search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "money loss"

    • கடந்த 2 ஆண்டுகளில் சைபர் கிரைம் குற்றங்கள் மூலம் பொதுமக்கள் ரூ.3.11 கோடியை இழந்ததாக போலீஸ் சூப்பிரண்டு தகவல் தெரிவித்துள்ளார்.
    • பணம் இரட்டிப்பாக வழங்கப்படுவதாக கூறும் விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம். விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் கூறினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடந்த போலீஸ் குறைதீர்ப்பு முகாமில் போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை தலைமை தாங்கி பொது மக்களிடம் மனுக்களை பெற்றார்.

    இதில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் க ள் உன்னிகிருஷ்ணன், பாஸ்கரன், ராமநாதபுரம் டி.எஸ்.பி, ஜெயச்சந்தின் மற்றும் உட்கோட்ட வாரியாக சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர். முகாமில் 41 மனுக்கள் பெறப்பட்டது.

    இந்த முகாமில் மண்டபம் மறவர் தெருவைச் சேர்ந்த தில்லை ரேவதி ஆன்லைன் தகவலை நம்பி ரூ. 19 ஆயிரத்து 999-யை இழந்திருந்தார். அந்த பணத்தை போலீசார் மீட்டதற்கான சான்றிதழை போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை, தில்லை ரேவதியிடம் வழங்கினார்.

    கடந்த அக்டோபர் முதல் இதுநாள் வரை போலீஸ் சூப்பிரண்டு குறைதீர்ப்பு முகாம், முதல்வரின் தனிப்பிரிவு மனு, டிஜிபி அலுவலக மனுக்கள் என 1415 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.

    இதில் 1259 மனுக்களுக்கு புகார்தாரர் க ளுக்கு திருப்திகரமாக முடித்து வைக்கப்பட்டுள்ளது. 156 மனுக்கள், திருப்தி இல்லை என விசாரணையில் உள்ளது. தற்போது 41 மனுக்கள் பெறப்பட்டு உரிய நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் போலியான தகவல்களை நம்பி பணத்தை இழந்த1274 பேர் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தனர்.

    இதன்மூலம் பொது மக்கள் மொத்தம் ரூ.3.11 கோடி பணம் இழந்தனர். இதில் 98 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்கு தொடர்பாக குறிப்பிட்ட வங்கிகளில் 73 லட்சத்து 10 ஆயிரத்து 347 ரூபாய் போலீசாரால் முடக்கப்பட்டது.

    இதில் 15 லட்சத்து 91 ஆயிரத்து 660 ரூபாய் சம்பந்தப்பட்டவர் க ளிடம் ஒப்படைக்கப்பட்டது.

    ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை கூறும் போது, பொதுமக்கள் ஆன்லைனில் வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிப்பது, பரிசு பொருட்கள் விழுந்திருப்ப தாக கூறுவது, ஆன்லைனில் முதலீடு செய்வது, பணம் இரட்டிப்பாக வழங்கப்படுவதாக கூறும் விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம். விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றார்.

    கடன் வாங்கி பங்குசந்தையில் முதலீடு செய்து ஏராளமான பணத்தை இழந்ததால் பிஎஸ்என்எல் என்ஜினீயர் தற்கொலை செய்து கொண்டார்.

    கோவை:

    தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அருகே உள்ள மல்லபுரத்தை சேர்ந்தவர் விமலன்(வயது 35). என்ஜினீயர். இவர் கோவையில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக வேலை பார்த்து வந்தார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு ராம்நகரில் உள்ள ஓட்டல் ஒன்றில் அறை எடுத்து தங்கினார்.

    நேற்று வெகுநேரமாகியும் அறை கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த ஓட்டல் ஊழியர்கள் ஜன்னலை திறந்து பார்த்தனர். அப்போது விமலன் அறைக்குள் தூக்குபோட்டு தற்கொலை செய்த நிலையில் பிணமாக தொங்கினார்.

    இதைகண்டு அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் இது குறித்து காட்டூர் போலீசில் புகார் செய்தனர். சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். விமலனுக்கு இன்னும் திருமணமாக வில்லை. இவர் கடன் வாங்கி பங்குசந்தையில் முதலீடு செய்து ஏராளமான பணத்தை இழந்ததாக கூறப்படுகிறத. இதனால் மனமுடைந்து அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் கருதுகின்றன். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×