search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mark Wood"

    • அவரால் எல்லா டெஸ்ட் போட்டியும் விளையாட முடியாது.
    • இங்கிலாந்து அணியில் அவர் இல்லாமல் போனால், அதை இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மிகவும் விரும்பும்.

    இங்கிலாந்து அணி சொந்த மண்ணில் இலங்கை அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் தொடரில் தொடக்க ஆட்டக்காரர் ஜாக் கிரவுலி மற்றும் கேப்டன் ஸ்டோக்ஸ் இருவரும் காயத்தால் இடம் பெறவில்லை. மேலும் முதல் டெஸ்டில் காயம் அடைந்து அதிவேக பந்துவீச்சாளர் மார்க் வுட் தொடரை விட்டு விலகி உள்ளார்.

    இந்த நிலையில் தட்டையான ஆடுகளங்களில் பென் ஸ்டோக்சை விட மார்க் வுட் முக்கிய வீரர் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:- 

    நீங்கள் பேட்டிங் செய்ய சாதகமான தட்டையான ஆடுகளத்தில் விளையாடும் பொழுது, இங்கிலாந்து அணிக்கு கேப்டன் பென் ஸ்டோக்சை விட மிக முக்கியமானவர் மார்க் வுட்தான். ஆனால் அவர் தற்போது காயம் காரணமாக இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து வெளியேறியிருக்கிறார்.

    முதல் டெஸ்ட் போட்டியில் பேட்டிங் செய்வதற்கு ஆடுகளம் சாதகமாக இருந்த நிலையில், இலங்கை அணியின் தினேஷ் சண்டிமல் மற்றும் கமிந்து மெண்டிஸ் இருவரும் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த பொழுது, காயத்தால் மார்க் வுட் வெளியேறியிருந்தது எவ்வளவு பின்னடைவாக இருந்தது என்பதை காண முடிந்தது.

    பாகிஸ்தானிலும் நியூசிலாந்திலும் இப்படியான ஆடுகளத்தில் 20 விக்கெட்டுகளை எடுக்க என்ன செய்வது என வழிமுறையை கண்டுபிடிக்க வேண்டும். அடுத்த ஆண்டு இங்கிலாந்து அணி விளையாடும் டெஸ்டுகளில் 60 முதல் 70 சதவீதம் விளையாடுவதற்கு இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் மார்க் வுட்டை பாதுகாப்பாக வைக்க வேண்டும். அவரால் எல்லா டெஸ்ட் போட்டியும் விளையாட முடியாது.

    இங்கிலாந்து அணியின் டெஸ்ட் அட்டவணையில் இந்தியாவை உள்நாட்டில் வீழ்த்துவதற்கும், ஆஸ்திரேலியா சென்று அவர்களை வீழ்த்துவதற்கும் மார்க் வுட் மிகவும் முக்கியமான ஒரு கருவியாக இருப்பார். இங்கிலாந்து அணியில் அவர் இல்லாமல் போனால், அதை இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மிகவும் விரும்பும்.

    ஆர்ச்சர் கூட 95 மைல் வேகத்தில் தொடர்ந்து வீசியது கிடையாது. ஆனால் மார்க் வுட் அதை தொடர்ந்து செய்கிறார்.அவரது வெறித்தனமான வேகம் கொண்டு வீசக்கூடிய பந்துவீச்சாளர்கள் உலகத்தில் இல்லை. இங்கிலாந்து கிரிக்கெட்டில் நாம் பார்த்திராத ஒரு பையனாக அவர் இருக்கிறார். அவர் எதிரணியின் ட்ரெஸ்ஸிங் ரூமில் ஒரு நடுக்கத்தை உண்டாக்குகிறார்.

    இவ்வாறு வாகன் கூறினார். 

    • முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.
    • அத்துடன் டெஸ்ட் தொடரில் 1-0 என இங்கிலாந்து முன்னிலை வகிக்கிறது.

    லண்டன்:

    இலங்கை அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. அத்துடன் டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

    இந்நிலையில், இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து இங்கிலாந்து அணியின் முன்னணி பந்துவீச்சாளரான மார்க் வுட் தசைப்பிடிப்பு காரணமாக விலகி உள்ளார் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

    அவருக்கு பதிலாக ஜோஷ் ஹல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவித்துள்ளது.

