என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Mini"
- புதிய கண்ட்ரிமேன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
- புதிய மினி கண்ட்ரிமேன் மாடல் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
சர்வதேச ஆட்டோமொபைல் சந்தையில் அளவில் சிறிய கார்களை உற்பத்தி செய்வதில் உலகம் முழுக்க தனக்கென வாடிக்கையாளர்களை கொண்டிருக்கும் பிராண்டாக மினி அறியப்படுகிறது. குட்டி கார் என்ற போதிலும், பெரும்பாலானோரை கவரும் வகையிலான டிசைன், ஃபிளாக்ஷிப் தர உற்பத்தி மற்றும் சக்திவாய்ந்த என்ஜின் என மினி கார்களில் அனைத்து அம்சங்களும் சிறப்பானதாகவே இருந்து வந்துள்ளன.
அந்த வரிசையில், மினி பிராண்டின் முற்றிலும் புதிய கண்ட்ரிமேன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய 2025 மினி கண்ட்ரிமேன் மாடல், இதுவரை வெளியானதிலேயே மிகப்பெரிய மினி கார் ஆகும். அளவில் பெரிய கண்ட்ரிமேன் மாடலில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றன.
புதிய மினி கண்ட்ரிமேன் மாடல் S All4 மற்றும் JCW என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் S All4 வேரியண்டில் 2.0 லிட்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 241 ஹெச்.பி. பவர் வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இதன் JCW வேரியண்டில் 312 ஹெச்.பி. பவர் வெளிப்படுத்தும் என்ஜின் வழங்கப்படுகிறது.
2025 மினி கண்ட்ரிமேன் மாடலின் உற்பத்தி அடுத்த ஆண்டு மார்ச் மாதம் துவங்கும் என்று தெரிகிறது. இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் மாடல்கள் 2024 மே மாதம் விற்பனை மையங்களை வந்தடையும் என்று கூறப்படுகிறது. இந்த கார் வெளியீட்டின் போதே All4 மற்றும் JCW என இரண்டு வேரியண்ட்களும் கிடைக்கும். இதே காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் அடுத்த ஆண்டு செப்டம்பர் முதல் நவம்பர் மாதத்திற்குள் அறிமுகம் செய்யப்படலாம்.
- மினி கூப்பர் SE சார்ஜ்டு எடிஷன் மாடலில் உள்ள மோட்டார் 184 ஹெச்பி பவர், 270 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
- புதிய மினி ஸ்பெஷல் எடிஷன் மாடல் முழு சார்ஜ் செய்தால் 270 கிமீ ரேன்ஜ் வழங்குகிறது.
மினி நிறுவனத்தின் ஆல்-எலெக்ட்ரிக் கூப்பர் SE மாடலின் சார்ஜ்டு எடிஷன் வேரியன்ட் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. புதிய மினி கூப்பர் SE சார்ஜ்டு எடிஷன் மாடலின் விலை ரூ. 55 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய சார்ஜ்டு எடிஷன் மாடல் நாடு முழுக்க வெறும் 20 வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது.
இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட முதல் லிமிடெட் எடிஷன் கூப்பர் SE மாடல்- சார்ஜ்டு எடிஷன் சில்லி ரெட் நிறம் மற்றும் டூயல்-டோன் ரூஃப் ஆப்ஷன் கொண்டிருக்கிறது. அதன்படி இந்த காரின் ரூஃப் வைட் நிறத்திலும், வட்டவடிவம் கொண்ட ஹெட்லைட், டெயில் லைட் ரிங்குகள், டோர் ஹேன்டில்கள், லோகோ மற்றும் டெயில்கேட் ஹேன்டில் உள்ளிட்டவைகளை சுற்றி வைட் நிற அக்சென்ட்கள் செய்யப்பட்டு உள்ளன.
இத்துடன் கான்டிராட்ஸ்ட் ஃபுரோசன் ரெட் ஸ்போர்ட்ஸ் ஸ்டிரைப்கள், பொனெட், பக்கவாட்டு மற்றும் பூட் பகுதி மற்றும் ஏர் வென்ட்களில் எல்லோ ஹைலைட்கள் செய்யப்பட்டுள்ளன. 17-இன்ச் மினி எலெக்ட்ரிக் மாடலின் வீல்களிலும் எல்லோ சரவுன்ட்கள் செய்யப்பட்டு இருக்கின்றன. வழக்கமாக மினி மாடல்களில் உள்ளதை போன்ற S லோகோ, இந்த வேரியன்டில் எல்லோ நிற பினிஷ் செய்யப்பட்டுள்ளது.
