என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "medical studies"
- திட்டத்தின்படி அண்ணா பல்கலக்கழகத்தில் பி.இ. பயோ என்ஜினீரிங் சேரும் மாணவர்கள் மருத்துவ கல்லூரியில் 3 செமஸ்டர் படிப்பார்கள்.
- மருத்துவ சாதனங்களை வடிவமைக்கும் போது மனித உடலை நன்கு புரிந்து கொள்ள இது உதவும்.
சென்னை:
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக் கழகத்துடன் இணைந்து பல்துறை பட்டப்படிப்பை அறிமுகப்படுத்த அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது.
இந்த திட்டத்தின்படி அண்ணா பல்கலக்கழகத்தில் பி.இ. பயோ என்ஜினீரிங் சேரும் மாணவர்கள் மருத்துவ கல்லூரியில் 3 செமஸ்டர் படிப்பார்கள்.
அவர்கள் உடற் கூறியல், உடலியல், நோயியல் மற்றும் உயிர் வேதியியல் ஆகிய பாடங்களை படிப்பார்கள். இது பொறியாளர்களுக்கு உயிரி சாதனங்கள் மற்றும் ஐ.ஒ.டி. அடிப்படையிலான பயோ சென்சார்களை உருவாக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதுள்ள பயோ மெடிக்கல் என்ஜினீயர்கள் மற்றும் மெடிக்கல் எலக்ட்ரானிக்ஸ் படிப்புகளுடன் இந்த புதிய படிப்பையும் வழங்கும் பயோ மெடிக்கல் என்ஜினீயரிங் துறையை தொடங்க பல்கலைக்கழகம் திட்டமிட்டு உள்ளது.
மருத்துவ கல்லூரியில் படிப்பது பொறியியல் மாணவர்களின் தத்துவார்த்த அறிவை சோதிக்கும் மருத்துவ உபகரணங்களை கொண்டிருப்பதால் அவர்களுக்கு அதிக வெளிப்பாட்டை கொடுக்கும் என்றனர்.
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் கே.நாராயணசாமி கூறுகையில், ஒரு பொறியியல் மாணவர் இந்த படிப்பின் மூலம் மருத்துவ கள அறிவை பெறுவார். மருத்துவ கள அறிவு, மருத்துவமனைகளில் மருந்து பொறியாளர்களாக அல்லது உயிரி மருத்துவ பொறியாளர்களாக பணியாற்ற உதவும் என்றார்.
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் கூறும்போது, "சிண்டிகேட் அனுமதி பெற்ற பின், இரண்டு பல்கலைக்கழகங்கள் பாடத் திட்டத்தை உருவாக்கும். கிண்டியில் உள்ள பொறியியல் கல்லூரியில் ஏற்கனவே உள்ள பி.இ. உயிரியல் மருத்துவ பொறியியல் மாணவர்கள் கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரியில் ஒரு செமஸ்டர் படிக்க அனுமதிக்க இரு பல்கலைக்கழகங்களும் உடன்பாட்டிற்கு வந்தன.
மருத்துவ சாதனங்களை வடிவமைக்கும் போது மனித உடலை நன்கு புரிந்து கொள்ள இது உதவும். பயோ மெடிக்கல் என்ஜினீயரிங் பட்டப்படிப்புக்கு பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரிகளின் இதே போன்ற கூட்டாண்மைகளை உருவாக்கவும் நாங்கள் திட்டமிட்டுள்ளோம்" என்றார்.
- கருத்து வேறுபாடு காரணமாக கோப்பை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்தார்.
- ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி அரசு மீண்டும் உள்ஒதுக்கீடு வழங்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டது.
புதுச்சேரி:
தமிழகத்தில் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் மருத்துவ கல்வியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது.
தமிழகத்தை தொடர்ந்து புதுவையிலும் முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு மருத்துவக்கல்வியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க முடிவு செய்து கோப்பை கவர்னருக்கு அனுப்பியது. அப்போதைய கவர்னர் கிரண்பேடி இந்த கோப்புக்கு அனுமதி தரவில்லை.
கருத்து வேறுபாடு காரணமாக கோப்பை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்தார். இதனால் உள் ஒதுக்கீட்டிற்கு அனுமதி கிடைக்கவில்லை. அதோடு இந்த கோப்பும் கிடப்பில் போடப்பட்டது.
புதிதாக பொறுப்பேற்ற முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி அரசு மீண்டும் உள்ஒதுக்கீடு வழங்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டது.
கடந்த மாதம் கவர்னர் தமிழிசை, அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க தேவையான நடவடிக்கை எடுக்கும்படி முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கு பரிந்துரை செய்தார்.
இதையடுத்து ரங்கசாமி தலைமையில் அமைச்சரவை கூடி உள்ஒதுக்கீடு வழங்க தீர்மானம் நிறைவேற்றி கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பியது. கவர்னர் தமிழிசை ஒப்புதல் வழங்கி மத்திய அரசு அனுமதிக்கு அனுப்பினார்.
