search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Meghalaya"

    • கார்கலில், 10 கி.மீ., ஆழகத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
    • மேகாலயாவில், 12 கி.மீ., ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

    லடாக்கின் கார்கில் மற்றும் மேகாலயாவின் கிழக்கு காரோ மலை பகுதியில் லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.

    கார்கில் பகுதியில் லேசான நில அதிர்வு ரிக்டர் அளவில் 3.8 ஆக பதிவாகியுள்ளது. இது 10 கி.மீ., ஆழகத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

    இதேபோல், மேகாலயாவின் கிழக்கு காரோ மலை பகுதியில் லேசான நில அதிர்வு ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவாகியுள்ளது. மேலும், 12 கி.மீ., ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

    • அடுத்த ஆண்டு மேகாலயாவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது
    • பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்.

    புதுடெல்லி:

    மேகாலயா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு சுயேட்சை எம்எல்ஏ மற்றும் சமீபத்தில் ராஜினாமா செய்த 3 எம்எல்ஏக்கள் இன்று பாஜகவில் இணைந்தனர்.

    ஆளுங்கட்சியான தேசிய மக்கள் கட்சியின் பெரிலின் சங்மா, பெனடிக் மரக் மற்றும் சுயேட்சை எம்எல்ஏ சாமுவேல் சங்மா, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எச்.எம்.ஷாங்க்லியாங் ஆகியோர் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்.

    அடுத்த ஆண்டு மேகாலயாவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், 4 முக்கிய தலைவர்களின் வருகை பாஜகவிற்கு புதிய உற்சாகத்தை அளித்துள்ளது.

    இதுபற்றி பாஜக தேசிய செயலாளர் ரிதுராஜ் சின்ஹா கூறுகையில், "மேகாலயாவில் முக்கியமான நான்கு பேர் பாஜகவில் இணைந்துள்ளனர். இதன்மூலம் பாஜக வலுவடையும் என்றும், மேகாலயா மக்களின் ஆசீர்வாதங்களைப் பெறுவோம் என்றும் நம்புகிறேன்" என குறிப்பிட்டார்.

    மேகாலயாவில் பாராளுமன்ற தேர்தலில் பார்வையற்றோர் வாக்களிக்க வசதியாக, அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு எந்திரத்தின் மீது பிரெய்லி முறை வாக்குச்சீட்டுகள் ஒட்டப்படுகின்றன. #MehalayaEC #BrailleMethodVote
    ஷில்லாங்:

    மேகாலயாவில் வரும் ஏப்ரல் மாதம் 11ம் தேதி ஒரே கட்டமாக அனைத்து மக்களவைத் தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து அரசியல் கட்சியினர் தீவிரமாக களமிறங்கி தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

    மேலும் அம்மாநில தேர்தல் ஆணையம் 100 சதவீதம் வாக்காளர்கள், வாக்களிக்க ஏதுவாக விரிவான ஏற்பாடுகளை செய்து வருகிறது. மாற்றுத் திறனாளிகள், வாக்குச்சாவடிகளில் காத்திருக்காமல் விரைவில் வாக்களிக்கும் வகையில் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.



    அந்த வகையில் வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில், பார்வையற்ற வாக்காளர்கள் வாக்களிக்க பிரெய்லி வாக்குச்சீட்டுகளை அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பயன்படுத்தப்பட தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.

    இது குறித்து மேகாலயா தலைமை தேர்தல் அதிகாரி கர்கோங்கர் கூறியதாவது:

    மேகாலயாவில் முதல் முறையாக வரவிருக்கும் தேர்தலில் பிரெய்லி வாக்குச்சீட்டு பயன்படுத்தப்படுகிறது. 800க்கும் மேற்பட்ட பார்வையற்ற வாக்காளர்கள் ரகசியமாக தங்கள் வாக்கை பதிவு செய்ய இந்த வசதி செய்யப்படுகிறது. மொத்தம் 4500 மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க உள்ளனர்.

    பார்வையற்றோர் எளிதில் அறிந்துகொள்ளும் வகையில், ஒவ்வொரு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்திலும் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் ஆகியவை பிரைலி முறையில் அச்சிடப்பட்ட வாக்குச்சீட்டு ஒட்டப்பட்டிருக்கும். எனவே, பார்வை குறைபாடு உள்ளவர்கள் யாருடைய உதவியும் இன்றி தாங்களாகவே சுதந்திரமாக வாக்களிக்க இயலும்.

