என் மலர்
நீங்கள் தேடியது "MEMU Rail"
- வருகிற 16ந் தேதி வரை கோவையில் இருந்து காலை 9:05 மணிக்கு புறப்படும் (06802) ரெயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
- கோவை - இருகூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே உள்ள வழித்தடத்தில் என்ஜினீயரிங் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
திருப்பூர்:
கோவை என்ஜினீரியங் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் கோவை - சேலம் இடையிலான மெமு ெரயில் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக சேலம் கோட்ட ெரயில்வே துறை அறிவித்துள்ளது.
இது குறித்து தெற்கு ெரயில்வே சேலம் டிவிஷன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
கோவை - இருகூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே உள்ள வழித்தடத்தில் என்ஜினீயரிங் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் வருகிற 16ந் தேதி வரை கோவையில் இருந்து காலை 9:05 மணிக்கு புறப்படும் (06802) ரெயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. இதேபோல், சேலத்தில் இருந்து மதியம் 1:40 மணிக்கு புறப்படும் (06803) ரெயிலும் மே 1முதல் 16ந் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.
- செங்கல்பட்டு வரை நீட்டிக்கவும் திட்டம் உள்ளது.
- அடிப்படை கட்டணம் 10 கி.மீட்டருக்கு ரூ.29 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
சென்னை நகரில் ஏ.சி. வசதி கொண்ட புறநகர் ரெயில்கள் இயக்கப்பட வேண்டும் என்பது பயணிகளின் நீண்டநாள் கோரிக்கையாகும். அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே ஏ.சி. வசதி கொண்ட மெமு ரெயில்கள் விரைவில் இயக்கப்பட உள்ளது.
இந்த ரெயிலை செங்கல்பட்டு வரை நீட்டிக்கவும் திட்டம் உள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தெற்கு ரெயில்வே செய்து வருகிறது. இன்னும் ஒரு மாதத்தில், அதாவது டிசம்பர் இறுதிக்குள் ரெயில் பெட்டி தொழிற்சாலையில் இருந்து முதல் ஏ.சி. மெமு ரெயில் தயாராக உள்ளது.
இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-
முதல் ஏ.சி. மெமு ரெயிலை இயக்குவதற்கு சென்னை கடற்கரை - தாம்பரம் வழித்தடத்தை இறுதி செய்துள்ளோம். ஆனால் சேவையை செங்கல்பட்டு வரை நீட்டிக்கும் திட்டமும் ஆலோசனையில் உள்ளது.
சாதாரண ஏ.சி. மெமு ரெயில்களுக்கான அடிப்படை கட்டணம் 10 கி.மீ. வரையிலான பயணங்களுக்கு ரூ.29 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 491 முதல் 500 கி.மீ. வரையிலான பயணங்களுக்கு ரூ.423 ஆகும்.
11 முதல் 15 கி.மீ. வரையிலான பயணங்களுக்கு கட்டணம் ரூ.37 ஆகவும், 16 முதல் 25 கி.மீ. வரையிலான பயணங்களுக்கு ரூ.56 ஆகவும் கட்டணம் இருக்கும்.
10 கி.மீ. வரையிலான பயணங்களுக்கு மாதாந்திர சீசன் டிக்கெட் கட்டணம் ரூ.590 ஆகவும், 15 நாட்களுக்கு ரூ.445 ஆகவும், வாராந்திர சீசன் டிக்கெட் ரூ.295 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எழும்பூர் - தாம்பரம் இடையே 25 கி.மீ. வரையிலான பயணங்களுக்கு மாதாந்திர சீசன் டிக்கெட் கட்டணம் ரூ.1,200 ஆகவும், 15 நாட்களுக்கு ரூ.900 ஆகவும், வாராந்திர சீசன் டிக்கெட் ரூ.605 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
மேலும் சென்னை - திருவள்ளூர் இடையே டிக்கெட் கட்டணம் ரூ.85 ஆகவும், சென்னை-செங்கல்பட்டு இடையே ரூ.99 ஆகவும், சென்னை - திருத்தணி இடையே ரூ. 123 ஆகவும், சென்னை - திருப்பதி இடையே ரூ.170 ஆகவும், சென்னை - புதுச்சேரி இடையே ரூ.204 ஆகவும் நிர்ணயிக்கப்பட உள்ளது.
