என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Municipal Chairman"
- பேரூராட்சி தலைவர் யுவராஜ் பேரூராட்சி பணியாளர்களை வரவழைத்து, அவர்களுடன் நீர்தேக்த தொட்டிக்குள் இறங்கினார்.
- தலைவரே களம் இறங்கி தூய்மை செய்யும் இந்த செயலை வெகுவாக பாராட்டினார்கள்.
மாமல்லபுரம்:
திருக்கழுக்குன்றம் பேரூராட்சிக்கு உட்பட்ட காக்கைக்குன்று குடிநீர் தேக்க தொட்டியில் இருந்து விநியோகம் செய்யப்படும், குடிநீரில் பாசிகள் கலந்து வருவதாக அப்பகுதி மக்களிடம் இருந்து பேரூராட்சி நிர்வாகத்திற்கு புகார்கள் வந்தது. இதையடுத்து உடனடியாக பேரூராட்சி தலைவர் யுவராஜ் பேரூராட்சி பணியாளர்களை வரவழைத்து, அவர்களுடன் நீர்தேக்த தொட்டிக்குள் இறங்கினார்.
பின்னர் அங்கு படிந்திருந்த சுவர் பாசிகளை அகற்றி, பிளிச்சிங் பவுடர் தூவி சுத்தம் செய்யும் தூய்மை பணியிலும் ஈடுபட்டார். இதை பார்த்த வார்டு உறுப்பினர்கள் மற்றும் பகுதி மக்கள், தலைவரே களம் இறங்கி தூய்மை செய்யும் இந்த செயலை வெகுவாக பாராட்டினார்கள்.
- கடந்த 30 வருடங்களாக நஞ்சம்மாள் என்பவர் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்தார்.
- பணியாற்றிய இத்தனை வருடத்தில் எந்தவிதமான கோபமும் படாமல் பொதுமக்களிடம் நன்மதிப்பை பெற்று வந்துள்ளார்.
கவுண்டம்பாளையம்:
கோவை பெரியநாயக்கன்பாளையம் அடுத்துள்ளது கூடலூர் நகராட்சி.
இந்த நகராட்சியில் கடந்த 30 வருடங்களாக நஞ்சம்மாள் என்பவர் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்தார்.
அவர் தற்போது பணி நிறைவு பெற்றுள்ளார். இவர் பணியாற்றிய 30 வருடங்களில் எந்தவிதமான கோபமும் படாமல் பொதுமக்களிடம் நன்மதிப்பை பெற்று வந்துள்ளார்.
அதுவும் நகராட்சி 19-வது வார்டில் புதுப்புதூர் பகுதியில் மட்டுமே அதாவது ஒரே பகுதியில் மட்டுமே பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நேற்று அவர் பணி நிறைவு பெற்றதை தொடர்ந்து அந்த பகுதி மக்கள் அவரை கவுரவிக்க முடிவு செய்தனர்.
இதற்காக சிறப்பு விழா எடுத்தனர். 19-வது வார்டு நகராட்சி கவுன்சிலர் கவிதாராணி அனைவரையும் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக கூடலூர் நகராட்சித்தலைவர் அ.அறிவரசு கலந்துக்கொண்டார். தொடர்ந்து அந்த பகுதி மக்கள் நஞ்சாம்மாள் வேலை செய்தபோது எப்படி நடந்துக்கொண்டார் என்று பெருமையாக தெரிவித்தனர்.
நகராட்சித்தலைவர் பேசும்போது, பணி நிறைவு பெற்ற நஞ்சம்மாளுக்கு மேற்கொண்டு உதவிகள் செய்யப்படும் என உறுதி அளித்தார்.
தொடர்ந்து நஞ்சம்மாளுக்கு சால்வைகள், சந்தன மாலைகள் அனுவிக்கப்பட்டது. மேலும் பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து பணி நிறைவு பெற்ற நஞ்சம்மாளை கூடலூர் நகராட்சி தலைவர் அ.அறிவரசு தனது ஜீப்பிலேயே அழைத்து சென்று அவரை வீட்டில் விட்டுவிட்டு வந்தார்.
- புதிய வாறுகால் அமைக்கும் பணியை துரிதப்படுத்த கோரி பெண்கள் கோரிக்கை விடுத்தனர்.
- நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி, இது குறித்து கமிஷனரிடம் தெரிவித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் நகராட்சி சங்குபுரம் தெருவில் புதிய வாறுகால் அமைக்கும் பணியை துரிதப்படுத்த கோரி தெருவில் உள்ள பெண்கள் நகராட்சி அலுவலகத்திற்கு வந்து சேர்மனிடம் கோரிக்கை விடுத்தனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சேர்மன் உமா மகேஸ்வரி, இது குறித்து நகராட்சி கமிஷனரிடம் தெரிவித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து வாறுகால் அமைக்கும் பணி தொடங்கப்பட்டு விரைவில் முடிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
- இந்திரா நகர் நகராட்சி தொடக்கப்பள்ளியில் தமிழக அரசு அறிவித்துள்ள காலை சிற்றுண்டி செயல் திட்டத்தை வருகிற மே 15-ந் தேதி முதல் செயல்படுத்தப்பட உள்ளதாக தெரிகிறது.
- அதனைமுன்னிட்டு இந்திரா நகர் நகராட்சி தொடக்கப்பள்ளியில் உள்ள இடத்தை நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி மற்றும் கமிஷனர் (பொறுப்பு) அரிகரன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் ஆதிசங்கர விநாயகர் கோவில் தெருவில் அமைந்துள்ள இந்திரா நகர் நகராட்சி தொடக்கப்பள்ளியில் தமிழக அரசு அறிவித்துள்ள காலை சிற்றுண்டி செயல் திட்டத்தை வருகிற மே 15-ந் தேதி முதல் செயல்படுத்தப்பட உள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில் சங்கரன்கோவிலில் உள்ள 7 நகராட்சி பள்ளிகளுக்கு உணவு தயாரிக்க வேண்டிய சூழ்நிலையில் இந்திரா நகர் நகராட்சி தொடக்கப்பள்ளியில் உள்ள இடத்தை சமையல் கூடமாக மாற்றுவதற்கு போதுமானதாக உள்ளதா என நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி மற்றும் கமிஷனர் (பொறுப்பு) அரிகரன் ஆகியோர் ஆய்வு செய்தனர். ஆய்வின் போது இடங்களை போதுமானதாக இருக்குமா ,உணவு செய்து மற்ற நகராட்சி பள்ளிகளுக்கு கொண்டு செல்ல வாகனங்கள் செல்லும் பாதை சரியாக உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்தனர்.
ஆய்வின் போது நகராட்சி கவுன்சிலர் ராஜேஸ்வரி கந்தன், இளைஞர் அணி சரவணன், அப்பகுதியைச் சேர்ந்த கந்தன், மற்றும் நகராட்சி பணியாளர்கள் உடன் இருந்தனர்.
- சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் உள்ள பணியாளர்களுக்கு முதல்-அமைச்சர் அறிவித்துள்ள பொங்கல் புத்தாடைகள் வழங்கும் நிகழ்ச்சி தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. ஆலோசனையின் படி நடந்தது.
- நிகழ்ச்சிக்கு சங்கரன்கோவில் நகராட்சி சேர்மன் உமாமகேஸ்வரி சரவணன் தலைமை தாங்கினார்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் உள்ள பணியாளர்களுக்கு முதல்-அமைச்சர் அறிவித்துள்ள பொங்கல் புத்தாடைகள் வழங்கும் நிகழ்ச்சி தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. ஆலோசனையின் படி நடந்தது. நிகழ்ச்சிக்கு சங்கரன்கோவில் நகராட்சி சேர்மன் உமாமகேஸ்வரி சரவணன் தலைமை தாங்கினார். கோவில் துணை ஆணையர் ரத்தினவேல்பாண்டியன் முன்னிலை வகித்தார். இதில் கோவில் பணியாளர்களுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டது.
இதில் மாவட்ட துணைச் செயலாளர் புனிதா, கவுன்சிலர்கள் ராஜேஸ்வரி இசக்கியப்பன், அலமேலு, செல்வராஜ், புஷ்பம் , விஜயகுமார் மற்றும் கோவில் ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- கடையநல்லூர் நகராட்சியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தேவையற்ற குப்பைகள் மற்றும் பொருட்களை எரிக்ககூடாது
- பொங்கல் பண்டிகையை சுற்றுச்சூழல் மாசு ஏற்படாத வகையில் புகையில்லா பொங்கலாக கொண்டாட பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
கடையநல்லூர்:
கடையநல்லூர் நகராட்சித் தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கடையநல்லூர் நகராட்சியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தேவையற்ற குப்பைகள் மற்றும் பொருட்களை எரிக்ககூடாது. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை சுற்றுச்சூழல் மாசு ஏற்படாத வகையில் புகையில்லா பொங்கலாக கொண்டாட பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மேலும் பொதுமக்களும், வர்த்தகர்களும் தங்கள் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் இருந்து போகியன்று அப்புறப்படுத்தும் கழிவுப்பொருட்களை நகராட்சி குப்பை சேகரிக்கும் வாகனங்களிலோ அல்லது நகராட்சி குறிப்பிட்டுள்ள கழிவு சேகரிப்பு இடங்களிலோ ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தென்காசி நகராட்சியில் குடிநீர் வினியோகம் செய்வதற்காக புதிய குடிநீர் லாரி வாங்கப்பட்டுள்ளது.
