என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "medical examination"
- பஞ்சபூதங்களும் சித்த மருத்துவத்தின் அடிநாதமாகும்.
- நோய் அறிதல் மற்றும் சிகிச்சை முறைகள் வேறுபட்டவையாக இருக்கின்றன.
ஆயுர்வேதம், யுனானி மற்றும் சித்தா இவை மூன்றும் பாரம்பரிய மருத்துவ முறைகளாக ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக புழக்கத்தில் இருந்து வருகின்றன. உலகில் பல்வேறு மருத்துவ சிகிச்சை முறைகள் இருந்தாலும் இவை மூன்றும் உயிர்ப்புடன் இயங்கிக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொன்றுக்கும் தனித்தனி கொள்கைகள், நோய் அறியும் விதம், சிகிச்சை நுட்பங்கள் உள்ளன.
குறிப்பாக நோய் அறிதல் மற்றும் சிகிச்சை முறைகள் வேறுபட்டவையாக இருக்கின்றன. அவற்றின் பாரம்பரிய தன்மைக்கேற்ப வெவ்வேறு அணுகுமுறையை கொண்டிருக்கலாம் என்பதை நினைவில் கொள்வதும் அவசியமானது. ஆயுர்வேதம், யுனானி மற்றும் சித்த மருத்துவ சிகிச்சைகள் எவ்வாறு ஒன்றுக்கொன்று வேறுபடுகின்றன என்பதை சுருக்கமாக பார்ப்போம்.
சித்தா:
தோற்றம்: பண்டைய தமிழகத்தில் வேரூன்றிய மருத்துவ முறையாகும். சித்த மருத்துவத்தை உருவாக்கிய பெருமை சித்தர்களுக்கு உண்டு.
அடிப்படை: பித்தம், கபம், வாதம் ஆகிய மூன்றுடன், நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்சபூதங்களும் சித்த மருத்துவத்தின் அடிநாதமாகும்.
சிகிச்சை முறை: தாதுக்கள், தாவரங்கள் மற்றும் இயற்கையில் கிடைக்கும் எண்ணற்ற பொருட்களும் சித்த வைத்தியத்தில் பயன்படுத்தப்படுகின்றன. தியானம், யோகா மற்றும் உணவுப் பழக்கம் போன்றவற்றையும் முறையாக கடைப்பிடிக்க அறிவுறுத்தப்படுகிறது.
நோய் கண்டறிதல்: மருத்துவ பரிசோதனை, சிறுநீர் மற்றும் நாடித் துடிப்பு போன்றவைகளுடன் பித்தம், கபம், வாதம் போன்றவற்றின் சமநிலையும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.
ஆயுர்வேதம்:
தோற்றம்: இந்திய துணை கண்டத்தின் பழமையான மருத்துவ முறையாக விளங்குகிறது. ஆயுர் என்பது நீண்ட வாழ்வையும், வேதம் என்பது நூலையும் குறிப்பிடுகிறது. இந்தியா மட்டுமின்றி பல நாடுகளிலும் மாற்று மருத்துவ முறைகளுள் ஒன்றாக விளங்குகிறது. குறிப்பாக தெற்காசிய நாடுகளில் செல்வாக்கு பெற்ற மருத்துவ முறையாக திகழ்கிறது.
அடிப்படை: சாத்வீக, ராட்சத, தமச ஆகிய முக்குணங்களுக்கு இணையாக ஆயுர் வேதத்தில் வாதம், பித்தம், கபம் என்ற மூன்று குணங்கள் கூறப்படுகின்றன. இவை சம நிலையில் இருப்பது ஆரோக்கியத்திற்கு அவசியமானது என்று ஆயுர்வேதம் அறிவுறுத்துகிறது.
சிகிச்சை முறை: மூலிகைகள், உணவு பரிந்துரைகள், வாழ்க்கைமுறை, யோகா மற்றும் தியானம் ஆகியவை பொதுவான ஆயுர்வேத சிகிச்சைகளாக விளங்குகின்றன.
நோய் கண்டறிதல்: பித்தம், வாதம், கபம் ஆகியவற்றின் சமநிலையை மதிப்பிடுவதோடு கூடுதலாக நாக்கு, நாடித் துடிப்பு, சிறுநீர் மற்றும் ஒட்டுமொத்த உடல் மற்றும் மன அமைப்பை பரிசோதிப்பதும் அடங்கும்.
யுனானி:
தோற்றம்: யுனானி மருத்துவம் பழங்கால கிரேக்கத்தில் உருவானது. பின்னர் பாரசீகம் மற்றும் அரேபியாவை சேர்ந்த மருத்துவர்களால் செம்மையாக்கப்பட்டு, முழுமையாக்கப்பட்டது.
அடிப்படை: ரத்தம், கபம், மஞ்சள் பித்தம் மற்றும் கருப்பு பித்தம் ஆகிய நான்கும் ஆரோக்கியத்தை நிலைநிறுத்துவதற்கு சமநிலையில் இருக்க வேண்டும் என்பது யுனானி மருத்துவத்தின் அடிப்படை தத்துவமாக விளங்குகிறது.
