என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Minister inspection"
- தீபாவளி பண்டிகை முடிந்து ஊருக்கு திரும்பும் பயணிகள் கூட்டத்தால் திருச்சி பஸ் மற்றும் ரெயில் நிலையங்கள் நிரம்பி வழிந்தன
- இதற்கிடையே பயணிகள் எண்ணிக்கைக்கு ஏற்பட பஸ்கள் இயக்கப்படுகிறதா என்பது குறித்துஆய்வு நடத்த போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் நேற்று இரவு 11 மணிக்கு திருச்சி மத்திய பஸ் நிலையம் வந்தார்
திருச்சி:
தீபாவளி பண்டிகை கடந்த 24-ந்தேதி கொண்டாடப்பட்டது. பொதுமக்கள் எந்தவித அச்சமும், இடையூறும், சிக்கலும் இன்றி கொண்டாடிடும் வகையில் அரசு தரப்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செம்மையாக செய்து தரப்பட்டு இருந்தன.
இதில் வெளியூர்களில் வசிப்பவர்கள், வேலை நிமித்தம் தங்கியிருப்பவர்கள் தங்களது சொந்த ஊர்களில் தீபாவளி பண்டிகையை கொண்டாட வசதியாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டன.
கூடுதல் கட்டணத்தை மையமாக கொண்டு செயல்பட்ட தனியார் ஆம்னி பஸ்களுக்கு கடிவாளம் போடும் வகையில், போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அதிரடியாக ஆய்வுகளை மேற்கொண்டு பயணிகளுக்கு நிம்மதியை அளித்தார்.
கடந்த 21-ந்தேதி முதல் தொடர்ந்து 3 நாட்களும், அடுத்ததாக தீபாவளி பண்டிகை முடிந்து மீண்டும் ஊர் திரும்புவர்களின் வசதிக்காக மேலும் 3 நாட்களும் இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
இதில் பயணிகள் எந்தவித சிரமமும் இன்றி சொந்த ஊர்களில் இருந்து தங்களது பணியிட ஊர்களுக்கு திரும்பி வருகிறார்கள்.
இதற்கிடையே பயணிகள் எண்ணிக்கைக்கு ஏற்பட பஸ்கள் இயக்கப்படுகிறதா என்பது குறித்துஆய்வு நடத்த போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் நேற்று இரவு 11 மணிக்கு திருச்சி மத்திய பஸ் நிலையம் வந்தார். அங்கு டிக்கெட் வழங்கும் இடம், சென்னை பஸ்கள் நிறுத்தப்படும் பகுதிகளில் ஆய்வு செய்தார்.
பயணிகளிடம் பஸ்கள் இயக்கப்படுவது மற்றும் வசதிகள் குறித்து கேட்டறிந்தார். அமைச்சர் வந்ததை அறிந்த போக்குவரத்துக் கழக அதிகாரிகள் உடனடியாக ஆய்வு நடைபெற்ற இடத்துக்கு விரைந்து வந்தனர்.
அவர்களிடம் பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப தொடர்ந்து 3 நாட்கள் வரும் 30-ந்தேதி பஸ்கள் அதிக எண்ணிக்கையில் இயக்க வேண்டும் என்று அமைச்சர் அறிவுறுத்தினார்.
இரவு நேரம் என்றும் பாராமல் 11.30 மணி வரை ஆய்வு நடத்திய அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். பயணிகள் கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் அதிகமாக இருந்தபோதிலும் சிரமமின்றி பஸ்களில் ஏறி பொதுமக்கள் பயணித்தனர்.
இதேபோல் திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தின் அனைத்து பிளாட்பாரங்களிலும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. தென்மாவட்டங்களை சேர்ந்தவர்கள் சென்னை செல்லும் அனைத்து ரெயில்களிலும் முண்டியடித்து ஏறி இடம் பிடித்தனர்.
மொத்தத்தில் தமிழகத்தின் மத்திய மாவட்டமான திருச்சி தீபாவளி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடிவிட்டு மீண்டும் ஊர் திரும்பும் பயணிகள் கூட்டத்தால் சற்றே திணறியது.
