search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mauritius"

    • வாக்குப்பதிவு நிறைவுபெற்ற நிலையில், வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.
    • ஆயுதப்படை சமூகவுடைமை இயக்கம் (எம்எஸ்எம்) இம்முறை பெரும்பான்மை இடங்களில் தோல்வியை தழுவியது.

    போர்ட் லூயிஸ்:

    இந்தியப் பெருங்கடலில் உள்ள குட்டித் தீவு நாடு மொரிஷியஸ். இந்தநாட்டில் (நவ. 10) நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 70 உறுப்பினர்களில் 62 பேர் தேர்தல் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவர். வாக்குப்பதிவு நிறைவுபெற்ற நிலையில், வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அதில் கடந்த 2 முறை நடைபெற்ற பொதுத்தேர்தல்களிலும் வெற்றி பெற்ற பிரதமர் பிரவீந்த் குமார் ஜுக்நாத் தலைமையிலான ஆயுதப்படை சமூகவுடைமை இயக்கம் (எம்எஸ்எம்) இம்முறை பெரும்பான்மை இடங்களில் தோல்வியை தழுவியது.

    பிரதான எதிர்க்கட்சியான முன்னாள் பிரதமர் டாக்டர் நவீன் ராம்கூலம் தலைமையிலான தொழிலாளர் கட்சியான - பார்டி டிராவைலிஸ்ட்(பிடி'ஆர்') மற்றும் மொரிஷியன் ஆயுதப்படை இயக்கம்(எம்எம்எம்), நோவியாவ் ஜனநாயகத்தினர் கட்சிகளின் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைக்கிறது.

    இந்நிலையில், மொரிஷியஸ் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள நவீன் ராம்கூலம்த்திற்கு பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். மொரிஷியஸ் நாட்டுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் இருப்பதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

    • இந்திய பெருங்கடல் பகுதியில் சாகோஸ் தீவுகள் அமைந்துள்ளது.
    • இந்த தீவுகளை மொரீசியஸ் நாட்டுக்கு விட்டுத்தர பிரிட்டன் முன்வந்தது.

    போர்ட் லூயிஸ்:

    இந்திய பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ளது பிரிட்டிஷ் இந்திய பெருங்கடல் பிராந்தியம். இது சுமார் 60 குட்டித் தீவுகளைக் கொண்ட தீவுக்கூட்டம். இதுதொடர்பாக நீண்ட காலமாக பிரச்சனை இருந்து வந்தது.

    பிரிட்டன் மற்றும் மொரீசியஸ் இடையே நீண்ட காலம் நடந்த பேச்சுகளுக்கு பின் இந்த நிலப்பரப்பு தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

    அதன்படி, பிரிட்டிஷ் இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் உள்ள டியாகோ கார்சியா பகுதி அடுத்த 99 ஆண்டுக்கு அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ராணுவத்தின் கூட்டு தளமாக தொடர்ந்து இருக்கும். இந்தப் பிராந்தியத்தில் மிக முக்கிய போர்க்களமாக, பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு தளமாக டியாகோ கார்சியா உள்ளது. அதை ஒட்டியுள்ள சாகோஸ் தீவுகளை மொரிசியஸ் நாட்டுக்கு விட்டுத்தர பிரிட்டன் முன்வந்துள்ளது.

    வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த முடிவை இந்தியா வரவேற்றுள்ளது.

    இந்நிலையில், சாகோஸ் தீவுகளின் இறையாண்மையை மொரிசியசிடம் ஒப்படைத்ததற்கு மொரிசியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜுக்நாத், நமது காலனித்துவத்தை நிறைவு செய்ததற்காக இந்திய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தார்.

    இதுதொடர்பாக, மொரிசியஸ் பிரதமர் ஜுக்நாத் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ஆப்பிரிக்க யூனியன் மற்றும் இந்திய அரசு உள்பட நமது காலனித்துவ நீக்கத்தை முடிப்பதற்கான போராட்டத்தில் எங்களுக்கு ஆதரவளித்த அனைத்து நட்பு நாடுகளுக்கும் நன்றி என பதிவிட்டுள்ளார்.

    • 4 ஆண்டுகளுக்கு பின் வரும் பிப்ரவரி 2- ஆம் தேதியில் இருந்து சேவை தொடங்குகிறது.
    • விமானம் வாரத்தில் 3 நாட்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து ஹாங்காங்கிற்கு 'கேத்தே' பசிபிக் ஏர்லைன்ஸ் என்ற நிறுவனம் நேரடி விமானத்தை இயக்கி வந்தது. கடந்த 2020-ஆம் ஆண்டு மார்ச் மாதம் உலகம் முழுவதும் கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

    கொரோனா தொற்று பாதிப்பு முடிந்து சகஜநிலை திரும்பியபின் சென்னையில் இருந்து பல நகரங்களுக்கு நேரடி விமானங்கள் இயக்கப்பட்டன. ஆனால் சென்னை -ஹாங்காங் இடையே நேரடி விமான சேவை மீண்டும் தொடங்கப்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில் , 4 ஆண்டுகளுக்கு பின் வரும் பிப்ரவரி 2- ஆம் தேதியில் இருந்து 'கேத்தே' பசிபிக் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம், மீண்டும் சென்னை- ஹாங்காங் இடையே நேரடி விமான சேவையை தொடங்குகிறது. இந்த விமானம் வாரத்தில் 3 நாட்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. 