    மேகாலயாவில் இளைஞர்கள், பொது மக்கள், மாற்றுத் திறனாளிகள் என அனைவருக்கும் தேர்தலில் வாக்களிக்க வேண்டிய அவசியம் குறித்து தேர்தல் ஆணையம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. மேலும் சமூக ஆர்வலர்கள் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் தானாக முன்வந்து மாற்றுத் திறனாளிகளுக்கு உதவ வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #MehalayaEC #BrailleMethodVote
    மேகாலயா மாநிலத்தின் நிலக்கரி சுரங்கத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் நீச்சல் வீரர்கள் அடங்கிய வல்லுநர் குழுவினர் 2வது சடலத்தை மீட்டு வெளியே கொண்டு வந்துள்ளனர். #Meghalayacoalmine #NavyDivers
    ஷில்லாங்:

    வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மேகாலயாவில், கிழக்கு ஜைன்டியா மாவட்டம் லும்தாரி கிராமத்தில் ஒரு நிலக்கரி சுரங்கம் உள்ளது. அந்த சுரங்கம், அனுமதி எதுவும் பெறாமல் சட்டவிரோதமாக இயங்கி வருகிறது. சுரங்கத்தின் அருகில் லிட்டின் என்ற ஆறு ஓடுகிறது.

    தொழிலாளர்கள் சுமார் 350 அடி ஆழத்துக்கு சுரங்கம் தோண்டி உள்ளனர். அடிப்பகுதிக்கு செல்லும் வழியில் கிளைகள் போன்று இருபுறமும் பிரிந்து செல்லும்வகையில் கிடைமட்டமாகவும் சுரங்கம் தோண்டி உள்ளனர். இப்பகுதி ‘எலி பொந்து’ என்று அழைக்கப்படுகிறது.

    கடந்த டிசம்பர் 13-ம் தேதி, இந்த நிலக்கரி சுரங்கத்துக்குள் தொழிலாளர்கள் பணியில் இருந்தபோது, அருகில் உள்ள லிட்டின் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ள நீர், சுரங்கத்துக்குள்ளும் புகுந்தது. இதில் சுமார் 15 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்க தேசிய பேரிடர் மீட்பு படையினரும், மாநில பேரிடர் மீட்பு படையினரும், போலீசாரும் களத்தில் இறங்கினர்.

    ரிமோட் மூலம் இயங்கக்கூடிய சாதனத்தினைக் கொண்டு கடலுக்கடியில் தேடும் பணி நடைபெற்று வருகிறது. இந்த மீட்பு பணியின்போது கடந்த மாதம் ஒரு உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது. அதன்பின்னர் சுமார் 370 அடி ஆழத்தில் மேலும் 4 உடல்கள் அழுகி எலும்புக் கூடுகளாக கண்டறியப்பட்டன. அதில், ஒரு உடல் நேற்று மீட்கப்பட்டதாக அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.  #Meghalayacoalmine #NavyDivers
    மேகாலயா மாநிலத்தின் நிலக்கரி சுரங்கத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் நீச்சல் வீரர்கள் அடங்கிய வல்லுநர் குழுவினர் மேலும் ஒரு சடலத்தை கண்டுபிடித்துள்ளனர். #Meghalayacoalmine #NavyDivers
    ஷில்லாங்:

    வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மேகாலயாவில், கிழக்கு ஜைன்டியா மாவட்டம் லும்தாரி கிராமத்தில் ஒரு நிலக்கரி சுரங்கம் உள்ளது. அந்த சுரங்கம், அனுமதி எதுவும் பெறாமல் சட்டவிரோதமாக இயங்கி வருகிறது. சுரங்கத்தின் அருகில் லிட்டின் என்ற ஆறு ஓடுகிறது.

    சுரங்கத்தில் விபத்து ஏற்படும்போது, உள்ளூர் தொழிலாளர்களாக இருந்தால், உள்ளூர் மக்கள் பிரச்சினை செய்வார்கள் என்று கருதி, இந்த சுரங்க நிர்வாகம் வேறு மாநில தொழிலாளர்களையே பணி அமர்த்துவது வழக்கம். தற்போது, அசாம் மாநிலத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருவதாக தெரிகிறது.