- சைனிக் பள்ளியின் 60 ம் ஆண்டு வைர விழாவையொட்டி வரும் 16 ந்தேதி பள்ளி வளாகத்தில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
- முதல்வர் மு. க. ஸ்டாலின் 15 ந்தேதி உடுமலை வருகிறார்.
உடுமலை :
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அமராவதி நகரில் ஒன்றிய பாதுகாப்பு துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சைனிக் பள்ளி (ராணுவப்பள்ளி) உள்ளது. இந்த பள்ளியின் 60 ம் ஆண்டு வைர விழாவையொட்டி வரும் 16 ந்தேதி பள்ளி வளாகத்தில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இதில் பங்கேற்பதற்காக முதல்வர் மு. க. ஸ்டாலின் 15 ந்தேதி உடுமலை வருகிறார். அன்று மாலை திருமூர்த்தி மலை செல்லும் முதல்வர் அங்குள்ள பொதுப்பணித்துறை விருந்தினர் விடுதியில் தங்குகிறார். மறுநாள் சைனிக் பள்ளி விழாவில் பங்கேற்கிறார்.
இதற்கான ஏற்பாடுகளை செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் ஆய்வு செய்தார். விழா நடைபெறும் இடம் மற்றும் ஆடிட்டோரியத்தை பார்வையிட்டார். ஆய்வின் போது கலெக்டர் வினீத், எஸ்.பி சசாங்சாய், சப் கலெக்டர் ஜஸ்வந்த் கண்ணன், முன்னாள் எம். எல்.ஏ., ஜெய ராமகிருஷ்ணன், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் மொடக்கப்பட்டி ரவி, ஒன்றிய குழு தலைவர் மகாலட்சுமிமுருகன், துணை தலைவர் சண்முகவடிவேலு, தளி பேரூராட்சி தலைவர் உதயகுமார், செயல் அலுவலர் கல்பனா, குடிமங்கலம் வடக்கு ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர்அணி கிரிகதிரேசன், பொறியாளர் அணி துணைத் தலைவர் மொடக்குப்பட்டி பாபு மற்றும் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை துறை, ஊரக வளர்ச்சி துறை, சைனிக் பள்ளி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- திருச்சி முக்கொம்பு மேலணையில் கொள்ளிடம் ஆற்றில் புதிதாக கட்டப்பட்டு வரும் தடுப்பணை மற்றும் புதிய பாலத்திற்கான பணிகளை தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று காலை பார்வையிட்டு ஆய்வு செய்தார்
- 26-ந்ததேதி மிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சி வருகை தந்து காலை 11 மணி அளவில் புதிதாக கட்டப்பட்ட முக்கொம்பு கொள்ளிடம் மேலணை பாலத்தை திறந்து வைக்கிறார்
திருச்சி:
திருச்சி முக்கொம்பு மேலணையில் கொள்ளிடம் ஆற்றில் புதிதாக கட்டப்பட்டு வரும் தடுப்பணை மற்றும் புதிய பாலத்திற்கான பணிகளை தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று காலை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதையடுத்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
திருச்சியில் ரூ.387.60 கோடி மதிப்பீட்டில் முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றில் புதிய பாலம் கட்டப்பட்டு வருகிறது. ஏறத்தாழ 95 சதவீதம் பணிகள் நிறைவு பெற்றுள்ளது. வருகிற (ஜூன்) 26-ந்தேதி தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சி வருகை தந்து காலை 11 மணி அளவில் புதிதாக கட்டப்பட்ட முக்கொம்பு கொள்ளிடம் மேலணை பாலத்தை திறந்து வைக்கிறார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு கொள்ளிடம் ஆற்றில் கட்டப்பட்டிருந்த பழைய பாலத்தின் 9 மதகுகள் இடிந்து சேதம் ஆனது.– இந்த நிலையில் அதற்கு மாற்றாக புதிய பாலம் மற்றும் கதவணை கட்ட திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தது. இந்த புதிய பாலம் பழைய பாலம் போலவே குறுகலான பாலமாக திட்டமிடப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் கருணாநிதி மாயனூர் பாலத்தை கட்டியபோது இருவழிப்பாதையாக இருக்கும் வகையில் கட்டினார். ஆனால் இது குறுகலாக ஒரு வழிப்பாதையாக தான் உள்ளது. இதில் சில புதிய விஷயங்களை கொண்டுவர உள்ளோம். அதை முதல்வர் தெரிவிப்பார்.
