என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Marxist Party"
- கைது நடவடிக்கை ஆளும் கட்சியின் விரோத போக்கை காட்டுவதாக காங்கிரஸ் கட்சியினர் புகார் தெரிவித்தனர்.
- ஒவ்வொரு முறையும் நான் மயிரிழையில் உயிர் தப்பினேன் என்றார்.
திருவனந்தபுரம்:
கேரள மாநில காங்கிரஸ் தலைவராக இருப்பவர் சுதாகரன். இவர் சமீபத்தில் போலி புராதன பொருட்கள் விற்பனை மோசடியில் கைதானவருடன் தொடர்பு வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அவரது கைதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இந்த கைது நடவடிக்கை ஆளும் கட்சியின் விரோத போக்கை காட்டுவதாக காங்கிரஸ் கட்சியினர் புகார் தெரிவித்தனர். மேலும் சுதாகரனை கொலை செய்ய மார்க்சிஸ்ட் கட்சியினர் பலமுறை திட்டமிட்டதாக காங்கிரஸ் பிரமுகர் சக்திதரன் என்பவர் தெரிவித்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனை காங்கிரஸ் தலைவர் சுதாகரனும் உறுதிப்படுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் 6 முறை என்னை கொல்ல நேரடியாக முயற்சித்தனர். ஆனால் ஒவ்வொரு முறையும் நான் மயிரிழையில் உயிர் தப்பினேன் என்றார்.
- பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்த பிறகு பெண்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது.
- தமிழகத்தில் உள்ளாட்சிகளில் 50 சதவீதம் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது
நாகர்கோவில்:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் நாகர்கோவிலில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தக்கலையில் பெண்ணுரிமை பாதுகாப்பு மாநாடு இன்று மாலை நடக்கிறது. பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் குழந்தைகள் திருமணம் அதிகரித்து வருகிறது. ஆணுக்கும், பெண்ணுக்கும் ஒரே நீதி கிடைக்க வேண்டும். இருவரும் சமமாக இருக்க வேண்டும். பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்த பிறகு பெண்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது. பெண்களுக்கான வேலை வாய்ப்புகள் மறுக்கப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலமாக ஏராளமான பெண்கள் பயனடைந்து வந்தனர். தற்போது பா.ஜனதா அரசு அதற்கான நிதியை குறைத்துள்ளது. 100 நாள் வேலை திட்டத்தில் 30 நாட்கள் மட்டுமே வேலை நடந்து வருகிறது. 4000 கோடி ரூபாய் சம்பள பாக்கி உள்ளது. ஆண்கள் சேமிக்கும் சொத்தில் பெண்களுக்கும் உரிமை உண்டு என்று சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது. இந்த தீர்ப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வரவேற்கிறது.
புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், சுந்தரகாண்டம், ராமாயணம், மகாபாரத்தை படித்தால் சுகப்பிரசவம் நடக்கும் என்று கூறியுள்ளார். இது வேடிக்கையாக உள்ளது. அம்பேத்கர் உருவாக்கிய அரசியல் சாசன சட்டத்தை மாற்றி வருகிறார்கள்.
சட்டமன்றம், நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு சட்டத்தை 15 ஆண்டுகளாக கிடப்பில் போட்டுள்ளனர். தமிழகத்தில் உள்ளாட்சிகளில் 50 சதவீதம் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது பாராட்டத்தக்க ஒன்று தான்.
ஆனால் மேயர் மற்றும் பேரூராட்சி தலைவர்களாக பெண்கள் இருந்தாலும் அவர்களை முன்னிலையில் வைத்து விட்டு ஆண்கள் தான் அதை செயல்படுத்தி வருகிறார்கள். தமிழகத்தில் குடும்ப வன்முறை, பாலியல் வன்முறை அதிகரித்து உள்ளது. 2020-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி மாநில அளவில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். குழந்தைகள் திருமணத்தை தடுக்க 1986-ல் சட்டம் கொண்டுவரப்பட்டது. தற்போது சிதம்பரத்தில் தீட்சிகர் ஒருவர் குழந்தை திருமணம் விவகாரத்தில் கைது செய்யப்பட்டார்.
அவருக்கு ஆதரவாக ஆளுநர் ரவி பேசியுள்ளது வேடிக்கையாக உள்ளது. தானும் குழந்தை திருமணம் செய்து கொண்டதாக பகிரங்கமாக பேசியுள்ளார். அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆளுநர் ரவி எல்லை தாண்டி பேசி வருகிறார்.
தமிழகத்தில் பா.ஜனதாவின் அஜெண்டாவை உருவாக்குபவராக கவர்னர் செயல்பட்டு வருகிறார். தமிழகத்தில் ஆளுநர் ரவி ஆர்.எஸ். எஸ்.அமைப்பின் பிரகடனமாக செயல்படுகிறார்.
பாட்னாவில் நடந்த எதிர்க்கட்சிகள் கூட்டத்தை பா.ஜனதா விமர்சித்து வருகிறது. இதன் மூலமாக அவர்களுக்குள் ஏற்பட்டுள்ள நடுக்கம் வெளியே தெரிய தொடங்கியுள்ளது. எதிர்க்கட்சிகள் ஒன்று சேரும்போது மாறுபட்ட கருத்துக்கள் இருக்கத்தான் செய்யும். தமிழகத்தில் கூட அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா உள்ளது. ஆனால் அண்ணாமலையை தலைவராக்கினால் கூட்டணி சேரமாட்டோம் என்று கூறியுள்ளார்கள்.