கூப்பர் சார்ஜ்டு எடிஷன் மாடலின் உள்புறம் லெதர் கார்பன் பிளாக் இருக்கை மேற்கவர்கள், நப்பா லெதர் இன்சர்ட்கள் வழங்கப்படுகின்றன. இத்துடன் உள்புற ஸ்டார்ட் / ஸ்டாப் ஸ்விட்ச், கியர் லீவர் மற்றும் டோர் சில் உள்ளிட்டவைகளில் ஸ்பெஷல் எடிஷன் பேட்ஜ்கள் இடம்பெற்றுள்ளன. இத்துடன் நேவிகேஷன், வயர்லெஸ் சார்ஜிங், ப்ளூடூத் கனெக்டிவிட்டி மற்றும் ஹார்மன் கார்டன் சவுன்ட் உள்ளிட்டவை "வயர்டு பேக்கேஜ்" மூலம் வழங்கப்படுகிறது.
மினி கூப்பர் SE சார்ஜ்டு எடிஷன் மாடலில் உள்ள மோட்டார் 184 ஹெச்பி பவர், 270 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர்கள் வேகத்தை 7.3 நொடிகளில் எட்டிவிடும். இதில் உள்ள 32.6 கிலோவாட் ஹவர் பேட்டரி முழுமையாக சார்ஜ் செய்தால் 270 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் கிடைக்கும்.
- மினி நிறுவனத்தின் கண்ட்ரிமேன் மற்றும் ஏஸ்மேன் மாடல்களின் எலெக்ட்ரிக் வெர்ஷன் அறிமுகம் செய்யப்படலாம்.
- மினி நிறுவனம் முதன் முதலில் அறிமுகம் செய்த மினி SE மாடல் சந்தையில் அமோக வரவேற்பை பெற்றது.
மினி நிறுவனத்தின் 3 கதவுகள் கொண்ட மினி கூப்பர் காரின் அடுத்த தலைமுறை மாடல் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த கார் முழுமையான எலெக்ட்ரிக் கார் வடிவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. தற்போது மினி நிறுவனம் தனது கார்களை எலெக்ட்ரிக் திறன் கொண்டதாக மாற்றும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
இதைத் தொடர்ந்து மின நிறுவனத்தின் கண்ட்ரிமேன் மற்றும் ஏஸ்மேன் மாடல்களின் எலெக்ட்ரிக் வெர்ஷனை அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கலாம். மினி நிறுவனம் முதன் முதலில் அறிமுகம் செய்த மினி SE மாடல் சந்தையில் அமோக வரவேற்பை பெற்றது. இந்த கார் கடந்த ஆண்டில் மட்டும் உலகளவில் 43 ஆயிரம் யூனிட்கள் விற்பனையாகின.
மினி கூப்பர் E எலெக்ட்ரிக் காரில் 40.7 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. மினி கூப்பர் SE மாடலில் 54.2 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 300 முதல் 400 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும். மினி கூப்பர் எலெக்ட்ரிக் கார் மினி ஸ்பேஸ் கான்செப்டில் உருவாக்கப்படுகிறது.
மினி கண்ட்ரிமேன் மாடல் இந்த ஆண்டு நவம்பர் மாதம் லெய்சிக் பிஎம்டபிள்யூ குழும ஆலையில் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது. 2024 ஆண்டு ஏஸ்மேன் மாடலின் உற்பத்தி துவங்கும் என்று கூறப்படுகிறது.
- மினி கண்ட்ரிமேன் E மாடலில் உள்ள எலெக்ட்ரிக் மோட்டார்கள் 140 கிலோவாட் திறன் கொண்டுள்ளன.
- இந்த எலெக்ட்ரிக் கார் முழு சார்ஜ் செய்தால் 450 கிலோமீட்டர் வரையிலான ரேஞ்ச் வழங்கும் திறன் கொண்டிருக்கிறது.