சிகிச்சை முறை: மூலிகைகள், தாதுக்கள் மற்றும் விலங்குகளிடம் இருந்து தயாரிக்கப்படும் மருந்துகள் ஆகியவை யுனானி மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் இயற்கை பொருட்களில் அடங்கும். உணவுப்பழக்கத்தையும், வாழ்க்கைமுறையையும் சரியாக பின்பற்ற வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது.
நோய் கண்டறிதல்: யுனானி மருத்துவத்தில் நாடித்துடிப்பு, சிறுநீர், மலம் மற்றும் மருத்துவ பரிசோதனைகளின் அடிப்படையில் நோயின் தாக்கம் மதிப்பிடப்படுகிறது.
- புற்றுநோய் பெண்களுக்கு அதிக பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது.
- ரத்தப் பரிசோதனை மூலம் கொழுப்பின் அளவை கண்டறியலாம்.
குடும்ப நலன் நாடும் பெண்கள் தங்கள் நலனில் போதிய அக்கறை கொள்ளாததால் பல்வேறு உடல்நல பாதிப்புகளுக்கு ஆளாகிறார்கள். குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒருசில பரிசோதனைகளை மேற்கொள்வதன் மூலம் பெரிய அளவிலான ஆபத்தில் இருந்து தற்காத்துக்கொள்ள முடியும். அதற்கு செய்ய வேண்டிய சில பரிசோதனைகள் குறித்து பார்ப்போம்..
புற்றுநோய்
உயிருக்கு அச்சுறுத்தலாக விளங்கும் புற்றுநோய் பெண்களுக்கு அதிக பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது. அதிலும் பல பெண்கள் கருப்பை வாய் புற்றுநோய் பாதிப்புக்கு ஆளாகிறார்கள். இளம் வயது பெண்கள் கூட இந்த புற்றுநோயால் அவதிக்குள்ளாகிறார்கள். அதனால் 20 வயதை கடந்த பெண்கள் கருப்பை வாய் புற்றுநோய் பரிசோதனை செய்து கொள்வது நல்லது.
மார்பக புற்றுநோயும் வயது வித்தியாசமின்றி பாதிப்பை ஏற்படுத்துவதால் அதற்குரிய பரிசோதனையையும் அவசியம் மேற்கொள்ள வேண்டும். 40 வயதை கடந்த பெண்கள் மார்பக புற்றுநோய்க்கான மேமோகிராம் சோதனையை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை செய்து கொள்வது நல்லது.
கொழுப்பு பரிசோதனை
ரத்தத்தில் கெட்ட கொழுப்பு அதிகம் சேர்ந்தால், பல்வேறு வகையான பிரச்சினைகள் ஏற்படலாம். அதனால் குறிப்பிட்ட காலகட்டத்தில் கொழுப்பு அளவை கண்டறிய வேண்டியது அவசியமானது. சாதாரண ரத்தப் பரிசோதனை மூலமே கொழுப்பின் அளவை கண்டறிந்துவிடலாம். அதனால் 5 ஆண்டு களுக்கு ஒருமுறையாவது கொழுப்பு பரிசோதனை மேற்கொள்ள வேண்டியது அவசியமானது. 20 வயதை கடந்த பெண்கள் இந்த பரிசோதனையை மேற்கொள்வது நல்லது.
தைராய்டு பரிசோதனை
கழுத்து பகுதியில் அமைந்திருக்கும் தைராய்டு சுரப்பியின் முக்கியமான பணி, தைராக்சின் என்ற ஹார்மோனை சுரப்பதுதான். இந்த ஹார்மோன் சுரப்பு அதிகமானால் ஹைப்பர் தைராய்டிசம், குறைந்தால் ஹைப்போ தைராய்டிசம் என்ற பாதிப்பு உண்டாகும். ஆரம்ப நிலையிலேயே தைராய்டு சுரப்பியின் செயல்பாடுகளில் ஏற்படும் மாற்றத்தை கண்டறிந்தால் மருந்துகளின் மூலம் குணப்படுத்திவிட முடியும்.
கழுத்தில் வீக்கம் அல்லது கட்டி இருந்தால் அது பெரும்பாலும் தைராய்டு கட்டியாக இருக்க வாய்ப்புள்ளது. குறிப்பிட்ட இடைவெளியில் பரிசோதனை செய்வதன் மூலமே கண்டறிய முடியும். ஆரம்ப நிலையிலேயே பரிசோதனை செய்துவிட்டால் நோய் பாதிப்பின் வீரியத்தை கட்டுப்படுத்திவிடலாம்.
கண்பார்வை பரிசோதனை
பெண்கள் பலரும் கண் பார்வை பரிசோதனை மேற்கொள்வதற்கு ஆர்வம் காட்டுவதில்லை. அதன் அவசியத்தை புரிந்து கொள்வதுமில்லை. கண் பார்வையில் சிறு குறைபாடு தென்படும்போதே கவனம் செலுத்தாமல் அலட்சியப்படுத்திவிடுகிறார்கள்.
