என் மலர்
நீங்கள் தேடியது "Minister Rajnath Singh"
- ரஷியாவில் தயாரான ஏவுகணை போர்க்கப்பல் ஐஎன்எஸ் துஷில் இந்திய கடற்படையில் இணைக்கப்படுகிறது.
- இந்தியா-ரஷியா இருதரப்பு பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த முடிவு செய்யப்பட்டது.
மாஸ்கோ:
மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் 3 நாள் சுற்றுப்பயணமாக இன்று ரஷியா சென்றுள்ளார். மாஸ்கோ சென்றடைந்த அவருக்கு தூதரக அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
ரஷியாவில் தயாரிக்கப்பட்ட ஏவுகணை போர்க்கப்பல் ஐ.என்.எஸ். துஷில் இந்திய கடற்படையில் இணைக்கப்பட உள்ளது. கலினின்கிராட்டில் நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் இந்திய கடற்படை தளபதி அட்மிரல் தினேஷ் திரிபாதியும் பங்கேற்க உள்ளார்.
உலக அளவில் அதிநவீன தொழில்நுட்பத்தைக் கொண்ட போர்க்கப்பல்களில் ஒன்றாக கருதப்படும் ஐ.என்.எஸ். துஷில் போர்க்கப்பல், இந்திய பெருங்கடலில் இந்திய கடற்படையின் செயல்பாட்டுத் திறனை கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், மாஸ்கோவில் வரும் 10-ம் தேதி நடைபெற உள்ள இந்தியா-ரஷியா அரசு ஆணையத்தின் ராணுவ தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான 21-வது கூட்டத்தில் ராஜ்நாத் சிங் கலந்து கொள்கிறார்.
கடந்த 5 மாதத்துக்கு முன் பிரதமர் மோடி ரஷியாவிற்கு பயணம் செய்து அந்நாட்டின் அதிபர் புதினைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- போரில் வீரமரணம் அடைந்த இந்திய வீரர்களின் தியாகத்தை போற்றும் வகையில் விஜய் திவஸ் என்ற பெயரில் வெற்றி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
- முப்படை அதிகாரிகள் புடை சூழ, ராஜ்நாத் சிங் போர் நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
புதுடெல்லி:
1971-ம் ஆண்டு நடந்த போரில் பாகிஸ்தானை இந்தியா வெற்றி கொண்டது. இந்த வெற்றியின் அடையாளமாக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 16-ந் தேதி வெற்றி தினம் கொண்டாடப்படுகிறது.
போரில் வீரமரணம் அடைந்த இந்திய வீரர்களின் தியாகத்தை போற்றும் வகையில் விஜய் திவஸ் என்ற பெயரில் வெற்றி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. வங்காளதேசம் நாடு உருவாக இந்த போர் தான் வழிவகுத்தது.
போரில் பாகிஸ்தானை இந்தியா வென்ற 51-வது ஆண்டு வெற்றி தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. வெற்றி தினத்தையொட்டி டெல்லியில் உள்ள போர் நினைவு சின்னம் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. அங்கு பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் மரியாதை செலுத்தினார்.
முப்படை அதிகாரிகள் புடை சூழ, ராஜ்நாத் சிங் போர் நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
அதே போல் முப்படை தலைமை தளபதி மற்றும் அதிகாரிகளும் போரில் உயிர் நீத்த இந்திய வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
நாடு முழுவதும் உள்ள போர் நினைவு சின்னங்களில் வெற்றி தினம் கடைப்பிடிக்கப்பட்டது. அங்கு மலர் வளையம் வைத்து வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.