search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mukha Stalin"

    • சென்னை பன்னாட்டுப் புத்தக கண்காட்சி 2024 இன்று தொடங்கி 18-ஆம் தேதி வரை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற இருக்கிறது.
    • 40 உலக நாடுகள், 10 இந்திய மாநிலங்களில் உள்ள பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்பு.

    "40 உலக நாடுகள், 10 இந்திய மாநிலங்களின் பங்கேற்புடன் 50 மொழிகளைச் சேர்ந்த பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்ளும் சென்னை பன்னாட்டுப் புத்தக கண்காட்சி 2024 இன்று தொடங்கி 18-ஆம் தேதி வரை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற இருக்கிறது" என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது, தமிழ்நாட்டில் நமது அரசு முன்னெடுக்கும் அறிவியக்கத்துக்கு அத்தாட்சியாக கடந்த ஆண்டு முதல் சென்னை பன்னாட்டுப் புத்தகக் காட்சியை நடத்தி வருகிறோம். இந்த ஆண்டு சுமார் 40 உலக நாடுகள், 10 இந்திய மாநிலங்களின் பங்கேற்புடன் 50 மொழிகளைச் சேர்ந்த பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்ளும் சென்னை பன்னாட்டுப் புத்தக கண்காட்சி 2024 இன்று தொடங்கி 18-ஆம் தேதி வரை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற இருக்கிறது.

    தொழிற்கல்வி சார்ந்த 200 நூல்கள் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்படவுள்ளன. பல்வேறு கருத்தரங்குகள், விவாதங்கள் நடைபெறுகின்றன. எழுத்தாளர்களுக்கும் வெளிநாட்டுப் பதிப்பு நிறுவனங்களுக்கும் இடையே பாலமாக 20 இலக்கிய முகவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    தமிழ்ப் படைப்பாளிகள் உலகெங்கும் சென்று சேரவும், உலக மொழிகளில் உள்ள அறிவுச் செல்வத்தைத் தமிழில் ஆக்கி அளிக்கவும் பெரும் பொருட்செலவில் அரசு முன்னெடுக்கும் இந்த உலக அளவிலான அறிவுத்திருவிழாவில் அனைவரும் பங்கேற்றுப் பயன்பெறுங்கள்" என தெரிவித்துள்ளார்.

    • ஓணத்திற்கு வாழ்த்து சொல்கின்ற நீங்கள் தீபாவளிக்கும் வாழ்த்து சொல்ல வேண்டும் என்பதே எங்களுடைய எதிர்பார்ப்பு.
    • ஊழலுக்கு எதிராக மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கை என்பது கட்சி சார்பற்றது.

    கோவை:

    கோவை பீளமேட்டில் நடந்த ஓணம் விழாவில் கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வானதி சீனிவாசன் பங்கேற்றார்.

    அப்போது அவர் அங்குள்ள மக்களுக்கு ஓணம் வாழ்த்து தெரிவித்தார். மேலும் அவர்களுடன் சேர்ந்து நடனம் ஆடி ஓணம் பண்டிகையை கொண்டாடினார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    மலையாள சகோதர, சகோதரிகளுக்கு ஓணம் பண்டிகை வாழ்த்துக்கள். தமிழக முதலமைச்சர் கூட மலையாளத்தில் வாழ்த்து சொல்லி இருக்கிறார். அதுபோல, தீபாவளிக்கும் முதலமைச்சர் வாழ்த்து கூறினால் அவர் அனைவருக்குமான முதலமைச்சராக செயல்படுவார் என்பதற்கு அத்தாட்சியாக இருக்கும்.

    ஓணத்திற்கு வாழ்த்து சொல்கின்ற நீங்கள் தீபாவளிக்கும் வாழ்த்து சொல்ல வேண்டும் என்பதே எங்களுடைய எதிர்பார்ப்பு.

    கோவை மாநகராட்சி மேயர் மற்றும் குடும்பத்தினர் மீது இளம்பெண் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். அரசின் முதன்மையான பதவியில் இருப்பவரின் குடும்பத்தின் மீது இது போன்ற புகார்கள் வருகிறபோது, மாநில அரசு இதனை தீவிரமாக விசாரிக்க வேண்டும்.

