search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mother killed"

    நாகையில் இரவு நேரத்தில் செல்போனில் பேசியதால் தாயை அடித்து கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகை சமத்துவபுரம் பாப்பாத் தெருவை சேர்ந்தவர் முரளி (வயது 43). இவரது மனைவி வெண்ணிலா (37). இவர்களது மகன் பரத் (20). கூலித் தொழிலாளி.

    இந்த நிலையில் கடந்த 25-ந் தேதி இரவு பரத், வீட்டுக்கு வந்தார். அப்போது தாய் வெண்ணிலா , செல்போனில் பேசி கொண்டிருந்தார். இதை பார்த்த பரத், இரவு நேரத்தில் யாரிடம் பேசி கொண்டிருக்கிறீர்கள்? என்று கேட்டார். இதனால் தாய்- மகன் இருவருக்கும் இடையே வாக்குவாதம் தகராறு ஏற்பட்டது.

    தொடர்ந்து வெண்ணிலா வாக்குவாதம் செய்து பேசிக்கொண்டே இருந்ததால் பரத் கடும் ஆத்திரம் அடைந்தார். இதனால் திடீரென வெண்ணிலாவை தாக்கினார். இதில் அவர் மயங்கி கீழே விழுந்தார்.

    உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து நாகை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து மகன் பரத்தை கைது செய்தனர்.

    செல்போனில் பேசிய தாயை பெற்ற மகனே தாக்கி கொன்ற சம்பவம் நாகை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    வந்தவாசி அருகே தகராறில் தாக்கப்பட்ட மகனை காப்பாற்ற முயன்ற தாய் வெட்டி கொலை செய்யபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    வந்தவாசி:

    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த வல்லம் பகுதியை சேர்ந்தவர் பலராமன். இவரது மனைவி காசியம்மாள் (வயது 70). பலராமன் கடந்த மாதம் இறந்து விட்டார். தனது தந்தை சாவிற்கு உறவினர்கள் யாரும் சரிவர வரவில்லை என்று அவரது இளைய மகன் ரவி போதையில் ஆபாசமாக பேசிக் கொண்டிருந்தாரம். அப்போது அந்த வழியாக வந்த ரவியின் அண்ணன் பெருமாளின் மகன் அரிவரசன் ரவியிடம் ஏன் உறவினர்களை ஆபாசமாக பேசிக் கொண்டிருக்கிறாய் என தட்டி கேட்டுள்ளார்.

    இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அரிவரசன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ரவியை வெட்டி உள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த காசியம்மாள் தடுக்க முயன்றுள்ளார்.

    அப்போது அவர் காசியம்மாளையும் சரமாரியாக வெட்டி உள்ளார். இதில் பலத்த காயமடைந்து அங்கேய அவர் ரத்த வெள்ளத்தில் இறந்தார். பின்னர் அங்கிருந்து அரிவரசன் தப்பி ஓடிவிட்டார்.

    இது குறித்து தகவலறிந்த வந்தவாசி டி.எஸ்.பி. அசோக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    பின்னர் உடலை மீட்டு வந்தவாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து தப்பி ஓடிய அரிவரசனை தேடி வருகின்றனர்.

    தேனாம்பேட்டையில் தாயை கொன்று மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    சென்னை:

    தேனாம்பேட்டை தாமஸ்ரோடு குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் நடேசன். இவரது மனைவி சுந்தரவள்ளி, மகன் விக்னேஷ். நடேசன் காவலாளியாக பணியாற்றி வருகிறார். இதனால் பெரும்பாலான நேரங்களில் சுந்தர வள்ளியும், விக்னேசும் மட்டுமே வீட்டில் இருப்பார்கள்.

    இந்தநிலையில் இன்று காலை இவர்களது வீடு நீண்டநேரமாக உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் ஜன்னல் வழியாக உள்ளே பார்த்தனர். அப்போது சுந்தரவள்ளி தரையில் பிணமாக கிடந்தார். விக்னேஷ் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் தேனாம்பேட்டை போலீசார் விரைந்து சென்று இருவரது உடலையும் கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    சுந்தரவள்ளியின் காதில் இருந்து ரத்தம் அதிகமாக வெளியேறி உள்ளது. இதன் காரணமாகவே அவர் உயிரிழந்து இருப்பதாக கூறப்படுகிறது. சுந்தரவள்ளி லேசாக மனநலம் பாதிக்கப்பட்டவர் போல இருந்து வந்துள்ளார்.

