என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "mars"
- ஆராய்ச்சியில் அங்கு ஏரி உள்ளிட்ட நீர் நிலைகள் இருப்பது தெரியவந்தது.
- நாசாவின் இன்சைட் லேண்டரால் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த தகவல் வெளியாகி இருக்கிறது.
சூரிய குடும்பத்தில் உள்ள செவ்வாய் கிரகத்தில் என்ன இருக்கிறது என்பது பற்றி ஆராய்ச்சி பணிகளை நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் மேற்கொண்டுள்ளது. இந்த ஆராய்ச்சியில் அங்கு ஏரி உள்ளிட்ட நீர் நிலைகள் இருப்பது தெரியவந்தது. தற்போது செவ்வாய்கிரகத்தில் திரவ நிலையில் நீர்த்தேக்கம் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நாசாவின் இன்சைட் லேண்டரால் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த தகவல் வெளியாகி இருக்கிறது.
செவ்வாய்கிரகத்தில் மேற்பரப்புக்கு அடியில் ஆழமாக மறைந்து இருக்கும் திரவ நிலையிலான ஒரு பெரிய நீர்தேக்கம் உலகளாவிய கடலில் முழு கிரகத்தையும் உள்ளடக்கும் அளவுக்கு அமைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. மேற்பரப்பில் இருந்து கிட்டத்தட்ட 7.2 முதல் 12.4 மைல்கள் ( 11.5 முதல் 20 கி.மீ) வரை அமைந்துள்ள இந்த நீர் உடைந்த பாறைகளுக்குள் இடையில் தேங்கி நிற்கிறது. இதில் நீர் உறைந்து இருக்கும் மேற்பரப்பை போல் இல்லாமல் திரவ நீரை தக்க வைக்கும் அளவுக்கு வெப்பநிலை இருக்கும் என ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான புகைப்படங்களை நாசா வெளியிட்டுள்ளது.
- ரோவர் செவ்வாய் கிரகத்தில் பாறை ஒன்றை கண்டுபிடித்துள்ளது.
- செவ்வாய் கிரகத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பாறை அங்கு பல ஆயிரம் கோடி ஆண்டுகளுக்கு முன்பு நுண்ணுயிரிகள் வாழ்ந்ததை காட்டுகிறது.
வாஷிங்டன்:
அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை 30-ம் தேதி விண்கலம் ஒன்றை அனுப்பியது. அந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கிய நிலையில் அதில் அனுப்பப்பட்ட 'பெர்சிவியரன்ஸ்' (தமிழில் விடாமுயற்சி) என்ற ரோவர் செவ்வாய் கிரகத்தை ஆராய்ந்து வருகிறது.
இந்த நிலையில் அந்த ரோவர் செவ்வாய் கிரகத்தில் பாறை ஒன்றை கண்டுபிடித்துள்ளது. செவ்வாய் கிரகத்தில் உள்ள ஒரு பழங்கால நதி பள்ளத்தாக்கான 'நெரெட்வா வாலிஸ்'-ன் வடக்கு விளிம்பு பகுதியை ஆய்வு செய்யும் போது அம்பு முனை வடிவ பாறையை பெர்சிவியரன்ஸ் கண்டெடுத்ததாக நாசா எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது.
அந்த பாறையை எக்ஸ்-ரே மற்றும் லேசர்களை பயன்படுத்தி ஆய்வு செய்ததில் அந்த பாறையில் வெள்ளை கால்சியம் சல்பேட் நரம்புகள், சிவப்பு நிற நடுத்தர பகுதி மற்றும் சிறிய வெள்ளை பிளவுகள் இருப்பது தெரியவந்ததாக நாசா கூறியுள்ளது. செவ்வாய் கிரகத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த பாறை அங்கு பல ஆயிரம் கோடி ஆண்டுகளுக்கு முன்பு நுண்ணுயிரிகள் வாழ்ந்ததை காட்டுவதாக நாசா விஞ்ஞானிகள் கூறினர்.
