என் மலர்
நீங்கள் தேடியது "Mithun Chakraborty"
- மாடலாக இருந்து நடிகையான அவர் இப்பட வெற்றிக்கு பிறகு ரசிகர்களின் கனவுக்கன்னியானார்
- ரசிகர் பட்டாளம் இருந்தும் படிப்படியாக படங்களில் நடிப்பதை குறைத்து கொண்டார்
முன்னணி இயக்குனர்கள் மற்றும் கதாநாயகர்களின் திரைப்படங்கள், ரூ.100 கோடி வசூல் இலக்கை தொட்டால்தான் அதை வெற்றி படமாக இன்னாளில் கருதுகிறார்கள்.
இந்தி திரையுலகினர் மட்டுமின்றி தென்னிந்திய கதாநாயகர்களின் படங்களும் ரூ.100 கோடி வசூலை எட்டுவது சாதாரணமாகி விட்டது.
கதாநாயகர்கள் மட்டுமின்றி மாதுரி தீஷித், ஸ்ரீதேவி, தீபிகா படுகோன், ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா, ஆலியா பட் உள்ளிட்ட பலர் கதாநாயகியாக நடித்த இந்தி திரைப்படங்கள் ரூ.100 கோடி இலக்கை எட்டியுள்ளன.
ஆனால், பாலிவுட்டில் (இந்தி திரையுலகம்) முதல் முதலாக ரூ.100 கோடி வசூலை அள்ளி குவித்த வெற்றி பட கதாநாயகி இவர்களில் எவரும் அல்ல; கதாநாயகனும் 3 "கான்"களில் ஒருவர் அல்ல.
1982ல் பப்பார் சுபாஷ் (Babbar Subhash) இயக்கத்தில் வெளியான இந்தி திரைப்படம் டிஸ்கோ டான்சர் (Disco Dancer). இதில் கதாநாயகனாக மிதுன் சக்ரபொர்த்தியும் (மிதுன் Chakraborty) கதாநாயகியாக கிம் யஷ்பால் (Kim Yashpal) எனும் பிரபல மாடல் ஒருவரும் நடித்திருந்தனர்.

ஆடல், பாடல் கதைக்களத்தில் உருவான இப்படத்தில் 8 பாடல்களுமே சூப்பர் ஹிட் ஆனது. மேலும், அரங்குகள் நிறைந்த காட்சிகளாக இந்தியா மட்டுமின்றி அயல்நாடுகளிலும் வெற்றிகரமாக ஓடி ரூ.100 கோடிக்கு மேல் வசூலை அள்ளியது.
மத்திய ஆசியா, கிழக்கு ஐரோப்பா, ரஷியா, சினா, அரபு நாடுகள், துருக்கி, ஆப்பிரிக்க நாடுகள் என திரையிட்ட இடங்களிலெல்லாம், டிஸ்கோ டான்சர், வெற்றி வாகை சூடியது.
ஒரு இந்தி திரைப்படம் வசூலில் ரூ.100 கோடிக்கும் மேல் முதல் முதலாக தொட்டது தயாரிப்பாளர்களே எதிர்பாராத ஒரு ஆச்சரியம்.
மிதுனுக்காக பெண் ரசிகைகளும், கிம் யஷ்பாலிற்காக ஆண் ரசிகர்களும் இப்படத்தை மீண்டும் மீண்டும் பார்த்தனர்.

பல இளைஞர்களின் கனவுக்கன்னியாக கிம் வலம் வந்தார்.
டிஸ்கோ டான்சர் வெற்றிக்கு பிறகு கிம்மிற்கென பெரும் ரசிகர் பட்டாளம் உருவாகியிருந்தும் படிப்படியே திரைப்படங்களில் நடிப்பதை குறைத்து கொண்டார் கிம்.
கிம்மின் தற்போதைய நிலவரம் குறித்து தகவல்கள் இல்லை.
1985ல், ஆனந்த்பாபு கதாநாயகனாக நடித்து, தமிழில் "பாடும் வானம்பாடி" எனும் பெயரில் டிஸ்கோ டான்சர் ரீமேக் செய்யப்பட்டு வெற்றி படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
- நடிகர் மிதுன் சக்கரவர்த்தி பல மொழி படங்களில் நடித்துள்ளார்.
- கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகர் மிதுன் சக்கரவர்த்தி பாஜகவில் இணைந்து செயல்பட்டு வந்தார்.
