search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mirror"

    • காரின் விண்ட்ஸ்க்ரீன் உடைந்த நிலையில் ஒட்டகம் எசகுபிசகாக அதில் மாட்டிக்கொண்டுள்ளது.
    • இப்படியும் நடக்குமா என்று கேட்கும் அளவுக்கு அபத்தமானதாக ஒரு நிலையில் சிக்கிக்கொண்டு ஒட்டகம் கதறும் வீடியோ காண்போரை கலங்கடித்து வருகிறது.

    விலங்குகள் வாகனங்களில் அடிபட்டு இறக்கும் சம்பவங்கள் தொடர்கதையாகி வரும் நிலையில் ராஜஸ்தானில் காரின் விண்ட்ஸகிரீனில் ஒட்டகம் ஒன்று மாட்டிக்கொண்ட வினோத சம்பவம் நிகழ்ந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஹனுமான்கர் மாவட்டத்தில், நேற்று முன் தினம் இரவு நேரத்தில் நடந்த இந்த சமபவத்தின் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

    அந்த வீடியோவில் ஒட்டகம் காரின் முன்புற கண்ணாடியான விண்ட்ஸகிரீனில் உட்கார்ந்த நிலையில் மாட்டிக்கொண்டு வெளிவர முடியாமல் வலியில் துடிப்பது பதிவாகியுள்ளது. நொஹார் நோக்கி இரவு நேரத்தில் காரில் சென்றுகொண்டிருந்த நபர் ஒட்டகம் வழியில் இருப்பதை கவனிக்காமல் அதன் மீது மோதியுள்ளார்.

    இதனால் காரின் விண்ட்ஸ்க்ரீன் உடைந்த நிலையில் ஒட்டகம் எசகுபிசகாக அதில் மாட்டிக்கொண்டுள்ளது.இந்த விபத்தில் கார் ஓட்டுநர் சிறு காயங்களுடன் உயிர்தப்பினார். வெகு நேரமாக வலியில் துடித்த ஒட்டகம் கிரேன் உதவியுடன் மீட்கப்பட்டு அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இப்படியும் நடக்குமா என்று கேட்கும் அளவுக்கு அபத்தமானதாக ஒரு நிலையில் சிக்கிக்கொண்டு ஒட்டகம் கதறும் வீடியோ காண்போரை கலங்கடித்து வருகிறது. 

     

    • தூத்துக்குடி பொட்டல் காட்டை சேர்ந்தவர் ஜெகதீஷ் ( வயது 26), நேற்று திருமணம் நடக்க இருந்த நிலையில் மோட்டார் சைக்கிளில் சென்ற அவர் விபத்தில் பலியானார்
    • பொட்டல்காடு அருகே வந்தபோது ஆம்புலன்ஸ் மீது மர்மநபர்கள் கற்களை வீசி தாக்கினர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி பொட்டல் காட்டை சேர்ந்தவர் ஜெகதீஷ் ( வயது 26), நேற்று திருமணம் நடக்க இருந்த நிலையில் மோட்டார் சைக்கிளில் சென்ற அவர் விபத்தில் பலியானார்.

    இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே ஜெகதீசின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது.

    உடலை ஒப்படைத்து விட்டு ஆம்புலன்ஸ் திரும்பி வந்து கொண்டிருந்தது. பொட்டல்காடு அருகே வந்தபோது ஆம்புலன்ஸ் மீது மர்மநபர்கள் கற்களை வீசி தாக்கினர்.

    இதில் ஆம்புலன்சின் கண்ணாடி உடைந்து தேசமாகின.

    இது தொடர்பாக டி.எஸ்.பி. சத்தியராஜ். இன்ஸ்பெக்டர் ஜெயசீலன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நெல்லை கொக்கிரகுளம் பகுதியில் தனியார் வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. அதே கட்டிடத்தில் வங்கியின் ஏ.டி.எம். அறை உள்ளது
    • பணம் எடுக்க முயன்றபோது அதில் பணம் வரவில்லை.

    நெல்லை:

    நெல்லை கொக்கிரகுளம் பகுதியில் தனியார் வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. அதே கட்டிடத்தில் வங்கியின் ஏ.டி.எம். அறை உள்ளது.

    கண்ணாடி உடைப்பு

    சம்பவத்தன்று இரவு அங்கு பணம் எடுப்பதற்காக ஒரு நபர் வந்துள்ளார். அவர் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அவர் ஏ.டி.எம்.மில் கார்டை செருகி பணம் எடுக்க முயன்றபோது அதில் பணம் வரவில்லை.

    இதனால் ஆத்திரம் அடைந்த நபர் அந்த அறையின் கதவு கண்ணாடியை உடைத்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். மறுநாள் காலை வங்கி பணிக்கு வந்தவர்கள் கண்ணாடி உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    சி.சி.டி.வி. ஆய்வு

    உடனே பாளை போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏ.டி.எம். அறையில் இருந்த சி.சி.டி.வி. காமிராவை ஆய்வு செய்தனர்.

    அதில் பதிவாகியிருந்த அந்த நபரின் உருவத்தை வைத்து போலீசார் விசாரணை நடத்தியதில், அந்த நபர் வண்ணார்பேட்டை வெற்றிவேல் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த மாரியப்பன்(வயது 45) என்பதும், அவர் ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது. அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தூத்துகுடி மாவட்டத்தில் இன்று இரவு அரசு பேருந்துகள் மீது மர்ம நபர்கள் சிலர் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. #BanSterlite #TalkAboutSterlite #Stonepelt #GovernmentBuses
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த 22-ம் தேதி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.

    பேரணியாக சென்ற பொதுமக்களை போலீசார் தடுத்தபோது அவர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே மோதல் உண்டானது. அதைத்தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள்.

    இதையடுத்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி. ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டனர். புதிய ஆட்சியராக சந்தீப் நந்தூரி நியமிக்கப்பட்டார். மாவட்டத்தில் அமைதி திரும்புவதற்கான நடவடிக்கைகள் துரிதமாக எடுக்கப்பட்டதால், ஓரளவு இயல்பு நிலை திரும்பியது.

    இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை பகுதியில் இன்று இரவு சென்று கொண்டிருந்த அரசு பேருந்துகள் மீது மர்ம நபர்கள் சிலர் கல்வீசினர். இதில் பேருந்துகளின் கண்ணாடிகள் உடைந்ததை அடுத்து, இரவு பேருந்துகள் சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். #BanSterlite #TalkAboutSterlite #Stonepelt #GovernmentBuses
    ×