search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Manslaughter"

    • மனமுடைந்த ஷர்மிளா கடிதம் எழுதி வைத்து விட்டு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
    • சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட ஷர்மிளா இன்று சிகிச்சை பலனின்றி பலியானார்.

    சென்னை பள்ளிக்கரணை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் டாஸ்மாக் கடை அருகே கடந்த பிப்ரவரி மாதம் 25 - ந்தேதி வாலிபர் ஒருவரை மர்ம நபர்கள் கத்தியால் வெட்டி விட்டு தப்பி ஓடினர்.

    ரத்த காயங்களுடன் கிடந்த அந்த வாலிபரை அக்கம்பத்தினர் மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.




    இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். பலியான வாலிபர் பள்ளிக்கரணையை சேர்ந்த பிரவீன் (26) என்பது தெரிய வந்தது. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் ஜல்லடையன் பேட்டையை சேர்ந்த ஷர்மிளா என்ற பெண்ணை காதல் திருமணம் செய்தது தெரியவந்தது.

    மாற்று சமூகத்தைச் சேர்ந்த இருவரும் சாதி மறுப்பு திருமணம் செய்ததால் பெண் வீட்டில் கடும் கோபம் அடைந்தனர். இதனால் பள்ளிக்கரணை டாஸ்மாக் அருகில் வைத்து பெண்ணின் அண்ணன் தினேஷ் மற்றும் 3 பேர் பிரவீனை ஆணவக் கொலை செய்தது தெரியவந்தது




    தப்பியோடிய கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இதையடுத்து தாம்பரம் அருகே தலைமறைவாக இருந்த ஷர்மியின் அண்ணன் தினேஷ் மற்றும் அவரது நண்பர்களான ஸ்டீபன், ஸ்ரீவிஷ்ணு, ஜோதிலிங்கம் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

    விசாரணையில் கடந்த நவம்பர் மாதம் தினேஷின் தங்கை ஷர்மி வீட்டின் எதிர்ப்பை மீறி பிரவீனை திருமணம் செய்து கொண்ட சம்பவத்தில் பழி வாங்குவதற்காக கொலை செய்தது தெரியவந்தது.

    இந்நிலையில் சென்னை பள்ளிக்கரணையில் காதல் கணவன் பிரவீன் வெட்டி கொல்லப்பட்டதால் அவரது மனைவி ஷர்மிளா மிகுந்த மன வேதனையடைந்தார்.



    கடந்த சில நாட்களுக்கு முன் மனமுடைந்த ஷர்மிளா கடிதம் எழுதி வைத்து விட்டு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட ஷர்மிளா இன்று காலை சிகிச்சை பலனின்றி பலியானார்.

    கணவன் ஆணவக் கொலை செய்யப்பட்டதால் மனமுடைந்த மனைவியும் தற்போது தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பெரியார், அம்பேத்கர் பெயரைப் பயன்படுத்த தகுதியில்லாத கூட்டம் என்று பத்திரிகையாளர்களும் விமர்சிக்க தொடங்கியுள்ளனர்.
    • கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் நாமக்கல் தொகுதி வேட்பாளர் மாற்றப்படுவாரா?

    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு நிறைவடைந்தது. அதன்படி தி.மு.க. 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது. புதுச்சேரி உட்பட 10 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் தலா 2 தொகுதிகளிலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, ம.தி.மு.க., கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி தலா ஒரு தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.

    இந்நிலையில், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நாமக்கல் தொகுதி வேட்பாளராக சூரியமூர்த்தி (51) அறிவிக்கப்பட்டுள்ளார். இத்தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறது.