கடந்த 1976-ம் ஆண்டு பெங்காலியில் வெளியான 'மிரிகயா' என்ற படத்தின் மூலம் மிதுன் சக்கரவர்த்தி சினிமா துறையில் அறிமுகமானார். அறிமுக படத்திலேயே சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்று திரும்பி பார்க்க வைத்தார். இந்தி, பெங்காலி, பஞ்சாபி, தெலுங்கு, கன்னடம், தமிழ் ஆகிய மொழிகளில் 350-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான 'யாகாவா ராயினும் நாகாக்க' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.

மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் சார்பில் எம்.பி.யாகவும் மிதுன் சக்கரவர்த்தி இருந்து வந்துள்ளார். பின்னர், சாரதா நிதி நிறுவன மோசடியில் சிக்கினார். அதை தொடர்ந்து எம்.பி- பதவியை மிதுன் சக்கரவர்த்தி ராஜினாமா செய்தார். கடந்த 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகர் மிதுன் சக்கரவர்த்தி பாஜகவில் இணைந்து செயல்பட்டு வந்தார்.

இந்நிலையில் இன்று காலை கடுமையான நெஞ்சுவலி காரணமாக நடிகர் மிதுன் சக்கரவர்த்தி கொல்கத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவர் தற்போது நரம்பியல் மருத்துவ நிபுணரின் மேற்பார்வையில் இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
நடிகர் மிதுன் சக்கரவர்த்தி கடந்த மாதம் குடியரசு தலைவரிடம் பத்ம பூஷண் விருது பெற்றார் என்பது குறிப்பிடதக்கது.
- காலை 7 மணி முதலே வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மக்கள் வரிசையில் நின்று ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர்.
- முன்னாள் கிரிக்கெட் வீரருமான அர்பஜன் சிங் பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள வாக்குச்சாவடியில் தனது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினார்.
இந்தியாவில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. 6 கட்ட வாக்குப்பதிவு ஏற்கனவே முடிவடைந்த நிலையில் 7 ஆம் கட்டமும் கடைசி கட்டமுமான தேர்தல் வாக்குப்பதிவு இன்று (ஜூன் 1) காலை 7 மணிக்கு தொடங்கியுள்ளது. இன்று மாலை மாலை 6 மணி வரை வாக்குப்பதிவானது நடைபெறும்.
இன்றைய தேர்தலில் 57 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த 57 தொகுதிகளும் பீகார் (8), இமாச்சல பிரதேசம் (4), ஜார்க்கண்ட் (3), ஒடிசா (6), பஞ்சாப் (13), உத்தரபிரதேசம் (13), மேற்கு வங்காளம் (9), ஆகிய 7 மாநிலங்களும் , சண்டிகார் யூனியன் பிரதேசமும் அடக்கம். இந்த 57 தொகுதிகளிலும் 904 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
காலை 7 மணி முதலே வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மக்கள் வரிசையில் நின்று ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர். உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்தநாத், பாஜக தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோர் காலையிலேயே வந்து வாக்களித்த நிலையில் பிகார் முன்னாள் முதலாவரும் ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்.ஜே.டி) தலைவருமான லாலு பிரசாத் யாதவ் மனைவி ராபிரி தேவி மகள் ரோகினி ஆச்சார்யா ஆகியோருடன் பிகார் தலைநகர் பாட்டனாவில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.
ஆர்ஜேடி எம்.பியாக உள்ள ரோகினி ஆச்சார்யா வாக்களித்தபின் பேசுகையில், மணிப்பூரில் உள்ள தனது சகோதரிகளுக்காக வாக்களித்ததாக தெரிவித்தார். பிகார் மாநில ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பாட்டனா ராஜ் பவனில் தனது வாக்கினை செலுத்தினார்.
மேலும் ஆம்ஆத்மி எம்.பியும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான அர்பஜன் சிங் பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள வாக்குச்சாவடியில் தனது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினார்.வாக்களித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அனைவரும் தயவு செய்து வந்து வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
இந்திய சினிமாவின் மூத்த நடிகரும் பாஜக தலைவருமான மிதுன் சக்கரவர்த்தி, கல்கத்தாவில் இன்று வாக்களித்தார். அதன்பின் செய்திலயாளர்களிடம் அவர் பேசுகையில், வரிசையில் 40 நிமிடம் காத்திருந்து எனது ஜனநாயகக் கடமையை ஆற்றியுள்ளேன். ஒரு இந்திய குடிமகனாக அது எனது தலையாய கடமை என்று தெரிவித்தார்.
