என் மலர்
நீங்கள் தேடியது "minister Murthy"
- மக்களின் தேவையறிந்து முதல்வர் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் என அமைச்சர் மூர்த்தி பேசினார்.
- வீடுதோறும் குடிநீர் வழங்குவதற்கான ஏற்பாடுகள் தற்போது தற்காலிகமாக தான்நடந்து உள்ளது.
மதுரை
மதுரை ஆனையூர் பகுதிக்கான குடிநீர் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
மதுரையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
இந்த திட்டம் 2006-ம் ஆண்டு தமிழக முதல்வராக கலைஞர் இருந்தபோது தொடங்கப்பட்டது. 2010-ம் ஆண்டு திட்டம் முடிவடைந்த நிலையில் சிறு, சிறு தவறுகளினால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
தற்போது தமிழக முதல்வராக மு.க. ஸ்டாலின் பதவி ஏற்று இத்திட்டத்தை தொடங்கி வைத்திருக்கிறார். மேலும் திட்டத்தின் மூலம் இப்பகுதியில் உள்ள மக்களுக்கு வீடுதோறும் குடிநீர் வழங்குவதற்கான ஏற்பாடுகள் தற்போது தற்காலிகமாக தான்நடந்து உள்ளது.
முழுமையாக இப்பகுதியில் பாதாள சாக்கடைகள் அமைக்கப்பட்ட பின்னர் நிரந்தரமாக மக்களுக்கு குடிநீர் வழங்கப்படும். மக்களின் தேவைகளை அறிந்து முதல்வர் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் அனீஷ் சேகர், சோழவந்தான் எம்.எல்.ஏ., வெங்கடேசன், மேயர் இந்திராணி, துணை மேயர் நாகராஜன், மாநகராட்சி ஆணையர் சிம்ரன் ஜித் சிங், மண்டல தலைவர் வாசுகி சசிகுமார், தி.மு.க. நிர்வாகிகள் மருது பாண்டி, சசிகுமார், செல்வகணபதி கணேஷ், ரோகிணி பொம்மதேவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- 10 நாட்களில் ரூ.30 லட்சத்தில் பாலம் அமைக்கும் பணி தொடங்கியது. இதில் அமைச்சர் மூர்த்தி பங்கேற்றார்.
- மதுரை கிழக்கு யூனியன் தலைவர் மணிமேகலை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மதுரை
மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாங்குளம் அருகே உள்ள மீனாட்சிபுரம் கிராமத்தில் கிருஷ்ணாபுரம் பரம்பை கண்மாயின் உபரிநீர் செல்லும் ஓடையின் குறுக்கே நீர்வளத்துறை சார்பில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் புதிய சிறு பாலம் அமைக்கும் பணிகளை அமைச்சர் மூர்த்தி இன்று தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று 2 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளன. பொதுமக்கள் நலன் சார்ந்த இந்த 2 ஆண்டு சாதனை பயணத்தில் மக்கள் நலனுக்காக எண்ணற்ற நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக பொது மக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர், சாலை, தெருவிளக்கு வசதி போன்ற திட்டப்பணிகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருகிறது. மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் நலனை கருத்திற்கொண்டு பல்வேறு உட்கட்டமைப்பு வசதி மேம்பாட்டுப் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் கடந்த 25-ந் தேதி மாங்குளம் கிராம பகுதியில் சாலை மேம்பாட்டு பணிகளை தொடங்கி வைக்க வந்தபோது மாங்குளம் அருகே உள்ள மீனாட்சிபுரம் கிராமம் கிருஷ்ணாபுரம் மக்கள் தங்களது பகுதியில் மழைக்காலத்தில் மழைநீர் தேங்கி சாலையை கடக்க சிரமப்படுவதாக தெரிவித்தனர்.
