search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Monuments"

    • கடற்கரை கோவிலை கண்டு ரசித்தார்.
    • பாரம்பரிய நினைவுச் சின்னங்களை கண்டு ரசித்தார்.

    மாமல்லபுரம்:

    அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாகாணத்தின் கவர்னரான மிசெல்லே லுஜன் கிரிஷாம், அந்நாட்டு அரசு உயரதிகாரிகள் குழுவினருடன், உயர்கல்வி, வர்த்தகம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைக்காக இந்தியா வந்துள்ளார்.

    இந்த நிலையில், அரசுத்துறை குழுவினர் மற்றும் அவரது கணவர் ஆகியோருடன் மாமல்லபுரம் வந்தார். அங்குள்ள கடற்கரை கோவிலை கண்டு ரசித்தார்.

    பல்லவர்கள், சைவ, வைணவ வழிபாட்டிற்காக, இந்த கோயிலை உருவாக்கியதும், இதுதவிர 6 கோவில்கள் கடலில் மூழ்கியது. பல்லவர்களின் துறைமுகமாக விளங்கியது, பழங்காலத்தில் பக்தர்கள் வழிபட்டு வந்த இந்த கோயில் தற்போது பாரம்பரிய நினைவுச் சின்னமாக தொல்லியல்துறை மூலம் பராமரிக்கப்பட்டு வருவது உள்ளிட்ட பல்லவர் காலத்து வரலாற்று தகவல்களை, சுற்றுலாத்துறை அங்கிகாரம் பெற்ற வழிகாட்டி மதன் என்பவர் அவரிடம் விளக்கினார்.

    அவற்றைக் கேட்டு வியந்த அவர் தன் மொபைல் போனில் கணவருடன் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டார். சுற்றுலாப் பயணிகள் சிலரும் அவருடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

    • 75-வது சுதந்திர தினத்தையொட்டி மத்திய அரசு பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்துவருகிறது.
    • நினைவுச் சின்னம், அருங்காட்சியகங்களை பார்வையிட இலவச அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    75-வது சுதந்திர தினத்தையொட்டி மத்திய, மாநில அரசுகள் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.

    இந்நிலையில், நாடு முழுவதும் உள்ள பாதுகாக்கப்பட்ட நினைவு சின்னங்கள், அருங்காட்சியகங்கள், தொல்லியல் தளங்கள் மற்றும் முக்கிய சுற்றுலா தலங்களைப் பார்வையிட இலவச அனுமதி வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

    நாட்டின் 75-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடப்படுவதை முன்னிட்டு ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை பார்வையாளர்களுக்கு இலவச அனுமதி அளிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    ×