இதனிடையே நீட் அல்லாத கலை, அறிவியல், தொழில்படிப்புகளுக்கான 2 கட்ட கவுன்சிலிங் முடிவடைந்து, 3-ம் கட்ட கவுன்சிலிங் நடைபெற உள்ளது. பிற மாநிலங்களில் நீட் மதிப்பெண் அடிப்படையிலான மருத்துவ கவுன்சிலிங் நடத்தப்பட்டு முடிவடையும் நிலையில் உள்ளது. மாணவர்களும் கல்லூரிகளில் சேர்ந்து வருகின்றனர்.
ஆனால் புதுவையில் மருத்துவ கல்விக்கான கவுன்சிலிங் தொடங்கவில்லை. உள் ஒதுக்கீடு அனுமதிக்காக கவுன்சிலிங் தொடங்கப்படாமல் தள்ளி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மருத்துவக்கல்வியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இதன்மூலம் எம்.பி.பி.எஸ். படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 37 இடங்கள் கிடைக்கும். அரசு மருத்துவக்கல்லூரியில் புதுவைக்கு 10, காரைக்காலுக்கு 2, மாகி 1 என 13 இடங்களும், தனியார் மருத்துவ கல்லூரிகளில் பிம்ஸ் 6, மணக்குள விநாயகர், வெங்கடேஸ்வரா கல்லூரிகளில் தலா 9 இடங்களும் கிடைக்கும்.
இதுதவிர பி.டி.எஸ். 11 சீட், பி.ஏ.எம். 4 இடங்கள் அரசு பள்ளி மாணவர்களுக்கு கிடைக்கும். மருத்துவ கல்விக்கான உத்தேச தரவரிசை பட்டியல் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு அனுமதி கிடைத்துள்ளதால் அவர்களும் விண்ணப்பிக்க அரசு வாய்ப்பளிக்க வேண்டும்.
இதற்காக இன்று மாலை 5 மணி வரை அரசு பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்க சென்டாக் அனுமதி அளித்துள்ளது.
விண்ணப்பிக்காமல் விடுபட்டவர்களும் விண்ணப்பிக்கலாம். இதன்பிறகு மீண்டும் இறுதி தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டு வெளியிடப்படும். இதன்பிறகு கவுன்சிலிங் நடைபெறும். இதனால் ஓரிருநாளில் மருத்துவ கல்விக்கான சென்டாக் கவுன்சிலிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரியில் தீவன பகுப்பாய்வு மற்றும் தரக்கட்டுப்பாட்டு அலுவலகத்தின் வெள்ளிவிழா நேற்று நடந்தது.
- தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல் கலைக்கழக துணைவேந்தர் செல்வகுமார் கலந்து கொண்டு கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வெள்ளி விழா நினைவு தூணை திறந்து வைத்தார்.
நாமக்கல்:
நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரியில் தீவன பகுப்பாய்வு மற்றும் தரக்கட்டுப்பாட்டு அலுவலகத்தின் வெள்ளிவிழா நேற்று நடந்தது.
இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல் கலைக்கழக துணைவேந்தர் செல்வகுமார் கலந்து கொண்டு கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வெள்ளி விழா நினைவு தூணை திறந்து வைத்தார்.
மேலும், 3 நாள் நடைபெறும் கண்காட்சியை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் 7 கால்நடை மருத்துவக் கல்லூரிகள், 3 கால்நடை உணவுத்துறை சார்ந்த இதர மருத்துவ கல்லூரிகள் செயல்படுகின்றன.
நடபாண்டிற்கான மாணவர் சேர்க்கை கடந்த 12-ந் தேதி இணைய வழியில் தொடங்கியது. வரும் 30-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதுவரை இளநிலை கால்நடை மருத்துவ படிப்பு மற்றும் கால்நடை உணவுத்துறை சார்ந்த படிப்பு கள் என மொத்தமாக 16,794 பேர் விண்ணப்பித்துள்ளனர். நடபாண்டில் புதிய மருத்துவ படிப்புகளோ, புதிய கல்லூரிகளோ தொடங்கப்படவில்லை.
தமிழகத்தை பொறுத்தவரை கறிக்கோழிக்கு 1.5 லட்சம் டன், கோழி பண்ணைகளுக்கு 2 லட்சம் டன், கறவை மாடுகளுக்கு 2 லட்சம் டன் அடர் தீவனம் மாதந்தோறும் தேவைப்படுகிறது. எனவே விவசாயிகள் தீவனப் பயிர் சாகுபடி பரப்பை அதிகரிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
- சீனாவில் படிப்பதில் உள்ள சிரமங்களையும், விதிகளையும் பட்டியலிட்டுள்ளது.
- சீனாவில் மருத்துவம் படிக்க விரும்பினாலும் இந்தியாவில் நீட் தேர்வு எழுதி வெற்றி பெற வேண்டும்.
