என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "mini truck"
- காட்டு யானைகள் உணவு, தண்ணீர் தேடி அடிக்கடி சாலையை கடந்து செல்வது வழக்கமான ஒன்று.
- மினி லாரியில் இருந்த தார்பாயை தனது துதிக்கையால் கீழே இழுத்து போட்டு சேதாரம் செய்தது.
தாளவாடி:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இதில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. ஆசனூர் வனச்சரகத்தில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. இந்த காட்டு யானைகள் உணவு, தண்ணீர் தேடி அடிக்கடி சாலையை கடந்து செல்வது வழக்கமான ஒன்று.
சத்தியமங்கலத்தில் இருந்து மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மாலை வனப்பகுதியில் இருந்து வெளியேரிய ஒற்றை காட்டுயானை கரும்பு லாரி வருகிறதா என சாலையில் உலா வந்தது. அப்போது அங்கு பழுதாகி நின்ற மினி லாரியின் உள்ளே காய்கறி உள்ளதா என தேடியது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மினி லாரியில் ஏதும் இல்லாதால் மினி லாரியில் இருந்த தார்பாயை தனது துதிக்கையால் கீழே இழுத்து போட்டு சேதாரம் செய்தது. சுமார் 30 நிமிடம் வாகனங்கள வழிமறித்த ஒற்றையானை பின்னர் வனப்பகுதியில் சென்றது. கடந்த சில நாட்களாக காட்டு யானை கூட்டம் வாகனங்களை வழிமறித்து வருவது குறிப்பிடத்தக்கது.
- தூய்மை பாரத இயக்கம் திட்டத்தின் கீழ் அதிக திறன் கொண்ட மினி லாரி வாகனத்தை பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சபா.பாலமுருகன் வழங்கினார்.
- மருங்கூர் ஊராட்சி செயலாளர் சுப்பிரமணியன், எல்.என்.புரம் ஊராட்சி செயலாளர் ராஜ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்
கடலூர்:
பண்ருட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மருங்கூர், எல்.என்.புரம் ஆகிய 2 ஊராட்சிகளுக்கு தூய்மை பாரத இயக்கம் திட்டத்தின் கீழ் அதிக திறன் கொண்ட மினி லாரி வாகனத்தை பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சபா.பாலமுருகன் வழங்கினார்.
இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மீரா கோமதி, சக்தி, மேலாளர் பாண்டியன், ஒன்றிய கவுன்சிலர் உதயகுமார், ஊராட்சி மன்ற துணை தலைவர் சசிகலா ஜெயசெழியன், மருங்கூர் ஊராட்சி செயலாளர் சுப்பிரமணியன், எல்.என்.புரம் ஊராட்சி செயலாளர் ராஜ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்
- விழுப்புரம் அருகே முட்டை ஏற்றி வந்த மினி லாரி மீது டிப்பர் லாரி மோதியது.
- மினி லாரி கவிழ்ந்ததில் அருகில் இருந்த பெட்டிக்கடையின் மீது மோதியது.
விழுப்புரம்:
விழுப்புரம் அருகே சென்னை - கும்பகோணம் சாலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் பண்ருட்டியில் இருந்து விக்கிரவாண்டிக்கு முட்டை ஏற்றடி கொண்டு மினிலாரி ஒன்று வந்தது. இந்த லாரியை பண்ருட்டி சேர்ந்த வாலிபர் ஓட்டி வந்தார். இது கோலியனூர் அருகே கள்ளப்பட்டு பகுதிகள் மினி லாரியை சாலையோரமாக நிறுத்திவிட்டு டிரைவர் இயற்கை உபாதை கழிக்க சென்றார்.
அப்போது பின்னால் வந்த டிப்பர் லாரி ஒன்று மினி லாரியின் மீது வேகமாக மோதியது. இந்த விபத்தில் முட்டை ஏற்றி வந்த மினிலாரி அப்பளம் போல் நொறுங்கி கவிழ்ந்தது. இதில் வெண்ணிலா அருகில் இருந்த 10000 மதிப்புள்ள முட்டைகள் அனைத்தும் சேதமானது. மேலும் மினி லாரி கவிழ்ந்ததில் அருகில் இருந்த பெட்டிக்கடையின் மீது மோதியது. இதில் பெட்டி கடை முழுவதும் சேதமானது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் உயிர் சேதம் ஏற்படவில்லை. தகவல் அறிந்த வளவனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கவிழ்ந்து கிடந்த மினி லாரியை பொக்லைன் எந்திரம் மூலம் அப்புறப்படுத்தினர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்