    இரு அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 29-ம் தேதி அன்று லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது.

    • இங்கிலாந்தில் அதிவேகமாக டெஸ்ட் ஓவரை வீசிய இங்கிலாந்து பந்துவீச்சாளர் என்ற சாதனையை மார்க் வுட் படைத்துள்ளார்.
    • முதல் ஓவரில் படைத்த சாதனையை தனது 2 ஆவது ஓவரில் மார்க் வுட் முறியடித்தார்.

    வெஸ்ட் இண்டீஸ்- இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் நேற்று தொடங்கியது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 416 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனையடுத்து தனது முதல் இன்னிங்சை துவங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 351 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது.

    இப்போட்டியில், பந்துவீசிய இங்கிலாந்து பந்துவீச்சாளர் மார்க் வுட் அதிவேக ஓவரை வீசி சாதனை படைத்துள்ளார். இங்கிலாந்தில் அதிவேகமாக டெஸ்ட் ஓவரை வீசிய இங்கிலாந்து பந்துவீச்சாளர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

    வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கிய மிகைல் லூயிஸுக்கு தனது முதல் ஓவரை வீசினார் மார்க் வுட். முதல் பந்தை 151.1 கிமீ வேகத்தில் அவர் வீசினார். 2 ஆவது பந்தை 154. 65 கிமீ வேகத்திலும் மூன்றாவது பந்தை 152.88 கிமீ வேகத்திலும் 4 ஆவது பந்தை 148.06 கிமீ வேகத்திலும் 5 ஆவது பந்தை 155.30 கிமீ வேகத்திலும் கடைசி பந்தை 153.20 கிமீ வேகத்திலும் வீசினார்.

    இதன் மூலம் இங்கிலாந்தில் அதிவேகமாக ஓவரை வீசிய இங்கிலாந்து பந்துவீச்சாளர் என்ற சாதனையை அவர் படைத்தார்.

    மார்க் வுட் தனது 2 ஆவது ஓவரை முதல் ஓவரை விடவும் அதிவேகத்தில் வீசினார். அந்த ஓவரில் 152, 149.66, 152, 154.49, 156.26, 151.27 கிமீ வேகத்தில் அவர் வீசினார். இதன் மூலம் முதல் ஓவரில் படைத்த சாதனையை தனது 2 ஆவது ஓவரில் மார்க் வுட் முறியடித்தார். 

    • ஹாரி ப்ரூக் (டெல்லி கேப்பிட்டல்ஸ்), மார்க் வுட் (எல்.எஸ்.ஜி.), ஜேசன் ராய் (கொல்கல்த்தா நைட் ரைடர்ஸ்),
    • அட்கின்சன் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்), டேவிட் வில்லே (எல்.எஸ்.ஜி.) ஆகியோர் விலகியுள்ளனர்.

    ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து இங்கிலாந்து, வங்காளதேசம் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த வீரர்கள் விளையாடி வருகின்றனர்.

    ஐபிஎல் 2024 சீசனுக்கான ஏலத்தில் எடுக்கப்படும் வீரரகள் காயம் காரணமாக சில நேரங்களில் விளையாட முடியாமல் போகலாம். சில வீரர்கள் தனிப்பட்ட காரணத்திற்கான ஐபிஎல் தொடரை புறக்கணிக்கலாம். சிலர் சர்வதேச போட்டியில் விளையாட இருப்பதால் வொர்க்லோடு காரணமாக ஐபிஎல் தொடரை தவிர்ப்பது உண்டு.

    ஆனால் இந்த சீசனில் இங்கிலாந்தைச் சேர்ந்த அதிகமான வீரர்கள் விலகியுள்ளனர். ஹாரி ப்ரூக் (டெல்லி கேப்பிட்டல்ஸ்), மார்க் வுட் (எல்.எஸ்.ஜி.), ஜேசன் ராய் (கொல்கல்த்தா நைட் ரைடர்ஸ்), கஸ் அட்கின்சன் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்) ஆகியோர் ஐபிஎல் 2024 சீசனில் இருந்து ஏற்கனவே விலகியிருந்தனர்.