- நெல்லை மாவட்ட ரெயில் பயணிகள் சங்கத்தின் மாவட்ட கமிட்டி கூட்டம் ஏர்வாடியில் நடைபெற்றது.
- நாகர்கோவில் ரெயிலை நெல்லை வரை நீட்டிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
நெல்லை:
நெல்லை மாவட்ட ரெயில் பயணிகள் சங்கத்தின் மாவட்ட கமிட்டி கூட்டம் ஏர்வாடியில் நடைபெற்றது. சங்கத் தலைவர் கலீல் ரகுமான் தலைமை தாங்கினார்.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அபு நவாஷ் முன்னிலை வகித்தார். துணைத்தலைவர் சேகர் வரவேற்றார். பொதுச்செயலாளர் நயினா முகம்மது அறிக்கை சமர்ப்பித்தார்.
கூட்டத்தில் துணைத்தலைவர்கள் காதர் மைதீன், லாசர், பசீர் அகம்மது, குலாம் முகம்மது உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கன்னியாகுமரி மற்றும் நெல்லை மாவட்ட ரெயில் பயணிகள் நலன் கருதி கொல்லம், கன்னியாகுமரி மெமு ரெயிலை நெல்லை வரை நீட்டிக்க வேண்டும். தென்மாவட்ட பயணிகள் நலன் கருதி கன்னியாகுமரி, நாகர்கோவில், நெல்லை மார்க்கமாக மும்பைக்கு தினசரி ரெயில் விட வேண்டும், நாகர்கோவில்- நெல்லை பயணிகள் ரெயில் மேலப்பாளையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவனந்தபுரம்- நாகர்கோவில் ரெயிலை நெல்லை வரை நீட்டிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
பொருளாளர் முகைதீன் என்ற முத்து வாப்பா நன்றி கூறினார்.
- உள்ளூர் பயணிகள் உட்பட பல்வேறு ரெயில்கள் நிறுத்தப்பட்டன.
- பாடல்கள் ஒளிபரப்ப ஒவ்வொரு பெட்டியிலும் ஸ்பீக்கர் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர் :
கொரோனா தொற்றின் காரணமாக கடந்த 2020 ஏப்ரல் மாதம் முதல் எக்ஸ்பிரஸ், உள்ளூர் பயணிகள் உட்பட பல்வேறு ரெயில்கள் நிறுத்தப்பட்டன. இதில் ஈரோடு - கோவை மற்றும் ஈரோடு - பாலக்காடு, சேலம் - கோவை வரை இயக்கப்பட்ட மெமு ரெயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன.இதனை தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் கழிந்து, கடந்த ஏப்ரல் மாதம் 1-ந் தேதி முதல் ஈரோடு - கோவை இடையே மீண்டும் மெமு ரெயில் சேவையை துவங்கியது.
தற்போது விடப்பட்டுள்ள அதி நவீன மெமு ரெயிலில் கழிவறை, சீட் அமைப்புகள் வசதியாகவும், அனைத்து பெட்டிகளிலும் அதி நவீன கண்காணிப்பு கேமரா ஒவ்வொரு பெட்டியிலும் 4 வீதம் அனைத்து பெட்டிகளிலும் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பெண் பயணிகள் பாதுகாப்பு உறுதி செய்யப் பட்டுள்ளதோடு, ரெயிலில் நடக்கும் விரும்பத்தகாத செயல்களும் குறைந்துள்ளது.மேலும் கேமரா பொருத்தப் பட்டுள்ளதால் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு தப்பிச் செல்லும் குற்றவாளிகள் இதன் மூலம் கண்டுபிடிக்க உதவி கரமாக இருந்து வருகிறது.பயணிகள் ரெயிலில் கண்காணிப்பு கேமரா மட்டுமின்றி, அடுத்து வரும் ெரயில் நிலையம் பற்றி டிஜிட்டல் அறிவிப்பு பலகை,பாடல்கள் ஒளிபரப்ப ஒவ்வொரு பெட்டியிலும் ஸ்பீக்கர் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளது பயணிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.