    இந்நிலையில், வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சூரியமூர்த்தி பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது ஆணவப்படுகொலை செய்வேன் என்றும், தாயோடு சேர்த்து குழந்தையையும் கருவறுப்போம் என்றும், வருகின்ற காலத்தில் கொங்கு நாட்டில் பல்வேறு கொலைகள் விழும் என்று உளவுத்துறைக்கே சவால் விட்டார். பழைய வீடியோ தான் என்றாலும் கூட, அந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது மீண்டும் பரவுவதால் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


    ஈரோடு அருகே கவுண்டர் சாதிப் பெண்ணை திருமணம் செய்த பட்டியிலினப் பையனை கொலை செய்ய அந்தப் பெண்ணின் தந்தை செய்த முயற்சியில் அந்தப் பையனின் 15 வயது சகோதரி கொல்லப்பட்டாள். சூரியமூர்த்தியின் சாதி வெறியால் அந்த கொலை நடந்தேறியதாகவும், அத்தகைய நபரை நாமக்கல் தொகுதி வேட்பாளராக எப்படி ஏற்றுக் கொள்ளலாம் என்று சமூக வலைதளத்தில் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. சமூக நீதி குறித்து பேசும் தி.மு.க.வுக்கு இதெல்லாம் கண்ணுக்குத் தெரியாதா என்றும், அரசியலில் வெற்றி பெற எதையும் கண்டு கொள்ளமாட்டீர்கள் என்றால், தி.மு.க.-வுக்கும், பா.ஜ.க.-வுக்கும் என்ன வேறுபாடு? பெரியார், அம்பேத்கர் பெயரைப் பயன்படுத்த தகுதியில்லாத கூட்டம் என்று பத்திரிகையாளர்களும் விமர்சிக்க தொடங்கியுள்ளனர்.

    எனவே, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் நாமக்கல் தொகுதி வேட்பாளர் மாற்றப்படுவாரா, அதற்கு தி.மு.க.-வும் அழுத்தம் கொடுக்குமா என்று கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன.

    • கடலூரில் பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்து மானபங்கப்படுத்திய வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
    • அப்போது அங்கு குடி போதையில் இருந்த சிவராஜ் திடீரென்று வச்சலா கையை பிடித்து இழுத்ததாக கூறப்படுகிறது‌.

    கடலூர்:

    கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் வச்சலா (வயது 27). அதே பகுதியை சேர்ந்தவர் சிவராஜ் (வயது 25). சம்பவத்தன்று வச்சலா வீட்டில் இருந்து வெளியில் வந்தார். அப்போது அங்கு குடி போதையில் இருந்த சிவராஜ் திடீரென்று வச்சலா கையை பிடித்து இழுத்ததாக கூறப்படுகிறது‌. அதிர்ச்சி அடைந்த வச்சலா கையை உதறிவிட்டு அங்கிருந்து செல்ல முயற்சித்த போது சிவராஜ் திடீரென்று தாக்கி கொலை மிரட்டல் விடுத்து மானபங்கம் படுத்தியதாக கூறபடுகிறது. இதுகுறித்து கடலூர் புதுநகர் போலீசார் சிவராஜ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நெல்லை மாநகரத்தில் ஆணவக் கொலை தடுப்பு தொடர்பாக மாநகர துணை கமிஷனர் (கிழக்கு), மாவட்ட சமூகநல அலுவலர் மற்றும் மாவட்ட ஆதி திராவிட நல அலுவலர் அடங்கிய சிறப்பு குழு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
    • கலப்புத் திருமணம் செய்தவர்களை துன்புறுத்துவது, மிரட்டுவது தொடர்பாக புகார் தெரிவிக்க 24 மணி நேரமும் தனிப்பிரிவு செயல்படும்.

    நெல்லை:

    நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நெல்லை மாநகரத்தில் ஆணவக் கொலை தடுப்பு தொடர்பாக மாநகர துணை கமிஷனர் (கிழக்கு), மாவட்ட சமூகநல அலுவலர் மற்றும் மாவட்ட ஆதி திராவிட நல அலுவலர் அடங்கிய சிறப்பு குழு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் கலப்புத் திருமணம் செய்தவர்களை துன்புறுத்துவது, மிரட்டுவது தொடர்பாக புகார் தெரிவிக்க 24 மணி நேரமும் தனிப்பிரிவு செயல்படும். எனவே சம்பந்தப்பட்டவர்கள் புகார் தெரிவிக்க நெல்லை மாநகரம் தனிப்பிரிவு 9498101729 மற்றும் மாநகர காவல் கட்டுப்பாடு அறை எண் 0462-2562651, 100 ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×