என் மலர்
நீங்கள் தேடியது "Mumbai Express Train"
- முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் கிடந்த பார்சலை கைப்பற்றினர்.
- கஞ்சாவை கடத்தி வந்தது யார்? என்பது குறித்து விசாரணை.
நாகர்கோவில்:
புனேவில் இருந்து கன்னியாகுமரிக்கு வந்த மும்பை எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று இரவு கன்னியாகுமரி ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. பின்னர் ரெயில் அங்கிருந்து புறப்பட்டு நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் உள்ள யார்டுக்கு கொண்டு வரட்டது. அப்போது ரெயிலை சுத்தம் செய்யும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.
முன்பதிவு செய்யப்படாத பெட்டி ஒன்றில் பார்சல் ஒன்று கிடந்தது. அதை எடுத்து பார்த்தபோது காக்கி கவரில் 8 பார்சல் இருந்தது. இது குறித்து நாகர்கோவில் ரெயில்வே போலீசாருக்கும், ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.
ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள்ஜெயபால், ரெயில்வே பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டர் செரியன் தலைமையிலான போலீசார் அங்கு சென்று முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் கிடந்த பார்சலை கைப்பற்றினர்.
அந்த பார்சல்களை சோதனை செய்தபோது கஞ்சா பொட்டலங்கள் என்பதும், அதில் 8 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட கஞ்சா பொட்டலங்களை நாகர்கோவில் ரெயில் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.
இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட 8 கிலோ கஞ்சா பொட்டலங்களையும் மதுவிலக்கு போலீசில் ஒப்படைத்தனர்.
மதுவிலக்கு போலீசார் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். கஞ்சாவை கடத்தி வந்தது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்புதான் திப்ரூகரில் இருந்து கன்னியாகுமரிக்கு வந்த ரெயிலில் கடத்தி வந்த 13 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இந்தநிலையில் தற்போது 8 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- சுமார் 40 நிமிடம் தாமதமாக விருத்தாசலம் நோக்கி மும்பை ரெயில் புறப்பட்டு சென்றது.
- உயர் அழுத்த மின் வயரில் சேலை சிக்கி கிடந்த இடத்தை ரெயில்வே உயர் அதிகாரிகள் இன்று ஆய்வு செய்தனர்.
அரியலூர்:
நாகர்கோவிலில் இருந்து மும்பைக்கு செல்லும் சி.எஸ்.எம்.டி. எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று மதியம் அரியலூர் அருகே பழைய பாம்பன் ஓடை என்ற இடத்தில் காட்டுப்பகுதியில் சென்று கொண்டு இருந்தது. அப்போது உயர் அழுத்த மின் கம்பியில் பச்சை நிற சேலையில் கல்லை கட்டிய நிலையில் தொங்கி கொண்டிருந்தது.
இதனை கண்ட ரெயில் என்ஜின் டிரைவர் உடனடியாக ரெயிலை நிறுத்தினார்.
பின்னர் என்ஜின் டிரைவர் மற்றும் உதவியாளர்கள், பயணிகள் ரெயிலில் இருந்து கீழே இறங்கி சேலை தொங்கிக்கொண்டு இருந்த இடத்திற்கு அருகில் சென்று பார்த்தனர். இதுகுறித்து உடனடியாக விருத்தாசலம் ரெயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
அப்போது, உயர் அழுத்த மின் வயரில் சேலை தானாக காற்றில் வந்து விழ வாய்ப்பில்லை என்றும், இது ரெயில் என்ஜினின் மேல் பகுதியில் உள்ள கம்பியும், மின்சார கம்பியும் உரசும்போது எளிதில் ரெயிலை தீ விபத்தில் சிக்க வைத்துவிடலாம் என்ற நோக்கில் சமூக விரோதிகள் செய்த சதியாக இருக்கலாம் என தெரிய வந்தது. இதற்கிடையில் சேலை தொங்கிய இடத்தில் இருந்து தீப்பொறி விழுவதை கண்ட பயணிகளும், அதிகாரிகளும் பதற்றம் அடைந்தனர்.
பின்னர் ரெயில்வே ஊழியர்கள் நின்ற ரெயிலில் இருந்த நீண்ட கம்பியை எடுத்து வந்து சாதுரியமாக உயர் அழுத்த மின்கம்பியில் சிக்கி இருந்த சேலையை அகற்றினர். இதையடுத்து சுமார் 40 நிமிடம் தாமதமாக விருத்தாசலம் நோக்கி மும்பை ரெயில் புறப்பட்டு சென்றது.
