என் மலர்
நீங்கள் தேடியது "Matt Henry"
- வில்லியம்சன், லோக்கி பெர்குசன், சாப்மேன், வேகப்பந்து வீச்சாளர்கள் மேட் ஹென்றி, ஜேம்ஸ் நீஷம் ஆகியோர் காயத்தில் சிக்கியுள்ளனர்.
- மேட் ஹென்றிக்கு தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து விலகியுள்ளார்.
புதுடெல்லி:
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான நியூசிலாந்து அணி காயத்தால் தத்தளிக்கிறது. வில்லியம்சன், லோக்கி பெர்குசன், சாப்மேன், வேகப்பந்து வீச்சாளர்கள் மேட் ஹென்றி, ஜேம்ஸ் நீஷம் ஆகியோர் காயத்தில் சிக்கியுள்ளனர்.
இந்நிலையில் மேட் ஹென்றிக்கு தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு மாற்று வீரராக வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜாமிசன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
நியூசிலாந்து அணி கடைசியாக நடந்த 3 போட்டியிலும் தோல்வியை தழுவியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- லபுசேன் 90 ரன்னில் ஆட்டமிழந்து சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார்.
- மேட் ஹென்றி ஏழு விக்கெட்கள் வீழ்த்தினார்.
நியூசிலாந்து- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் நேற்று கிறிஸ்ட்சர்ச்சில் தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய நியூசிலாந்து அணி ஹேசில்வுட்டின் (5 விக்கெட்) பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 162 ரன்னில் சுருண்டது.
பின்னர் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்கள் எடுத்திருந்தது. லபுசேன் 45 ரன்னுடனும், நைட் வாட்ச்மேனாக களம் இறங்கிய நாதன் லயன் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. லபுசேன் அரைசதம் அடித்து சதத்தை நோக்கி சென்று கொண்டிருந்தார். மறுமுனையில் லயன் 20 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த மிட்செல் மார்ஷ் ரன்ஏதும் எடுக்காமல் வெளியேறினார்.

மேட் ஹென்றி
அலேக்ஸ் கேரி 14 ரன்னிலும், ஸ்டார்க் 28 ரன்னிலும், கம்மின்ஸ் 23 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட லபுசேன் 90 ரன்கள் எடுத்த நிலையில் சவுத்தி பந்தில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து ஆஸ்திரேலியா 256 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. மேட் ஹென்றி ஏழு விக்கெட் சாய்த்தார்.
முதல் இன்னிங்சில் 94 ரன்கள் பின்தங்கிய நிலையில் நியூசிலாந்து 2-வது இன்னிங்சில் விளையாடி வருகிறது. தேனீர் இடைவேளை வரை அந்த அணி 1 விக்கெட் இழப்பிற்கு 43 ரன்கள் எடுத்துள்ளது. வில் யங் 1 ரன்னில் ஸ்டார்க் பந்தில் ஆட்டமிழந்தார்.
- சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் அணிகளில் இடம் பிடித்திருந்தார்.
- பஞ்சாப் அணிக்காக 2017 சீசனில் இரண்டு போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார்.
லக்கோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியில் இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டரான டேவிட் வில்லே இடம் பிடித்திருந்தார். ஐபிஎல் தொடரின் தொடக்க போட்டிகளை அவர் தவறவிட வாய்ப்பு இருந்ததாக கருதப்பட்டது. இந்த நிலையில் தனிப்பட்ட காரணமாக தொடர் முழுவதிலும் இருந்து விலகியுள்ளார்.
அவருக்கு மாற்று வீரராக நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளரான மாட் ஹென்ரியை தேர்வு செய்துள்ளது. 32 வயதான மாட் ஹென்ரி இதற்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகளுக்காக விளையாடியுள்ளார். ஆனால் 2017 சீசனில் பஞ்சாப் அணிக்காக இரண்டு போட்டிகளில் களம் இறங்கியுள்ளார். ஒரேயொரு விக்கெட் வீழ்த்தியுள்ளார்.
