டோர் பங்கேற்பு.
மணிப்பூரில் கடந்த மே மாதம் மைதேயி மற்றும் குகி ஆகிய இரு பிரிவினருக்கு இடையில் ஏற்பட்ட மோதல் வன்முறையாக வெடித்தது.
இந்த மோதலில் இதுவரை 160-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் காயம் அடைந்தனர்.
வன்முறை உச்சத்தில் இருந்தபோது நடந்த பாலியல் வன்கொடுமைகள், படுகொலைகள் தொடர்பான தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
குறிப்பாக, இரண்டு பெண்களுக்கு ஏற்பட்ட கொடூரம் இந்தியா முழுவதும் அதிர்ச்சி அடைய வைத்தது.
மணிப்பூரில் ஏற்பட்ட வன்முறையால் அங்கு வசித்து வந்த மக்கள் பலர் வீட்டைவிட்டு வெளியேறி பிற மாநிலங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில், I.N.D.I.A கூட்டணியை சேர்ந்த எதிர்க்கட்சிகள் குழு இன்று மணிப்பூர் செல்கிறது. அங்கு, இன்றும் நாளையும் மாநிலத்தில் வன்முறையால் உண்டான பாதிப்புகளை ஆய்வு செய்ய உள்ளனர்.
எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு குழுவில் ஆதிர்ரஞ்சன் சவுத்ரி, கவுரவ் கோகாய் (காங்கிரஸ்), சுஷ்மிதா தேவ் (திரிணாமுல் காங்கிரஸ்), மகுவா மாஜி (ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா), கனிமொழி (தி.மு.க.), வந்தனா சவான் (தேசியவாத காங்கிரஸ்), ஜெயந்த் சவுத்ரி (ராஷ்டிரீய லோக்தளம்), மனோஜ் குமார் ஜா (ராஷ்டிரீய ஜனதாதளம்), பிரேமச்சந்திரன் (புரட்சிகர சோஷலிச கட்சி), திருமாவளவன் (விடுதலை சிறுத்தைகள்) ஆகியோர் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- பிரதமர் நரேந்திர மோடி செங்கோட்டையில் இருந்து நாட்டை தவறாக வழிநடத்துகிறார்.
- உள்துறை அமைச்சர் அமித் ஷா பாராளுமன்றத்தில் முதல்வரை முழுமையாக ஆதரித்தது துரதிர்ஷ்டவசமானது.
மணிப்பூரில் 6,000 அதிநவீன ஆயுதங்கள் மற்றும் 6 லட்சம் தோட்டாக்கள் மீட்கப்படும் வரை அமைதி நிலவாது என்று மக்களவை காங்கிரஸ் துணைத் தலைவரும், எம்.பியுமான கவுரவ் கோகோய் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், " மணிப்பூரில் பாதுகாப்புப் படையினரிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட அதிநவீன ஆயுதங்கள் மற்றும் தோட்டாக்கள் மாநிலத்தின் சாமானிய மக்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படுத்தப்பட்டது.
எனவே, இரு சமூகத்திற்கும் இடையில் நல்லிணக்கத்தைப் பற்றி பேசாதபோது எப்படி அமைதி மற்றும் சகஜநிலை ஏற்படும்.
மாநில முதல்வர் பிரேன் சிங்கின் செயல்பாட்டால் மெய்டீஸ் மற்றும் குகிஸ் ஆகிய இரு சமூகமும் மகிழ்ச்சியடையவில்லை.
உள்துறை அமைச்சர் அமித் ஷா பாராளுமன்றத்தில் முதல்வரை முழுமையாக ஆதரித்தது துரதிர்ஷ்டவசமானது. அமைதிக் குழுக்களில் முதல்வர் இருப்பதுதான் அமைதி பேச்சுவார்த்தை தோல்விக்கு வழிவகுத்தது.
பிரதமர் நரேந்திர மோடி செங்கோட்டையில் இருந்து நாட்டை தவறாக வழிநடத்துகிறார். இதனால், நிவாரண முகாம்களில் தங்கி இருக்கும் 60,000 பேரின் நல்லிணக்கம் மற்றும் மறுவாழ்வு இல்லாமலும், 6000 ஆயுதங்கள் மீட்கப்படும் வரையிலும் அமைதி திரும்பாது" என்றார்.
- நேற்று முன்தினம் ஊரடங்கு பிறப்பித்த நிலையில், 5 மாவட்டங்களில் மீண்டும் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது.
- பிஷ்னுபூர் மாவட்டத்தில் காலை 5 மணி முதல் காலை 11 வரை ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் இரு பிரிவினருக்கு இடையிலான மோதல் ஏற்பட்டு, பின்னர் வன்முறையாக மாறியது. மே மாதம் 3-ந்தேதியில் இருந்து வன்முறை பரவத் தொடங்கியது. இந்த வன்முறையில் இதுவரை 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
மணிப்பூரின் படிப்படியாக வன்முறை குறைந்து வருவதாக மத்திய அரசு தெரிவித்தது. இதற்கிடையே பள்ளத்தாக்கில் உள்ள மாவட்டங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட்டிருந்தது. இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலையில் இருந்து தடுப்பு நடவடிக்கையாக பிஷ்னுபுர், காக்சிங், தவுபால், இம்பால் மேற்கு, இம்பால் கிழக்கு ஆகிய ஐந்து மாவட்டங்களில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்த 5 மாவட்டங்களிலும் இன்று மீண்டும் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, இன்று காக்சிங், இம்பால் மேற்கு, இம்பால் கிழக்கு ஆகிய மாவட்டங்களில் சாலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. தவுபால் மாவட்டத்தில் காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை தளர்த்தப்பட்டுள்ளது. பிஷ்னுபூர் மாவட்டத்தில் காலை 5 மணி முதல் காலை 11 வரை ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது.
இந்த ஊரடங்கு தளர்வு அதிகாரியிடம் உரிய ஒப்புதல் பெறாமல், கூட்டம் அல்லது ஆர்ப்பாட்டம் அல்லது பேரணி போன்றவற்றத்தில் ஈடுபடக்கூடாது என்று அதிகாரப்பூர்வ உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது.