என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Manjappai"
- பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்கும் வகையில் மஞ்சப்பை திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியது.
- தமிழகம் முழுவதற்கும் ஒருங்கிணைத்து பைகள் தயாரித்து விற்பனை செய்யும்போது விலை குறையும்.
ஊட்டி:
நீலகிரி மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் ஊட்டி மார்க்கெட்டில் மஞ்சப்பை வினியோகிக்கும் தானியங்கி எந்திரம் நிறுவப்பட்டுள்ளது.
இதன் செயல்பாட்டை கலெக்டர் அம்ரித் முன்னிலையில் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். நகராட்சி ஆணையாளர் காந்திராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் சிந்தனை செல்வன் கூறியதாவது:-
பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்கும் வகையில் மஞ்சப்பை திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியது.
நீலகிரி மாவட்டத்தில் 20 இடங்களில் மஞ்சப்பை வினியோகிக்கும் தானியங்கி எந்திரங்களை நிறுவ முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல் எந்திரம் ஊட்டியில் உள்ள உழவர் சந்தையில் நிறுவப்பட்டது.
தற்போது மார்க்கெட் பகுதியில் நிறுவப்பட்டுள்ளது. இந்த எந்திரத்தில் ரூ.10 மதிப்பிலான ரூ.1, ரூ.2, ரூ.5 நாணயங்களை செலுத்தினால் மஞ்சப்பை கிடைக்கும். ஒரு பைக்கு ரூ.14 வரை செலவாகிறது. ஆனால் நாங்கள் ரூ.10க்கு விற்பனை செய்கிறோம்.
மாவட்ட அளவில் பைகள் விற்பனை செய்யப்படுவதால், பையின் விலை கூடுதலாக உள்ளது. தமிழகம் முழுவதற்கும் ஒருங்கிணைத்து பைகள் தயாரித்து விற்பனை செய்யும்போது விலை குறையும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மஞ்சப்பை விற்பனை எந்திரத்தில் ரூ.10 செலுத்தி ஒரு மஞ்சபையை பெற்றுக் கொள்ளலாம்.
- எந்திரங்களை மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.
திருவள்ளூர்:
பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டை குறைக்கும் வகையில் மஞ்சப்பை பயன்படுத்த அரசு ஊக்குவித்து வருகிறது. இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் மூலம் தொழிற்சாலைகளின் நிதிஉதவியுடன் 6 மஞ்சப்பை விற்பனை எந்திரங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த மஞ்சப்பை விற்பனை எந்திரத்தில் ரூ.10 செலுத்தி ஒரு மஞ்சபையை பெற்றுக் கொள்ளலாம்.
இதுபற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்து முதன்முறையாக மஞ்சப்பை வழங்கும் எந்திரத்தை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும், திருவள்ளூரில் உள்ள மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய அலுவலகத்திலும் வைக்கப்பட்டது.
இந்த எந்திரங்களை மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) காயத்ரி சுப்பிரமணி, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ப.ரவிச்சந்திரன், உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் பா.சி.சம்பத்குமார், உதவி பொறியாளர்கள் கி.ரகுகுமார், சு.சபரிநாதன் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான்வர்க்கீஸ் கூறும்போது, "ரூ.1, 2, 5 புதிய நாணயம் மற்றும் 10 ரூபாய் நோட்டை எந்திரத்தில் செலுத்தி மஞ்சப்பைகளை பெற்றுக் கொள்ளலாம்" என்றார்.
- கோயம்பேடு மார்க்கெட்டில் மஞ்சப்பை விற்பனை செய்யும் தானியங்கி எந்திரம் அமைக்கப்பட்டு உள்ளது.
- தானியங்கி எந்திரத்தில் 10 ரூபாய் நோட்டு, நாணயம் செலுத்தினால் மஞ்சப்பை பெற்றுக்கொள்ளலாம்.
சென்னை:
தமிழகத்தில் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு அரசு தடை விதித்து உள்ளது.
பிளாஸ்டிக் பைகளை ஒழிக்கும் வகையில் அதற்கு மாற்றாக துணி பைகளை உபயோகிக்கும் பழக்கத்தை மக்களிடம் அதிகரிக்க செய்யும் வகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 'மீண்டும் மஞ்சப்பை' திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இந்த நிலையில் ஆசியாவிலேயே மிகப்பெரிய சந்தையாக விளங்கும் கோயம்பேடு மார்க்கெட்டில் பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டை தவிர்க்க வியாபாரிகளுடன் இணைந்து பெருநகர சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மக்கள் அதிகமாக கூடும் கோயம்பேடு மார்க்கெட்டில் 'மஞ்சப்பை' விற்பனை செய்யும் தானியங்கி எந்திரம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த எந்திரத்தில் 10 ரூபாய் நோட்டு, நாணயம் செலுத்தினால் 'மஞ்சப்பை' பெற்றுக்கொள்ளலாம்.
கோயம்பேடு பூ மார்க்கெட் வளாகத்தில் அமைக்கப்பட்டு உள்ள தானியங்கி 'மஞ்சப்பை' விற்பனை எந்திரத்தை வனத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாகு, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தார். மேலும் அதன் அருகிலேயே உபயோகிக்கப்பட்ட குடிநீர் மற்றும் குளிர்பான பிளாஸ்டிக் பாட்டில்களை போடுவதற்கு தனியாக மற்றொரு எந்திரமும் வைக்கப்பட்டு உள்ளது. அதனையும் அவர் திறந்து வைத்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்