    ஜேசன் ராய், ஹாரி ப்ரூக் ஆகியோர் தனிப்பட்ட காரணத்திற்காக விலகுவாக அறிவித்திருந்தனர். மார்க் வுட் மற்றும் அட்கின்சன் ஆகியோரை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் விளையாட வேண்டும் என அறிவுறுத்தியிருந்தது. இந்த நிலையில்தான் தற்போது லக்னோ அணியில் இருந்து டேவிட் வில்லே தனிப்பட்ட காரணத்திற்காக விலகுவதாக அறிவித்துள்ளார்.

    பட்லர், பிலிப் சால்ட், சாம் கர்ரன், பேர்ஸ்டோ உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.

    • இரு அணிகளுக்கும் இடையேயான 4-டெஸ்ட் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நாளை தொடங்குகிறது.
    • 3 டெஸ்ட் முடிவில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    ராஞ்சி:

    பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 5 டெஸ்ட் கொண்ட தொடரில் ஐதராபாத்தில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி 28 ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சிகரமாக தோற்றது. இதற்கு விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் 106 ரன் வித்தியாசத்தில் வென்று பதிலடி கொடுத்தது. ராஜ்கோட்டில் நடந்த 3-வது போட்டியிலும் 434 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 3 டெஸ்ட் முடிவில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    இரு அணிகளுக்கும் இடையேயான 4-டெஸ்ட் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நாளை தொடங்குகிறது. இதற்கான 11 பேர் கொண்ட ஆடும் லெவன் அணியை இங்கிலாந்து அணி அறிவித்துள்ளது.

     

    இங்கிலாந்து அணியில் இரு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. சுழற்பந்து வீச்சாளர் ரேகன் அகமதுக்கு பதில் பஷிர் இடம் பெற்றுள்ளார். வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட்டுக்கு பதிலாக ராபின்சன் அணியில் இடம் பிடித்துள்ளார்.

    இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியின் ஆடும் லெவன்:-

    பென் டக்கெட், சாக் கிராலி, ஒல்லி போப், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோவ், பென் ஸ்டோக்ஸ், பென் ஃபோக்ஸ், ஒல்லி ராபின்சன், ஜேம்ஸ் ஆண்டர்சன், ஷோயப் பஷீர், டாம் ஹார்ட்லி

    • முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தி வெற்றி பெற்றது.
    • 2-வது டெஸ்ட்டில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது.

    ராஜ்கோட்:

    பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகள் இடையேயான 5 டெஸ்ட் கொண்ட தொடரில் ஐதராபாத்தில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி 28 ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சிகரமாக தோற்றது. இதற்கு விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் 106 ரன் வித்தியாசத்தில் வென்று பதிலடி கொடுத்தது. 2 போட்டி முடிவில் 1-1 என்ற சமநிலை நிலவுகிறது.

    இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நாளை (15-ந்தேதி) தொடங்குகிறது.

    இந்நிலையில் அதற்கான 11 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சுழற்பந்து வீச்சாளர் ஷோயப் பஷீருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் அணியில் இடம் பிடித்துள்ளார்.

    11 பேர் கொண்ட இங்கிலாந்து அணி:-

    ஜாக் க்ராலி, பென் டக்கெட், ஒல்லி போப், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோவ், பென் ஸ்டோக்ஸ், பென் ஃபோக்ஸ், ரெஹான் அகமது, டாம் ஹார்ட்லி, மார்க் வூட், ஜேம்ஸ் ஆண்டர்சன்.

    • முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 246 ரன்னில் ஆல் அவுட் ஆனது.
    • இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட்டை மட்டும் இழந்து 119 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது.

    இந்தியாவுக்கு வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இதன் முதலாவது டெஸ்ட் ஐதராபாத்தில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

    அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணி 246 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட்டை மட்டும் இழந்து 119 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது.

    இந்த போட்டியில் இங்கிலாந்து அணி ஆடும் லெவனில் ஒரு வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கி உள்ளது.மார்க்வுட் மட்டுமே வேகப்பந்து வீச்சாளர். டாம் ஹார்ட்லீ, ஜாக் லீச், ரெஹான் அகமது ஆகியோர் சுழற்பந்து வீச்சாளர்கள். கேப்டன் பென் ஸ்டோக்ஸ் வேகப்பந்து வீசக்கூடியவர் என்றாலும் அவர் கால்முட்டி காயத்துக்கு ஆபரேஷன் செய்திருப்பதால் இந்த போட்டியில் ஒரு பேட்ஸ்மேனாக மட்டுமே தொடருகிறார்.

    இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இங்கிலாந்து ஒரே ஒரு வேகப்பந்து வீச்சாளருடன் மட்டும் களம் காணுவது அபூர்வ நிகழ்வாகும். இதற்கு முன்பு 1888-ம் ஆண்டு மான்செஸ்டரில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் மட்டும் இவ்வாறு ஒரே வேகப்பந்து வீச்சாளரை பயன்படுத்தி இருந்தது.

    தனிப்பட்ட விஷயம் காரணமாக இந்திய வீரர் விராட் கோலி இந்த டெஸ்டில் விளையாடவில்லை. மூத்த வீரர்கள் ரஹானே, புஜாரா ஓரங்கட்டப்பட்டுள்ளனர். இவர்கள் 3 பேரில் ஒருவர் கூட இல்லாமல் இந்தியா டெஸ்ட் ஆடுவது 2011ம் ஆண்டுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும்.

    • மார்க் வுட் பந்து வீசும் ஸ்டைல் எனக்கு மிகவும் பிடிக்கும்.
    • தொடர்ச்சியாக மணிக்கு 150 கிலோமீட்டர் முதல் 155 கிலோ மீட்டர் வரை அவர் வந்து வீசுகிறார்.

    உலகின் அதிவேக பந்துவீச்சாளர் என்ற பெருமையை தற்போது வரை பாகிஸ்தான் அணியை சேர்ந்த முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான சோயிப் அக்தர் தான் வைத்துள்ளார். கிரிக்கெட் வரலாற்றிலேயே முதல் முறையாக 100 மைல் வேகத்தில் பந்துவீசிய ஒரே வீரர் இவர்தான். ஆனால் இன்றைய நாள் வரை அவரது இந்த சாதனையை யாராலும் முறியடிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    தென்னாப்பிரிக்க நாட்டில் கடந்த 2003-ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரின் போது இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மனுக்கு எதிராக அவர் வீசிய பந்து மணிக்கு 161.4 கிலோமீட்டர் வேகத்தில் வீசப்பட்டது. இதுவே கிரிக்கெட் வரலாற்றில் மிக வேகமாக வீசப்பட்ட பந்து என்று பதிவாகியுள்ளது. ஆனாலும் அவரது இந்த சாதனையை யாராலும் முறியடிக்க முடியவில்லை.

    இந்நிலையில் இப்படி தனது அதிவேக பந்துவீச்சு சாதனையை முறியடிக்கப்போகும் வீரர் யார்? என்பது குறித்த கணிப்பினை தற்போது சோயிப் அக்தர் வெளியிட்டுள்ளார்.

    இது குறித்த அவர் கூறுகையில்:-

    தற்போதைய கிரிக்கெட் வீரர்களில் மார்க் உட்டால் என்னைவிட அதிவேகமாக பந்துவீச முடியும் என்று நினைக்கிறேன். ஏனெனில் அவர் பந்து வீசும் ஸ்டைல் எனக்கு மிகவும் பிடிக்கும். மிகவும் நேர்த்தியாக பந்துவீசும் அவர் தொடர்ச்சியாக மணிக்கு 150 கிலோமீட்டர் முதல் 155 கிலோ மீட்டர் வரை அவர் வந்து வீசுகிறார். இன்னும் அவர் தீவிர முயற்சி எடுத்தால் நிச்சயம் என்னுடைய இந்த சாதனையை முறியடிக்க முடியும் என்று கூறியுள்ளார்.

    இங்கிலாந்து அணியை சேர்ந்த 32 வயதான முன்னணி வேகப்பந்து வீச்சாளரான மார்க் உட் சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை இங்கிலாந்து அணிக்காக 26 டெஸ்ட் போட்டிகள், 57 ஒருநாள் போட்டிகள் மற்றும் 27 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    உலகக்கோப்பைக்கான இங்கிலாந்து அணியில் இடம் பிடித்துள்ள மார்க் வுட்டுக்கு எந்த பிரச்சனையில் இல்லை என ஸ்கேன் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
    இங்கிலாந்து அணி நேற்றுமுன்தினம் உலகக்கோப்பைக்கான முதல் பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை எதிர்த்து விளையாடியது. அப்போது வேகப்பந்து வீச்சாளரான மார்க் வுட், அவரது 4-வது ஓவரை வீசும்போது அவரின் கணுக்காலில் காயம் ஏற்பட்டது.

