என் மலர்
நீங்கள் தேடியது "manipur issue"
- மணிப்பூரில் உள்ள இரு சமூகத்தினரும் தங்கள் பகுதி மாவட்டங்களின் பெயரை மாற்றுவதற்கு மாநில அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
- பெயர் மாற்றுபவர்கள் மீது உரிய சட்டப்படி வழக்கு தொடரப்படும்.
மணிப்பூரில் கடந்த மே மாதம், மெய்தி இன மக்களுக்கும், பழங்குடியின மக்களுக்கும் இடையே கலவரம் வெடித்தது. அதில் 180 பேர் பலியானார்கள். இன்னும் ஆயிரக்கணக்கானோர் நிவாரண முகாம்களில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், மணிப்பூர் மாநில ஊரக மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் மந்திரி கேம்சந்த் யும்னம் வீடு நோக்கி கையெறி குண்டு வீசிய சம்பவம் நேற்று நடந்தது. அவரது வீடு, இம்பாலில் யும்னம் லெய்கை பகுதியில் உள்ளது. வீடு வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பேர், திடீரென வீட்டை நோக்கி கையெறி குண்டை வீசினர்.
நல்லவேளையாக, பிரதான வாயிலுக்கு சற்று முன்பே குண்டு கீழே விழுந்து வெடித்து விட்டது. இதில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மத்திய ரிசர்வ் படை போலீஸ்காரர் தினேஷ் சந்திரதாஸ் மற்றும் ஒரு பெண் காயமடைந்தனர். வெடிகுண்டு சிதறல்கள் பட்டதால், அவர்களுக்கு கையிலும், காலிலும் காயம் ஏற்பட்டது.
சம்பவ இடத்தை முதல்-மந்திரி பிரேன்சிங் பார்வையிட்டார். குண்டு வீச்சுக்கு அவர் கண்டனம் தெரிவித்தார்.
இதற்கிடையே, மணிப்பூரில் உள்ள இரு சமூகத்தினரும் தங்கள் பகுதி மாவட்டங்களின் பெயரை மாற்றுவதற்கு மாநில அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தலைமை செயலாளர் வினீத் ஜோஷி வெளியிட்ட அறிவிப்பாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
மாநில அரசின் அனுமதியின்றி, மாவட்டங்கள், நிறுவனங்கள், இடங்கள், துணை கோட்டங்கள் ஆகியவற்றின் பெயரை சிலர் மாற்றுவதாக அரசுக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. அப்படி மாற்றுவது, தற்போதைய சூழ்நிலையில் இரு சமூகங்களுக்கிடையே பிளவை உருவாக்கும்.
சட்டம்-ஒழுங்கை சீர்குலைத்து விடும். எனவே, இதுபோன்று பெயர் மாற்றுபவர்கள் மீது உரிய சட்டப்படி வழக்கு தொடரப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- 5 நாட்களுக்கு இணையதளங்களும் முடக்கப்பட்டு உள்ளன.
- சில இடங்களில் அவ்வப்போது அசம்பாவிதங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.
மணிப்பூர் மாநிலத்தில் பெரும்பான்மை சமூகமான மைத்தேயி சமூகத்தினர், தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து சலுகைகள் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர். இதற்கு பழங்குடியின மக்களான குக்கி மற்றும் நாகா மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனையடுத்து கடந்த மே மாதம் 3-ந் தேதி ஒருங்கிணைந்த பழங்குடியின மாணவர் அமைப்பு பேரணி நடத்தினர். இந்த பேரணியில் கலவரம் ஏற்பட்டது. இதில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். அதன் பிறகும் சில இடங்களில் அவ்வப்போது அசம்பாவிதங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.
இந்த நிலையில் மணிப்பூரில் மீண்டும் கலவரம் ஏற்பட்டது. சூரசந்த்பூர் மாவட்டத்தில் உள்ள திங்கங்பாய் கிராமத்தில் நேற்று முன் தினம் ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் ஏற்பட்டன. இதனை தொடர்ந்து, சூரசந்த்பூர் மாவட்ட கலெக்டர் தருண் குமார், சூரசந்த்பூர் மாவட்டம் முழுவதும் மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த 144 தடை உத்தரவு வரும் 2024-ம் ஆண்டு பிப்ரவரி 18-ந்தேதி வரை அமலில் இருக்கும் எனவும் தெரிவித்தார். மேலும் இங்கு 5 நாட்களுக்கு இணையதளங்களும் முடக்கப்பட்டு உள்ளன.
- ஆயுதம் ஏந்திய குழுவைச் சேர்ந்தவர்களுடன் செல்பி எடுத்துள்ளார் தலைமை காவலர்.
- தலைமைக் காவலரை எஸ்.பி. சஸ்பெண்ட் செய்ததால், மீண்டும் வேலை வழங்குமாறு போராட்டம்.
மணிப்பூர் மாநிலம் சுரசந்த்பூர் மாவட்டத்தில் தலைமை காவலராக சியாம்லால்பால் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர் ஆயுதம் ஏந்திய குழுவைச் சேர்ந்தவர்கள் மற்றும கிராம பாதுகாப்பு தன்னார்வலர்களுடன் சேர்ந்த செல்பி எடுத்துள்ளார்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டு வைரலாகியுள்ளது. இதுதொடர்பாக சுரசந்த்பூர் மாவட்ட எஸ்.பி., தலைமைக் காவலர் மீது ஒழுங்கை நடவடிக்கை எடுத்து அவரை சஸ்பெண்ட் செய்துள்ளார்.
இதற்கு ஆயுதம் ஏந்திய குழு மற்றும் கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், எஸ்.பி. அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர்.
சுமார் 300 முதல் 400 பேர் இணைந்து போராட்டம் நடத்தியதால் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. போலீசார் அவர்களை கலைந்த செல்ல உத்தரவிட்ட நிலையில் அவர்கள் கலைந்து செல்லாமல் போராட்டம் நடத்தியுள்ளனர். இதனால் போலீசார் வானத்தை நோக்கி சுட்டு எச்சரித்துள்ளனர்.
அப்போது போராட்டம் நடத்திய கும்பல் எஸ்.பி. அலுவலகத்திற்கு வெளியே இருந்த பேருந்துகள் மற்றும் பல்வேறு பொருட்களை தீவைத்து கொளுத்தியுள்ளனர். மேலும், கல்வீசி தாக்கல் நடத்தியுள்ளனர். போலீசார் அதற்கு பதிலடி கொடுத்துள்ளனர்.
இதனால் போராட்டம் வன்முறையாக மாறியது. இதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். 25-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.
குகி-சோ பழங்குடியின மக்கள், பொலீசார் தங்கள் கிராமங்களை குறிவைத்து தாக்கி வருவதாக குற்றஞ்சாட்டி வருகின்றனர. ஆனால், போலீசார் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளனர். மேலும், "கிராம பாதுகாப்பு தன்னார்வலர்களை" ஊக்குவிப்பதில் குகி-சோ கிளர்ச்சியாளர்கள் ஈடுபடுவதாக தெரித்துள்ளனர்.
- வன்முறை வெடித்ததில் இருந்து நான் மணிப்பூருக்கு 3 முறை சென்றிருக்கிறேன்.
- துரதிர்ஷ்டவசமாக நிலைமையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்றார் ராகுல் காந்தி.
புதுடெல்லி:
மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யுமான ராகுல் காந்தி மணிப்பூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சமீபத்தில் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
இந்நிலையில், மணிப்பூர் மக்களின் நிலை குறித்து ராகுல் காந்தி எக்ஸ் வலைதளத்தில் இன்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:
வன்முறை வெடித்ததில் இருந்து நான் மணிப்பூருக்கு 3 முறை சென்றிருக்கிறேன். ஆனால் துரதிர்ஷ்டவசமாக நிலைமையில் எந்த முன்னேற்றமும் இல்லை.
இன்றும் மாநிலம் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. வீடுகள் எரிகின்றன. அப்பாவிகளின் உயிர்கள் ஆபத்தில் உள்ளன. ஆயிரக்கணக்கான குடும்பங்கள் நிவாரண முகாம்களில் வாழத் தள்ளப்படுகின்றனர்.
பிரதமர் மணிப்பூருக்கு நேரில் சென்று, மாநில மக்களின் பிரச்சனைகளைக் கேட்டறிந்து, அமைதிக்கு வேண்டுகோள் விடுக்க வேண்டும்.
இந்த அவலத்திற்கு முடிவு கட்ட மற்றும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க காங்கிரஸ் கட்சியும், இந்தியா கூட்டணி கட்சிகளும் மணிப்பூரில் அமைதியின் அவசியத்தை பாராளுமன்றத்தில் முழு பலத்துடன் எழுப்பும் என தெரிவித்தார்.
- பாராளுமன்ற தேர்தலில் மணிப்பூரில் பா.ஜ.கவை காங்கிரஸ் வீழ்த்தியது.
- மணிப்பூர் முதல் மந்திரி பைரேன் சிங் நம்பகத்தன்மையை இழந்துவிட்டார் என்றார்.
புதுடெல்லி:
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஆண்டு மே மாதம் முதல் மெய்டி மற்றும் குகி சமூகத்தினருக்கு இடையிலான இனக்கலவரத்தில் 200-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
கலவரம் ஏற்பட்ட மணிப்பூருக்கு பிரதமர் மோடி நேரில் செல்ல வேண்டும் என பல்வேறு கட்சித் தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் ஆங்கில செய்தி சேனலுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
மணிப்பூர் மாநிலத்திற்கு பிரதமர் மோடி வரவேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள். உலகம் முழுவதும் பிரதமர் சென்றுவிட்டார். கிட்டத்தட்ட 16 மாதங்கள் கடந்துவிட்டன. மணிப்பூரில் அமைதி இல்லை. நல்லிணக்கம் இல்லை. இயல்பு நிலை இல்லை.