மாட் ஹென்ரி நியூசிலாந்து அணிக்காக 25 டெஸ்ட், 82 ஒரு நாள் மற்றும் 17 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். டெஸ்ட் போட்டியில் 95 விக்கெட்டுகளும், ஒருநாள் போட்டியில் 141 விக்கெட்டுகளும், டி20-யில் 20 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார்.

ஒட்டுமொத்தமாக ஹென்ரி 131 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். 151 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார்.
டேவிட் வில்லே உடன் ஹாரி ப்ரூக் (டெல்லி கேப்பிட்டல்ஸ்), மார்க் வுட் (எல்.எஸ்.ஜி.), ஜேசன் ராய் (கொல்கல்த்தா நைட் ரைடர்ஸ்), கஸ் அட்கின்சன் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்) ஆகியோர் ஐபிஎல் 2024 சீசனில் இருந்து விலகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மாட் ஹென்ரியை அடிப்படை விலையான 1.25 கோடி ரூபாய்க்கு எடுத்துள்ளது.
- நியூசிலாந்து வீரர் கான்வே 91 ரன்னில் அவுட் ஆனார்.
- நியூசிலாந்து அணி 134 ரன்கள் முன்னிலையில் உள்ளது.
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய இந்திய அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிக்கொடுத்தது. இந்த அணியில் 5 பேர் டக் அவுட் ஆகி வெளியேறினர். அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 20 ரன்கள் எடுத்தார்.
மிரட்டாலாக பந்து வீசிய நியூசிலாந்து அணியில் ஹென்றி 5 விக்கெட்டும் வில்லியம் ஓரோர்கே 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதனையடுத்து நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக கான்வே- லாதம் களமிறங்கினர். நிதானமாக விளையாடிய லாதம் 15 ரன்னில் ஆட்டமிழந்தார். தொடக்கம் முதலே அதிரடி காட்டிய கான்வே அரைசதம் அடித்து அசத்தினார்.
நீண்ட நேரமாக விக்கெட் எடுக்க முடியாமல் திணறிய நிலையில் ஜடேஜா பந்து வீச்சில் வில் யங் 33 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்த சிறிது நேரத்தில் கான்வே 91 ரன்னில் வெளியேறினார்.
இதனையடுத்து ரச்சின் ரவீந்திரா - டேரில் மிட்செல் ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இறுதியில் 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி 3 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் எடுத்தது. ரவீந்திரா 22 ரன்னிலும் மிட்செல் 14 ரன்னிலும் களத்தில் உள்ளனர்.
இந்திய தரப்பில் அஸ்வின், ஜடேஜா, குல்தீப் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர். நியூசிலாந்து அணி 134 ரன்கள் முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
- முதலில் பேட் செய்த இலங்கை அணி 178 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
- நியூசிலாந்தின் மேட் ஹென்றி 4 விக்கெட்டும், ஜேக்கப் டுபி, நாதன் ஸ்மித் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
வெல்லிங்டன்:
இலங்கை கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.
இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த இலங்கை அணி 178 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அவிஷ்கா பெர்னண்டோ 56 ரன் எடுத்தார்.
நியூசிலாந்து சார்பில் மேட் ஹென்றி 4 விக்கெட்டும், ஜேக்கப் டுபி, நாதன் ஸ்மித் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி நியூசிலாந்து களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரச்சின் ரவீந்திரா - வில் யங் களமிறங்கினர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 93 ரன்கள் சேர்த்த நிலையில் ரச்சின் 45 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்து இறங்கிய சாப்மேன் நிதானமாக விளையாடினார். வில் யங் அதிரடியாக ஆடி அணியை வெற்றி பெற வைத்தார்.