மினி நிறுவனத்தின் முற்றிலும் புதிய எலெக்ட்ரிக் கண்ட்ரிமேன் மாடலின் பவர்டிரெயின் விவரங்கள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ஸ்டாண்டர்டு கண்ட்ரிமேன் E மாடல் - பேஸ் 2 வீல் டிரைவ் வேரியண்ட் மற்றும் டூயல் மோட்டார் SE ALL4 வேரியண்ட் என இருவித பவர்டிரெயின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. கண்ட்ரிமேன் E மாடல் 188 ஹெச்பி பவர் வெளிப்படுத்துகிறது. SE ALL4 வேரியண்ட் அதிகபட்சம் 308 ஹெச்பி வரையிலான பவர் வெளிப்படுத்துகிறது.
இரு வேரியண்ட்களில் SE ALL4 மாடல் நிறுவனத்தின் முதல் ஆல்-வீல் டிரைவ் வசதி கொண்ட எலெக்ட்ரிக் கார் மாடல் ஆகும். கண்ட்ரிமேன் E மாடலில் 64.7 கிலோவாட் ஹவர் பேட்டரி உள்ளது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 450 கிலோமீட்டர் வரையிலான ரேஞ்ச் வழங்குகிறது. புதிய கண்ட்ரிமேன் மாடல் அதன் முந்தைய வெர்ஷனை விட 130mm வரை நீளமாக இருக்கும் என தெரிகிறது. இந்த காரின் உயரமும் 60mm வரை அதகரித்துள்ளது.
புதிய மினி கண்ட்ரிமேன் மாடலின் உள்புறம், வெளிப்புறம் மற்றும் வீல்கள் என பெரும்பாலான பாகங்கள் 70 சதவீதம் வரை மறுசுழற்சி செய்யப்பட்ட அலுமினியம் பயன்படுத்தப்பட்டுள்ளன. காரின் டேஷ்போர்டு, ஸ்டீரிங் வீல், ஹெட்லைனர் உள்ளிட்டவை மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் மற்றும் பாட்டில்களால் உருவாக்கப்பட்டுள்ளன.
மினி பிராண்டின் தாய் நிறுவனமான பிஎம்டபிள்யூ குழுமம், காற்று மாசை குறைக்க ஹைட்ரஜனுக்கு மாற்றாக படிம எரிபொருட்கள் பயன்பாட்டை அதிகரித்து வருகிறது. இதற்காக பிஎம்டபிள்யூ குழுமம் சார்பில் 800 மில்லியன் யூரோக்கள் முதலீடு செய்யப்படுகின்றன.
- மினி நிறுவனத்தின் கூப்பர் EV மாடல் புதிய அம்சங்களுடன் அப்டேட் செய்யப்பட இருக்கிறது.
- முற்றிலும் புதிய மினி எலெக்ட்ரிக் கார் 2024 வாக்கில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மினி நிறுவனம் இரண்டாம் தலைமுறை ஆல்-எலெக்ட்ரிக் கூப்பர் EV மாடலை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. புதிய மாடலில் மேம்பட்ட பவர்டிரெயின் வழங்கப்படுகிறது. இந்த தசாப்தத்தின் இறுதிக்குள் முழுமையான எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளராக மாற பிஎம்டபிள்யூ திட்டமிட்டு வரும் நிலையில், புதிய மினி கூப்பர் மாடல் புரட்சியை ஏற்படுத்த அடித்தளமாக இருக்கும் என தெரிகிறது.
அடுத்த தலைமுறை மினி கூப்பர் EV மாடல் 2024 மே மாத வாக்கில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து ஜூலை மாத வாக்கில் இந்த காரின் பெட்ரோல் வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
"புதிய தோற்றம், பெயருடன் மீண்டும் அதன் வேர்களுக்கு எடுத்துச் செல்லும் வகையில், புதிய கார் கூப்பர் ஹேச்பேக் பெயருக்கு மாற்றாக கூப்பர் என்றே அழைக்கப்படும்" என மினி பிராண்டு தலைவர் ஸ்டெஃபைன் உஸ்ட் தெரிவித்து இருக்கிறார்.
தற்போதைய மினி ஹேச்பேக் மாடலில் இருப்பதை விட அகலமான டிராக், சிறிய முன்புற ஒவர்ஹேங், பெரிய வீல்கள் மற்றும் நீண்ட வீல்பேஸ் உள்ளிட்டவை சிறப்பானதாக இருக்கும் என தெரிகிறது. புதிய கூப்பர் மாடல் எலெக்ட்ரிக் மற்றும் பெட்ரோல் பவர்டிரெயின் ஆப்ஷன்களில் விற்பனைக்கு வர இருக்கிறது. இதன் பெட்ரோல் மாடல் ஐந்து கதவுகள் வடிவில் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளது.