    இதனால் வீட்டில் இருக்கும் போது சத்தம் போட்டுக் கொண்டே இருப்பாராம். இதனால் விக்னேஷ் மன உளைச்சலில் இருந்தார். இதன் காரணமாக பெற்ற தாய் என்றும் பாராமல் மனதை கல்லாக்கிக் கொண்டு சுந்தரவள்ளியை விக்னேஷ் வி‌ஷம் கொடுத்து கொலை செய்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

    இதன்பினர் தாயை கொன்ற வலி தாங்க முடியாமல் விக்னேஷ் தூக்குபோட்டு தற்கொலை செய்ததும் தெரியவந்துள்ளது. இருப்பினும் பிரேத பரிசோதனை முடிவில் தான் சுந்தரவள்ளி எப்படி இறந்தார் என்பது தெரியவரும்.

    மனைவி மகனின் உடலை பார்த்து நடேசன் கதறி அழுதார். தாய்-மகனின் மரணம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    காதலை கைவிடுமாறு தொடர்ந்து வலியுறுத்தி வந்த தாயார் உயிரோடு இருந்தால் காதலனுடன் சேரமுடியாது என்பதால் அவரை கொலை செய்ததாக கல்லூரி மாணவி வாக்குமூலம் அளித்துள்ளார். #StudentArrested
    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த காக்களூரை சேர்ந்தவர் திருமுருகன். இவருடைய மனைவி பானுமதி (வயது 50). இவர்களது 2-வது மகள் தேவிபிரியா (19). பட்டாபிராம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் பி.காம். 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    தேவி பிரியாவுக்கும் ஆந்திர மாநிலம் தடா பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவருக்கும் கடந்த 6 மாதத்துக்கு முன்பு ‘பேஸ்புக்’ மூலம் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் தங்களது செல்போன் எண்களை பரிமாறிக்கொண்டு மணிக்கணக்கில் பேசினர். நாளடைவில் இது காதலாக மாறியது.

    சுரேஷ் செங்குன்றம் அருகே உள்ள தனியார் கம்பெனியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். வேலைக்காக தினமும் சென்னைக்கு வந்தபோது மின்சார ரெயிலில் தேவி பிரியாவை அடிக்கடி சந்தித்து வந்தார்.

    இந்த காதல் விவகாரம் தேவி பிரியாவின் தாய் பானுமதிக்கு தெரியவந்ததும் அவர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். காதலை கைவிடும்படி மகளை வற்புறுத்தி வந்தார்.

    ஆனால் இதனை தேவி பிரியா கண்டுகொள்ளவில்லை. தேவிபிரியாவுக்கும் சுரேசுக்கும் பேஸ்புக் மூலம் தஞ்சாவூரைச் சேர்ந்த அஜித்குமார், கும்பகோணத்தைச் சேர்ந்த விக்னேஷ் உள்ளிட்ட ஏராளமானோர் நண்பர்களாக இருந்தனர்.

    அவர்கள் தங்களது காதலுக்கு உதவுமாறு விக்னேஷ், அஜித்குமாரிடம் கேட்டு இருந்தனர். மேலும் தாய் பானுமதியை கொலை செய்துவிட்டு வீட்டை விட்டு வெளியேற தேவிபிரியா திட்டமிட்டு இருந்தார்.

    இதற்காக கடந்த 15-ந் தேதி தேவிபிரியாவும், காதலன் சுரேசும் முன் கூட்டியே திட்டமிட்டனர். தடா பகுதியில் இருவரும் சந்தித்து பேசி தங்களது திட்டத்தை வகுத்தனர்.

    அதன்படி நேற்று மாலை தேவிபிரியா பேஸ்புக் மூலம் நண்பர்களாக பழகிய அஜித்குமார், விக்னேஷ் ஆகியோரை வீட்டுக்கு வரவழைத்தார்.

    அப்போது ஏற்பட்ட தகராறில் ஆத்திரம் அடைந்த தேவிபிரியாவும், நண்பர்கள் அஜித்குமார், விக்னேஷ் ஆகிய 3 பேரும் சேர்ந்து பானுமதியை கத்தியால் குத்தி கொலை செய்தனர்.

    அங்கிருந்து தப்பி ஓட முயன்ற அஜித்குமார், விக்னேசை அப்பகுதி மக்கள் சுற்றி வளைத்து பிடித்து தர்மஅடி கொடுத்தனர். பின்னர் அவர்களை திருவள்ளூர் தாலுகா போலீசில் ஒப்படைத்தனர்.