முதல் மந்திரி பைரேன் சிங் எந்த உலகில் வாழ்கிறார் என தெரியவில்லை. அவர் நம்பகத்தன்மையை இழந்துவிட்டார். அவர் எதன் அடிப்படையில் இயல்பு நிலை நிலவுவதாக கூறுகிறார் என தெரியவில்லை.
பிரதமர் உக்ரைனுக்குப் போயிருக்கிறார். ரஷ்யாவுக்குப் போயிருக்கிறார். போலந்துக்குப் போயிருக்கிறார். அவர் நாடுமுழுவதும் சென்றிருக்கிறார்.
உலகின் பிற நாடுகளுக்குச் சென்றாலும் மணிப்பூருக்குச் செல்ல சில மணிநேரம் கூட அவருக்கு நேரமோ விருப்பமோ கிடைக்கவில்லை. பாராளுமன்ற தேர்தலில் மணிப்பூரில் பா.ஜ.கவை காங்கிரஸ் வீழ்த்தியது. அவர்கள் நல்ல வித்தியாசத்தில் தோல்வி அடைந்தனர். பிரதமர் மணிப்பூர் செல்லவேண்டும் என நான் நினைக்கிறேன். அதுதான் மிக முக்கியமான தேவை.
பிரதமர் மோடி 16 மாதமாக மணிப்பூர் செல்லாதது ஏன்? மாநிலத்தில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை காங்கிரஸ் விரும்புகிறது என தெரிவித்தார்.
- காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
- அதில், மணிப்பூர் விவகாரத்தில் ஜனாதிபதி தலையிட வேண்டும் என்றார்.
புதுடெல்லி:
காங்கிரஸ் கட்சியின் தலைவரான மல்லிகார்ஜுன கார்கே மணிப்பூர் விவகாரம் குறித்து ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் அவர் கூறியுள்ளதாவது:
மணிப்பூர் மாநில மக்கள் கண்ணியத்துடன், அமைதியாக வாழ்வதை உறுதி செய்வதற்காக இந்த விவகாரத்தில் ஜனாதிபதி உடனடியாக தலையிட வேண்டும்.
மணிப்பூரில் ஏற்பட்ட வன்முறையில் இதுவரை பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
சுமார் ஒரு லட்சம் மக்கள் தங்கள் வீடுகளை இழந்து முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
கடந்த 18 மாதமாக மணிப்பூரில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில் மாநில அரசும், மத்திய அரசும் தோல்வி அடைந்துள்ளன.
மக்களின் துயரம் தொடர்து கொண்டே இருக்கிறது.
இந்தியாவின் ஜனாதிபதியாகவும், நமது அரசியலமைப்பின் பாதுகாவலராகவும் இருந்து, அரசியலமைப்பு சட்டத்தை நிலைநிறுத்தவும், மணிப்பூர் மக்களின் உயிர் மற்றும் உடைமைகளைப் பாதுகாக்கவும் நீங்கள் இந்த விவகாரத்தில் தலையிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக நான் கருதுகிறேன்.
உங்கள் தலையீட்டின் மூலம் மணிப்பூர் மக்கள் மீண்டும் கண்ணியத்துடன், பாதுகாப்பாக வாழ்வார்கள் என்று நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.
- முதல் மந்திரி பைரேன் சிங் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.
- இந்த ஆண்டு முழுவதும் மிகவும் துரதிருஷ்டவசமானது என்றார்.
இம்பால்:
மணிப்பூர் தலைநகர் இம்பாலில் முதல் மந்திரி பைரேன் சிங் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
இந்த ஆண்டு முழுவதும் மிகவும் துரதிருஷ்டவசமானது. கடந்த மே 3 முதல் இன்று வரை என்ன நடக்கிறது என்பதற்கு நான் வருந்துகிறேன், மாநில மக்களிடம் வருந்துகிறேன்.
பலர் தங்கள் அன்புக்கு உரியவர்களை இழந்துள்ளனர். பலர் வீடுகளை விட்டு வெளியேறினர். நான் உண்மையிலேயே வருத்தப்படுகிறேன். நான் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன்.
கடந்த 3-4 மாதங்களாக அமைதியை நோக்கி முன்னேறி வருவதைக் கண்டு 2025 புத்தாண்டுடன் மாநிலத்தில் இயல்பு நிலையும் அமைதியும் திரும்பும் என நம்புகிறேன்.
