என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Modern"
- ஆடை உற்பத்தியாளர்களின் புதிய தொழில்நுட்ப தேடுதல்களை ஒரே இடத்தில் பூர்த்தி செய்கிறது.
- 40 சதவீதம் கண்காட்சியில் பிரிண்டிங் எந்திரங்கள் காட்சிப்படுத்தப்படும்.
திருப்பூர்:
திருப்பூர் ஆடை உற்பத்தியாளர்களின் புதிய தொழில்நுட்ப தேடுதல்களை ஒரே இடத்தில் பூர்த்தி செய்வதுடன், பின்னலாடை துறை வளர்ச்சிக்கு கைகொடுக்கும் வகையில் நிட்ஷோ கண்காட்சி விளங்கி வருகிறது. 21-வது நிட்ஷோ கண்காட்சி திருப்பூர்-காங்கயம் மெயின் ரோட்டில் ஹவுசிங் யூனிட் பஸ் நிறுத்தம் அருகே டாப்லைட் மைதானத்தில் வருகிற ஆகஸ்டு மாதம் 11-ந் தேதி தொடங்கி 13-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கண்காட்சியில் நவீன எந்திரங்களை காட்சிப்படுத்த பல வெளிநாட்டு நிறுவனங்கள் ஆர்வம் செலுத்தி வருகிறது.
இதுகுறித்து நிட்ஷோ கண்காட்சி நிர்வாக இயக்குனர் கிருஷ்ணா கூறியதாவது:-
கண்காட்சி அரங்கம் முற்றிலும் குளிரூட்டப்பட்டது. 6 பெரிய அரங்குகளில் 450 ஸ்டால்கள் இடம்பெறும் வகையில் திட்டமிட்டுள்ளோம். பின்னலாடைத்துறையினருக்கு வரப்பிரசாதமாக அமையும் வகையில் இந்த கண்காட்சியில் நிட்டிங், எம்ப்ராய்டரி, பிரிண்டிங், தையல் உள்ளிட்ட அனைத்து வகையான எந்திரங்களும் இடம்பெற உள்ளன. குறிப்பாக பிரிண்டிங் துறையில் அதிநவீன எந்திரங்கள் அதிகம் இடம்பெறுகிறது. ஜெர்மனி, இத்தாலி, போர்ச்சுக்கல், அமெரிக்கா, சீனா, தைவான் நாடுகளை சேர்ந்த நிறுவனங்களின் நவீன எந்திரங்கள் இடம்பெறுகிறது. 25 தையல் எந்திர நிறுவனங்கள், 15-க்கும் மேற்பட்ட எம்ப்ராய்டரி நிறுவனங்கள், டேப், ரோல், எலாஸ்டிக் உள்ளிட்ட மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை தயாரிக்கும் 10-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், 12-க்கும் மேற்பட்ட நிட்டிங் எந்திர நிறுவனங்கள் பங்கேற்கின்றன. 40 சதவீதம் கண்காட்சியில் பிரிண்டிங் எந்திரங்கள் காட்சிப்படுத்தப்படும். டிஜிட்டல் பிரிண்டிங் எந்திரங்கள் இடம்பெறுகிறது.
இத்தாலியில் நடைபெற்ற தொழில்நுட்ப கண்காட்சி இடம்பெற்ற நவீன எந்திரங்கள் நிட்ஷோ கண்காட்சியில் இடம்பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சேலம் மாவட்டத்துக்கு ரூ.1.8 கோடி மதிப்புள்ள 2 நவீன தீயணைப்பு வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது.
- செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இந்த நவீன வாகனங்கள் தலா 12 ஆயிரம் லிட்டர் தண்ணீர் கொள்ளளவு பிடிக்கக்கூடியது.
சேலம்:
தமிழ்நாடு தீயணைப்புத்துறையில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிக்கு நவீன வாகனங்கள், கருவிகளை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இதில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், வேலூர், திருப்பூர், திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் தீயணைப்புத்துறையை மேம்படுத்தும் வகையில் அதிநவீன கருவிகளை பயன்பாட்டிற்கு கொண்டு வரும் பணியையும், மீட்பு குழுவினருக்கு தொடர் பயிற்சிகள் அளிப்பதையும் அதிகாரிகள் மேற்ெகாண்டுள்ளனர்.