விலைவாசி உயர்ந்துள்ளது. அதற்கு அடிப்படை காரணம் பா.ஜனதா அரசின் பொருளாதார கொள்கை தான். பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மத்திய அரசின் வரி உயர்வு காரணமாகும். மின் கட்டணத்தை தற்போது 25 சதவீதம் உயர்த்துவதாக கூறியுள்ளார்கள். மனிதர்களை இரவு நிம்மதியாக தூங்கவிடாமல் ஆப்பு வைக்கும் செயலில் இந்த அரசு ஈடுபட்டுள்ளது.
தொழிலாளர் நலன் சார்ந்த பிரச்சினைகளுக்கு சட்ட திருத்தம் கொண்டு வந்ததும் பா.ஜனதா அரசு தான். தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான புகாரை விசாரிக்க வேண்டாம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கூறவில்லை. செந்தில் பாலாஜி அமைச்சராக உள்ளார். அவரை விசாரிக்க சில விதிமுறைகள் உள்ளது. அதை மீறி அமலாக்கத்துறை செயல்பட்டுள்ளது. சம்மன் அனுப்பி அவரை விசாரித்து இருக்கலாம். அமலாக்கத் துறை மூலமாக எதிர்க்கட்சியினரை பா.ஜனதா மிரட்டி வருகிறது. இதை வன்மையாக கண்டிக்கிறோம். கள்ளச்சாராயம் விற்பனையை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது வாசுகி, மாவட்ட செயலாளர் செல்லசாமி, முன்னாள் எம்.எல்.ஏ. லீமாரோஸ் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
- பேராயர் ஜோசப் பாம்பிளானியின் இந்த கருத்துக்கு மார்க்சிஸ்டு கட்சியினரும், மூத்த நிர்வாகிகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
- ஜோசப் தேவையில்லாத கருத்துக்களை கூறிவருகிறார் அதை பெரிதாக எடுத்துக்கொள்ள தேவையில்லை என்றார்.
திருவனந்தபுரம்:
கேரளாவை சேர்ந்த பேராயர் மார் ஜோசப் பாம்பிளானி. இவர் மத்திய அரசு ரப்பருக்கு உரிய விலை கொடுத்தால் அடுத்த பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு ஒரு தொகுதியில் வெற்றி கிடைக்கும் என்று கூறினார்.
இது கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சர்ச்சை ஓய்வதற்குள், இப்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கி உள்ளார்.
சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் ஆளும்கட்சியினர் கொண்டாடும் தியாகிகள் தினத்தில், போலீசுக்கு பயந்து பாலத்தில் இருந்து விழுந்து இறந்தவரெல்லாம் தியாகிகள் ஆக கொண்டாடப்படுகிறார்கள், என்றார்.
பேராயர் ஜோசப் பாம்பிளானியின் இந்த கருத்துக்கு மார்க்சிஸ்டு கட்சியினரும், மூத்த நிர்வாகிகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மூத்த நிர்வாகி ஜெயராஜன் கூறும்போது, பேராயர் ஜோசப் பாம்பிளானி எப்போதுமே தேவையில்லாத கருத்துக்களை கூறிவருகிறார். அதை பெரிதாக எடுத்துக்கொள்ள தேவையில்லை என்றார்.
சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் பகுதியை அடுத்த கரிக்காப்பட்டி ஊராட்சி தாண்டான்வளவில் 3 சின்டெக்ஸ் தண்ணீர் தொட்டிகள் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. அப்பகுதியை சேர்ந்த சரவணன் (வயது 35), அவரது மனைவி செல்வி(27) மற்றும் பொன்னுவேல் மனைவி சித்ரா(35) ஆகியோர் வசிக்கும் குடியிருப்பு பகுதிக்கு குடிநீர் வரவில்லை.
இதனால் மற்ற பகுதிகளுக்கும், குடிநீர் விநியோகிக்ககூடாது என இடையூறு செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் ஜலகண்டாபுரம் போலீசார், மேற்கண்ட 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டதாக நங்கவள்ளி ஒன்றிய மார்க்சிஸ்ட் கட்சி செயலாளர் வெங்கடேசன்(40) மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. #tamilnews
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
டெல்டா மாவட்டங்களில் கடந்த 7 ஆண்டுகளாக போதிய தண்ணீர் காவிரியில் வராததால் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்படவில்லை. இதே ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட சம்பா மற்றும் தாளடி சாகுபடிகளும் பல நேரங்களில் வறட்சியினால் பாதிக்கப்பட்டு மிகுந்த நாசத்திற்கும், நஷ்டத்திற்கும் டெல்டா மாவட்ட மக்கள் ஆளாகியுள்ளார்கள்.
வழக்கம்போல் இந்த ஆண்டு ஜூன் மாதம் 12-ந் தேதி மேட்டூர் அணை திறக்கப்படுமா என பெரும் கேள்வி எழுந்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில் தமிழக அரசு என்ன செய்யப்போகிறது என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
நாங்கள் நடத்திய சட்டப் போராட்டத்தின் மூலம் ஆணையத்தை பெற்றுவிட்டோம் எனக் கூறி தமிழக மக்களை ஏமாற்றுவதை கைவிட்டு, உடனடியாக சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் தண்ணீரை பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதோடு தேவையானால் இதற்காக அனைத்துக் கட்சி கூட்டத்தையும் கூட்ட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் வற்புறுத்தி தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்