இறுதியில், நியூசிலாந்து அணி 26.2 ஓவரில் 1 விக்கெட்டுக்கு 180 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. வில் யங் 90 ரன்னும், சாப்மேன் 29 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். ஆட்ட நாயகனாக மேட் ஹென்றி தேர்வு செய்யப்பட்டார். இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் நியூசிலாந்து 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.
- தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக கிளாசன் அடித்த பந்தை டைவ் அடித்து கேட்ச் பிடித்தபோது தோள்பட்டையில் காயம்.
- காயம் தொடர்பாக ஸ்கேன் மற்றும் சில பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. நாளைமறுதினம் (மார்ச் 9-ந்தேதி) ஞாயிற்றுக்கிழமை துபாயில் நடைபெறும் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து- இந்தியா பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன.
அரையிறுதி போட்டியில் தென்ஆப்பிரிக்கா அணிக்கெதிராக நியூசிலாந்து விளையாடும்போது, தென்ஆப்பிரிக்கா பேட்ஸ்மேன் கிளாசன் அடித்த பந்தை நியூசிலாந்து அணி வேகப்பந்து வீச்சாளர் மேட் ஹென்றி டைவ் அடித்து கேட்ச் பிடிக்கும் அவரது வலது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது.
இந்த போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது. இறுதிப் போட்டிக்கு ஐந்து நாட்கள் இருப்பதால் காயம் சரியாகிவிடும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் காயத்தால் மேட் ஹென்றி இந்தியாவுக்கு எதிராக இறுதிப் போட்டியில் விளையாடுவது சந்தேகம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. அதேவேளையில் அவரை விளையாட வைக்க முயற்சி மேற்கொண்டு வருவதாக நியூசிலாந்து அணியின் தலைமை பயற்சியாளர் கேரி ஸ்டீட் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கேரி ஸ்டீட் கூறியதாவது:-
மேட் ஹென்றிக்கு ஸ்கேன் மற்றும் சில பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு எதிரான போட்டியில் அவர் விளையாடுவதற்கான அனைத்து வாய்ப்புகளையும் வழங்க நாங்கள் முயற்சி மேற்கொண்டு வருகிறார்.
தற்போதைய நிலையில் அவர் இடம் பெறுவது சிறிது தெரியாத நிலையில்தான் உள்ளது. அவர் கீழே விழுந்ததில் இருந்து தோள்பட்டையில் அவருக்கு வலி இருந்தது தெளிவாக தெரிந்தது. அவர் போட்டிக்கு தயாராகிவிடுவார் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு கேரி ஸ்டீட் தெரிவித்துள்ளார்.
லீக் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக நியூசிலாந்து தோல்வியடைந்தாலும், மேட் ஹென்றி 42 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட் சாய்த்தார். இந்தியாவுக்கு எதிராக இறுதிப் போட்டியில் ஹென்றி விளையாடவில்லை என்றால் அது நியூசிலாந்துக்கு பின்னடைவாக அமையும்.
- முன்னதாக இரு அணிகள் மோதிய லீக் சுற்றுப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.
- அப்போட்டியில் நியூசிலாந்து பந்துவீச்சாளர் மேட் ஹென்றி 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
சாம்பின்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி துபாயில் இன்று நடைபெறுகிறது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இப்போட்டியில் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது
முன்னதாக இரு அணிகள் மோதிய லீக் சுற்றுப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. அப்போட்டியில் நியூசிலாந்து பந்துவீச்சாளர் மேட் ஹென்றி 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
இந்நிலையில், காயம் காரணமாக மேட் ஹென்றி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக நேத்தன் ஸ்மித் நியூசிலாந்து அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இறுதிப்போட்டியில் மேட் ஹென்றி விளையாடாதது இந்திய அணிக்கு சாதகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ஏனெனில் நடப்பு சாம்பியன்ஸ் ட்ராஃபி தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களின் பட்டியலில் மேட் ஹென்றி (10 விக்கெட்டுகள்) முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.