- மிதுன் சக்ரவர்த்தி இந்தி, பெங்காலி உள்ளிட்ட மொழிகளில் பலதரப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
- மிதுன் சக்ரவர்த்தி அவருடைய நடிப்பு திறமையாலும், திறனான நடிப்புக்காகவும் ஏராளமான பாராட்டுகளை பெற்றுள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகர் மிதுன் சக்ரவர்த்திக்கு மத்திய அரசின் தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அக்.8-ந்தேதி நடைபெறும் 70-வது தேசிய திரைப்பட விருது விழாவில் மிதுன் சக்ரவர்த்திக்கு விருது வழங்கப்படும் என்று மத்திய ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மிதுன் சக்ரவர்த்தி இந்தி, பெங்காலி உள்ளிட்ட மொழிகளில் பலதரப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்து, இந்திய சினிமாவின் முக்கியமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்தார்.
மிதுன் சக்ரவர்த்தி அவருடைய நடிப்பு திறமையாலும், திறனான நடிப்புக்காகவும் ஏராளமான பாராட்டுகளை பெற்றுள்ளார்.
அவர் நடித்த பல படங்கள் இன்று வரை ரசிகர்களின் நினைவில் நிற்கின்றன. 80-களில் அவரது மிஸ்டர் இந்தியா படங்கள் மற்றும் நடனக் காட்சிகள் அவரை பிரபலமாக்கியது. மேலும், பல்வேறு சமூக மற்றும் அரசியல் பணிகளிலும் அவர் ஈடுபட்டு வருகிறார்.
தாதா சாகேப் பால்கே விருது, இந்திய சினிமாவின் மிக உயரிய கௌரவமாக கருதப்படுவதால், மிதுன் சக்ரவர்த்திக்கு இந்த விருது வழங்கப்படுவது அவருடைய சினிமா வாழ்க்கையின் மிக முக்கியமான சாதனையாகும்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- 70-வது தேசிய திரைப்பட விருது விழாவில் மிதுன் சக்ரவர்த்திக்கு விருது வழங்கப்பட உள்ளது.
- மிதுன் சக்ரவர்த்தி ஒரு கலாச்சார சின்னம்.
பிரபல பாலிவுட் நடிகர் மிதுன் சக்ரவர்த்திக்கு மத்திய அரசின் தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அக்.8-ந்தேதி நடைபெறும் 70-வது தேசிய திரைப்பட விருது விழாவில் மிதுன் சக்ரவர்த்திக்கு விருது வழங்கப்பட உள்ளது.
இது தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பதிவில்,
இந்திய சினிமாவுக்கு மிதுன் சக்ரவர்த்தியின் ஈடு இணையற்ற பங்களிப்பை அங்கீகரித்து அவருக்கு மதிப்புமிக்க தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.
மிதுன் சக்ரவர்த்தி ஒரு கலாச்சார சின்னம், அவரது பல்துறை நடிப்பிற்காக தலைமுறைகள் கடந்து போற்றப்படுகிறார். மிதுன் சக்ரவர்த்திக்கு வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.
- மிதுன் சக்கரவர்த்தி ஓட்டல் மேலாளரை தாதா என்று அழைப்பது வழக்கம்.
- நாக்பூர், கேரளா உள்ளிட்ட இடங்களில் உள்ள வங்கி கணக்கிற்கு பணம் சென்று உள்ளது தெரியவந்தது.
ஊட்டி:
பிரபல பாலிவுட் நடிகரும், முன்னாள் எம்.பி.யுமான மிதுன் சக்கரவர்த்திக்கு ஊட்டியில் நட்சத்திர ஓட்டல் உள்ளது. இந்தநிலையில், அந்த ஓட்டல் மேலாளரின் செல்போனுக்கு வாட்ஸ்-அப் செயலியில் குறுஞ்செய்தி வந்தது.
அதில், 'குன்னூரில் முக்கிய விஷயமாக பணியில் உள்ளேன். நான் இருக்கும் இடத்தில் செல்போன் சிக்னல் பிரச்சினை உள்ளது. எனவே, ஓட்டல் சம்பந்தமான வங்கி கணக்குகளில் எவ்வளவு பணம் உள்ளது என்றும், அந்த பணத்தை நான் அனுப்பும் வங்கி கணக்கிற்கு அனுப்புமாறும்' கூறப்பட்டு இருந்தது.