2 நவீன வாகனங்கள்
அந்த வகையில், சேலம் மாவட்டத்துக்கு ரூ.1.8 கோடி மதிப்புள்ள 2 நவீன தீயணைப்பு வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது. செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இந்த நவீன வாகனங்கள் தலா 12 ஆயிரம் லிட்டர் தண்ணீர் கொள்ளளவு பிடிக்கக்கூடியது. வழக்க மாக உள்ள தீயணைப்பு வாகனங்கள் 4,500 லிட்டர் தண்ணீர் பிடிக்கக்கூடிய தாக உள்ளது.
அதனுடன் இந்த வாக னங்களை சேர்த்துள்ளதால் பெரிய அளவில் பற்றி எரியும் தீயை வேகமாக கட்டுப்படுத்த இயலும். இந்த புதிய வாகனத்தில் ஒளிரும் விளக்குகள் உள்ளன. இரவு நேரத்தில் தீயணைப்பு வாகனம் விரைந்து செல்ல ஏதுவாக வடிவமைத்துள்ளனர்.
தண்ணீரை பீய்ச்சி அடிப்பதற்காக 100 அடி தூரத்திற்கு குழாய் இருக்கி றது. இவ்வகை வாகனத்தை இயக்கி தீயை கட்டுப்படுத்து வது மிக எளிது. அதனால், இந்த வாகனத்தை பயன்ப டுத்த தீயணைப்பு வீரர்க ளுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
- நாகப்பட்டினம் மாவட்டத்தில் மொத்தம் 18 எண்ணிக்கையில் 108 ஆம்புலன்ஸ் அவசர ஊர்திகள் இயக்கப்பட்டு வருகிறது.
- அதி நவீன வசதிகள் கொண்ட ஆம்புலன்ஸ்களும் ஒரு பச்சிளம் குழந்தைகளுக்கு உண்டான ஆம்புலன்ஸ் இயக்கப்பட்டு வருகிறது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் மூலம் 3 லட்சத்துக்கும் மேலானவர்கள் பயன்பெற்றுள்ளனர் என்று 108 ஆம்புலன்ஸ் மேலாளர் மோகன் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது, 2008ம் ஆண்டு தமிழக மக்களின் அவசர மருத்துவ பயன்பாட்டிற்காக தொடங்கப்பட்ட 108 ஆம்புலன்ஸ் சேவையானது பொதுமக்களின் பயன்பாட்டுக்கு ஏற்றபடி படிப்படியாக ஆம்புலன்ஸ்களின் எண்ணிக்கையை உயர்த்தி தற்போது தமிழகம் முழுவதும் 1353 ஆம்புலன்ஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது
இதில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் மொத்தம் 18 எண்ணிக்கையில் 108 ஆம்புலன்ஸ் அவசர ஊர்திகள் இயக்கப்பட்டு வருகிறது.
இதில் அடிப்படை உயிர் காக்கும் கருவிகள் கொண்ட ஆம்புலன்ஸ்கள் 15, 2 அதி நவீன உயிர்க்காக்கும் வசதிகள் கொண்ட ஆம்புலன்ஸ்களும் ஒரு பச்சிளம் குழந்தைகளுக்கு உண்டான ஆம்புலன்ஸ் இயக்கப்பட்டு வருகிறது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் சேவை துவக்கப்பட்ட நாள் முதல் இன்று வரை மொத்தம் 3 லட்சத்து 1132 பயன்பெற்றுள்ளனர் இதில் பிரசவ தேவைக்காக மட்டும் 64,539 பேரும், சாலை விபத்துகளில் 50,761 பேரும் இதர மருத்துவ அவசர தேவைக்காக 1,85,732, பேரும் சேவையை பயன்படுத்தி உள்ளனர்.
இதில் முக்கியமாக பிரசவத்திற்காக அழைக்கப்பட்டவர்களில் 435 தாய்மார்களுக்கு அவசர மருத்துவ உதவியாளரின் துரித நடவடிக்கையால் அவசர ஊர்தியிலேயே பிரசவத்துள்ளனர். மேலும் பிரசவ அவசர அழைப்புக்காக அழைக்கப்பட்டவர்களில் அவசர மருத்துவ உதவியுடன் 370 தாய்மார்கள் அவர்களது இல்லங்களிலேயே சேய் ஈன்றெடுத்துள்ளனர். பின்னர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இவ்வாறு நாகப்பட்டினம் மாவட்டத்தில் மட்டும் மொத்தம் 3 லட்சத்து ஆயிரத்து 132 பேர் பயன்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்