மேலும் கிருஷ்ணாபுரம் பரம்பை கண்மாயின் உபரிநீர் செல்லும் ஓடையின் குறுக்கே சிறு பாலம் அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். அதன்படி அந்த பகுதியில் உடனடியாக சிறு பாலம் அமைக்கப்படும் என்று உறுதியளித்தேன்.
கிருஷ்ணாபுரம் பரம்பை கண்மாயின் உபரிநீர் செல்லும் ஓடையின் குறுக்கே சிறு பாலம் அமைக்கும் பணிகள் இன்று தொடங்கி வைக்கப்பட் டுள்ளன. சிறு பாலம் அமைக்கப்படும் என தெரிவித்த 10 நாட்களில் அதற்கு செயல் வடிவம் கொடுக்கும் வகையில் இந்த பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இதை விரைவாகவும், தரமாகவும் மேற்கொண்டு மழைக்காலம் தொடங்கும் முன்பு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் அனீஷ்சேகர், மதுரை கிழக்கு யூனியன் தலைவர் மணிமேகலை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- 2000 போலி பத்திரப்பதிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் மூர்த்தி கூறினார்.
- கிழக்கு யூனியன் சேர்மன் மணி மேகலை உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மதுரை
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மதுரை மாவட்டம் செட்டிக்குளத்திலும், சக்கிமங்கலத்திலும் சுகாதா ரத்துறை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடை பெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் சங்கீதா தலைமை தாங்கினார். கூடுதல் கலெக்டர் சரவணன் முன்னிலை வகித்தார். அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டு மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதா வது:-
இந்த மருத்துவ முகாம்க ளில் அனைத்து நோய்க ளுக்கும் பரிசோதனை செய்யப்பட்டு மருத்துவ ஆலோசனைகள், மருந்துகள் வழங்கப்படும். தமிழகத்தில் பத்திரப்பதிவு அலுவல கத்தில் பத்திர எழுத்தா ளர்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம் அவர்களது பணி வெளியிலேயே முடிந்து விடுகிறது. பொதுமக்களே நேரடியாக வந்து பத்திரப்பதிவு செய்ய வேண்டும் என்பதற்காக தான் இதுபோன்ற நடவடிக் கைகள் மேற்கொள்ளப் படுகிறது.
பத்திரப்பதிவு செய்ய வரும் யாரும் பணம் கொண்டுவர வேண்டாம். ஆன்லைன் மூலமாகவே செலுத்திக் கொள்ளலாம். பத்திரப்பதிவு அலுவலகத்திற்குள் பதிவு செய்பவர்களை தவிர யாரும் வரக்கூடாது. குறிப்பாக இடைத்தரகர் களுக்கு இடமில்லை. 50 லட்சம் மதிப்பிற்கு மேலான சொத்துக்கள் பதிவு செய்யவும், கள ஆய்வு செய்யவும் அதிகாரிகள் விரைவில் நியமிக்கப்படு வார்கள்.
போலி பத்திரப்பதிவு ரத்து சட்டத்தின்படி 2000 பதிவுகள் ரத்து செய்யப்பட்டு ள்ளது. மேலும் 14 ஆயிரம் மனுக்களும் வந்துள்ளன. இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்.மக்களுக்கு எது தேவையோ அதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையி லான அரசு செய்து வரு கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக விழாவில் மண்டலத்தலைவர் வாசுகி சசிகுமார், மாவட்ட ஊராட்சி தலைவர் சூரிய கலா கலாநிதி, மேற்கு யூனியன் சேர்மன் வீரராக வன், கிழக்கு யூனியன் சேர்மன் மணி மேகலை உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு ரூ.10 கோடி கடனுதவி- ரூ.3¼ கோடி மதிப்பில் 24 திட்ட பணிகளை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்.
- ஊராட்சி தலைவர்கள் அனைத்து அரசு துறை அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.