    தேவிபிரியா, அஜித்குமார், விக்னேஷ் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இதில் தாய் பானுமதியை கொலை செய்தது ஏன்? என்பது குறித்து தேவி பிரியா பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

    காதலன் சுரேஷ்

    கல்லூரிக்கு மின்சார ரெயிலில் செல்லும்போது சித்தூரை சேர்ந்த சுரேசுடன் காதல் ஏற்பட்டது. நாங்கள் இருவரும் உயிருக்கு உயிராக காதலித்தோம். ஆனால் இதனை அறிந்த தாய் பானுமதி எங்களது காதலை கைவிடுமாறு தொடர்ந்து கூறி வந்தார்.

    அவர் இருந்தால் காதலனுடன் சேர முடியாது என்று நினைத்தேன். இதுபற்றி சுரேசிடம் கூறி வந்தேன். இதற்கிடையே ‘பேஸ்புக்’ மூலம் தஞ்சாவூரை சேர்ந்த அஜித்குமார், கும்பகோணத்தை சேர்ந்த விக்னேஷ் ஆகியோர் எங்களுக்கு அறிமுகம் ஆனார்கள்.

    அவர்களிடம் எங்களது காதல் நிலைமை குறித்து தெரிவித்தோம். இதையடுத்து அவர்கள் காதலுக்கு உதவுவதாக கூறினார்கள். இதுபற்றி காதலன் சுரேசிடம் கூறி நாங்கள் 4 பேரும் தாய் பானுமதியை தீர்த்துக்கட்டி விடலாம் என்று முடிவு செய்தோம். இதற்காக பேஸ்புக் நண்பர்களான அஜித்குமார், விக்னேஷ் மூலம் வீட்டில் கொள்ளை நாடகம் நடத்தி தாய் பானுமதியை கொலை செய்ய திட்டமிட்டோம்.

    இதுபற்றி அவர்களிடம் கூறியபோது ஒப்புக் கொண்டனர். திட்டமிட்டபடி நேற்று காலை அஜித்குமாரும், விக்னேசும் திருவள்ளூர் வந்தனர். வீட்டில் தாய் பானுமதியும், அக்காள் சாமுண்டீஸ்வரியும் இருந்தனர். மதியம் சாப்பிட்டு விட்டு தாய் பானுமதி அறையில் தூங்கிக் கொண்டிருந்தார். மற்றொரு அறையில் அக்காள் சாமுண்டீஸ்வரி இருந்தார். இதனை சாதகமாக பயன்படுத்தி அஜித்குமாரையும் விக்னேசையும் வீட்டுக்குள் வரவழைத்தேன்.

    அவர்கள் வீட்டில் இருந்த நகையை எடுப்பதுபோல் நாடகமாடினார்கள். நானும் பயந்ததுபோல் கூச்சலிட்டேன். இதனைக் கேட்ட தாய் பானுமதி அறைக்குள் வந்ததும் கத்தியால் குத்தி கொன்றோம்.

    பின்னர் அஜித்குமாரும், விக்னேசும் வெளியே தப்பி ஓடினார்கள். இதற்குள் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு விட்டனர். ரத்தக்கறையுடன் இருந்த அவர்கள் 2 பேரையும் பிடித்து விட்டனர். இதனால் நானும் சிக்கிக் கொண்டேன். போலீசார் எங்கள் 3 பேரையும் கைது செய்துவிட்டனர்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    பானுமதி கொலைக்கு தேவிபிரியாவின் காதலன் சுரேஷ் மூளையாக செயல்பட்டு இருப்பது விசாரணையில் தெரிய வந்தது. டி.எஸ்.பி. கங்காதரன் தலைமையில் தனிப்படை போலீசார் நேற்று ஆந்திரா சென்றனர். அவர்கள் தடா பகுதியில் பதுங்கி இருந்த சுரேசை கைது செய்தனர்.

    இன்று அதிகாலை அவரை திருவள்ளூர் தாலுகா போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். கொலையை அரங்கேற்ற சுரேஷ் வராதது ஏன்? என்பது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

    கைதான தேவிபிரியா, காதலன் சுரேஷ், பேஸ்புக் நண்பர்கள் விக்னேஷ், அஜித்குமார் ஆகிய 4 பேரையும் இன்று மாலை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கிறார்கள்.

    தேவிபிரியா காதலில் விழுந்தது முதல் கல்லூரிக்கு சரிவர செல்லவில்லை என்று தெரிகிறது. கடந்த 6 மாதமாக அவர் காதலனுடன் ஜாலியாக ஊர் சுற்றி இருக்கிறார். இதனை அறிந்த பின்னரே தாய் பானுமதி மகளை கண்டித்தார்.

