என் மலர்
நீங்கள் தேடியது "motorcycle stolen"
- போலீசார் மோட்டார் சைக்கிளை திருடிய நபரை தேடி வருகின்றனர்.
- மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் திருடி சென்றனர்
குனியமுத்தூர்,
கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் அபிஷேக் (வயது20). இவர் கோவை பாலக்காடு ரோடு கோவைப்புதூர் பிரிவு அருகே உள்ள வசந்தம் நகரில் வசித்து தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.
இவர் தனது வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு வீட்டிற்க்குள் சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
பின்னர் இதுகுறித்து குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். வழக்கு பதிவு செய்து போலீசார் மோட்டார் சைக்கிளை திருடிய நபரை தேடி வருகின்றனர்.
லாலாப்பேட்டை:
லாலாப்பேட்டை கெடிக்கால் தெருவைச் சேர்ந்தவர் கோபால் (33கூலித் தொழிலாளி. இவர் தனது வீட்டின் வாசலில் நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிகளை கடந்த 13-ந் தேதி மர்ம நபர்கள் திருடி சென்றனர். இது குறித்து லாலாப்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்தனர்.
விசாரணையில் பிள்ளபாளையத்தை சேர்ந்த செல்வம் (45) என்பவர் திருடியது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் மோட்டார் சைக்கிளை திருடிய செல்வத்தை கைது செய்தனர்.