மதுரை
மதுரையில் வணிக வரித்துறை மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி இன்று காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை ரூ. 3 கோடியே 17 லட்சம் மதிப்பீட்டில் முடி வுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்து புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
பின்னர் நேரடியாக அனைத்து பகுதி கிராம மக்களையும் சந்தித்து குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்று சம்பந்தப்பட்ட துறை அதிகாரியிடம் நேரிலும் , தொலைபேசி மூலமாகவும் பொது மக்களின் கோரிக்கை களை நிறை வேற்ற வலியுறுத்தினார்.
தொடர்ந்து அமைச்சர் மூர்த்தி 24 திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். அதன் விவரம் வருமாறு:-
காலை 7 மணி அளவில் மாங்குளம் கிராமத்தில் ரூ. 70 ஆயிரம் மதிப்பீட்டில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கிராம சாவடியை அமைச்சர் திறந்து வைத்தார். அதன் பின்னர் சின்ன மாங்குளம் கிராமத்தில் முதலமைச் சரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தில் ரூ. 44 லட்சம் மதிப்பீட்டில் புதிய சாலை போடுவதற் கான பூமி பூஜையை தொடங்கி வைத்தார்.
மாத்தூர் பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சத்து 19 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மைய கட்டி டத்தை திறந்து வைத்தார்.
வெள்ளியங்குன்றம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.14 லட்சத்து 59 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய உணவு தானியங்கி சேமிப்பு கிடங்கை திறந்து வைத்தார்.
அதே போன்று அரும்பனூர் ஊராட்சியில் அழகர் கோவில் சாலை சந்திப்பில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.70 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய நிழற்குடையை திறந்து வைத்தார். சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.60ஆயிரம் மதிப்பீட்டில் தாமரைப் பட்டி, காயம்பட்டி கிரா மத்தில் புதிய நாடக மேடையை திறந்து வைத்தார்.
பின்னர் இதேபோன்று கொடிக்குளம், திருமோகூர், ராஜாக்கூர், வரிச்சியூர், களிமங்கலம், குன்னத்தூர், சக்குடி, கார்சேரி, சக்சி மங்கலம், கருப்பாயூரணி போன்ற பகுதிகளிலும் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம்,அனைத்து கிராம அண்ணா மறு மலர்ச்சி திட்டம் மாவட்ட ஊராட்சி நிதி ஒன்றிய பொது நிதி, ஜல் ஜீவன் மிஷன் திட்டம், மாவட்ட ஊராட்சி நிதி போன்ற திட்டத்தின் கீழ் நீர் தேக்க தொட்டி கிராம சாவடி அங்கன்வாடி மைய கட்டிடம், நியாய விலை கடை, உயர்நிலைப்பள்ளி சுற்றுச்சுவர் பயணிகள் நிழற்குடை என மொத்தம் ரூ.3 கோடியே 17 லட்சம் மதிப்பீட்டில் 24 திட்டப் பணிகளை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார். மேலும் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூ.10 கோடி கடனுதவிகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் சங்கீதா, கூடுதல் கலெக்டர் சரவணன், மாவட்ட வருவாய் தலைவர் சக்திவேல், மாவட்ட கூட்டுறவு இணைப் பதிவாளர் குருமூர்த்தி, வெங்கடேசன் எம்.எல்.ஏ. மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் சூரிய கலா கலாநிதி, ஒன்றிய சேர்மங்கள் வீரராகவன், மணி மேகலை, தி.மு.க. நிர்வாகிகள் சோமசுந்தர பாண்டியன், அழகு பாண்டி, பால சுப்ரமணியன், திருப்பாலை சசிகுமார், மருதுபாண்டி, வழக்கறிஞர் கலாநிதி, நேருபாண்டி உள்பட ஊராட்சி தலைவர்கள் அனைத்து அரசு துறை அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.
- காலை மாடுபிடி வீரர்கள் உறுதி மொழி ஏற்றனர்.
- வாடிவாசல் வழியாக முதலாவதாக கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டது.