- சுழற்சி வேகம் அதிகரித்து வருவதற்கு என்ன காரணம் என்பதை விஞ்ஞானிகளால் இன்னும் முழுமையாக கண்டறியப்படவில்லை.
- செவ்வாய் கிரகத்துக்கான இன்சைட் போன்ற புவி இயற்பியல் நிலையத்தை அமைப்பதற்கான முயற்சிகளில் நீண்ட காலமாக ஈடுபட்டு வருகிறோம்.
வாஷிங்டன்:
செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா இன்சைட் லேண்டரை அனுப்பியது. இந்த லேண்டர் கடந்த 2018-ம் ஆண்டு செவ்வாய் கிரகத்தை சென்றடைந்து ஆய்வை தொடங்கியது. எரிசக்தி தீர்ந்ததால் இந்த திட்டம் முடிவுக்கு வந்தது. ஆனால் இன்சைட் லேண்டர் சேகரித்து அனுப்பிய தரவுகளை நாசா விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.
ஆய்வில் செவ்வாய் கிரகத்தின் சுழற்சி வேகம் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருவது தெரிய வந்தது. இந்த பகுப்பாய்வில் வேகமாக சுழல்வதன் காரணமாக செவ்வாய் கிரகத்தில் ஒரு நாளின் நீளம் என்பது ஒவ்வொரு ஆண்டும் ஒரு மில்லி விநாடி அளவு குறைந்து வருவதை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.
சுழற்சி வேகம் அதிகரித்து வருவதற்கு என்ன காரணம் என்பதை விஞ்ஞானிகளால் இன்னும் முழுமையாக கண்டறியப்படவில்லை.
அதே வேளையில் செவ்வாய் கிரகத்தின் நிறை, அதன் மேற்பரப்பில் நடக்கும் நிகழ்வு உள்ளிட்ட கிரகத்தில் மெல்ல மெல்ல ஏற்பட்டு வரும் மாற்றம் ஆகியவை சுழற்சி வேகம் அதிகரிப்பதற்கான காரணமாக இருக்கலாம் என்று தெரிவித்தனர்.
பனிக்கட்டிகள் நிறைந்த துருவப்பகுதிகளில் பனிக்கட்டி படிவதாலும், பனிக்கட்டி புதைவால் நிலப்பரப்பு உயர்ந்து வருவதாலும் இது நிகழ்ந்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.
இதுதொடர்பாக இன்சைட்டின் முதன்மை ஆய்வாளர் புரூஸ்பெனர்ட் கூறும்போது, மிகவும் துல்லியத்துடன் சமீபத்தில் அளவீட்டை பெறுவது மிகவும் அருமையாக உள்ளது. செவ்வாய் கிரகத்துக்கான இன்சைட் போன்ற புவி இயற்பியல் நிலையத்தை அமைப்பதற்கான முயற்சிகளில் நீண்ட காலமாக ஈடுபட்டு வருகிறோம். தற்போதைய ஆய்வு முடிவுகள் பல ஆண்டுகளின் உழைப்பை பயனுள்ளதாக்குகின்றன என்றார்.
- விண்கலன்களும் செவ்வாய் கிரகத்தில் என்ன உள்ளது என்பது தொடர்பாக புகைப்படங்களை பூமிக்கு அனுப்பி வருகிறது.
- நாசா கடந்த ஏப்ரல் மாதம் செவ்வாய் கிரகத்தில் ஆய்வுக்காக விண்கலத்துடன் இணைத்து இன்ஜினியுடி என்ற சிறிய ரக ஹெலிகாப்டரை அனுப்பியது.
வாஷிங்டன்:
செவ்வாய் கிரகத்தின் மொத்த அளவு என்பது பூமியின் பாதி அளவு தான். அளவில் சிறியது என்றாலும் பூமியின் நிலப்பரப்புக்கு நிகரான நிலப்பரப்பை கொண்டது. செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ தகுதி உள்ளதா? என்பதை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா ஆராய்ந்து வருகிறது. இதற்காக விண்கலன்களை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி பல்வேறு கட்ட ஆய்வுகளை நடத்தி வருகிறது.
