என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "money extortion"
- சென்னை அடையாறு சிக்னலில் 8 வயது சிறுவனால் ஏமாற்றப்பட்டேன்.
- முதலில் அந்த சிறுவன் என்னிடம் பணம் கேட்டான்.
சென்னை:
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நிவேதா பெத்துராஜ். இவர் 'ஒருநாள் கூத்து', 'பொதுவாக எம்மனசு தங்கம்', 'டிக்...டிக்...டிக்' உட்பட பல்வேறு தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது சென்னையில் வசித்து வருகிறார். இந்த நிலையில், நடிகை நிவேதா பெத்துராஜியிடம் சிறுவன் ஒருவன் பணப்பறிப்பில் ஈடுபட்டுள்ள அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.
இதுதொடர்பாக நடிகை நிவேதா பெத்துராஜ் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
"சென்னை அடையாறு சிக்னலில் 8 வயது சிறுவனால் ஏமாற்றப்பட்டேன். முதலில் அந்த சிறுவன் என்னிடம் பணம் கேட்டான். இலவசமாக பணம் கொடுக்க நான் மறுத்தேன். இதையடுத்து அவன் புத்தகத்தை ரூ.50-க்கு என்னிடம் விற்பனை செய்ய முயன்றான். நான் ரூ.100-ஐ எடுத்தேன். இந்த வேளையில் சிறுவன் என்னிடம் ரூ.500 தாங்கனு கேட்டான். அப்போது நான் புத்தகத்தை அவனிடம் கொடுத்து ரூ.100-ஐ மீண்டும் வாங்கினேன். இந்த வேளையில் புத்தகத்தை காருக்குள் வீசிய சிறுவன் என் கையில் இருந்த பணத்தை பறித்து கொண்டு ஓடிவிட்டான்" என கூறியுள்ளார்.
மேலும் அந்த பதிவில் நிவேதா பெத்துராஜ், "இப்படி ஆக்ரோஷமாக பிச்சை கேட்கும் பழக்கம் எல்லா இடத்திலும் இருப்பது உண்மையா? இந்த பிரச்சினையை நீங்கள் சந்தித்து உள்ளீர்களா?" எனவும் கேள்வி எழுப்பி உள்ளார். இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து, இந்த விவகாரம் குறித்து அடையாறு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுபோன்ற சம்பவங்கள் தொடர்கதையாகி வரும் நிலையில், போக்குவரத்து சிக்னல்களில் பொருட்களை வாங்க கட்டாயப்படுத்தும் நபர்கள் மற்றும் பணம் பறிக்கும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
- சம்பவத்தன்று கோதைசேரியை சேர்ந்த அருண்குமார் , குமாரிடம் செலவுக்கு பணம் கேட்டார்.
- அவர் கொடுக்க மறுத்ததால் கத்தியை காட்டி, மிரட்டி அவரிடமிருந்த ரூ.300-ஐ பறித்து சென்றார்.
களக்காடு :
திருக்குறுங்குடி அருகே உள்ள தளவாய்புரத்தை சேர்ந்தவர் குமார் (வயது 45). தொழிலாளி. இவர் சம்பவத்தன்று கோதைசேரி விலக்கில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கோதைசேரியை சேர்ந்த அருண்குமார் (23), குமாரிடம் செலவுக்கு பணம் கேட்டார். அவர் கொடுக்க மறுத்ததால் கத்தியை காட்டி, மிரட்டி அவரிடமிருந்த ரூ.300-ஐ பறித்து சென்றார். இதுபற்றி குமார் ஏர்வாடி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி அருண்குமாரை கைது செய்தனர்.
- கல்லூரி அருகில் நேற்று 2 பெண்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்கள், அந்த வழியாக வந்த லாரியை வழிமறித்தனர்.
- ரூ.40 ஆயிரத்தை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி பகுதி மெயின் ரோட்டில் ஒரு தனியார் கல்லூரி உள்ளது.
இந்த கல்லூரி அருகில் நேற்று 2 பெண்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்கள், அந்த வழியாக வந்த லாரியை வழிமறித்தனர். பின்னர் லாரி டிரைவரிடம் பேச்சுக் கொடுத்த அவர்கள், அவரிடம் இருந்த ரூ.40 ஆயிரத்தை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த லாரி டிரைவர், சம்பவம் குறித்து பரமத்தி போலீசில் புகார் செய்தார்.
அதன் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். லாரி டிரைவரிடம் 2 பெண்கள் பணத்தை பறித்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்