மதுரை:
தமிழகத்தில் மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் பார்வையாளர்களை மிகவும் கவர்ந்த போட்டிகளாக கருதப்படுகின்றன. புகழ்பெற்ற இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில் மதுரை மட்டுமில்லாது தமிழகம் முழுவதும் உள்ள சிறந்த காளைகள் பங்கேற்கும்.
இந்நிலையில் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான வேலைகள் சிறப்பாக நடந்து வந்த நிலையில் இன்று காலை மாடுபிடி வீரர்கள் அமைசசர் மூர்த்தி முன்னிலையில் உறுதி மொழி ஏற்றனர். இதனை தொடந்து ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து துவக்கிவைத்தார்.
இதில் 1000 காளைகள், 600 மாடுபிடி வீரர்கள் போட்டியில் பங்கேற்க உள்ளனர். முதல் சுற்று தொடங்கி வாடிவாசல் வழியாக முதலாவதாக கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட உள்ளன. முதல் சுற்றில் 50 வீரர்கள் பங்கேற்ற உள்ளனர். இதில் வெற்றி பெரும் வீரர்களுக்கு ஏராளமான பரிசு பொருட்களும் வழங்கப்படுகிறது. ஜல்லிக்கட்டு போட்டியை ஏராளமாக மக்கள் பார்வையிட்டு வருகின்றனர்.
- காளை மாடுபிடி வீரர்கள் உறுதி மொழி ஏற்றனர்.
- வாடிவாசல் வழியாக காளைகள் அவிழ்த்து விடப்பட்டது.
மதுரை:
தமிழகத்தில் மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் பார்வையாளர்களை மிகவும் கவர்ந்த போட்டிகளாகக் கருதப்படுகின்றன. புகழ்பெற்ற இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில் மதுரை மட்டுமில்லாது, தமிழகம் முழுவதும் உள்ள சிறந்த காளைகள் பங்கேற்கும்.
இதற்கிடையே, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நேற்று சிறப்பாக நடைபெற்றது.
இந்நிலையில், மதுரை பாலமேட்டில் இன்று காலை மாடுபிடி வீரர்கள் அமைச்சர் மூர்த்தி முன்னிலையில் உறுதி மொழி ஏற்றனர். இதையடுத்து, ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதில் 1,000 காளைகள், 700 மாடுபிடி வீரர்கள் போட்டியில் பங்கேற்க உள்ளனர். முதல் சுற்று தொடங்கி வாடிவாசல் வழியாக முதலாவதாக கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட உள்ளன. முதல் சுற்றில் 50 வீரர்கள் பங்கேற்ற உள்ளனர்.
இதில் வெற்றி பெறும் வீரர்களுக்கு கார் உள்ளிட்ட ஏராளமான பரிசு பொருட்களும் வழங்கப்படுகின்றன. ஜல்லிக்கட்டுப் போட்டியை ஏராளமாக மக்கள் கண்டுகளித்து வருகின்றனர்.
- பொய் சொல்வதை முதலில் நிறுத்துங்கள் என்றும் நிர்வாகிகளை கடிந்து கொண்டார்.
- தேனி தொகுதியில் போட்டி கடுமையானதாக இருக்கும் என்பது கட்சியினர் இடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாராளுமன்ற தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ள நிலையில் மாநிலம் முழுவதும் பிரசாரங்களும்களை கட்டி வருகிறது.
2019ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி 38 இடங்களில் அபார வெற்றி பெற்றது. மீதமுள்ள ஒரு தொகுதி தேனி ஆகும்.
இந்த தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் போட்டியிட்டார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிட்டார்.
2019ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் ரவீந்திரநாத் 4,99,354 வாக்குகள் பெற்றார். காங்கிரசின் இளங்கோவன் 4,23,035 வாக்குகள் பெற்றார். இதன்மூலம் 76,319 வாக்குகள் வித்தியாசத்தில் ரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்றார்.
