என் மலர்
நீங்கள் தேடியது "Meet"
- 1998-ம் ஆண்டு பிளஸ் 2 பயின்ற மாணவ- மாணவிகள் 24 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சந்திக்கும் விழா
- தங்கள் குழந்தைகளை அவர்கள் பயின்ற வகுப்பறைகளுக்கு அழைத்து சென்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
திசையன்விளை:
திசையன்விளை உலக ரட்சகர் மேல்நிலைப்பள்ளியில் 1998-ம் ஆண்டு பிளஸ் 2 பயின்ற மாணவ- மாணவிகள் 24 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சந்திக்கும் விழா பள்ளி வளாகத்தில் நடந்தது.
முன்னாள் மாணவர்கள் 127 பேர் குடும்பத்துடன் பள்ளிக்கு வருகை தந்தனர். அவர்கள் தங்கள் பள்ளி பருவ நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
அவர்கள் குழந்தைகளை அவர்கள் பயின்ற வகுப்பறைகளுக்கு அழைத்து சென்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
தொடர்ந்து பள்ளி முன்னாள் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழாவும் நினைவு பரிசு வழங்கும் விழாவும் நடந்தது.
முன்னாள் மாணவர்கள் ஆசிரியர்களை பாராட்டி பேசினர். முன்னாள் மாணவரும் பாண்டிசேரி மாநில முதன்மை கூடுதல் மாவட்ட உரிமை நீதிபதியுமான கிறிஸ்டியன் பேசியதாவது:-
ஆசிரியர்கள் மத்தியில் இன்று நான் பேசக்கூடிய அளவிற்கு உயர்ந்ததற்கு மாணவனாக இருந்தபோது ஆசிரியர்களிடம் வாங்கிய அடியே காரணம்.
ஆசிரியர்கள் அடிப்பது மாணவர்களை திருத்துவதற்காகத்தான். ஆசிரியர்களிடம் இருந்து எப்போது கம்பை (பிரம்பு) நாம் வாங்கி கொண்டோமோ அப்போதில் இருந்து மாணவர்களின் கல்வி திறன் குறைந்துவிட்டது.
ஆசிரியர்கள் மாணவர்களை அடிப்பது அவர்களை திருத்துவதற்கு தான் என்பதை இக்கால மாணவர்கள் உணரவேண்டும். இவ்வாறு நீதிபதி கூறினார்.



ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் உரிமையாளரான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானி மற்றும் வைர வியாபாரியான ரஸ்ஸல் மேத்தாவின் மகள் ஷ்லோகா மேத்தா இருவரும் சிறு வயதில் இருந்தே நண்பர்களாக இருந்தனர்.
பின்னர் இந்த நட்பு காதலாக மாறி, திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, இவர்களது நிச்சயதார்த்தம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்றது. அடுத்த மாதம் திருமணம் நடைபெற உள்ளது.

இந்நிலையில் முகேஷ் அம்பானி- நீதா அம்பானி தம்பதி, நேற்று மும்பையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் ஆகியோரை நேரில் சந்தித்து, பூங்கொத்து மற்றும் அழைப்பிதழ் கொடுத்து மகனின் திருமணத்திற்கு அழைப்பு விடுத்தனர். #AmbaniMeetsMKStalin

