என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
நீங்கள் தேடியது "molestation girl"
திருக்கோவிலூர்:
திருக்கோவிலூர் அருகே உள்ள வடமாமாந்தூரை சேர்ந்தவர் ஜெயராமன் மகன் சிவசங்கர் (வயது 25). சம்பவத்தன்று இவர் இளையனார்குப்பத்தை சேர்ந்த 21 வயது இளம்பெண்ணை தனது மோட்டார் சைக்கிளில் அழைத்துக்கொண்டு அரும்பராம்பட்டு அருகில் உள்ள ஏரிக்கரைக்கு சென்றார். பின்னர் அவர் அந்த இளம்பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.
இதுகுறித்து இளம்பெண்ணின் தாய் திருக்கோவிலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவசங்கரை கைது செய்தனர்.
பல்லடம்:
பல்லடம் கரைப்புதூர் காலனியை சேர்ந்த 16 வயது சிறுமியை அவரது உறவினரான இடுவாய் பாரதி நகரை சேர்ந்த தர்மன் (52) கடத்திச்சென்றார்.
மகள் மாயமானது குறித்து அவரது பெற்றோர் பல்லடம் போலீசில் புகார் செய்தனர். விசாரணையில் தர்மன் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரை தொடர்பு கேட்டபோது சிறுமி தர்மனிடம் இருப்பது தெரியவந்தது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சிறுமியை மீட்டனர்.
விசாரணையில் சுற்றுலாவுக்கு அழைத்துச்செல்வதாக கூறி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. தலைமறைவான தர்மனை தேடியபோது அவர் சின்னகாளிபாளையம் குட்டை பகுதியில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. போலீசார் தர்மனை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
கவுண்டம்பாளையம்:
கோவை பெரிய நாயக்கன்பாளையம் அருகே உள்ள காந்திநகர்7-வது வீதியை சேர்ந்தவர் பட்டு ராஜா (வயது 33). இவர் தனது வீட்டில் 11 வயது சிறுமியை வளர்ப்பு மகளாக வளர்த்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு பட்டு ராஜாவின் மனைவி வெளியூருக்கு சென்று இருந்தார்.
அப்போது இரவு நேரத்தில் சிறுமியை பட்டுராஜா பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் நடந்த சம்பவத்தை சிறுமி அக்கம் பக்கத்தினரிடம் கூறி அழுதுள்ளார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் சிறுமியை உக்கடத்தில் உள்ள தொன் போஸ்கோ அன்பு இல்லத்தில் சேர்த்தனர்.
இது குறித்து அன்பு இல்ல நிர்வாகி கிருஷ்ணகுமாரி குழந்தைகள் பாதுகாப்பு பிரிவுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் இது குறித்து துடியலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். சப்-இன்ஸ்பெக்டர் பாக்கியலட்சுமி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த பட்டு ராஜா மீது பாலியல் வன்கொடுமை உள்பட 3 பிரிவுகளில் வழக்குபதிவு கைது செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் கொடு முடி அருகே உள்ள காசிபாளையம் பகுதியில் காலிங்கராயன் வாய்க்கால் அருகே ஒரு சிறுமியை ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார்.
இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அந்த சிறுமி அந்த பகுதியை சேர்ந்த 8-ம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமி ஆவார்.
துரிதமாக செயல்பட்ட பொதுமக்கள் அந்த நபரிடம் இருந்து சிறுமியை மீட்டனர். அங்கிருந்து தப்பி ஓட முயன்ற அந்த நபரை பொதுமக்கள் சுற்றி வளைத்து பிடித்தனர்.
பின்னர் அந்த நபரை கொடுமுடி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் அந்த நபர் கொடுமுடி அருகே உள்ள ஊஞ்சலூரை சேர்ந்த சரவணன் (வயது 42) என்ற விவசாய கூலி தொழிலாளி என்பது தெரியவந்தது.
அவர் பாலியல் பலாத் காரம் செய்ய முயன்ற சிறுமி பள்ளிக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பி வந்துள்ளார். அப்போதுதான் சிறுமியை சரவணன் ஏமாற்றி காலிங்கராயன் வாய்க்கால் அருகே அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட முயன்றுள்ளார்.
மேலும் சரவணன் ஏற்கனவே ஊஞ்சலூர் பகுதியை சேர்ந்த 16 வயது, 12 வயது, 11 வயது மதிக்கத்தக்க சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். அப்போது அந்த பகுதி பொதுமக்கள் சரவணனை பிடித்து தர்ம அடி கொடுத்து ஊரை விட்டு துரத்தியடித்தனர்.
இதையடுத்து சரவணன் கேரளாவிற்கு தப்பி சென்று அங்கு தலைமறைவாக இருந்தார். இந்த நிலையில் 3 மாதங்களுக்கு பிறகு கொடுமுடி அருகே உள்ள காசிபாளையத்தில் தனது தாயார் வீட்டுக்கு சரவணன் வந்திருந்தார்.
அப்போதுதான் மீண்டும் 13 வயது சிறுமியிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட முயன்று பொதுமக்களிடம் சிக்கியுள்ளான். கொடுமுடி போலீசார் அவனிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தொடர்ச்சியாக 4 சிறுமிகளை ஏமாற்றி அவர்களை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளதால் சரவணனை கைது செய்து உரிய தண்டணை பெற்று தர வேண்டும் என பொதுமக்கள் போலீசாரிடம் கூறினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.