இந்நிலையில் நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் தேனி தொகுதியில் திமுக சார்பில் தங்க தமிழ்செல்வனும், அதிமுக சார்பில் நாராயணசாமியும், அமமுக சார்பில் டிடிவி தினகரனும், நாம் தமிழர் சார்பில் மதன் ஜெயபாலும் வேட்பாளர்களாக களம் இறங்குகிறார்கள். இதை தொடர்ந்து இந்த முறையும் தேனி தொகுதியில் போட்டி கடுமையானதாக இருக்கும் என்பது கட்சியினர் இடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் மதுரை அலங்காநல்லூரில் சோழவந்தான் சட்டமன்ற தொகுதி தி.முக. நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர் மூர்த்தி பேசியதாவது,
திமுக பாராளுமன்ற தேர்தலில் தேனி மாவட்ட திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் வெற்றி பெற வேண்டும் என்றும், அதிகப்படியான வாக்குவித்தியாசத்தில் வெற்றி பெறவில்லை என்றால் தனது பதவியை அடுத்த நாளே ராஜினாமா செய்கிறேன் என்று கூறினார்.
நிர்வாகிகள் கூட்டத்தில் வெளியில் இருந்து பெண்களை அழைத்து வந்ததை சுட்டிக்காட்டி பேசிய அமைச்சர் மூர்த்தி செல்போனில் அரசியல் தேவையில்லை என்றும், மக்களை நேரில் சந்தியுங்கள் என்றும், செல்போனில் அரசியல் செய்தால் எப்படி உருப்படும் என்றும், பொய் சொல்வதை முதலில் நிறுத்துங்கள் என்றும் நிர்வாகிகளை கடிந்து கொண்டார்.
- நம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் 5 ஆயிரம் பேர் உயிர்த் தியாகம் செய்திருக்கிறார்கள்.
- படிப்பறிவில் நாம் பின்தங்கி இருந்ததால் நமது வரலாறு மறைக்கப்பட்டது.
ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் மூர்த்தி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் மூர்த்தி, "ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். பல வரலாறு மறைக்கப்பட்டிருக்கிறது. அதை நீங்கள் தெளிவாக தெரிந்திருக்க வேண்டும்.
ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்துச் சென்றபோது, அவர்களுக்கு எதிராக போராட்டத்தில், நம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் 5 ஆயிரம் பேர் உயிர்த் தியாகம் செய்திருக்கிறார்கள். இந்த வரலாற்றை நாம் புரட்டிப் பார்க்க வேண்டும்.
படிப்பறிவில் நாம் பின்தங்கி இருந்ததால் நமது வரலாறு மறைக்கப்பட்டது. ஆனால், தற்போது அந்த நிலை படிப்படியாக மாறி வருகிறது" என்று பேசினார்.
- இங்கிருந்து ஒரு பிடி மண்ணைக் கூட எடுத்துச் செல்ல முடியாது.
- 5 ஆயிரம் பேர் மீது தொடரப்பட்ட வழக்கு ரத்து செய்ய நடவடிக்கை.
மேலூர்:
மதுரை மாவட்டம் மேலூா் அருகே அரிட்டாபட்டி உள்ளிட்ட கிராமங்களில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து கிராம மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள்.
நேற்று முன்தினம் பெரியாறு பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் மாபெரும் பேரணி நடந்தது. மேலூர் நரசிங்கம் பட்டியில் இருந்து நூற்றுக்கணக்கான வாகனங்களிலும், நடைபயணமாகவும், 50-க்கும் மேற்பட்டோர் மதுரைக்கு பேரணியாக வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் வெள்ளமென திரண்டு பொதுமக்கள், விவசாயிகள் எழுச்சியுடன் பங்கேற்றனர்.
இந்தநிலையில் இன்று காலை அரிட்டாபட்டி கிராமத்திற்கு சென்ற அமைச்சர் மூர்த்தி பொதுமக்களிடம் விளக்கம் அளித்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக சட்டமன்றத்தில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க கூடாது என அனைத்து கட்சியினரும் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு தமிழக அரசின் நிலைப்பாடுகள் அனுப்பி வைக்கப்பட்டுவிட்டன.