திருச்சியில் புதிய காவிரி பாலம் கட்ட ஏற்கனவே ரூ.90 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது. தற்போது அது ரூ.130 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. திருச்சி நகரின் காவிரி ஆற்றில் புதிய பாலம் மற்றும் எக்ஸ்பிரஸ் எலிவேட்டர் –வே உள்ளிட்ட திட்டங்கள் விரைவில் துவக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேகதாது புதிய அணை தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு, நான் திருச்சி மந்திரி, என்னிடம் திருச்சி கேள்விகளை மட்டும் கேளுங்கள் என்றார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் மாநகராட்சி மேயர் அன்பழகன், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.
முக்கொம்பு கொள்ளிடத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கதவணையை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று காலை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் காமராஜ் காலனியில், ஆர்.வி. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானம் உள்ளது. இதனை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி திடீரென ஆய்வு செய்தார்.
இந்த மைதானத்தில், ஓசூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் காலை மற்றும் மாலை நேரங்களில் நடைபயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். அதற்கேற்றவாறு, மைதானத்தில் போதிய வசதிகள் செய்யப்பட்டுள்ளதா? என்று அமைச்சர் ஆய்வு செய்து, நடைபயிற்சியில் ஈடுபட்ட பொதுமக்களிடம் கருத்துக்களை கேட்டறிந்தார். மேலும், நடைபயிற்சிக்கு வரும் பொதுமக்களுக்கு, சுத்தமான மற்றும் பாதுகாப்பான நடைபாதை, ஓய்வு இருக்கைகள், சுகாதார வளாக வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி ஆகியவற்றை செய்து தர நகராட்சி ஆணையாளருக்கு, அமைச்சர் உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது, ஓசூர் நகராட்சி ஆணையாளர் செந்தில்முருகன், அ.தி.மு.க. மாவட்ட பிரதிநிதி சிட்டிஜெகதீசன், மாவட்ட சிறுபான்மை பிரிவு துணைத்தலைவர் அரப்ஜான், முன்னாள் நகராட்சி கவுன்சிலர் பி.ஆர்.வாசுதேவன், கட்சி பிரமுகர் முனிராஜ் உள்பட பலர் உடனிருந்தனர்.
புதுச்சேரி:
புதுவை கோரிமேட்டில் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி உள்ளது. இந்த ஆஸ்பத்திரி விரிவுபடுத்தப்பட உள்ளது. அங்கு ரூ.100 கோடி செலவில் புதிய கட்டிடங்கள் கட்டப்பட உள்ளது. இதற்காக ஆஸ்பத்திரி அருகே உள்ள அரசுக்கு சொந்தமான 6 ஏக்கர் நிலத்தை இ.எஸ்.ஐ. நிர்வாகம் கேட்டுள்ளது.
இந்த நிலையில் அமைச்சர்கள் மல்லாடி கிருஷ்ணாராவ், கந்தசாமி ஆகியோர் இன்று கோரிமேடு இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிக்கு சென்றனர். ஆஸ்பத்திரி முழுவதும் பார்வையிட்ட அவர்கள் பின்னர் ஆஸ்பத்திரி விரிவாக்கத்துக்கு தேவைப்படும் நிலத்தையும் பார்வையிட்டனர்.
இதுகுறித்து அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கூறும்போது, இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி விரிவாக்கத்துக்கு தேவையான அரசுக்கு சொந்தமான நிலத்தை கொடுப்பது தொடர்பாக அமைச்சரவையில் முடிவு செய்யப்படும் என்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்