    தொழிலாளர்கள் சுமார் 350 அடி ஆழத்துக்கு சுரங்கம் தோண்டி உள்ளனர். அடிப்பகுதிக்கு செல்லும் வழியில் கிளைகள் போன்று இருபுறமும் பிரிந்து செல்லும்வகையில் கிடைமட்டமாகவும் சுரங்கம் தோண்டி உள்ளனர். இப்பகுதி ‘எலி பொந்து’ என்று அழைக்கப்படுகிறது.

    கடந்த டிசம்பர் 13-ம் தேதி, இந்த நிலக்கரி சுரங்கத்துக்குள் தொழிலாளர்கள் பணியில் இருந்தபோது, அருகில் உள்ள லிட்டின் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ள நீர், சுரங்கத்துக்குள்ளும் புகுந்தது. இதில் சுமார் 15 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்க தேசிய பேரிடர் மீட்பு படையினரும், மாநில பேரிடர் மீட்பு படையினரும், போலீசாரும் களத்தில் இறங்கினர்.

    இதனையடுத்து 150 அடி ஆழத்தில் ஒரு எலும்புக் கூடு மீட்கப்பட்டது. 370 அடி ஆழத்தில் மற்றொரு சடலம் கடந்த மாதம் மீட்கப்பட்டது. இதேபோல் நேற்று மேலும் ஒரு சடலம் கண்டறியப்பட்டுள்ளதாக கடற்படை வீரர்கள் தெரிவித்துள்ளனர். உடல் முழுவதும் அழுகி எலும்புக்கூடாக கிடந்துள்ளது. அதனை வெளியே கொண்டு வரும் பணி நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் சுப்ரீம் கோர்ட் இந்த மீட்புப் பணிகளை கண்காணித்து வருகிறது. மேலும் இவ்வழக்கு இன்று  விசாரணைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. #Meghalayacoalmine #NavyDivers

    நிலக்கரி சுரங்கத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வரும் கடற்படை வீரர்கள் அடங்கிய வல்லுநர் குழு 42 நாட்களுக்குப் பிறகு ஒரு சடலத்தை மீட்டுள்ளனர். #Meghalayacoalmine #NavyDivers
    ஷில்லாங்:

    வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மேகாலயாவின், கிழக்கு ஜைன்டியா மாவட்டம் லும்தாரி கிராமத்தில் ஒரு நிலக்கரி சுரங்கம் உள்ளது. அந்த சுரங்கம், அனுமதி எதுவும் பெறாமல் சட்டவிரோதமாக இயங்கி வருகிறது. சுரங்கத்தின் அருகில் ‘லிட்டின்’ என்ற ஆறு ஓடுகிறது.

    சுரங்கத்தில் விபத்து ஏற்படும்போது, உள்ளூர் தொழிலாளர்களாக இருந்தால், உள்ளூர் மக்கள் பிரச்சினை செய்வார்கள் என்று கருதி, இந்த சுரங்க நிர்வாகம் வேறு மாநில தொழிலாளர்களையே பணி அமர்த்துவது வழக்கம். இதனையடுத்து அசாம் மாநிலத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர்.

    தொழிலாளர்கள் சுமார் 350 அடி ஆழத்துக்கு சுரங்கம் தோண்டி உள்ளனர். அடிப்பகுதிக்கு செல்லும் வழியில் கிளைகள் போன்று இருபுறமும் பிரிந்து செல்லும்வகையில் கிடைமட்டமாகவும் சுரங்கம் தோண்டி உள்ளனர். இப்பகுதி ‘எலி பொந்து’ என்று அழைக்கப்படுகிறது.

    கடந்த டிசம்பர் மாதம் 13-ம் தேதி, இந்த நிலக்கரி சுரங்கத்துக்குள் தொழிலாளர்கள் பணியில் இருந்தபோது, அருகில் உள்ள லிட்டின் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ள நீர், சுரங்கத்துக்குள்ளும் புகுந்தது. இதில் சுமார் 15 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்க தேசிய பேரிடர் மீட்பு படையினரும், மாநில பேரிடர் மீட்பு படையினரும், போலீசாரும் களத்தில் இறங்கி தீவிர நடவடிக்கைகளில் ஈடுப்பட்டு வந்தனர்.