விண்கலன்களும் செவ்வாய் கிரகத்தில் என்ன உள்ளது என்பது தொடர்பாக புகைப்படங்களை பூமிக்கு அனுப்பி வருகிறது. இந்த புகைப்படங்களை நாசா அவ்வப்போது வெளியிட்டு வருகிறது.
இந்த நிலையில் நாசா கடந்த ஏப்ரல் மாதம் 26- ந் தேதி செவ்வாய் கிரகத்தில் ஆய்வுக்காக விண்கலத்துடன் இணைத்து இன்ஜினியுடி என்ற சிறிய ரக ஹெலிகாப்டரை அனுப்பியது. செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் இறங்கிய இரண்டு நிமிடத்தில் நாசாவுடனான தொடர்பு திடீரென துண்டிக்கப்பட்டது. இதற்கான காரணம் குறித்து தொடர்ந்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வந்தனர். இந்த நிலையில் 63 நாட்களுக்குப் பிறகு அந்த ஹெலிகாப்டரில் இருந்து மீண்டும் தகவல் கிடைத்துள்ளது. அந்த ஹெலிகாப்டர் இறங்கிய பகுதியில் ஒரு பெரிய மலை இருந்ததே தகவல் தொடர்பு தடையானதற்கு காரணம் என்று தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து அந்த ஹெலிகாப்டரை அனுப்பிய குழுவின் தலைவர் ஜோஸ்வா ஆண்டர்சன் கூறும்போது இன்ஜினியுடி ஹெலிகாப்டர்தான் நீண்ட நாள் காலமாக தகவல் தொடர்பில் இல்லாமல் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இது தகவல் தொடர்பை இழந்தாலும் தன்னை பாதுகாத்துக் கொள்ளும் வகையில் தகவமைத்துக் கொள்ளும் விதமாக உருவாக்கப்பட்டது. தற்போது மீண்டும் தகவல் தொடர்பு கிடைத்துள்ளதால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளோம் என்றார்.
- சில நேரங்களில் ஒரே நேர்கோட்டில் கிரகங்கள் வரிசை கட்டி நிற்கும் அதிசய நிகழ்வு அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது.
- இன்று இரவு சந்திரன், வெள்ளி மற்றும் செவ்வாய் கிரகங்கள் ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் நிகழ்வு வானில் தோன்றுகிறது.
சென்னை:
நவகிரகங்களில் சூரியன், சந்திரன், குரு, சுக்கிரன், புதன், சனி, செவ்வாய் ஆகிய கிரகங்களை வானில் பார்க்க முடியும். சூரிய உதயத்திற்கு முன்பு அதிகாலையில் விடிவெள்ளி தென்படும்.
மாலை நேரத்தில் சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு சந்திரன், வியாழன், சுக்கிரன், செவ்வாய் ஆகிய கிரகங்களை கண்களால் பார்க்க முடியும்.
சில நேரங்களில் ஒரே நேர்கோட்டில் கிரகங்கள் வரிசை கட்டி நிற்கும் அதிசய நிகழ்வு அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது. அந்த வகையில் இன்று இரவு சந்திரன், வெள்ளி மற்றும் செவ்வாய் கிரகங்கள் ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் நிகழ்வு வானில் தோன்றுகிறது.
இதனை தொலைநோக்கிகள் போன்ற உபகரணங்களை கொண்டு பார்க்க முடியும். கிண்டியில் உள்ள ஸ்பேஸ் ஆர்கேடில் இதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அங்கு தொலைநோக்கிகள் மூலம் வானில் தோன்றும் கிரகங்களின் இணைப்பு நிகழ்வை பார்க்க முடியும் என அதன் தலைமை செயல் அதிகாரி நீரஜ்லடியா கூறினார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், முன்பு விண்வெளி ஆய்வு ஒரு முக்கிய பொழுது போக்காக இருந்தது. ஆனால் இப்போது ஒவ்வொருவரும் நமது சூரிய குடும்பத்தை பற்றி மேலும் அறியவும், தெரிந்து கொள்ளவும் ஆர்வமாக உள்ளனர் என்றார்.
