என் மலர்
நீங்கள் தேடியது "mark low"
செய்யாறு:
செய்யாறு அருகே உள்ள கீழ்புதுப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் அண்ணாதுரை இவரது மகள் சத்யா (வயது 16). இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 வகுப்பு படித்து வந்தார். கடந்த மார்ச் மாதம் நடந்த பொதுத்தேர்வை சத்யா எழுதினார்.
கடந்த வாரம் தேர்வு முடிவு வெளியானது அதில் சத்யா 369 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றார். ஆனால் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கவில்லை என்று சத்யா தனது நண்பர்களிடம் கூறி வருத்தமடைந்து வந்தார்.
இந்நிலையில் நேற்று மாலை சத்யா மண்எண்ணையை உடலில் ஊற்றி தீகுளித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர். அவரை மீட்க முயன்றனர். ஆனால் அதற்குள் சத்யா கருகி இறந்து கிடந்தார்.
இது குறித்து தகவலறிந்த செய்யாறு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு செய்யாறு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கபிஸ்தலம்:
கபிஸ்தலம் அருகே உள்ள கருப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் இவரது மகன் தினேஷ்குமார் (வயது 14). இவர் உமையாள்புரத்தில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் நடந்து முடிந்த அரையாண்டு தேர்வில் தினேஷ்குமார் குறைவான மதிப்பெண் எடுத்தார். இதனால் அவரை பெற்றோர் ஏன் குறைவான மதிப்பெண் எடுத்தாய்? என திட்டியதாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த தினேஷ்குமார் நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாதபோது உடலில் மண்எண்ணையை ஊற்றி தீக்குளித்தார். உடல் கருகிய நிலையில் இருந்த தினேஷ்குமாரை மீட்டு சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று அதிகாலை தினேஷ்குமார் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து கபிஸ்தலம் போலீசில் புகார் செய்யப்பட்டது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை:
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள எம்.மலம்பட்டியை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். இவரது மகன் சியாம்சுந்தர் (வயது18).
இவர் பிளஸ்-2 தேர்வு எழுதி இருந்தார். நேற்று தேர்வு முடிவுகள் வெளி வந்த நிலையில் தனது அத்தை கயல்விழி வீட்டுக்கு சென்று வருவதாக சியாம் சுந்தர் கூறி விட்டு சென்றார்.
பின்னர் தேர்வு முடிவுகளை பார்த்த சியாம்சுந்தர் அதில் மதிப்பெண்கள் குறைந்ததால் மனவேதனை அடைந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் அவர் திடீரென மாயமாகிவிட்டார். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடியும் சியாம்சுந்தரை காணவில்லை.
இது குறித்து மேலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவரை தேடி வருகிறார்கள்.