நாம் இப்போது கடந்த கால தவறுகளை மறந்து, புதிய வாழ்க்கையை தொடங்க வேண்டும். அமைதியான மணிப்பூர், வளமான மணிப்பூர் காண நாம் அனைவரும் ஒன்றாக வாழ வேண்டும் என மாநிலத்தின் அனைத்து சமூகங்களுக்கும் வேண்டுகோள் விடுக்க விரும்புகிறேன்.
கடந்த 2023 மே முதல் அக்டோபர் வரை 408 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
நவம்பர் 2023 முதல் ஏப்ரல் 2024 வரை 345 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் பதிவாகின.
இந்த ஆண்டு மே முதல் இதுவரை 112 துப்பாக்கிச்சூடு சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
கொள்ளையிடப்பட்ட ஆயுதங்களில் 3,112 ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. 2,511 வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதுவரை 625 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 12,047 எப்.ஐ.ஆர்.கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன என தெரிவித்தார்.
- மணிப்பூர் முதல் மந்திரி பைரேன் சிங் நடந்த தவறுகளுக்கு மன்னிப்பு கேட்கிறேன் என்றார்.
- இதையடுத்து, பிரதமர் ஏன் மணிப்பூர் சென்று மன்னிப்பு கேட்கவில்லை என காங்கிரஸ் கேள்வி எழுப்பியது.
புதுடெல்லி:
மணிப்பூர் தலைநகர் இம்பாலில் முதல் மந்திரி பைரேன் சிங் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
இந்த ஆண்டு முழுவதும் மிகவும் துரதிருஷ்டவசமானது. கடந்த மே 3 முதல் இன்று வரை என்ன நடக்கிறது என்பதற்கு நான் வருந்துகிறேன். பலர் தங்கள் அன்புக்கு உரியவர்களை இழந்துள்ளனர். மணிப்பூர் மக்களிடம் நான் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். கடந்த 3-4 மாதமாக அமைதியை நோக்கி மாநிலம் முன்னேறி வருகிறது. வரும் புத்தாண்டில் மாநிலத்தில் இயல்பு நிலையும் அமைதியும் திரும்பும் என நம்புகிறேன். மணிப்பூர் மக்கள் கடந்த கால தவறுகளை மறந்து, புதிய வாழ்க்கையை தொடங்க வேண்டும் என தெரிவித்தார்.
இந்நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் வலைதளத்தில், பிரதமர் மோடி மணிப்பூர் செல்லாதது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், பிரதமர் மணிப்பூருக்குச் சென்று அதையே அங்கு ஏன் சொல்ல முடியாது? மே 4, 2023 முதல் அவர் நாடு மற்றும் உலகம் முழுவதும் ஜெட் விமானத்தில் பயணம் செய்தபோதும் அவர் வேண்டுமென்றே மாநிலத்திற்கு வருவதைத் தவிர்த்தார். மணிப்பூர் மக்களால் இந்தப் புறக்கணிப்பைப் புரிந்துகொள்ள முடியாது என பதிவிட்டுள்ளார்.
- அசாம் மாநிலம் கவுகாத்தியில் முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு தொடங்கியது.
- இந்த மாநாட்டை தொடங்கி வைக்க பிரதமர் மோடி அசாம் சென்றுள்ளார்.
புதுடெல்லி:
அசாம் மாநிலம் கவுகாத்தியில் முதலீட்டாளர்கள் உச்சிமாநாடு இன்று தொடங்கியது. இந்த மாநாட்டை தொடங்கி வைக்க பிரதமர் மோடி அசாம் சென்றுள்ளார்.
இந்நிலையில், அசாம் மாநிலம் சென்றுள்ள பிரதமர் மோடியை காங்கிரஸ் கட்சி சாடியுள்ளது.
இதுதொடர்பாக், காங்கிரஸ் கட்சி பொது செயலாளர்களில் ஒருவரான ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:
மணிப்பூர் மக்களுக்கு பிரதமர் மீண்டும் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளார். கவுகாத்தி சென்று அங்கேயும் ஒரு இரவைக் கழித்தார். ஆனால் அருகில் உள்ள மணிப்பூருக்கு அவர் செல்லவில்லை.
தற்போது ஜனாதிபதி ஆட்சியில் உள்ள நிலையில் இது மேலும் குழப்பமாக உள்ளது.
கடந்த இருபத்தி ஒரு மாத காலமாக மணிப்பூர் மக்கள் இவ்வளவு துயரங்களையும், வேதனைகளையும் அனுபவித்து வருகின்றனர்.
இப்படி வேதனைகள், துன்பங்களை அனுபவித்து வரும் மணிப்பூர் மக்களை மோடி அவர்கள் நேரடியாகச் சென்று பார்ப்பது எப்போது? அவர்கள் காத்திருந்து, காத்திருக்கிறார்கள் என பதிவிட்டுள்ளார்.