சேலையில் கல்லை கட்டி ரெயிலை தீ விபத்தில் சிக்கவைக்க சதி திட்டம் தீட்டிய மர்ம ஆசாமிகளை ரெயில்வே போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். என்ஜின் டிரைவர் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இதனிடையே உயர் அழுத்த மின் வயரில் சேலை சிக்கி கிடந்த இடத்தை ரெயில்வே உயர் அதிகாரிகள் இன்று ஆய்வு செய்தனர். ரெயில்வே போலீசாரும் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.
சம்பவ இடம் காட்டுப்பகுதி என்பதால் அந்த வழியாக மர்ம நபர்கள் நடமாட்டம் உள்ளதா என்று போலீசார் அந்த பகுதியில் முகமையிட்டு விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
- உயர் அழுத்த மின் கம்பியில் பச்சை நிற சேலையில் கல்லை கட்டிய நிலையில் தொங்கி கொண்டிருந்தது.
- சேலை தொங்கிய இடத்தில் இருந்து தீப்பொறி விழுவதை கண்ட பயணிகளும், அதிகாரிகளும் பதற்றம் அடைந்தனர்.
அரியலூர்:
நாகர்கோவிலில் இருந்து வாரந்தோறும் வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மும்பைக்கு சி.எஸ்.எம்.டி. எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 16352) இயக்கப்பட்டு வருகிறது. வழக்கம்போல் நேற்று காலை 6.15 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்பட்ட இந்த ரெயில் மதியம் 2.40 மணியளவில் அரியலூர் சென்றது. அங்கிருந்து புறப்பட்ட 30 நிமிடத்தில் பழைய பாம்பன் ஓடை என்ற இடத்தில் காட்டுப்பகுதியில் சென்று கொண்டு இருந்தது. அப்போது உயர் அழுத்த மின் கம்பியில் பச்சை நிற சேலையில் கல்லை கட்டிய நிலையில் தொங்கி கொண்டிருந்தது. இதனை கண்ட ரெயில் என்ஜின் டிரைவர் சுதாரித்துக் கொண்டு உடனடியாக நிறுத்தினார்.
பின்னர் என்ஜின் டிரைவர் மற்றும் உதவியாளர்கள், பயணிகள் ரெயிலில் இருந்து கீழே இறங்கி சேலை தொங்கிக்கொண்டு இருந்த இடத்திற்கு அருகில் சென்று பார்த்தனர். அப்போது அங்கிருந்து சற்று தூரத்தில் ஆடு மேய்ப்பவர் மட்டும் ஆடுகளுடன் நின்று கொண்டிருந்தார். இதுகுறித்து உடனடியாக விருத்தாசலம் ரெயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
அப்போது, உயர் அழுத்த மின் வயரில் சேலை தானாக காற்றில் வந்து விழ வாய்ப்பில்லை என்றும், இது ரெயில் என்ஜினின் மேல் பகுதியில் உள்ள கம்பியும், மின்சார கம்பியும் உரசும்போது எளிதில் ரெயிலை தீ விபத்தில் சிக்க வைத்துவிடலாம் என்ற நோக்கில் சமூக விரோதிகள் செய்த சதியாக இருக்கலாம் என தெரிய வந்தது. இதற்கிடையில் சேலை தொங்கிய இடத்தில் இருந்து தீப்பொறி விழுவதை கண்ட பயணிகளும், அதிகாரிகளும் பதற்றம் அடைந்தனர்.
பின்னர் ரெயில்வே ஊழியர்கள் நின்ற ரெயிலில் இருந்த நீண்ட கம்பியை எடுத்து வந்து சாதுரியமாக உயர் அழுத்த மின்கம்பியில் சிக்கி இருந்த சேலையை அகற்றினர். இதையடுத்து சுமார் 40 நிமிடம் தாமதமாக விருத்தாசலம் நோக்கி மும்பை ரெயில் புறப்பட்டு சென்றது.
சேலையில் கல்லை கட்டி ரெயிலை தீ விபத்தில் சிக்கவைக்க சதி திட்டம் தீட்டிய மர்ம ஆசாமிகளை ரெயில்வே போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். என்ஜின் டிரைவர் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.