    இந்நிலையில் நீருக்கடியில் செல்லும் ரோபோ மூலம் தேடுதல் பணி நடந்தது. அப்போது எலி பொந்து சுரங்கத்தின் வாசலில் ஒரு சடலம் சிதைந்த நிலையில் கண்டறியப்பட்டது. அந்த உடலை இன்று சுரங்கத்தில் இருந்து மேலே எடுத்தனர். மீட்கப்பட்ட உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. உடலை அடையாளம் காண உறவினர்களை அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 42 நாட்கள் தீவிர தேடுதலுக்குப்பின் இந்த சடலம் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. #Meghalayacoalmine #NavyDivers
    மேகாலயா மாநிலத்தின் நிலக்கரி சுரங்கத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் நீச்சல் வீரர்கள் அடங்கிய வல்லுநர் குழுவை இந்திய கடற்படை இன்று அனுப்பி வைத்துள்ளது. #Meghalayacoalmine #NavyDivers
    ஷில்லாங்:

    வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மேகாலயாவில், கிழக்கு ஜைன்டியா மாவட்டம் லும்தாரி கிராமத்தில் ஒரு நிலக்கரி சுரங்கம் உள்ளது. அந்த சுரங்கம், அனுமதி எதுவும் பெறாமல் சட்டவிரோதமாக இயங்கி வருகிறது. சுரங்கத்தின் அருகில் லிட்டின் என்ற ஆறு ஓடுகிறது.

    சுரங்கத்தில் விபத்து ஏற்படும்போது, உள்ளூர் தொழிலாளர்களாக இருந்தால், உள்ளூர் மக்கள் பிரச்சினை செய்வார்கள் என்று கருதி, இந்த சுரங்க நிர்வாகம் வேறு மாநில தொழிலாளர்களையே பணி அமர்த்துவது வழக்கம். தற்போது, அசாம் மாநிலத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருவதாக தெரிகிறது.

    தொழிலாளர்கள் சுமார் 350 அடி ஆழத்துக்கு சுரங்கம் தோண்டி உள்ளனர். அடிப்பகுதிக்கு செல்லும் வழியில் கிளைகள் போன்று இருபுறமும் பிரிந்து செல்லும்வகையில் கிடைமட்டமாகவும் சுரங்கம் தோண்டி உள்ளனர். இப்பகுதி ‘எலி பொந்து’ என்று அழைக்கப்படுகிறது.

    கடந்த 13-ம் தேதி, இந்த நிலக்கரி சுரங்கத்துக்குள் தொழிலாளர்கள் பணியில் இருந்தபோது, அருகில் உள்ள லிட்டின் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ள நீர், சுரங்கத்துக்குள்ளும் புகுந்தது. இதில் சுமார் 15 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்க தேசிய பேரிடர் மீட்பு படையினரும், மாநில பேரிடர் மீட்பு படையினரும், போலீசாரும் களத்தில் இறங்கினர்.

    சுரங்கத்துக்குள் வெள்ள நீர்மட்டம் 70 அடியாக உள்ளது. தேசிய பேரிடர் மீட்புப்படையினர் 30 அடி வரை மட்டுமே நீருக்குள் இறங்க முடியும். எனவே, அந்த அளவுக்கு நீரை வெளியேற்ற முயன்றபோது, குறைந்த சக்தி கொண்ட மோட்டார்களால் தண்ணீரை வேகமாக வெளியேற்ற முடியவில்லை. அத்துடன், மழையும் பெய்ததால் கடந்த திங்கட்கிழமை மீட்புப்பணி நிறுத்தப்பட்டது.

    இதையடுத்து,  நாக்பூர் உள்ளிட்ட நகரங்களில் இருந்து சக்திவாய்ந்த மோட்டார்கள் சாலைமார்க்கமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இவை சம்பவ இடத்துக்கு வந்து சேர இன்னும் 3 அல்லது 4 நாட்கள் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேற்றுடன் 15 நாட்கள் ஆனநிலையில், மீட்புப்பணி இன்னும் தாமதம் ஆகும் என்று தெரிகிறது.