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறி தொடர்ந்து அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனை நடத்தி வந்ததால் வடகொரியா சர்வதேச நாடுகளின் எதிர்ப்பை சந்தித்தது. குறிப்பாக அமெரிக்கா வடகொரியாவை நேரடியாக எதிர்த்தது. அந்நாட்டின் மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்தது.
அதோடு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் இடையே வார்த்தை யுத்தம் நடந்தது. இருநாடுகளின் மோதல் போக்கு சர்வதேச நாடுகளுக்கு கவலை அளிப்பதாக அமைந்தது. இதற்கிடையில் தென்கொரியாவில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் வடகொரியா பங்கேற்றதை தொடர்ந்து, வடகொரியாவின் நடவடிக்கைகளில் பெரிய அளவில் மாற்றம் நிகழ தொடங்கியது.
அதன் தொடர்ச்சியாக எதிர் எதிர் துருவங்களாக விளங்கி வந்த டிரம்ப், கிம் ஜாங் அன் சந்தித்து பேசுவதற்கான சூழல் உருவானது.
அதன் படி கடந்த ஆண்டு ஜூன் 12-ந்தேதி சிங்கப்பூரில் உச்சி மாநாடு நடத்தி இருநாட்டு தலைவர்களும் சந்தித்து பேசினர். உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த பேச்சுவார்த்தையின் போது இரு நாட்டு தலைவர்களிடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
அதோடு, கொரிய தீபகற்ப பகுதியை அணு ஆயுதங்கள் அற்ற பகுதியாக ஆக்குவதற்கு ஏற்ற விதத்தில் வடகொரியா செயல்படும் என கிம் ஜாங் அன் உறுதிமொழி அளித்தார். அதன்படி தங்கள் நாட்டில் உள்ள அணு ஆயுத சோதனை கூடங்கள் மற்றும் ஏவுகணை தளங்களை வடகொரியா மூடியது.
எனினும் வடகொரியா மீது விதித்துள்ள கடுமையான பொருளாதார தடைகளை அமெரிக்கா விலக்கி கொள்ளாததால், எந்த நேரத்திலும் அணு ஆயுத கொள்கைக்கு திரும்பி விடுவோம் என வடகொரியா எச்சரித்து வருகிறது.
புத்தாண்டையொட்டி வடகொரிய மக்களிடையே உரையாற்றிய கிம் ஜாங் அன், ஒட்டுமொத்த உலகத்தின் முன்னிலையில் அளித்த வாக்குறுதிகளை அமெரிக்கா காப்பாற்றத் தவறினால் வடகொரியா புதிய நடவடிக்கைகளை கையாளும் என எச்சரிக்கை விடுத்தார்.
அதே சமயம் சர்வதேச சமூகம் வரவேற்கும் வகையில், எதிர்காலத்தில் எந்த நேரத்திலும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்புடன் அமர்ந்து பேச்சு வார்த்தை நடத்த தயாராக இருப்பதாக கிம் ஜாங் அன் அறிவித்தார்.
அதே போல் டிரம்பும், கிம் ஜாங் அன்னை சந்திக்க தான் ஆவலுடன் இருப்பதாகவும், இந்த சந்திப்பு விரைவில் நடக்கும் என்றும் தெரிவித்தார்.
அதன் படி இருநாட்டு தலைவர்கள் சந்தித்து பேசும் 2-வது உச்சி மாநாட்டை எங்கு? எப்போது? நடத்துவது என்பது குறித்து அமெரிக்கா மற்றும் வடகொரியா அதிகாரிகள் தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர். அந்த வகையில் டிரம்ப்-கிம் ஜாங் அன் சந்திப்பு தாய்லாந்து அல்லது வியட்நாமில் நடக்கலாம் என தகவல்கள் வெளியாகின.
அந்த இருநாட்டு அரசுகளும் இந்த சந்திப்புக்கு முழு ஆதரவு அளிப்பதாகவும், தங்கள் தரப்பில் செய்ய வேண்டிய நடவடிக்கைகளை செய்துதர தயாராக இருப்பதாகவும் உறுதி அளித்தன. அதன் படி அமெரிக்க வெள்ளை மாளிகையின் ஆய்வு குழு தாய்லாந்தின் பாங்காங் மற்றும் வியட்நாமின் ஹனோய் நகரங்களுக்கு சென்று ஆய்வு நடத்தின.
வடகொரியா மற்றும் அமெரிக்க அதிகாரிகள் வியட்நாமின் ஹனோய் நகரில் பலமுறை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக தென் கொரிய ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில் வியட்நாமில் அடுத்த மாதம் (பிப்ரவரி) மத்தியில் இருநாட்டு தலைவர்களின் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யா வடகொரியாவுக்கு அமெரிக்கா அனுமதி அளித்துள்ளதாக புதிய தகவல் கிடைத்திருக்கிறது. ஜப்பானில் வெளிவரும் தினசரி நாளிதழ் ஒன்றில் இது பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது.
வியட்நாமில் உச்சி மாநட்டை நடத்தலாம் என்கிற அமெரிக்காவின் திட்டம் குறித்து வடகொரியா தீவிர ஆலோசனை நடத்தி வருவதாகவும் அந்த நாளிதழில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் இது பற்றி அமெரிக்கா மற்றும் வடகொரியா தரப்பில் எந்த வித விளக்கமும் அளிக்கப்படவில்லை.
இதற்கிடையே, பாதுகாப்பு காரணங்களையொட்டி ஹனோய் நகரத்துக்கு பதிலாக டா நாங் நகரில் இந்த சந்திப்பை நடத்திட வியட்நாம் விரும்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. #DonaldTrump #KimJongUn #Vietnam

வடகொரியாவும் அமெரிக்காவும் நிரந்தர பகை நாடுகளாக உள்ளன. சீனா மற்றும் தென்கொரியா நாடுகள் மேற்கொண்ட முயற்சிகள் காரணமாக கிம் ஜாங் அன் தனது மிரட்டல் போக்கை கைவிட்டு அமெரிக்காவுடன் சமரசமாக செல்ல முன்வந்தார்.
இதற்கிடையே, டிரம்ப் - கிம் சந்திப்பு சிங்கப்பூரில் கடந்த ஜூன் மாதம் 12-ம் தேதி நடைபெற்றது. அப்போது இருவரும் பரஸ்பரம் கைகுலுக்கி கொண்டனர்.

அப்போது, தங்கள் நாட்டில் உள்ள அணு ஆயுத சோதனைக் கூடங்களை அழித்து விடுவோம். இனி அணு ஆயுத சோதனைகளை மேற்கொள்ள மாட்டோம் என்று வடகொரியா அறிவித்தது. அதேபோல், அமெரிக்காவும் வடகொரியா மீது விதித்துள்ள பொருளாதார தடைகளை நீக்குவதாக அறிவித்திருந்தது.
இந்நிலையில், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அதிபர் டிரம்ப் மற்றும் கிம் ஜாங் அன் சந்திப்பு நடைபெறும் என நம்புவதாக வெளியுறவு துறை மந்திரி மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார். அப்போது, இரு நாடுகளும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். #DonaldTrump #KimJongUn