இன்று இரவு 7 மணி முதல் 8.30 மணி வரை 3 கிரகங்கள் நேர்கோட்டில் சந்திப்பதை தொலைநோக்கிகள் மூலம் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- செவ்வாய் கிரகத்தில் பூமியைப் போன்ற காலநிலை இருந்திருக்கலாம் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
- சீனாவின் ஜுராங் ரோவர் கடந்த 2021ம் ஆண்டு செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியது
செவ்வாய் கிரகத்தில் நீர் இருப்பதற்கான புதிய ஆதாரங்களை சீனாவின் ஜுராங் ரோவர் கண்டறிந்துள்ளது. செவ்வாயில் உள்ள மணல் திட்டுகளை ஆய்வு செய்தபோது, அங்கு தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்கள் தென்பட்டுள்ளன.
இருப்பினும் ஜுராங் ரோவர் நேரடியாக பனியாகவோ, உறைந்த நிலையிலோ நீரைக் கண்டறியவில்லை. உப்பு நிறைந்த குன்றுகளின் மேற்பரப்பு அடுக்கில், நீரேற்றப்பட்ட சல்பேட்டுகள், நீரேற்றப்பட்ட சிலிக்கா, இரும்பு ஆக்சைடு தாதுக்கள் மற்றும் குளோரைடுகளால் நிறைந்துள்ளதாகவும் கண்டுபிடித்துள்ளனர். செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலைகள் கொண்ட சில பகுதிகள் இருப்பதை இந்த புதிய கண்டுபிடிப்பு உணர்த்துகிறது.
செவ்வாய் கிரகத்தில் பூமியைப் போன்ற காலநிலை இருந்ததாகவும், சுமார் மூன்று பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு அதன் மேற்பரப்பில் கடல் பாய்ந்திருப்பதாகவும் விஞ்ஞானிகள் நீண்ட காலமாக நம்புவதாக சீன ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் காலநிலை மாற்றங்களால் அது உறைந்து, அவற்றின் பெரும்பாலான பகுதி கிரகத்தின் வெளிப்புற அடுக்கில் சிக்கியிருக்கலாம் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
செவ்வாய் கிரகத்தில் குறைந்த அட்சரேகைகளில் திரவ நிலையில் நீர் இருப்பதை உறுதி செய்வதற்கான எந்த ஆதாரமும் இதுவரை வெளியாகவில்லை. இருப்பினும், செவ்வாய் கிரகத்தின் பரிணாம வரலாற்றை புரிந்துகொள்வதில் சமீபத்திய இந்த ஆராய்ச்சி திருப்புமுனையாக இருக்கும் என நம்பப்படுகிறது.
சீனாவின் ஜுராங் ரோவர் கடந்த 2021ம் ஆண்டு செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியது குறிப்பிடத்தக்கது
- பூமியில் செவ்வாய் கிரகம் போன்ற சூழலை உருவாக்கி உள்ளனர்.
- மனிதர்கள் எப்படி நடமாட வேண்டும், அவர்கள் சமைப்பது எப்படி என்பது உள்பட பல்வேறு செயல்பாடுகள் குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது.
செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் பணியில் அமெரிக்க விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.
செவ்வாய் கிரகத்திற்கு சென்றால் அங்கு மனிதர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் உள்பட பல்வேறு செயல்பாடுகள் குறித்து பயிற்சி அளிக்கும் பணியையும் விஞ்ஞானிகள் தொடங்கி விட்டனர். இதற்காக பூமியில் செவ்வாய் கிரகம் போன்ற சூழலை உருவாக்கி அங்கு மனிதர்கள் எப்படி நடமாட வேண்டும், அவர்கள் சமைப்பது எப்படி என்பது உள்பட பல்வேறு செயல்பாடுகள் குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது.
