என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Mortgage"
- விலை உயர்ந்த ஜூகு தாரா பகுதியில் அலுவலகம் அமைந்துள்ளது.
- ரூ,7.84 கோடிக்கு அடமானம் வைத்து கடன் பெற்று இருக்கிறார்.
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் தமன்னா இந்தி படங்களிலும் நடித்து வருகிறார். கடந்த வருடம் வெளியான ரஜினியின் ஜெயிலர் படத்தில் காவாலா பாடலுக்கு தமன்னா ஆடிய குத்தாட்டம் ரசிகர்களை கவர்ந்தது.
இந்தியில் பிசியாக நடித்து வரும் தமன்னா தற்போது மும்பையில் 6 ஆயிரத்து 65 சதுர அடி கொண்ட அலுவலகத்தை ரூ,18 லட்சம் மாத வாடகைக்கு எடுத்துள்ளார்.
5 ஆண்டுகளுக்கு வாடகை ஒப்பந்தம் போட்டு இருக்கிறார். இதற்காக ரூ,75 லட்சம் செக்யூரிட்டி டெபாசிட் செலுத்தி உள்ளார். விலை உயர்ந்த ஜூகு தாரா பகுதியில் இந்த அலுவலகம் அமைந்துள்ளது.
அதுமட்டுமன்றி தமன்னா அந்தேரி வீர் தேசாய் சாலையில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள தனக்கு சொந்தமான மூன்று வீடுகளை வங்கியில் ரூ.7.84 கோடிக்கு அடமானம் வைத்து கடன் பெற்று இருக்கிறார். இதற்காக ரூ,4.70 லட்சத்துக்கு முத்திரை கட்டணமும் செலுத்தி இருக்கிறார்.
தமன்னா தற்போது ஜான் அபிரகாமுடன் வேதா படத்திலும் ஸ்ரத்தா கபூர், ராஜ்குமார் ராவ் ஆகியோருடன் ஸ்த்ரீ 2 படத்திலும் நடித்து வருகிறார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சம்பவத்தன்று சுதாகர் தொழில் தொடங்கப் போவதாக கூறி ஜெனிதாமேரிடம் பணம் கேட்டார்.
- 16 பவுன் நகையை தருமாறு சுதாகரிடம் கேட்டார். அவர் வழங்கவில்லை என கூறப்படுகிறது.
கடலூர்:
கடலூர் அடுத்த குறிஞ்சிப்பாடியை சேர்ந்தவர் ஜெனிதாமேரி. விருத்தாச்சலம் பூதாம்பூரை சேர்ந்தவர் சுதாகர். இருவரும் நண்பர்கள். சம்பவத்தன்று சுதாகர் தொழில் தொடங்கப் போவதாக கூறி ஜெனிதாமேரிடம் பணம் கேட்டார். அவர் வைத்திருந்த 16 பவுன் நகையை சுதாகரிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து சுதாகர் அந்த நகையை ரூ.3 லட்சத்திற்கு அடமானம் வைத்துள்ளார். இந்நிலையில் ஜெனிதா மேரி தனது 16 பவுன் நகையை தருமாறு சுதாகரிடம் கேட்டார். அவர் வழங்கவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து ஜெனிதா மேரி குறிஞ்சிப்பாடி போலீசாரிடம் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பெண்களின் புகைப் படத்தை சேகரித்து அதனை ஆபாச மாக சித்தரித்து தனது செல்போனில் வைத்து உள்ளார்.
- தொடர்ந்து மறியலில் ஈடுப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ள வீர சோழபுரம் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் வசந்த் (27). இவர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் பணிக்கு வரும் சுமார் 200-க்கும் மேற்பட்ட பெண்களின் புகைப் படத்தை சேகரித்து அதனை ஆபாசமாக சித்தரித்து தனது செல்போனில் வைத்து உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் தனது செல்போனை நண்பர் தினேசிடம் (27) அடமானம் வைத்துள்ளார். நேற்று தினேஷ் செல்போனை எடுத்து பார்த்த போது தனது கிராமத்தை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பெண்களின் படங்களை ஆபாசமா சித்தரித்து வைத்திருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து வார்டு உறுப்பினர் ரவியிடம் தெரிவித்துள்ளார். அவர் இது குறித்து தியாகதுருகம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதனிடையே இத்தகவல் வீரசோழபுரம் கிராமத்தில் காட்டுத்தீயாய் பரவியது. உடனே திரண்டு வந்த பெண்கள் தினேசிடம் போனை பிடுங்கி அதிலிருந்த புகைப்படங்களை பார்த்து கொந்தளித்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்தும் வசந்த் கிராமத்திலிருந்து தப்பிக்க முயன்றுள்ளார். உடனடியாக போலீசாார் வசந்த் இருக்கும் இடத்தை கண்டறிந்து முரார்பாளையம் அருகே அவரை கைது செய்தனர்.
ஆனால் வசந்தை தங்கள் முன்னிலையில் கொண்டு வர வேண்டும் என்று கூறி கிராம மக்கள் 300பேர் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக சென்னை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுப்பட்டனர். மேலும் கைது செய்த வசந்தை தங்களிடம் ஒப்படைத்தால் மட்டுமே சாலை மறியல் கைவடுவதாக தெரிவித்தனர். இதனிடையே கள்ளக் குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் தலைமையில் அங்கு வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பாதிக்கப்பட்ட கிராம பெண்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்ட னர். தொடர்ந்து மறியலில் ஈடுப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வசந்த் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து அவரது நண்பர் தினேஷையும் போலீசார் கைது செய்தனர். ரவியை தேடி வருகின்றனர். ரவி குடும்பத்திற்கும் தினேஷ் குடும்பத்திற்கும் தேர்தல் சமயத்தில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. இதனால் வசந்த் குடும்பத்தை பழிவாங்க ரவி இந்த விஷயத்தை வெளி கொண்டு வந்தது தெரிய வந்தது.