    இந்நிலையில், மேகாலயா நிலக்கரி சுரங்கத்தின் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் நீச்சல் வீரர்கள் அடங்கிய வல்லுநர் குழுவை இந்திய கடற்படை இன்று அனுப்பி வைத்துள்ளது. அவர்கள் அங்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட உள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #Meghalayacoalmine #NavyDivers
    மேகாலய நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் 13 தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. #MeghalayaCoalmine
    லம்தாரி:

    மேகாலயாவின் கிழக்கு ஜைன்டியா மாவட்டத்தில் உள்ள நிலக்கரி சுரங்கங்களில் ஏராளமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இங்குள்ள சான் கிராமத்தில் அமைந்துள்ள சுரங்கம் ஒன்றில், அருகில் உள்ள லைடெயின் ஆற்றில் இருந்து தண்ணீர் புகுந்தது. 370 அடி ஆழ சுரங்கத்தில் சுமார் 70 அடிக்கு தண்ணீர் நிறைந்துள்ளது. நிலக்கரி சுரங்கத்தில் தண்ணீர் புகுந்ததும் 5 தொழிலாளர்கள் பத்திரமாக வெளியேறினர். ஆனால் மேலும் 13 பேர் அங்கு சிக்கியிருக்கலாம் என தெரிகிறது. இந்த சம்பவம் குறித்து நேற்று முன்தினம் காலையில் தகவல் வெளியானது.



    இதைத்தொடர்ந்து போலீசாரும், மாநில பேரிடர் மீட்பு படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை தொடங்கினர். சுரங்கத்தில் சிக்கியிருக்கும் தொழிலாளர்களின் கதி என்ன? என்று இதுவரை தெரியவில்லை. அவர்களை உயிருடன் மீட்பதற்காக மீட்புக்குழுவினர் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். #MeghalayaCoalmine

    பெட்ரோல் டீசல் விலை தினமும் உயர்ந்து வரும் நிலையில் மேகாலயாவில் லிட்டருக்கு 2.50 ரூபாய் குறைக்கப்படும் என முதல் மந்திரி பிரெஸ்டோன் டின்சாங் அறிவித்துள்ளார். #PetrolDieselPrice #Meghalaya
    ஷில்லாங்:

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலை தினமும் உயர்ந்து வருகிறது. எப்போதும் இல்லாத அளவில் பெட்ரோல், டீசல் விலை தினமும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது.

    பெட்ரோல் டீசல் விலையைக் குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் வலியுறுத்தினர். கடந்த 10-ந் தேதி நாடு தழுவிய அளவில் எதிர்க்கட்சிகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.

    இதற்கிடையே, மத்திய அரசு கடந்த வாரம் 2.50 ரூபாயை குறைத்து உத்தரவிட்டுள்ளது. எனவே, பாஜக ஆளும் மாநிலங்களில் பெட்ரோல் டீசல் மீதான வரியைக் குறைத்து விலையைக் குறைத்தன. 

    இந்நிலையில், மேகாலயா மாநிலத்தில் பெட்ரோல் டீசல் மீதான விலை 2.50 ரூபாய் குறைக்கப்படுவதற்கு அந்த மாநில சட்டசபையில் இன்று ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த விலை குறைப்பு நாளை முதல் அமலுக்கு வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
     
    ஏற்கனவே, ஆந்திரா, கர்நாடகா, மேற்கு வங்கத்திலும் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. #PetrolDieselPrice #Meghalaya
    மேகாலயா மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரி டி.டி.லபாங் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார். #Congress #Lapang
    ஷில்லாங்:

    மேகாலயாவில் தேசிய மக்கள் கட்சி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல் மந்திரியாக கான்ராட் சங்மா பதவி வகித்து வருகிறார். எதிர்க்கட்சியாக காங்கிரஸ் கட்சி செயல்பட்டு வருகிறது.

    இந்நிலையில், மேகாலயா மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரியும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராகவும் இருந்த டி.டி.லபாங் நேற்று அந்த கட்சியில் இருந்து விலகினார்.



    இதுதொடர்பாக லபாங் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், தனது வயது மற்றும் உடல் நிலை காரணமாகவும் கட்சியில் இருந்து விலக தீர்மானித்துள்ளேன் என தெரிவித்துள்ளார்.

    கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக காங்கிரஸ் கட்சியில் இருந்து வந்த லபாங், அந்த கட்சியில் இருந்து விலகியது அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #Congress #Lapang
    மேகாலயா தலைநகர் ஷில்லாங்கில் பரவிய வன்முறை ஓய்ந்தபோதிலும், பதற்றம் நீடிப்பதால் ஊரடங்கு உத்தரவு தொடர்கிறது.
    ஷில்லாங்:

    மேகாலயா மாநில தலைநகரான ஷில்லாங்கின் தேம் ஆவ் மாவ்லாங் பகுதியில் கடந்த வியாழக்கிழமை அரசு பேருந்து ஊழியர்களுக்கும் சில பெண் பயணிகளுக்குமிடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் 3 பேர் தாக்கப்பட்டனர். பின்னர் ஒரு கும்பல் தேம் ஆவ் மாவ்லாங் நோக்கி சென்றபோது மோதல் வெடித்தது. பின்னர் அது கலவரமாக மாறியது. ஷில்லாங் நகரத்தில் மாத்ரான், மாக்கர் மற்றும் அதன் அருகிலுள்ள பகுதிகளுக்கும் கலவரம் பரவியது.

    பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்ட போலீசார் மீது வன்முறைக் கும்பல் சரமாரியாக கற்களை வீசி தாக்கியது. கும்பலைக் கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தினர். எனினும் அந்த கும்பல் கலைந்து செல்லாமல் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டது.

    சட்டம் ஒழுங்கு சீர்குலைந்ததைத் தொடர்ந்து லும்டிங்ஜிரி காவல் நிலையம் மற்றும் கண்டோன்ட்மெண்ட் பீட் ஹவுஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. ஏராளமான போலீசார் மற்றும் மத்திய ஆயுதப்படை போலீசார் குவிக்கப்பட்டு ரோந்து சுற்றி வந்தனர்.

    இணையதள சேவைகள் முடக்கப்பட்டன. பெட்ரோல், டீசல் போன்ற தீப்பற்றும் பொருட்களை கேன்கள் மற்றும் பாட்டில்களில் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது.

    தற்போது ஓரளவு பதற்றம் தணிந்து ஷில்லாங்கில் அமைதி திரும்பத் தொடங்கி உள்ளது. ஆனால், மீண்டும் மோதல் ஏற்படும் சூழல் இருப்பதால், வன்முறை நடைபெற்ற பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு தொடர்கிறது. மாலை 4 மணி முதல் மறுநாள் காலை 5 மணி வரை இந்த ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என கிழக்கு காசி ஹில்ஸ் மாவட்ட காவல் துணை ஆணையர் தெரிவித்துள்ளார். மத்திய ஆயுதப்படை போலீசாரும் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்றும் அவர் கூறினார். #ShillongViolence #ShillongCurfew
    நாடு முழுதும் கடந்த 28-ம் தேதி நடந்த இடைத்தேர்தலில் மேகாலயா சட்டமன்ற தொகுதியில் இன்று காங்கிரஸ் வெற்றி பெற்றதை அடுத்து அம்மாநிலத்தில் தனிப்பெரும் கட்சியாக மீண்டும் அக்கட்சி உருவெடுத்துள்ளது. #ByPoll
    ஷில்லாங்:

    மேகாலயாவில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் அம்பாதி மற்றும் சாங்சாக் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முகுல் தேர்வு செய்யப்பட்டார். இரண்டு தொகுதிகளில் அவர் வெற்றிபெற்றதை அடுத்து அம்பாதி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். 

    இதனால், அம்மாநிலத்தில் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியில் உள்ள தேசிய மக்கள் கட்சியும் எதிர்கட்சியான காங்கிரஸ் கட்சியும் தலா 20 சட்டமன்ற உறுப்பினர்களுடன் சமபலத்தில் இருந்தது. 

    இந்நிலையில் உறுப்பினர்கள் மறைவு, பதவி விலகல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நாடு முழுவதும் காலியான 11 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் 4 மக்களவைத் தொகுதிகளுக்கு கடந்த 28-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இதில் அம்பாதி தொகுதியும் அடங்கும்.

    இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வரும் நிலையில், அம்பாதி சட்டமன்ற தொகுதியில்  காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட்ட மேகலாய முன்னாள் முதல்வரும் தற்போதைய சட்டசபை எதிர்கட்சி தலைவருமான முகுல் சங்மாவின் மகள் மியானி டி ஷிரா வெற்றி பெற்றா. இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஆளும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளரான மொமினை விட 3 ஆயிரத்து 192 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார். 

    இந்த வெற்றியின் மூலம் 21 சட்டசபை உறுப்பினர்களுடன் மேகாலயா மாநிலத்தின் தனிப்பெரும் கட்சியாக மீண்டும் காங்கிரஸ் உருவெடுத்துள்ளது. 20 உறுப்பினர்களைக் கொண்ட ஆளும் தேசிய மக்கள் கட்சி, பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியில் உள்ளது குறிப்பிடத்தக்கது. #ByPoll
    ×