வழக்கமாக மிதுன் சக்கரவர்த்தி ஓட்டல் மேலாளரை தாதா என்று அழைப்பது வழக்கம். அந்த பெயரில் வாட்ஸ்-அப் குறுஞ்செய்தி வந்ததால், மேலாளருக்கு சந்தேகம் ஏற்படவில்லை.
அதற்கு பதில் அளித்த மேலாளர், 'ஓட்டலுக்கு சொந்தமான பல்வேறு வங்கி கணக்குகளில் ரூ.70 லட்சமும், நிரந்தர வைப்புத் தொகையாக ரூ.30 லட்சமும் உள்ளது' என்று தெரிவித்து உள்ளார். முதல் கட்டமாக ரூ.20 லட்சம் உடனடியாக அனுப்புமாறு வாட்ஸ்-அப் செயலியில் வங்கி கணக்கு விவரங்களுடன் பதில் வந்து உள்ளது.
இதை நம்பிய மேலாளர், வங்கி கணக்கில் இருந்து ரூ.20 லட்சத்தை ஆன்லைன் மூலம் அனுப்பி விட்டார். இதையடுத்து நிரந்தர வைப்பு தொகையில் உள்ள ரூ.30 லட்சத்தையும், அதன் பின்னர் மற்ற கணக்குகளில் உள்ள ரூ.50 லட்சத்தையும் அனுப்புமாறு வாட்ஸ்-அப் செயலியில் குறுஞ்செய்தி வந்தது.
இதற்கிடையில் மிதுன் சக்கரவர்த்தி, மேலாளரை தொடர்பு கொண்டு உள்ளார். அப்போது நீங்கள் கூறியபடி ரூ.20 லட்சத்தை, உங்கள் வங்கி கணக்குக்கு அனுப்பி விட்டேன் என்று மேலாளர் கூறியபோது தான், மோசடி நடந்தது தெரியவந்தது. இதுகுறித்து ஓட்டல் மேலாளர் ஊட்டி சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் நிரந்தர வைப்பு தொகையில் இருந்த பணம் மற்றும் மற்ற கணக்குகளில் இருந்த பணத்தையும் அனுப்ப எடுத்த நடவடிக்கைகளையும் உடனடியாக நிறுத்தினார். இதனால் ரூ.80 லட்சம் தப்பியது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, எந்த வங்கி கணக்குக்கு பணம் அனுப்பப்பட்டது என்பது குறித்து விசாரித்தனர்.
இதில் நாக்பூர், கேரளா உள்ளிட்ட இடங்களில் உள்ள வங்கி கணக்கிற்கு பணம் சென்று உள்ளது தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
நடிகர் மிதுன் சக்கரவர்த்தி மகன் மகாச்சே, நடிகை மடால்ஷா ஆகியோருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. இந்த திருமணத்தை கடந்த 7-ந் தேதி ஊட்டியில் நடத்த மிதுன் சக்கரவர்த்தி திட்டமிட்டு இருந்த நிலையில் மகாக்சே மீது அவரது முன்னாள் காதலி டெல்லி போலீசில் பாலியல் புகார் கொடுத்திருந்தார். அதில் மகாக்சேதன்னை ஏமாற்றி வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு இருப்பதாகவும், இந்த திருமணத்தை தடுத்து நிறுத்த வேண்டும் கூறி இருந்தார்.
இதனால் கடந்த 7-ந்தேதி நடைபெற இருந்த திருமணம் திடீரென நிறுத்தப்பட்டது. இதற்கிடையே மகாக்சே தனக்கு முன் ஜாமீன் வழங்க கோரி டெல்லி கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். அதில் முன் ஜாமீன் கிடைத்தது.
இந்த நிலையில், ஊட்டியில் மிதுன் சக்கரவர்த்திக்கு சொந்தமான ரிசார்ட்டில் மகாக்சே- மடால்ஷா திருமணம் நேற்று ரகசியமாக நடைபெற்றது.
அடர்ந்த வனப்பகுதிகளுக்கு நடுவே உள்ள இந்த ரிசார்ட்டில் திருமணம் நடந்ததால் வெளியில் யாருக்கும் தெரியவில்லை. நேற்று மாலை தான் இந்த ரகசிய திருமணம் குறித்த தகவல் வெளியானது. இதனை தொடர்ந்து மகாக்சே- மடால்ஷா திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படமும் வெளியானது.