    தனது கண்டிப்பு மூலம் மகளை திருத்தி விடலாம் என்று முடிவு செய்த அவர் கணவர் திருமுருகனிடம் இதுபற்றி கூறாமல் இருந்தார்.

    பானுமதி கொலை செய்யப்பட்ட பின்னரே திருமுருகனுக்கு மகளின் காதல் விவகாரம் தெரியவந்தது. அவர் மனைவியின் உடலை பார்த்து கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. #StudentArrested

    தாம்பரத்தில் பஸ்சில் வைத்து மூதாட்டி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அப்போது படுகாயம் அடைந்த மகள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். #TambaramMurder #MotherMurder
    தாம்பரம்:

    சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரி காயரம்பேடு கிராமம் திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் தேவராஜ் (வயது 53). காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது தாயார் முத்தம்மாள். தேவராஜுக்கு 3 சகோதரிகளும், ஒரு சகோதரரும் உள்ளனர். முத்தம்மாளுக்கு அதே பகுதியில் 2 ஏக்கர் நிலம் உள்ளதாக கூறப்படுகிறது.

    முத்தம்மாளை சரியாக கவனிக்காததால் தேவராஜுக்கு சொத்தில் பங்கு கொடுக்கவில்லை என தெரிகிறது. இதுதொடர்பாக அவர்களுக்குள் சொத்து தகராறு இருந்து வந்தது. இதனால் செங்கல்பட்டு கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் தேவராஜ் வழக்கு தொடர்ந்தார்.



    இந்த வழக்கு நேற்று கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இதில் ஆஜராகிவிட்டு முத்தம்மாளும், அவரது மகள் விஜயலட்சுமியும் நேற்று இரவு 7 மணி அளவில் தாம்பரம் பஸ் நிலையம் வந்தனர்.

    பின்னர் குன்றத்தூர் அருகே உள்ள கோவூருக்கு செல்வதற்காக மாநகர பஸ்சில் ஏறி அமர்ந்து இருந்தனர். அப்போது அந்த பஸ்சில் ஏறிய தேவராஜ் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து முத்தம்மாளையும், விஜயலட்சுமியையும் சரமாரியாக வெட்டினார்.

    இதில் முத்தம்மாள் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார். படுகாயம் அடைந்த விஜயலட்சுமி சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த சம்பவம் தொடர்பாக தாம்பரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேவராஜை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடக்கிறது.

    மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பஸ் நிலையத்தில் சொத்துக்காக தனது தாயை மகன் வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    தொப்பூர் அருகே லாரி மோதிய விபத்தில் சப்-இன்ஸ்பெக்டரின் தாயார் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் தொப்பூர் அருகே உள்ள கெங்கலாபுரம் பகுதியை சேர்ந்த சித்தன் மனைவி காளியம்மாள் (வயது60). இவர் இன்று காலை 8 மணிக்கு தொப்பூர் - ஓசூர் பைபாஸ் சாலை அருகே சர்வீஸ் ரோட்டில் நடந்து சென்றார். அப்போது சர்வீஸ் ரோட்டில் நிறுத்தி இருந்த லாரி டிரைவர் திடீரென்று லாரியை பின்னால் எடுத்தார். இதில்அந்த லாரி மோதியதில் காளியம்மாள் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    இது குறித்து தொப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்தில் இறந்த காளியம்மாளின் மகன் சுவாமிநாதன் தருமபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.
    தனது தாய் பல ஆண்களுடன் பழகி வருவதாக அக்கம், பக்கத்தினர் கூறியதால் ஆத்திரம் அடைந்த நான் அவரை தீர்த்துக் கட்டினேன் என்று கைதான மகன் வாக்குமூலம் அளித்துள்ளார்.

    திருப்பூர்:

    கைதான மாணவர் பிரவீன் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது,

    எனது தாயின் நடத்தையில் எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. மேலும் அவர் பல ஆண்களுடன் பழகி வருவதாக அக்கம்,பக்கத்தினரும் என்னிடம் கூறினர். இதனால் நான் அவரை எச்சரித்தேன். அதன் பிறகும் அவர் நடவடிக்கைகளை மாற்றிக் கொள்ளவில்லை. இதனால் அக்கம் பக்கத்தினர் என்னை மிகவும் கேலி செய்தனர். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. எனவே சம்பவத்தன்று தாயை கயிற்றால் நெரித்து கொலை செய்தேன்.

    இவ்வாறு அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

    ×