என் மலர்
நீங்கள் தேடியது "missile attack"
- அமெரிக்காவில் டிரம்ப் ஆட்சிக்கு வருவது போரை முடிவுக்கு கொண்டு வரும் என்று ஜெலன்ஸ்கி தெரிவித்திருந்தார்.
- கடந்த 3 மாதங்களில் ரஷியவால் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதல்களில் இதுவே மிகப்பெரியதாகும்
ஐரோப்பா மற்றும் அமெரிக்கா அங்கம் வகிக்கும் நேட்டோ கூட்டமைப்பில் சேர உக்ரைன் முயற்சி மேற்கொண்டது. இது நடந்தால் தங்கள் நாட்டுக்கு மேற்கத்திய நாடுகளால் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் என்பதால் ரஷியா அண்டை நாடான உக்ரைன் மீது கடந்த 2022 ஆம் ஆண்டு போர் தொடுத்தது.
இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் போர் ஒரு முடிவை எட்டாமல் நீண்டுகொண்டே செல்கிறது.இந்த போரில் இரண்டு தரப்பிலும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் டிரம்ப் ஆட்சிக்கு வருவது போரை முடிவுக்கு கொண்டு வரும் என்று ஜெலன்ஸ்கி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் உக்ரைன் மீது 120 ஏவுகணைகள், 90 டிரோன்களை ஏவி ரஷியா தாக்குதல் நடத்தியது. உக்ரைனின் பல்வேறு மாகாணங்களில் உள்ள மின் உற்பத்தி உட்கட்டமைப்புகளை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

ரஷியாவில் இருந்து ஏவப்பட்ட பெரும்பாலான ஏவுகணைகள் , டிரோன்கள் ஆகியவற்றை உக்ரைன் பாதுகாப்புப்படை சுட்டு வீழ்த்தியது. ஆனாலும், சில ஏவுகணைகள், டிரோன்கள் இலக்குகளை தாக்கி அழித்தன. இந்த தாக்குதலில் 2 பேர் உயிரிழந்ததா முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த தாக்குதலில் மின் உற்பத்தி உள்கட்டமைப்புகள் பெரும்பாலான எண்ணிக்கையில் சேதமடைந்தன என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். கடந்த 3 மாதங்களில் ரஷியவால் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதல்களில் இதுவே மிகப்பெரியதாகும் என்று கூறப்படுகிறது.

- போரை நிறுத்த வேண்டும் என உலக நாடுகள் பலவும் வலியுறுத்தி வருகின்றன.
- உக்ரைன் முழுவதும் பதற்றம் அதிகரித்துள்ளது.
கீவ்:
ரஷியா-உக்ரைன் போர் 2 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கிறது. இந்த போரில் உக்ரைன் தரப்பில் இதுவரை சுமார் 11 ஆயிரத்து 700 பேர் பலியானதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. போரை நிறுத்த வேண்டும் என உலக நாடுகள் பலவும் வலியுறுத்தி வருகின்றன. பேச்சுவார்த்தைக்கான முயற்சிகளும் நடைபெறுகின்றன. எனினும் தாக்குதல் குறைந்தபாடில்லை.
கடந்த சில தினங்களாக உக்ரைனின் உள்கட்டமைப்புகளை குறிவைத்து ரஷியா உக்கிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. உக்ரைன் மீது 120 ஏவுகணைகள் மற்றும் 90 டிரோன்கள் மூலம் தாக்குதலை நடத்தியது. இன்று அதிகாலையிலும் 210 ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. இதனால் உக்ரைன் முழுவதும் பதற்றம் அதிகரித்துள்ளது.
ரஷியாவின் ஏவுகணைகளில் பெரும்பாலான ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை உக்ரைன் வான்பாதுகாப்பு படையினர் இடைமறித்து சுட்டு வீழ்த்தினர். ஒரு சில பகுதிகளில் உள்கட்டமைப்புகள் மற்றும் குடியிருப்புகள் சேதமடைந்துள்ளன. ரஷியாவின் தாக்குதலால் நிலைகுலைந்த உக்ரைன் மக்கள், உயிருக்கு பயந்து ரெயில் நிலையங்கள், சுரங்கப்பாதைகள் போன்ற இடங்களில் தஞ்சம் அடைந்தனர்.
இந்நிலையில் உக்ரைனின் வடகிழக்கு நகரமான சுமியில் ரஷிய பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலில் இரண்டு குழந்தைகள் உள்பட 11 பேர் கொல்லப்பட்டனர் என்றும், 89 பேர் காயமடைந்தனர் என்று அவசரநிலைகளுக்கான மாநில சேவை தெரிவித்துள்ளது.
சுமி பிராந்திய ராணுவ நிர்வாகத்தின் தகவல்படி, ஒரு ஏவுகணை மக்கள் வசித்து வந்த ஒன்பது மாடி அடுக்குமாடி கட்டிடத்தைத் தாக்கியது, மற்றொன்று முக்கியமான உள்கட்டமைப்பைத் தாக்கியது, நகரத்தை மின்சாரம் இல்லாமல் செய்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை வாங்குவதற்கு உக்ரைனுக்கு கணிசமான நிதியுதவியை ஸ்வீடன் அறிவித்துள்ளது.
- சர்வதேச சட்டத்தின்படி, உக்ரைன் அதன் எல்லைக்கு உள்ளேயும் வெளியேயும் தற்காத்துக் கொள்ள முழு உரிமை உள்ளது
உக்ரைன் போர்
ரஷியா உக்ரைன் மீது படையெடுத்து ஆயிரம் நாட்களை தாண்டியுள்ள நிலையிலும் சண்டை முடிவுக்கு வரவில்லை. கடந்த சில தினங்களுக்கு முன் உக்ரைன் நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளைப் பயன்படுத்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அனுமதி அளித்தார்.
இதனை பயன்படுத்தி அமெரிக்கா வழங்கிய இந்த ATACMS பால்சிடிக் ஏவுகணைகளை பயன்படுத்தி ரஷியாவின் பிரையன்ஸ்க் [Bryansk] பகுதியில் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக உக்ரைன் மீது முதன்முறையாக கண்டம் விட்டு கண்டம் தாக்கும் பாலிஸ்டிக் ஏவுகணையை பயன்படுத்தி ரஷியா தாக்குதல் நடத்தியுள்ளது.