நாளடைவில் கண் பார்வை குறைபாடு பிரச்சினை அதிகரிக்க தொடங்கிவிடுகிறது. ஆண்டுக்கு ஒருமுறையாவது கண் பரிசோதனை மேற்கொள்வது நல்லது. கண்ணாடி அணியுமாறு மருத்துவர் பரிந்துரைத்த நபர்கள் 6 மாதங்களுக்கு ஒரு முறை பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.
எலும்பு அடர்த்தி சோதனை
எலும்புகள் பலவீனம் அடைந்தால் ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் நோய் பாதிப்பை எதிர்கொள்ள நேரிடும். எலும்புகளின் அடர்த்தியில் மாறுபாடு ஏற்படும்போது கடுமையான விளைவுகளை அனுபவிக்க நேரிடும். எலும்பின் அடர்த்தியை முன்கூட்டியே பரிசோதனை செய்து அறிந்து கொண்டால் இந்த நோய் பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள்ள முடியும்.
பெண்கள் 5 வருடங்களுக்கு ஒருமுறை இந்த பரிசோதனையை மேற்கொள்வது நல்லது. அதிலும் 65 வயதை கடந்த பெண்கள் கட்டாயம் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மாதவிடாய் நிற்கும் காலகட்டமான மெனோபாஸ் சமயத்தில் கட்டாயம் பரிசோதனை செய்ய வேண்டும்.
- பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டது
- பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அருகே பள்ளுர் ஊராட்சியில் இலவச மருத்துவமுகாம் நடைபெற்றது.
முகாமிற்கு பள்ளுர் ஊராட்சி மன்றதலைவர் பிரதாப் தலைமை தாங்கினார்.
சிறப்பு அழைப்பாளராக நெமிலி ஒன்றிய குழு தலைவர் வடிவேலு கலந்துகொண்டு முகாமை தொடங்கி வைத்தார். ஒன்றிய துணை தலைவர் தீனதயாளன் முன்னிலை வகித்தார்.
இம்முகாம் சவீதா மருத்துவ கல்லூரி மருத்துவ மனை மற்றும் பள்ளுர் ஊராட்சி மன்றத்தின் சார்பில் ஏற்பாடு செய்யபட்டது. பொதுநலமருத்துவம், கண், எலும்பு, பல், தோல், காது, மூக்கு, தொண்டை, குழந்தைகள் நலம், பெண்கள் நலம், ரத்த அழுத்தம் உள்ளிட்டவற்றுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் தனியார் மருத்துவமனை டாக்டர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற துணைத்தலைவர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
மத்தியில், பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணி அரசின், கடைசி பட்ஜெட்டை, வரும், பிப்., 1-ம் தேதி அருண் ஜெட்லி தாக்கல் செய்ய உள்ளார். இந்த பட்ஜெட், பொதுத் தேர்தலுக்கு முந்தைய, இடைக்கால பட்ஜெட்டாக தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், யாரும் எதிர்பாராவிதமாக, நேற்று, மருத்துவ பரிசோதனைக்காக, அருண் ஜெட்லி, அமெரிக்கா சென்றுள்ளார். அவர் எப்போது இந்தியா திரும்புவார் என்பது பற்றிய விபரம் வெளியிடப்படவில்லை. #ArunJaitley #BJP
தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த சிட்லிங் மலைகிராமாத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் மாணவி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ரமேஷ், சதீஷ் இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் காவல் துறையால் கைது செய்யப்பட்ட சதீசுக்கு மருத்துவ பரிசோதனை எடுக்க போலீசார் நீதிமன்றத்திடம் அனுமதி பெற்றனர்.
இதைத்தொடர்ந்து சதீசை நேற்று தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு மருத்துவ பரிசோதனைக்காக போலீசார் அழைத்து வந்தனர். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை மருத்துவ குழுவினர் செய்தனர்.
இந்த நிலையில் மாணவியின் உடலை பிரேத பரிசோதனை செய்த மருத்துவ குழுவினர், விசாரணை அதிகாரியான அரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் லட்சுமி ஆகியோர் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று ஆய்வு செய்து அங்குள்ள தடயங்களை ஆய்வுக்காக எடுத்து சென்றனர்.
மேலும் சேலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 2-ல் சரணடைந்த மற்றொரு குற்றவாளி ரமேஷை காவலில் எடுத்து விசாரணை செய்ய காவல் துறை திட்டமிட்டு உள்ளனர். இந்த வழக்கை சேலம் நீதிமன்றம் தருமபுரி மகளிர் விரைவு நீதிமன்றத்திற்கு அனுப்பியவுடன் காவலில் எடுத்து விசாரிக்கின்றனர். #dharmapurigirlstudent #girlmolested
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்