இருந்தாலும் மக்களுக்கு அச்சத்தைப் போக்குகின்ற வகையிலே சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை கிராம மக்களிடம் எடுத்து கூறி இருக்கின்றோம். நமது திராவிட மாடல் ஆட்சி ஒரு போதும் மதுரை மேலூர் பகுதியில் டங்ஸ்டன் வருவதற்கு அனுமதிக்காது.
இங்கிருந்து ஒரு பிடி மண்ணைக் கூட எடுத்துச் செல்ல முடியாது என்று சட்டமன்றத்திலே நிதி அமைச்சர் உறுதி அளித்திருக்கிறார்.
தமிழக முதலமைச்சரின் பரிந்துரைப்படி மாவட்ட கலெக்டர், மாவட்ட கண்காணிப்பாளர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளுடன் மக்களின் அச்சத்தை போக்குகின்ற வகையிலே தமிழக முதல்வரின் கருத்தை மக்களிடம் எடுத்துரைத்திருக்கிறோம்.
நிச்சயமாக டங்ஸ்டன் சுரங்க திட்டம் வராமல் இருக்க அத்தனை நடவடிக்கையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்திருக்கிறார்.
யார், யார் எதையெல்லாம் வந்து இங்கு சொன்னாலும் இந்த பகுதி மக்களை பாது காக்கின்ற பொறுப்பு எங்கள் கடமை என்று தமிழக முதல்-அமைச்சர் சொல்லி இருக்கிறார். டங்ஸ்டன் பேரணி தொடர்பாக 5 ஆயிரம் பேர் மீது தொடரப்பட்ட வழக்கு ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறி னார்.
இதையடுத்து அமைச்சர் பி.மூர்த்தி, மேலூர் வட்டத்திற்கு உட்பட்ட அ.வல்லாளப்பட்டி, கிடா ரிப்பட்டி, தெற்கு தெரு, நரசிங்கம்பட்டி ஆகிய பகு திகளிலும் பொதுமக்களை நேரில் சந்தித்து டங்ஸ்டன் தொடர்பாக தமிழக அரசின் நிலைபாடுகளை எடுத்து ரைத்தார்.
இந்த பொதுமக்கள் சந்திக்கும் நிகழ்ச்சியில் கலெக்டர் சங்கீதா உள்ளிட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் வருவாய் அலுவ லர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- பதிவுத்துறையில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
- அதன் மூலம் அரசுக்கு வரி வருவாயும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
வணிக வரி, பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: பதிவுத்துறையில் அறிமுகப்படுத்தப்பட்டு வரும் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளின் காரணமாக ஆவணங்கள் பதிவு அதிகரித்து, அதன் மூலம் அரசுக்கு வரி வருவாயும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
பத்திரங்களை பதிவு செய்ய வருவோர் ஆதார் எண் மூலம் சரி பார்த்தல், டோக்கன் முறை, சரியான நிலமதிப்பு நிர்ணயம், மூத்த குடிமக்களுக்கு முன்னுரிமை போன்ற பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளின் காரணமாக பொதுமக்கள் இத்துறையை நம்பிக்கையோடு நாடுகின்றனர்.
கடந்த காலங்களில் நடந்த மோசடி பதிவுகளின் மீது விரிவான விசாரணை மேற்கொண்டு, போலி ஆவண பதிவுகளை பதிவுத் துறையே ரத்து செய்யும் அதிகாரம் நடைமுறைப்படுத்துவதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 28-ந்தேதி தொடங்கி வைக்க இருக்கிறார்.
இந்த பல்வேறு முன்னோடி முயற்சிகளின் விளைவாக கடந்த 21-ந்தேதி வரை 16 லட்சத்து 59 ஆயிரத்து 128 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு ரூ.8,082 கோடி வருவாயாக ஈட்டப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ.2,325 கோடி அதிகமாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.