புதிய மினி கூப்பர் EV மாடல் 40 கிலோவாட் ஹவர் அல்லது 54 கிலோவாட் ஹவர் என இருவித பேட்டரி ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது. இவை அதிகபட்சம் 386 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என தெரிகிறது. இந்த கார் 2-வீல் டிரைவ் ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கும் என தெரிகிறது.
Source: Autocar
- மினி நிறுவனத்தின் புதிய லிமிடெட் எடிஷன் கூப்பர் SE கன்வெர்டிபில் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது.
- புதிய லிமிடெட் எடிஷன் கார் அதன் 3-டோர் ஹேச்பேக் மாடலை விட வித்தியாசமான ஸ்டைலிங் கொண்டுள்ளது.
மினி கூப்பர் SE எலெக்ட்ரிக் ஹேச்பேக் மாடலை தொடர்ந்து கூப்பர் SE கன்வெர்டிபில் மாடல் அறிமுகமாகி இருக்கிறது. ஐரோப்பாவில் அறிமுகமாகி இருக்கும் புதிய கூப்பர் மாடல் லிமிடெட் எடிஷன் மாடல் ஆகும். இந்த கார் மொத்தத்தில் 999 யூனிட்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட இருக்கிறது.
ஸ்டைலிங்கை பொருத்தவரை கூப்பர் SE கன்வெர்டிபில் மாடல் அதன் 3-டோர் ஹேச்பேக் மாடலை விட வித்தியாசமாக உள்ளது. புதிய லிமிடெட் எடிஷன் மாடலின் ஃபோல்டிங் ஃபேப்ரிக் ரூஃப் தனித்துவமாக காட்சியளிக்கிறது. இவை தவிர கூப்பர் SE அதன் எலெக்ட்ரிக் மாடல் டிசைனிங் கொண்டிருக்கிறது. இந்த காரின் பின்புறம் E பேட்ஜ் உள்ளது. இத்துடன் பிரத்யேக வீல் டிசைன் வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த கன்வெர்டிபில் மாடலின் ஃபெண்டரிலும் பேட்ஜிங் உள்ளது. கார் கதவின் சில் கார்டுகளிலும் நம்பர் இடம்பெற்று இருக்கிறது. கன்வெர்டிபில் மாடலின் டோர் ஹேண்டில், ஹெட்லேம்ப், டெயில் லேம்ப் உள்ளிட்டவைகளில் பிரான்ஸ் டிடெயிலிங் செய்யப்பட்டுள்ளது. மினி லோகோ மற்றும் லெட்டரிங் பிளாக் ஃபினிஷ் செய்யப்பட்டு இருக்கிறது.
கேபின் டிசைனிலும் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. இந்த காரின் லெதர் இருக்கை மேற்கவர்கள் மற்றும் முன்புறம் ஹீடெட் சீட்கள் ஸ்டாண்டர்டு அம்சங்களாக வழங்கப்படுகின்றன. இத்துடன் ஆம்பியண்ட் லைட்டிங், ஆக்டிவ் குரூயிஸ் கண்ட்ரோல் மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
பவர்டிரெயினை பொருத்தவரை கூப்பர் SE கன்வெர்டிபில் மாடலில் 180 ஹெச்பி பவர் வெளிப்படுத்தும் எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 201 கிலோமீட்டர் வரை செல்லும். மேலும் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 8.2 நொடிகளில் எட்டிவிடும். இந்தியாவுக்கு லிமிடெட் எடிஷன் மாடலில் சில யூனிட்கள் ஒதுக்கீடு செய்யப்படுமா என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.
- நாமக்கல் மாவட்டத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் 75- வது சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழா நாமக்கல் நகராட்சி குளக்கரைத்திடலில் 6.8.2022 தொடங்கி 12.8.2022 வரை நடைபெற்று வருகின்றது.
- அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற போதைப்பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு மராத்தான் ஓட்டம் இன்று நடைபெற்றது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் 75- வது சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழா நாமக்கல் நகராட்சி குளக்கரைத்திடலில் 6.8.2022 தொடங்கி 12.8.2022 வரை நடைபெற்று வருகின்றது.