பீஜிங்
இந்தியாவில் இருந்து சீனாவுக்கு சென்று ஆயிரக்கணக்கான மாணவர்கள் மருத்துவம் படித்தார்கள். ஆனால் கொரோனா காரணமாக நாடு திரும்பிய அவர்கள் விசா தடை காரணமாக வீடுகளில் முடங்கி உள்ளனர்.
இந்தநிலையில் தற்போது 23 ஆயிரம் இந்திய மாணவர்கள் சீன பல்கலைக்கழகங்களில் படிப்பதற்கு பதிவு செய்து கொண்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் மருத்துவம் படிக்க விரும்புகின்றனர்.
2 ஆண்டு விசா தடைக்கு பின்னர் இப்போதுதான் சீனா குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மாணவர்களுக்கு, அங்கு வருவதற்கு விசா வழங்க தொடங்கி உள்ளது. ஆனால் அவர்களில் பலரும் நேரடி விமான சேவையின்றி தவிக்கின்றனர். இதையொட்டி இந்தியா, சீனா இடையே பேச்சுவார்த்தை இன்னும் நீடிக்கிறது.
இதற்கு மத்தியில் சீன மருத்துவ கல்லூரிகள் இந்தியா உள்ளிட்ட பிற மாணவர்களை மருத்துவ படிப்புக்காக பதிவு செய்யத்தொடங்கி உள்ளது.
இந்தநிலையில் சீனாவில் மருத்துவம் படிக்க விரும்புகிற மாணவர்களுக்கு விரிவான ஆலோசனை குறிப்புகளை பீஜிங்கில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ளது. அதில் சீனாவில் இந்திய மாணவர்கள் அனுபவிக்கிற சிரமங்கள், இந்தியாவில் மருத்துவ பயிற்சி பெறுவதற்கு எதிர்கொள்ள வேண்டிய கடுமையான நடைமுறைகள் உளளிட்டவை கோடிட்டுக்காட்டப்பட்டுள்ளன.
அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-
* வெளிநாடுகளில் மருத்துவ பட்டம் பெற்ற இந்திய மாணவர்கள் 40 ஆயிரத்து 147 பேர், இந்திய மருத்துவ கவுன்சில் தேர்வினை 2015-2021 கால கட்டத்தில் எழுதினர். அவர்களில் தேர்ச்சி பெற்றவர்கள் 6,387 பேர் மட்டும்தான்.
* சீனாவில் அந்த காலகட்டத்தில் 45 அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் மருத்துவம் படித்து தேர்ச்சி பெற்றவர்கள் 16 சதவீதத்தினர்தான். சீனாவில் மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்கள், பெற்றோர்கள் இதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
* சீனாவில் கட்டணங்கள் பல்கலைக்கழகத்துக்கு பல்கலைக்கழகம் மாறுபடுகின்றன. சேர்க்கைக்கு முன்பாக மாணவர்கள் பல்கலைக்கழகத்துடன் நேரடியாக தொடர்பு கொண்டு இதுபற்றி அறிந்து கொள்ள வேண்டும்.
* சீன அரசால் அங்கீகரிக்கப்பட்டு, 5 ஆண்டு மருத்துவ படிப்பு, அத்துடன் ஓராண்டு பயிற்சிக்கு பட்டியலிடப்பட்டுள்ள 45 மருத்துவ கல்லூரிகளைத் தவிர்த்து வேறு எங்கும் சேரக்கூடாது.
* சீன அரசு ஆங்கில மொழியில் 45 பல்கலைக்கழகங்களில்தான் மருத்துவ படிப்பை வழங்குகிறது
* மருத்துவ பயிற்சி அமர்வுக்கு சீன மொழியை கற்றுக்கொள்ள வேண்டியது கட்டாயம் ஆகும். அதுவும் எச்.எச்.கே.-4 அளவுக்கு கற்க வேண்டும். இந்த திறன் இல்லாதோருக்கு பட்டம் வழங்கப்பட மாட்டாது.
* சீனாவில் டாக்டர் தொழில் நடத்துவதற்கு அங்கு அதற்கான உரிமம் பெற வேண்டும்.
* 5 ஆண்டு மருத்துவ படிப்பும், ஓராண்டு பயிற்சியும் முடித்தவர்கள் சீன மருத்துவ தகுதி தேர்வில் வெற்றி பெற்று, டாக்டருக்கான தகுதி சான்றிதழ் பெற வேண்டும்.
* சீனாவில் மருத்துவம் படித்து இந்தியாவில் டாக்டர் தொழில் செய்வதற்கு, இந்தியாவில் நடத்தப்படுகிற தகுதித்தேர்வில் வெற்றி பெற்றாக வேண்டும்.
* சீனாவில் மருத்துவம் படிக்க விரும்பினாலும் இந்தியாவில் நீட் தேர்வு எழுதி வெற்றி பெற்றாக வேண்டும். வெளிநாட்டில் மருத்துவம் படிக்க இது அவசியம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்