தற்போது 4 மனிதர்களுக்கு இந்த பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக நாசா தனது அறிக்கையில் தெரிவித்து உள்ளது.
- செவ்வாய் கிரகத்தில் திரவ வடிவிலான தண்ணீர் இருப்பதற்கு சாத்தியம் உண்டு என்று கண்டறிந்தனர்.
- திரவ நீர் என்பது வாழ்க்கைக்கு மிகவும் அத்தியாவசியமான பொருளாகும்.
லண்டன்:
செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்கிறதா என்ற கேள்விக்கு விடை காண்பதற்கு விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் செவ்வாய் கிரகத்தில் தென் துருவத்தில் திரவ நீர் இருப்பதற்கான ஆதாரங்களை சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் குழு கண்டறிந்து இருக்கிறது. இதுபற்றிய ஆச்சரியமூட்டும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 2018-ம் ஆண்டு, மார்ஸ் எக்ஸ்பிரஸ் என்ற ஆர்பிட்டர், செவ்வாய் கிரகத்தின் தென்துருவத்தில் பனிக்கட்டியின் (மூடுபனி) மேற்பரப்பு தாழ்வதையும், உயர்வதையும் கண்டறிந்து, அதன் அடியில் திரவ வடிவில் தண்ணீர் இருக்கலாம் என கூறியது. ஆனால் அதை அந்த காலகட்டத்தில் விஞ்ஞானிகள் நம்பவில்லை. அதே நேரத்தில் மார்ஸ் எக்ஸ்பிரஸ் ஆர்பிட்டர் கண்டுபிடித்த நேரத்தில், விண்கலம் அளவிட்ட விசித்திரமான ரேடார் சமிக்ஞையை அவர்கள் மூடுபனியின் கீழே உலந்த பொருள் இருக்கலாம் என கருதினர்.
ஆனால் சமீபத்தில் இங்கிலாந்து நாட்டின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தலைமையிலான சர்வதேச விஞ்ஞானிகள் குழு செவ்வாயில் அல்டிமிஸ் ஸ்காபிலி என்றறியப்படுகிற பனிப்படலத்தால் மூடப்பட்ட பகுதியை வேறு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆய்வு செய்தனர். அதில்தான் அவர்கள் செவ்வாய் கிரகத்தில் திரவ வடிவிலான தண்ணீர் இருப்பதற்கு சாத்தியம் உண்டு என்று கண்டறிந்தனர்.
"புதிய நிலப்பரப்பு சான்றுகள், எங்களது கம்ப்யூட்டர் மாதிரி முடிவுகள், ரேடார் தரவுகள் ஆகியவை, இப்போது செவ்வாய் கிரகத்தில் குறைந்தபட்சம் ஒரு பகுதியான திரவ நீர் இருப்பதற்கான ஆதாரமாக அமைகின்றன" என்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக பேராசிரியர் நீல் அர்னால்டு தெரிவித்துள்ளார்.
இந்த ஆராய்ச்சியில் இணைந்து பணியாற்றிய ஷெபீல்டு பல்கலைக்கழக பேராசிரியர் பிரான்சிஸ் பட்சர் கூறுகையில், "இந்த ஆய்வு இன்று செவ்வாய் கிரகத்தில் திரவ நீர் உள்ளது என்பதற்கான சிறந்த குறிப்பை அளிக்கிறது, ஏனென்றால் பூமியில் உள்ள துணை பனிப்பாறை ஏரிகளை தேடும் போது நாம் தேடும் இரண்டு முக்கிய ஆதாரங்கள், இப்போது செவ்வாய் கிரகத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன" என தெரிவித்தார்.
"திரவ நீர் என்பது வாழ்க்கைக்கு மிகவும் அத்தியாவசியமான பொருளாகும். இருந்தாலும், இதனால் செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் உண்டு என்று அர்த்தம் கொண்டு விட முடியாது" எனவும் அவர் குறிப்பிட்டார். இந்த ஆராய்ச்சி தொடர்பான கூடுதல் விவரங்கள் 'நேச்சர் ஆஸ்ட்ரனாமி' பத்திரிகையில் வெளியாகி உள்ளன.