புதின் மிரட்டல்
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மிட்-ரேஞ்ச் பாலிஸ்டிக் ஏவுகணையை உக்ரைன் மீது ஏவி ரஷியா பரிசோதனை செய்துள்ளது. ஒரேஷ்னிக் என்று பெயரிடப்பட்ட இந்த ஏவுகணை உக்ரைன் இலக்கை துல்லியமாக தாக்கியதாக புதின் தெரிவித்துள்ளார்.
மேலும் உக்ரைனுக்கு உதவும் நாடுகளுக்கு ரஷியா தக்க பதிலடி கொடுக்கும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். எங்கள் மீது ஆயுதங்களைப் பயன்படுத்த அனுமதிக்கும் நாடுகளின் இராணுவ தளங்களுக்கு எதிராக எங்கள் ஆயுதங்களைப் பயன்படுத்த நாங்கள் தகுதியுடையவர்கள் என்று தெரிவித்தார்.
ஸ்வீடன்
இந்நிலையில் ரஷியாவின் இந்த மிரட்டலுக்கு ஸ்வீடன் பயப்படாது அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் பால் ஜான்சன் இன்று தெரிவித்தார்.நீண்ட தூர ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை வாங்குவதற்கு உக்ரைனுக்கு கணிசமான அளவு நிதியுதவியை ஸ்வீடன் அளிக்கும் என்ற அறிவிப்பை வெளியிட்டு அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
உக்ரைனை ஆதரிப்பதிலிருந்து எங்களைப் பயமுறுத்தும் முயற்சிதான், ரஷியாவின் மிரட்டல், அது தோல்வியடையும் என்று ஜான்சன் தெரிவித்துள்ளார். உக்ரேனிய பிரதிநிதி ருஸ்டெம் உமெரோவுடன் ஸ்டாக்ஹோமில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் ஜான்சன் இதை கூறினார்.

உக்ரைனை ஆதரிப்பது சரியான மற்றும் புத்திசாலித்தனமான விஷயம், மேலும் இது நமது சொந்த பாதுகாப்பிற்கான முதலீடு, ஏனெனில் (உக்ரைனின்) பாதுகாப்பும் எங்கள் பாதுகாப்பு என்று அவர் கூறினார்.
சர்வதேச சட்டத்தின்படி, உக்ரைன் அதன் எல்லைக்கு உள்ளேயும் வெளியேயும் தற்காத்துக் கொள்ள முழு உரிமை உள்ளது, மேலும் நீண்ட தூர ஏவுகணைகள் மற்றும் நீண்ட தூர தாக்குதல் ட்ரோன்களை உற்பத்தி செய்யும் உங்கள் திறனை நாங்கள் மேலும் மேம்படுத்த முடிந்தால் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என்று ஜான்சன் உமெரோவிடம் கூறினார்.
ஒரேஷ்னிக்
ரஷியா கண்டுபிடித்துள்ள ஒரேஷ்னிக், அணு அல்லாத ஹைப்பர்சோனிக் கட்டமைப்பு கொண்டது. நொடிக்கு 2.5 முதல் 3 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது. நவீன ஏர் பாதுகாப்பு சிஸ்டங்கள் கூட இதை தடுத்து நிறுத்த முடியாது. தடுத்து நிறுத்துவதற்கான சாத்தியம் இல்லை. இன்றைய நிலவரப்படி, இந்த ஏவுகணையை எதிர்கொள்ள எந்த வழியும் இல்லை என புதின் கூறுகிறார்.

- காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதற்கு எதிராக ஹவுதி இஸ்ரேல் மீது இதற்கு நடத்திய ஏவுகணை தாக்குதல்கள் இடைமறித்து அழிக்கப்பட்டுள்ளன.
- ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அமெரிக்க விமானப்படை நேற்று வான்வழி தாக்குதல் நடத்தியது.
இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் -இல் ஏமனில் இயங்கும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
நேற்று டெல் அவிவ் மாவட்டத்தில் உள்ள குடியிருப்பு ஒன்றின் அருகே ஏவுகணை விழுந்ததாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
ஏவுகணையை வான் பாதுகாப்பு அமைப்பு அழிக்கத் தவறியதால் அது கீழே விழுந்துள்ளது என்றும் இதில் 16 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது என்றும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

ஏமனின் செயல்படும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேலுக்கு எதிராக பலமுறை ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதற்கு எதிராக ஹவுதி இஸ்ரேல் மீது இதற்கு நடத்திய ஏவுகணை தாக்குதல்கள் இடைமறித்து அழிக்கப்பட்டுள்ளன.
பதிலுக்கு, ஹவுதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள துறைமுகங்கள் மற்றும் எரிசக்தி கட்டமைப்புகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வந்தது.
செங்கடல் பகுதியில் பாதுகாப்பு, ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அமெரிக்க போர் கப்பல்கள், டிரோன்கள் மீதும் ஹவுதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு பதிலடியாக ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து இஸ்ரேல், அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் அவ்வப்போது ஏமனில் தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்நிலையில், ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அமெரிக்க விமானப்படை நேற்று வான்வழி தாக்குதல் நடத்தியது.

முன்னதாக ஏமன் தலைநகர் சனாவில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் நிலைகள், ஆயுத கிடங்குகள், கட்டுப்பாட்டு மையங்களை குறிவைத்து அமெரிக்க விமானப்படை வான்வழி தாக்குதல் நடத்தியது.
இதனால் கடந்த சில நாட்களாக இஸ்ரேல் மீது ஏமனில் இருந்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகளை, டிரோன் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
ஏமனில் அரசுப்படைக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே 4 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவுதி அரேபியா தலைமையிலான அரபு நாட்டு கூட்டுப்படைகள் அங்கு வான்தாக்குதலை நடத்தி வருகின்றன.
இந்த நிலையில் சாடா மாகாணத்தில் சவுதி அரேபியாவின் எல்லையையொட்டி உள்ள அல்-புக்கா நகரில் ராணுவ வீரர்கள் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவர்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தினர்.
இதில் 12 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாகினர். மேலும் 60-க்கும் மேற்பட்ட வீரர்கள் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு சவுதி அரேபியாவின் தெற்கு எல்லை மாகாணமான நஜ்ரானில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே ஹவுதி கிளர்ச்சியாளர்களால் நடத்தப்படும் செய்தி சேனலில், அல்-புக்கா நகரில் நடத்தப்பட்ட தாக்குதலில் 40 வீரர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டது.
ஏமன் நாட்டில் பதவியிறக்கம் செய்யப்பட்ட முன்னாள் அதிபரின் ஆதரவாளர்கள் தற்போதைய அதிபர் அப்த் ரப்போ மன்சூர் ஹாதியின் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2014-ம் ஆண்டு இந்த கிளர்ச்சியானது ஆயுதப் போராட்டமாக திசைமாறியது.
ஏமன் நாட்டின் அண்டை நாடான ஈரானின் ஆதரவுடனும், அல் கொய்தா பயங்கரவாதிகளின் துணையுடனும் உள்நாட்டு ஹவுத்தி புரட்சிப்படையினர் தலைநகர் சனா உள்ளிட்ட பல பகுதிகளை கைப்பற்றி, தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.
இந்த பகுதிகளை மீட்பதற்காக சவுதி அரேபியா தலைமையிலான அரபு நாடுகளின் கூட்டமைப்பு படைகள் ஏமன் அரசுக்கு உதவிசெய்து வருகின்றன.
இந்நிலையில், ஏமன் நாட்டில் உள்ள மரிப் நகரின் மீது ஹவுதி படை ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டிருப்பதாக சவுதி அரேபியாவின் அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. #Houthimovement #missileattack #Yemen #SaudiArabiya #civilianskilled