    தி.மு.க. ஆட்சிக்கு வருகிற போது எல்லாம் மக்களை மிரட்டுவது, சட்டத்தை தங்களுக்கு சாதமாக மாற்றுவது சர்வசாதாரணமாகி விட்டது. கோவை மேயர் குடும்பத்தினர் மீது கூறப்பட்டுள்ள புகார் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஊழலுக்கு எதிராக மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கை என்பது கட்சி சார்பற்றது. ஆதாரங்கள், சாட்சியங்கள் இருப்பதை வைத்து மத்திய அரசின் துறைகள் நடவடிக்கை எடுத்து வருகிறது. மத்திய அரசு கட்சி பாகுபாடு பார்ப்பது கிடையாது. ஆதாரத்தின் அடிப்படையிலேயே நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • கர்நாடக மாநில துணை முதலமைச்சருக்கு உடனடியாக, தனது பெயரிலேயே கடும் கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டும்.
    • பிரச்சினையில் சட்ட ரீதியான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கர்நாடக மாநில துணை முதலமைச்சர் சிவக்குமார், மத்திய மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத்துக்கு 20.06.2023 அன்று எழுதியுள்ள கடிதம் மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. அக்கடிதத்தில், காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கு விரைவாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும், மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு இரட்டை வேடம் போடுவதாகவும், தமிழ்நாட்டில் இரண்டாம் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு குடிநீர் திட்டங்கள் சட்டவிரோதமாக செயல்படுத்தப்படுவதாகவும், அத்திட்டங்களை நியாயப்படுத்தும் தமிழ் நாடு அரசு, மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கு மட்டும் அனுமதி அளிக்காமல் எதிர்ப்பு தெரிவிக்கும் இரட்டை நிலையை எடுத்திருப்பதாகவும் குற்றம் சாட்டியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

    கடிதம் எழுதிய கையோடு 30.6.2023 அன்று மத்திய மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவத்தை நேரில் சந்தித்து, மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அணை கட்ட அனுமதிக்க வேண்டும் என்று வற்புறுத்தியதாக பத்திரிகைகளில் செய்தி வெளிவந்துள்ளது.

    முதலமைச்சர், தமிழக மக்களின் நலனுக்கு விரோதமாக செயல்படும் கர்நாடக மாநில துணை முதலமைச்சருக்கு உடனடியாக, தனது பெயரிலேயே கடும் கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டும். இப்பிரச்சினையில் சட்ட ரீதியான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

    தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளை சேர்ந்த 38 உடனடியாக புது டெல்லிக்கு படையெடுத்து, கர்நாடக மாநிலம் மேகதாதுவில் அணை கட்ட மேற்கொள்ளும் முயற்சிகளை முறியடிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பணிக்காலத்தில் உயிரிழந்த 103 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு வழங்கப்படுகிறது.
    • நிகழ்ச்சியில் அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    சென்னை:

    தமிழ்நாடு மின்சாரவாரியத்தில் பணிபுரிந்து பணிக்காலத்தில் உயிரிழந்த 103 பணியாளர்களின் வாரிசுதாரர்களில், தொழில்நுட்ப உதவியாளராக 24 நபர்களுக்கும், இளநிலை உதவியாளராக (கணக்கு) 2 நபர்களுக்கும், மின் கணக்கீட்டாளராக 14 நபர்களுக்கும், தட்டச்சராக 1 நபருக்கும், களப்பணி உதவியாளராக 56 நபர்களுக்கும், உதவி வரைவாளராக 1 நபருக்கும், காவலாளியாக 5 நபர்களுக்கும் பணி நியமன ஆணைகள் வழங்கப்படுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், செந்தில்பாலாஜி, தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • மருதமலை முருகன் கோவிலில் ரூ.5.20 கோடியில் லிப்ட் பணிக்கான பூமி பூஜை நடந்தது.
    • கோவில் அர்ச்சகர்கள் வேத மந்திரம் முழங்க வேள்வி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தனர்.

    வடவள்ளி:

    கோவை மருதமலையில் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு கோவை மட்டுமின்றி அண்டை மாவட்டங்களான திருப்பூர், ஈரோடு உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்த வண்ணம் உள்ளனர்.

    இதனால் எப்போதுமே மருதமலை முருகன் கோவிலில் கூட்டம் அதிக மாக காணப்படும். குறிப்பாக விஷேச நாட்களில் அதிகளவிலான கூட்டம் காணப்படும்.

    இந்நிலையில் மருதமலை முருகன் கோவிலில் மின்தூக்கி(லிப்ட்) அமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று ரூ.5.20 கோடியில் லிப்ட் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில் இன்று மருதமலை முருகன் கோவிலில் ரூ.5.20 கோடியில் லிப்ட் மற்றும் ரூ.3.51 கோடியில் மலை அடிவாரத்தில் இருந்து மலைக்கோவில் உள்ள தார்சாலையை சீரமைக்கும் பணிக்கான பூமி பூஜை இன்று நடந்தது.

    பூமிபூஜையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார். கோவையில் நடந்த விழாவில், கலெக்டர் கிரந்திகுமார், இந்து சமயஅறநிலையத்துறை துணை ஆணையர் தர்ஷினி, துணை மேயர் வெற்றிச் செல்வன், கோவை மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் ஆகியோர் பங்கேற்றனர்.

    அதை தொடர்ந்து கோவில் அர்ச்சகர்கள் வேத மந்திரம் முழங்க வேள்வி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தனர்.

    இதில் தி.மு.க வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் அ.ரவி, வடவள்ளி பகுதி செயலாளர் வ.ம.சண்முக சுந்தரம், வட்ட செயலாளர்கள், கவுன்சிலர்கள் , கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • கிராமசபைக் கூட்டங்களில் என்.எல்.சி சுரங்க விரிவாக்கத்திற்காக நிலம் எடுப்பதை அரசு கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானங்களை மக்கள் நிறைவேற்றியுள்ளனர்.
    • என்.எல்.சி சுரங்க விரிவாக்கத்தை அனுமதிக்க முடியாது என்று முதலமைச்சர் அறிவிக்க வேண்டும்.

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிஇருப்பதாவது:-

    என்.எல்.சி நிலக்கரி சுரங்கங்களின் விரிவாக்கத்திற்காக அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டு நிலங்கள் பறிக்கப்படுவதற்கு எதிராக போராடி வரும் கடலூர் மாவட்ட மக்களும், உழவர்களும் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டங்களில் தடைகளை தகர்த்து என்.எல்.சி சுரங்க நிலப்பறிப்புக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

    கிராமசபைக் கூட்டங்களில் என்.எல்.சி சுரங்க விரிவாக்கத்திற்காக நிலம் எடுப்பதை அரசு கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானங்களை மக்கள் நிறைவேற்றியுள்ளனர். அதற்கும் கூட அதிகாரிகள் மூலம் பல்வேறு வழிகளில் முட்டுக்கட்டைகள் போடப்பட்டன. ஆனால், அவற்றையெல்லாம் தகர்த்து தான் கடலூர் மாவட்ட மக்கள் தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கின்றனர்.

    கடலூர் மாவட்ட மக்களும் தமிழ்நாடு அரசின் ஆளுகைக்குள் உள்ளவர்கள் தான். அவர்களைக் காக்கும் பொறுப்பு தமிழக அரசுக்கு உண்டு. எனவே, கடலூர் மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தையும், உடல் நலனையும் கருத்தில் கொண்டு, கிராமசபைக் கூட்டங்களில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் கேட்டுக்கொள்ளப்பட்டவாறு, என்.எல்.சி சுரங்க விரிவாக்கத்தை அனுமதிக்க முடியாது; அதற்காக நிலம் கையகப்படுத்தி தரமாட்டோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    துன்பப்படும் மக்களின் துயர் துடைக்க கனிமொழியை வெற்றி பெற செய்யுங்கள்“ என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் வைகோ பேசினார். #Vaiko #kanimozhi #LSPolls
    தூத்துக்குடி :

    தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் தி.மு.க. வேட்பாளராக கனிமொழி எம்.பி. போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து தேர்தல் பிரசார பொதுக்கூட்டம், தூத்துக்குடி சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் அருகே நேற்று இரவு நடந்தது. ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறிய தாவது:-

    தமிழர் உரிமைக்காகவே தன் வாழ்வை அர்ப்பணித்த கலைஞரின் மகள், இன்றைய மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர். நாளைய தூத்துக்குடி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர். இவர் அன்பும், பரிவும், கனிவும், பாசமும், மனிதாபிமானமும் கொண்ட அணுகுமுறையால், சாதி, மதம், கட்சி கடந்து ஒடுக்கப்பட்டவர்களுக்காக, மீனவர்களுக்காக, விவசாயிகளுக்காக, வேலையில்லா திண்டாட்டத்தால் வாடி வதங்கும் இளைஞர்களுக்காக மாநிலங்களவையில் குரல் கொடுத்து உள்ளார்.