அமுதப்பெருவிழாவின் ஒரு பகுதியாக நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு பெண்கள் கலைக்கல்லூரி மாணவிகள் மற்றும் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற போதைப்பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு மராத்தான் ஓட்டம் இன்று நடைபெற்றது. நாமக்கல் நகராட்சி குளக்கரைத்திடலில் அமுதப்பெருவிழா மற்றும் அரசுத்துறைகளின் பணிவிளக்க கண்காட்சி முகாமில் கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற மினிமராத்தான் ஓட்டத்தை மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) மல்லிகா, நாமக்கல் நகராட்சித்தலைவர் கலாநிதி முன்னிலையில் தொடங்கி வைத்தார்.
முன்னதாக மாவட்ட வருவாய் அலுவலர் மல்லிகா தலைமையில் போதைப்பொருட்கள் ஒழிப்பு உறுதிமொழியை மாணவ, மாணவிகள் ஏற்றனர். இந்த பேரணியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் நாமக்கல் உழவர் சந்தை, ஆஞ்சிநேயர் கோவில், சேலம் ரோடு, திருச்செங்கோடு சாலை, நாமக்கல் பேருந்து நிலையம் வழியாக மீண்டும் குளக்கரைத்திடல் வந்தடைந்தனர்.
இந்நிகழ்ச்சியில் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு கலைக்கல்லூரி முதல்வர் பால்கிரேஸ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன், மாவட்ட விளையாட்டு அலுவலர் கோகிலா, மதுவிலக்கு பிரிவு காவல் ஆய்வாளர் அம்பிகா உள்பட கல்லூரி பேராசிரியர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
- மினி நிறுவனம் தனது புதிய எலெக்ட்ரிக் கார் மாடலில் கன்வெர்டிபில் ஆப்ஷனை வழங்கி சோதனை செய்து வருகிறது.
- தற்போதைய மினி கன்வெர்டபில் மாடலில் எலெக்ட்ரிக் வெர்ஷன் வழங்கப்படாது.
பி.எம்.டபிள்யூ. நிறுவனம் அடுத்த தலைமுறை மினி மாடல்கள் வரிசையில் கன்வெர்டிபில் மாடல்களை சேர்க்க இருக்கிறது. இதற்காக முற்றிலும் எலெக்ட்ரிக் திறன் கொண்ட மினி கன்வெர்டிபில் மாடல் உருவாக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் சந்தையில் இந்த மாடல் எந்த அளவுக்கு நிலைத்து இருக்கும் என்பதை சோதனை செய்ய அந்நிறுவனம் முடிவு செய்து இருக்கிறது.
ஒன்-ஆப் மினி எலெக்ட்ரிக் என அழைக்கப்படும் புது மாடல் ப்ரோடோடைப் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. சோதனை அடிப்படையில் இந்த மாடல் இருக்கும் என பி.எம்.டபிள்யூ. தெரிவித்து உள்ளது. முனிச்-இல் உருவாக்கப்பட்டு இருக்கும் இந்த ப்ரோடோடைப் மாடல் தற்போதைய கூப்பர் S கன்வெர்டபில் மாடலின் உருவில் கூப்பர் SE மாடலில் உள்ள 184 ஹெச்.பி. பவர் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டு உள்ளது.
இதன் காரணமாக ப்ரோடோடைப் மாடலின் எடை ICE கூப்பர் S கன்வெர்டபில் மாடலை விட 140 கிலோ வரை அதிகரித்து இருக்கிறது. இதன் பூட் கொள்ளளவில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இது 160 லிட்டர்கள் கொள்ளளவு வழங்குகிறது.
தற்போதைய மினி கன்வெர்டபில் மாடல்கள் எலெக்ட்ரிக் வடிவில் மாற்றப்படாது. எலெக்ட்ரிக் கன்வெர்டபில் மாடல்கள் முற்றிலும் புதிதாக உருவாக்கப்படும் என பி.எம்.டபிள்யூ. தெரிவித்து இருக்கிறது. "மினி கன்வெர்டபில் மாடலின் மேம்பட்ட வெர்ஷன் அறிமுகமாகும் என நாங்கள் அறிவித்து விட்டோம். ஆனால் அதன் என்ஜின் விவரங்கள் பற்றி இப்போதே அறிவிப்பது சரியாக இருக்காது," என பி.எம்.டபிள்யூ. தெரிவித்து உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்