என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "mixed"
- உணவு பாதுகாப்புத்துறை சார்பில் சோதனை நடத்தி, கலப்படம், தரமற்ற, பாதுகாப்பற்ற உணவு பொருட்களை சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன.
- சிவில் பிரிவில் பதியப்பட்ட 57 வழக்கு களுக்கு 6 லட்சத்து 81 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதித்து டி.ஆர்.ஓ. மேனகா உத்தரவிட்டார்.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரை உணவு பாதுகாப்புத்துறை சார்பில் சோதனை நடத்தி, கலப்படம், தரமற்ற, பாதுகாப்பற்ற உணவு பொருட்களை சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன.
அதில் போலி, உணவுக்கு ஒவ்வாத, கேடு விளைவிக்கக்கூடியது என கண்டுபிடித்து சேலம் டி.ஆர்.ஓ. நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அபராதம்
சிவில் பிரிவில் பதியப்பட்ட 57 வழக்கு களுக்கு 6 லட்சத்து 81 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதித்து டி.ஆர்.ஓ. மேனகா உத்தரவிட்டார்.
அதில், அதிகபட்சமாக பல்வேறு வகை நொறுக்கு தீனி, தரமற்று உடல் உபாதையை உண்டுபண்ணும் என கண்டறிந்து பதிந்த 18 வழக்கில் ஒரு லட்சத்து 89 ஆயிரத்து 500 ரூபாய், கலப்படம், தரமற்ற ஜவ்வரிசி தொடர்பான 17 வழக்கில் 2 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய், சமையலுக்கு ஒவ்வாத மசாலா ெதாடர்பான 7 வழக்கில் ஒரு லட்சத்து 3 ஆயிரம் ரூபாய், சமையல் எண்ணை தொடர்பான 6 வழக்கில் 66 ஆயிரம் ரூபாய் என மொத்தம் 57 வழக்குகளுக்கு அபராதம் விதித்து, வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
123 வழக்குகள் நிலுவை
இது தவிர இன்னும் 123 சிவில் வழக்கு நிலுவையில் உள்ளன. மேலும் 273 குற்ற வழக்கு நீதிமன்ற விசாரணையிலும், 22 குற்ற வழக்கு நீதிமன்றத்தில் பதிவாகாமல் இருப்பதாக மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கதிரவன் தெரிவித்தார்.
- சித்தோடு அருகே வயிற்று வலி குணமாகவில்லை என கூறி வாழ்க்கையில் வெறுப்படைந்த இளம்பெண் டீயில் எலி மருந்தை கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
- இதுகுறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சித்தோடு:
ஈரோடு மாவட்டம் சித்தோடு அடுத்த சக்தி மூவேந்தர் நகரை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி சோபனா (37). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். சரவணன் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் சோபனாவுக்கு வயிற்று வலி இருந்து வந்துள்ளது. இதற்காக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். எனினும் வயிற்றுவலி குணமாகவில்லை என கூறப்படுகிறது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த சோபனா தற்கொலை செய்ய முடிவு எடுத்து சம்பவத்தன்று டீயில் எலி மருந்தை கலந்து குடித்துள்ளார்.
இதையடுத்து சோபனாவை அவரது உறவினர்கள் சிகிச்சைக்காக பவானி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். பின்னர் அவர் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார்.
அதன் பிறகு அவர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சோபனா பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நொய்யல் ஆறு கோவை மாவட்டத்தில் தொடங்கி திருப்பூர் வழியாக கரூர் மாவட்டம், நொய்யல் செல்லாண்டியம்மன் கோவில் வழியாக சென்று காவிரியில் கலக்கிறது. நொய்யல் ஆற்றில் திருப்பூர் பகுதியை சேர்ந்த சாயப்பட்டறை அதிபர்கள் ஒவ்வொரு முறையும் நொய்யல் ஆற்றில் மழைநீர் வரும்போது தேக்கி வைத்திருந்த சாயப்பட்டறை கழிவு நீரை நொய்யல் ஆற்றில் வரும் மழைநீருடன் கலந்து விடுவது வழக்கம். இந்நிலையில் கர்நாடகாவில் பெய்து வரும் கனமழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு சுமார் 2 லட்சம் கனஅடி தண்ணீர் வந்ததையொட்டி மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் சுமார் 2 லட்சம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு, வெள்ளம் இருகரையையும் தொட்டு செல்கிறது.
கடந்த சில நாட்களாக கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் பெய்த கனமழையால் நொய்யல் ஆற்றில் மழைநீர் அதிகளவில் வந்து கொண்டிருக்கிறது. இதை பயன்படுத்தி திருப்பூர் பகுதிகளை சேர்ந்த சாயப்பட்டறை அதிபர்கள் சாயக்கழிவு நீரை நொய்யல் ஆற்றில் திறந்து விட்டுள்ளனர். இதனால் நொய்யல் ஆற்றில் வரும் மழைநீர் சாயக் கழிவுடன் சேர்ந்து வருவதால் கரும்பச்சை நிறத்தில் தண்ணீர் வருகிறது. தற்போது மேட்டூர் அணையிலிருந்து அதிக தண்ணீர் வருவதால், நொய்யல் ஆற்றின் சாயக்கழிவு நீர் காவிரியில் கலக்கும்போது, காவிரி ஆற்றில் சாயக்கழிவு நீரின் கலரே தெரியாத நிலையில் உள்ளது.
இது சாயப்பட்டறை அதிபர்களுக்கு சாதகமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சாயக்கழிவு நீர் நொய்யல் ஆற்றில் வருவதால் நொய்யல் ஆற்றில் கலந்து இருந்து பாசனம் செய்யும் விவசாயிகள் இந்த தண்ணீரை பயன்படுத்துவதால் விவசாயப்பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது.
அதே போல் நொய்யல் ஆற்றை ஒட்டியுள்ள ஆழ்துளை கிணறுகளில் உள்ள குடிநீரும் சாயக்கழிவு நீரால் மாசுபட்டுள்ளது. எனவே மாவட்ட கலெக்டர் அன்பழகன் மற்றும் மாசுக்கட்டுப்பாடு துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து திருப்பூர் சாயக்கழிவு நீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வேண்டுமென நொய்யல் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்