    இதனால் இங்கிலாந்து அணி நிர்வாகம் முன்னெச்சரிக்கை காரணமாக ஸ்கேன் செய்து காயத்தின் வீரியம் குறித்து தெரிந்து கொள்ள முடிவு செய்தது.

    இதனால் அவரின் கணுக்கால் பகுதியில் ஸ்கேன் செய்து பார்க்கப்பட்டது. ஸ்கேன் பரிசோதனையில் பயப்படக்கூடிய அளவிற்கு காயம் இல்லை என்று தெரியவந்துள்ளது. இதனால் இங்கிலாந்து அணி நிம்மதி அடைந்துள்ளது.
    இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 154 ரன்னில் சுருண்டது. மார்க்வுட் 41 ரன் கொடுத்து 5 விக்கெட்டை வீழ்த்தினார். #WIvENG
    செயின்ட் லூசியா:

    வெஸ்ட் இண்டீஸ்-இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி செயின்ட் லூசியாவில் உள்ள கிராஸ் ஐ லெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

    முதலில் விளையாடிய இங்கிலாந்து முதல் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 231 ரன் எடுத்து இருந்தது. நேற்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது.

    தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி 277 ரன் குவித்து ‘ஆல்அவுட்’ ஆனது. பென் ஸ்டோக்ஸ் 79 ரன்னும், பட்லர் 67 ரன்னும் எடுத்தனர். கேமர் ரோச் 4 விக்கெட்டும், கேப்ரியல், அல்ஜாரி ஜோசப், பவுல் தலா 2 விக்கெட்டும் எடுத்தனர்.

    பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்து வீரர்களின் அபாரமான பந்து வீச்சால் திணறியது. அந்த அணி 47.2 ஓவர்களில் 154 ரன்னில் சுருண்டது. கேம்பெல் அதிகபட்சமாக 41 ரன்னும், டவுரிச் 38 ரன்னும் எடுத்தனர். மார்க்வுட் 41 ரன் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தினார். மொய்ன் அலி 4 விக்கெட்டும், ஸ்டூவாட் பிராட் 1 விக்கெட்டும் எடுத்தனர்.

    123 ரன்கள் முன்னிலையில் 2-வது இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து நேற்றைய ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 19 ரன் எடுத்து இருந்தது.  #WIvENG


    இங்கிலாந்து அணியில் இடம்பிடிக்க தயாராக வேண்டி இருப்பதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் வெளியேறியுள்ளார். #IPL2018 #CSK
    ஐபிஎல் 2018 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதுவரை விளையாடியுள்ள 10 போட்டிகளில் 7-ல் வெற்றி பெற்று 2-வது இடத்தில் உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான மார்க் வுட் இடம்பிடித்திருந்தார்.

    மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் மட்டுமே விளையாடினார். அந்த போட்டியில் நான்கு ஓவரில் 49 ரன்கள் விட்டுக்கொடுத்தார். தற்போது இங்கிலாந்து அணியில் இடம்பிடிப்பதற்காக பயிற்சியில் ஈடுபட சென்னை அணியில் இருந்து வெளியேறுவதாக கூறியுள்ளார்.



    இதுகுறித்து மார்க் வுட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘‘இங்கிலாந்தில் சம்மர் காலத்தில் நடைபெறும் கிரிக்கெட் போட்டியில் தயாராவதற்காக சொந்த நாடு திரும்பும் முடிவை எடுத்துள்ளேன். கடினமாக பயிற்சி பெற்று டெஸ்ட் அணியில் இடம்பிடிக்க வேண்டும். அதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நான் இல்லை. துர்காம் அணியில் விளையாட இருக்கிறேன். இதன்மூலம் இங்கிலாந்து டெஸ்ட் அணியில் இடம் கிடைக்கும் என நம்புகிறேன்’’ என்று பதிவிட்டுள்ளார்.
    ×