    கொரோனா காலத்தில் நிறுத்தி வைக்கபட்ட சென்னை - ஹாங்காங் நேரடி விமான சேவை, 4 ஆண்டுகளுக்குப் பின்பு மீண்டும் தொடங்கப்படுவது தொழில் துறையினருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சென்னையில் இருந்து ஜப்பான், தென்கொரியா, பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு செல்லும் பயணிகளுக்கு இது இணைப்பு விமானமாக இருக்கும்.

    அதேபோல, சென்னை-மொரீஷியஸ் இடையே 'ஏர் மொரீஷியஸ்' ஏர்லைன்ஸ் விமான சேவை வரும் ஏப்ரல் மாதத்தில் மீண்டும் தொடங்கப்பட உள்ளதாக சென்னை விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • 4 ஆண்டுகளுக்குப் பிறகு வருகின்ற ஏப்ரல் மாதத்தில் இருந்து, மீண்டும் விமான சேவைகளை தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
    • மீண்டும் விமான சேவை தொடங்கப்படுவது மாணவ மாணவிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ஆலந்தூர்:

    கடந்த 2020-ம் ஆண்டு கொரோான பரவல் அதிகரித்த போது சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் முற்றிலும் முடங்கியது. பின்னர் நிலைமை சீரானதும் சென்னைக்கு விமான சேவைகளை நிறுத்தி வைத்திருந்த வெளிநாட்டு விமான நிறுவனங்கள், மீண்டும் படிப்படியாக விமான சேவைகளை தொடங்கின. ஆனால் ஹாங்காங், மொரிஷியஸ் நாட்டில் இருந்து சென்னைக்கு விமான சேவை மீண்டும் தொடங்கப்படாமல் இருந்தது.

    இந்நிலையில் ஹாங்காங்- சென்னை- ஹாங்காங், இடையே இயக்கப்பட்டு வந்த, கேத்தே பசிபிக் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம், 4 ஆண்டுகள் இடைவெளிக்கு பின்னர் மீண்டும் விமான சேவையை, பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் இருந்து, இயக்க உள்ளது. முதலில் வாரத்தில் 3 நாட்கள் மட்டும் இயக்கப்படும், இந்த விமான சேவைகள், பயணிகள் வரவேற்பை பொறுத்து, வாரத்தில் 7 நாட்களும், தினசரி இயக்கப்பட இருக்கிறது.

    இதேபோல் சென்னையில் இருந்து மொரிசியஸ் நாட்டிற்கு, ஏர் மொரிஷியஸ் விமான சேவைகளும் மீண்டும் இயக்கப்பட உள்ளன. வாரத்தில் 2 நாட்கள் செவ்வாய், வெள்ளி ஆகிய 2 நாட்கள் இயக்கப்பட்ட இந்த விமான சேவைகள், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நிறுத்தப்பட்டது. இந்த விமான சேவையை தற்போது 4 ஆண்டுகளுக்குப் பிறகு வருகின்ற ஏப்ரல் மாதத்தில் இருந்து, மீண்டும் விமான சேவைகளை தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

    ஹாங்காங், மொரிஷியஸ் விமான சேவை மீண்டும் தொடங்கப்பட இருப்பது பயணிகளுக்கு மிகுந்த பயனளிப்பதாக இருக்கும். குறிப்பாக ஹாங்காங் விமான சேவை, தொழில்துறையினருக்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்த விமான சேவைகளாக விளங்கி இருந்தது. அதோடு ஜப்பான் போன்ற நாடுகளுக்கு செல்பவர்களுக்கு, இணைப்பு விமானமாகவும் செயல்பட்டு வந்தது. இதனால் தொழில் துறையினர் மத்தியில் இது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதைப்போல் ஏர் மொரிஷியஸ் விமானம், மாணவ மாணவிகளுக்கு அதிகம் முக்கியத்துவம் வாய்ந்த விமான சேவையாக செயல்பட்டது. மொரிசியஸ் நாட்டில் பல்வேறு மருத்துவ கல்லூரிகள் மற்றும் உயர் படிப்புக்கான கல்வி நிறுவனங்கள் உள்ளன. இதனால் இந்தியாவில் மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்காதவர்கள், ஏராளமான மாணவ மாணவிகள், மொரிஷியசில் மருத்துவ கல்லூரிகளில் படித்து வருகின்றனர். கடந்த 4 ஆண்டுகளாக, விமான சேவைகள் இல்லாததால், இந்த மாணவ மாணவிகள், மும்பை அல்லது துபாய் சென்று மொரிசியஸ் செல்ல வேண்டிய நிலை இருந்தது. இதனால் அதிகம் பண செலவு, பயண நேரம் ஏற்பட்டு மாணவ மாணவிகள் பாதிக்கப்பட்டு வந்தனர். இப்போது மீண்டும் விமான சேவை தொடங்கப்படுவது மாணவ மாணவிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

    ×