- நகை மதிப்பீட்டாளரிடம் 20 பவுன் நகைகளை கொடுத்து அடமானம் வைக்க வந்ததாக கூறினர்.
- போலீஸ் ஜீப் வருவதை கண்டதும் பெரியார் நகர் ரமேஷ் தனது மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றுவிட்டார்.
அரியலூர்:
அரியலூரில், அரியலூர்-திருச்சி சாலையில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் பிரதான கிளை அமைந்துள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான மக்கள் வரவு செலவு கணக்கு வைத்துள்ளனர். இந்நிலையில் அரியலூர் அண்ணா நகரை சேர்ந்த தே.மு.தி.க. ஒன்றிய செயலாளர் மணிகண்டன் (வயது 39) மற்றும் அரியலூர் அஸ்வினாபுரம் பகுதியைச் சேர்ந்த அக்கட்சியின் நிர்வாகி மணிமாறன் (39), பெரியார் நகரைச் சேர்ந்த ரமேஷ் (35) ஆகிய 3 பேரும் நகை அடமானம் வைக்க இந்த வங்கிக்கு வந்தனர்.
மணிகண்டனும், மணிமாறனும் வங்கிக்குள் சென்று நகை மதிப்பீ ட்டாளரிடம் 20 பவுன் நகைகளை கொடுத்து அடமானம் வைக்க வந்ததாக கூறினர். ரமேஷ் வங்கிக்கு வெளியே நின்று கொண்டிருந்தார்.
இதையடுத்து மதிப்பீ ட்டாளர் அவர்கள் கொடுத்த நகைகளின் உண்மை தன்மையை பரிசோதனைக்கு உட்படுத்தினார். அப்போது அது போலி நகை என்பது தெரிந்து கடும் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் மேலாளரிடம் உங்களுக்கு பணத்துக்கு ஏற்பாடு செய்கிறேன். நீங்கள் இங்கேயே அமர்ந்திருங்கள் என கூறிவிட்டு அந்த போலி நகைகளுடன் உதவி மேலாளர் செந்தில்குமார் கேபினுக்கு சென்றார். இதை அறிந்து ஆடிபோன செந்தில்குமார் சப்தமில்லாமல் அரியலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவல் அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சகாய அன்பரசு, சப் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் ஆகியோர் சம்பவ இடம் விரைந்தனர்.
பின்னர் நகை மதிப்பீட்டாளர் முன்பு அடமானத் தொகைக்காக காத்திருந்த தேமுதிக ஒன்றிய செயலாளர் மணிகண்டன் மற்றும் அவரது நண்பர் மணிமாறன் ஆகிய இருவரையும் அதிரடியாக கைது செய்தனர். இதற்கிடையே போலீஸ் ஜீப் வருவதை கண்டதும் பெரியார் நகர் ரமேஷ் தனது மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றுவிட்டார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 20 பவுன் போலி நகைகளை வங்கியில் அடமானம் வைக்க முயன்ற தேமுதிக ஒன்றிய செயலாளர் உட்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் அரியலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- திருப்பூர் கோல்டன் நகரில் உள்ள டாஸ்மாக் பாரில் மே தினத்தன்று அரசு விதியை மீறி மது பாட்டில்களை விற்பனை செய்யப்பட்டதாக தெரிகிறது.
- அதிக மதுபோதையின் காரணமாக செல்போனை தொலைத்ததும் தெரிய வந்தது.
திருப்பூர்:
மே தினத்தை முன்னிட்டு, தமிழகத்திலுள்ள அனைத்து அரசு டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களுக்கு அரசு விடுமுறை அளித்திருந்தது. இந்நிலையில், திருப்பூர் கோல்டன் நகரில் உள்ள டாஸ்மாக் பாரில் மே தினத்தன்று அரசு விதியை மீறி மது பாட்டில்களை விற்பனை செய்யப்பட்டதாக தெரிகிறது.
இந்த பாரில் குடிக்க வந்த வாலிபர் ஒருவர் அதிகளவு மது குடித்துவிட்டு போதை தலைக்கேறிய நிலையில் அங்கேயே படுத்து விட்டார். விடுமுறையன்று மகனை காணவில்லை என தேடிய தாய், மகன் டாஸ்மாக் பாரில் மது போதை தலைக்கேறிய நிலையில் இருப்பதை கேள்விப்பட்டு அங்கு வந்து பார்த்த பொழுது மகனின் நிலையை கண்டு பதறி அங்கிருந்தவர்கள் உதவியுடன்
போதையை தெளிய வைத்து, பைக்கை, செல்போன் எங்கே என்று கேட்ட போது, வாலிபர் பைக்கை அடமானம் வைத்து டாஸ்மாக் பாரில் மது குடித்தது தெரிய வந்தது. மேலும் அதிக மதுபோதையின் காரணமாக செல்போனை தொலைத்ததும் தெரிய வந்தது. இதையறிந்த தாய் பதறிய நெஞ்சத்துடன், விடுமுறை நாளன்று எவ்வாறு மது விற்பனை செய்கிறீர்கள் எனவும், எனது மகனை இந்த நிலைக்கு ஆளாக்கிவிட்டீர்கள் என பாரில் மது விற்பனை செய்தவர்களிடம் கண்ணீர் மல்க ஆவேசத்துடன் பேசினார். மதுவால் சீரழிந்த மகனின் நிலை கண்டு தாய் ஒருவர் கண்ணீருடன் ஆதங்கமாக பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்