    பாசிசமா, ஜனநாயகமா என்பதற்காகத்தான் இந்த தேர்தல். ஜனநாயகம் வெற்றி பெற வேண்டும். 40 தொகுதிகளிலும் வெற்றியை தாருங் கள். அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் எங்கள் தங்கை கனிமொழி என்ற நிலையை உருவாக்க வேண்டும். கட்சி பார்க்காமல், சாதி பார்க்காமல், துன்பப்படும் மக்களின் துயர் துடைக்க, இந்த தொகுதிக்கு என்ன தேவை என்று திட்டமிட்டு செயலாற்றக்கூடிய கனிமொழியை வெற்றி பெறச் செய்யுங்கள். உங்கள் வாக்குகளை திரட்டுங்கள். சிந்தப்பட்ட ரத்தத்துக்காக, நீதிக்காக வாக்குகளை திரட்டுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக, ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, திருச்செந்தூர், காயல்பட்டினம், ஆறுமுகநேரி, ஆத்தூர், முக்காணி உள்ளிட்ட பகுதிகளில் வைகோ திறந்த வேனில் சென்று கனிமொழி எம்.பி.க்கு ஆதரவாக பிரசாரம் செய்தார். #Vaiko #kanimozhi #LSPolls
    திமுக ஆட்சி இருக்கும்போது எந்தெந்த திட்டங்கள் மக்கள் ஒப்புதலுடன் நிறை வேற்றப்பட்டது என முக ஸ்டாலின் விளக்க வேண்டும் என தம்பிதுரை கேள்வி எழுப்பியுள்ளார். #MKStalin #Thamidurai #DMK #ADMK
    கரூர்:

    கரூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட் அரவக்குறிச்சி பகுதிகளில் பொது மக்களை நேரடியாக சந்தித்து பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை மனு பெற்றார்.

    அப்போது அவர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கரூர் பாராளுமன்ற தொகுதியில் 40 ஆயிரம் கிராமங்கள் உள்ளன. இதுவரை 10 ஆயிரம் கிராமங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து பொது மக்களை நேரடியாக சந்தித்து மனுக்களை பெற்றுள்ளேன். வருகிற டிசம்பர் மாதத்திற்குள் அனைத்து கிராம மங்களுக்கும் செல்வேன்.

    இந்த ஆட்சி நல்லாட்சி என்பதில் மக்கள் மிகுந்த நம்பிக்கை தெரிவித்துள்ளார்கள். இன்னும் 3 ஆண்டு காலம் ஆட்சி சிறப்பாக செயல்படும். இதில் பல்வேறு நல்ல திட்டங்களும் செயல்படுத்தப்படும் என மக்கள் நம்புகிறார்கள்.

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஜனநாயக முறைப்படி கருத்துக்களை தெரிவித்து வருகிறார். ஆனால் அதே நேரத்தில் தி.மு.க. ஆட்சி இருக்கும்போது எந்தெந்த திட்டங்கள் மக்கள் ஒப்புதலுடன் நிறை வேற்றப்பட்டது என அவர் விளக்க வேண்டும்.

    ஸ்டெர்லைட் ஆலைக்கு தி.மு.க. ஆட்சியின்போது நிலம் வழங்கப்பட்டது. மக்கள் ஒப்புதலுடன் தான் அவர்கள் நிலத்தை வழங்கினார்களா? குறை சொல்ல வேண்டும் என்பதற்காக புழுதிவாரி தூற்றுவது ஏற்புடையது அல்ல.



    கவர்னர் அலுவலகத்தில் இருந்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில்தான் நக்கீரன் கோபால் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. அரசியல் அமைப்பு தலைமை அங்கீகாரம் படைத்தவர் கவர்னர். அவரைப் பற்றி கருத்து கூறவோ, விமர்சிக்கவோ விரும்பவில்லை.

    ஆனால் அதே நேரத்தில் கவர்னர் புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்காமல் இருக்க முடியுமா? கருத்து சுதந்திரம் இந்த ஆட்சியில் முழுமையாக இருக்கிறது. அதற்காக அந்த சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தகூடாது.

    இந்த ஆட்சி யாருடைய குரல் வளையையும் நசுக்கவில்லை. இந்த அரசை செயல்படாத அரசு என்று கூறி வருபவர்கள் இப்போதாவது நாங்கள் செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கிறோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

    ரபேல் விமான ஒப்பந்தத்தை பொறுத்தவரை பிரான்ஸ் மற்றும் இந்திய நிறுவனங்கள் புரிந்துணர்வு செய்துகொண்ட ஒப்பந்த அடிப்படையில்தான் வாங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் விளக்கம் அளித்துள்ளார்.

    தற்போது வரை காங்கிரஸ் கூட்டணியில் தான் தி.மு.க. அங்கம் வகித்து வருகிறது. ஆனால் இதுவரை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், ராகுல்காந்தியை பிரதமர் ஆக்குவோம் என்று கூறவில்லை. பிரதமர் வேட்பாளராக நிறுத்துவோம் என்று கூட தெரிவிக்கவில்லை. ஏனென்றால் பா.ஜ.க.வுடன் தி.மு.க. மறைமுக தொடர்பு வைத்துள்ளது. அவர்களுடன் கூட்டணி வைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #ADMK #Thambidurai #MKStalin
    ×