செவ்வாய் கிரகத்தில் ஏற்படும் பூகம்பங்கள், நிலநடுக்கங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்வதற்காக அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் 'இன்சைட்' விண்கலத்தை கடந்த ஆண்டு அனுப்பியது. இந்த விண்கலம் கலிபோர்னியாவின் வாண்டன்பர்க் விமானப்படைத் தளத்தில் இருந்து செலுத்தப்பட்டது.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் 6ம் தேதி நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக இந்த விண்கலத்தில் பதிவாகியுள்ளது. நிலநடுக்கம் செவ்வாயின் உட்பகுதியில் ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் ஏற்பட்ட மாற்றங்களினால் இந்த நிலநடுக்கம் ஏற்படவில்லை என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ முடியுமா? என்று கடந்த சில ஆண்டுகளாக தீவிர ஆய்வு நடந்து வருகிறது.
அமெரிக்காவின் நாசா நிறுவனம் செவ்வாய் கிரகத்தில் முதலில் ஆய்வு நடத்தி வெற்றி கொடி நாட்ட வேண்டும் என்று தீவிரமாக ஆய்வு பணிகளில் ஈடுபட்டுள்ளது.
அதன் ஒரு கட்டமாக செவ்வாய் கிரகத்தில் மனிதர்களை தரை இறக்கி ஆய்வு மேற்கொள்ள நாசா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்காக விண்வெளி ஆய்வு விஞ்ஞானிகளுக்கு நாசா நிறுவனம் பயிற்சி அளித்து வருகிறது.
இந்த நிலையில் நாசா நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஜிம் பிரிடன்ஸ்டீன் ரேடியோ நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது செவ்வாய் கிரக திட்டம் பணிகள் குறித்து பல்வேறு தகவல்களை வெளியிட்டார்.
அப்போது அவர் கூறுகையில், “செவ்வாய் கிரகத்துக்கு விரைவில் அமெரிக்காவில் இருந்து மனிதர்களை அனுப்ப உள்ளோம். அப்படி செல்லும் முதல் நபராக ஒரு பெண் இருப்பார்” என்று கூறினார்.
இது தொடர்பான மற்ற கேள்விகளுக்கு அவர் பதில் அளிக்க மறுத்து விட்டார். இந்த மாத இறுதியில் அமெரிக்காவைச் சேர்ந்த 2 பெண் விஞ்ஞானிகளை விண்ணில் நடக்க வைப்பதற்கு நாசா திட்டமிட்டுள்ளது.
இந்த 2 பெண்களில் ஒருவர்தான் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #NASA #Mars
ஐரோப்பிய விண்வெளி மையம் ‘மார்ஸ் எக்ஸ்பிரஸ் விஷன்’ என்ற விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு 2003-ம் ஆண்டு அனுப்பியது. அந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தை போட்டோ எடுத்து அனுப்பி வருகிறது.
அவ்வகையில் இந்த விண்வெளி ஆராய்ச்சித் திட்டத்தின் 15-வது ஆண்டுவிழாவை சிறப்பிக்கும் விதமாக சமீபத்தில் புதிய புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதில், செவ்வாய் கிரகத்தில் 82 கிமீ அளவுக்கு பரந்து விரிந்துள்ள கோரோலவ் பள்ளம் முழுவதும் பனி நிறைந்து, பனிப்படலம் போன்று காட்சியளிக்கிறது.
இந்த பள்ளம் பனிக்கட்டிகளால் நிறைந்திருப்பதாகவும், 1.8 கி.மீ. அடர்த்தியுடன் இந்த பனிக்கட்டிகள் உள்ளதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கோரோலேவ் பள்ளம் செவ்வாய் கிரகத்தின் வடதுருவத்தின் அருகில் உள்ளது. #SnowOnMars #MarsCrater
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்