- குடிநீர் லாரி சேவையை நகர்மன்றத்தலைவர் சாதிர் தொடங்கி வைத்தார்.
தென்காசி:
தென்காசி நகராட்சியில் குடிநீர் வினியோகம் செய்வதற்காக ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் சுமார் 6 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட புதிய குடிநீர் லாரி வாங்கப்பட்டுள்ளது.
புதிதாக வாங்கப்பட்டுள்ள இந்த லாரியை பொதுமக்களின் சேவைக்காக நகராட்சி அலுவலகத்தில் வைத்து நகர்மன்ற துணைத்தலைவர் சுப்பையா முன்னிலையில், நகர்மன்றத்தலைவர் சாதிர் தொடங்கி வைத்தார்.
இதில் நகராட்சி ஆணையாளர் பாரிஜான், பொறியாளர் கண்ணன் மற்றும் சுகாதார அலுவலர் முகம்மது இஸ்மாயில், நகர்மன்ற உறுப்பினர்கள் வசந்தி வெங்கடேஸ்வரன், ராமகிருஷ்ண்ணன், முருகன், அபுபக்கர், ஜெயலெட்சுமிசாமி, பூமாதேவி, மகேஸ்வரி, சுனிதா, கார்த்திகா, கல்பனாகங்காதரன், சுல்தான் ஷெரீப்காமில், ஆசிக்முபினாசன்ராஜா, செய்யதுசுலைமான், ரபீக், சுப்பிரமணியன், நாகூர்மீரான், பிரேம்குமார், பொருளாளர் ஷேக்பரீத், வட்ட நிர்வாகிகள் அருணாசலம், சாரதிமுருகன், அருணாச்சலம், மாணவரணி ராஜன், கங்காதரன், சபரிமெஸ்சங்கர், முரளிரஞ்சித் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் துறைசார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் சங்கரன்கோவில் வட்டத்தின் சார்பில் தேசிய மின்சக்தி சிக்கன வார விழா நிகழ்ச்சி நடந்தது.
- நிகழ்ச்சிக்கு செயற்பொறியாளர் பாலசுப்ரமணியன் தலைமை தாங்கினார். உதவி மின் பொறியாளர் கருப்பசாமி வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராக சங்கரன்கோவில் நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன் கலந்து கொண்டு பேசினார்.
சங்கரன்கோவில்:
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் சங்கரன்கோவில் வட்டத்தின் சார்பில் தேசிய மின்சக்தி சிக்கன வார விழா நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு செயற்பொறியாளர் பாலசுப்ரமணியன் தலைமை தாங்கினார். உதவி மின் பொறியாளர் கருப்பசாமி வரவேற்றார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக சங்கரன்கோவில் நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன் கலந்து கொண்டு பேசினார். தொடர்ந்து மின்சிக்கனம் மற்றும் மின் பாதுகாப்புகள் குறித்து உதவி செயற்பொறியாளர்கள் தங்கராஜ், முஜீப்ரகுமான், உதவி கணக்கு அலுவலர் குமுதம் ஆகியோர் பொதுமக்களுக்கு விளக்கி கூறினர்.
தொடர்ந்து மின் சிக்கனம் குறித்து நடைபெற்ற கவிதை, கட்டுரை, ஓவிய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.இதில் இளநிலை பொறியாளர் சங்கரசுப்பிரமணியன், மின்வாரியத்தை சேர்ந்த ராஜலிங்கம், வேலாயுதம், கீதா, பாமிஞானசுவிங்டன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் உதவி செயற்பொறியாளர் தங்கராஜ் நன்றி கூறினார்.
- சுரண்டை நகராட்சி பகுதியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் காங்கிரஸ் நிர்வாகிகள் இளைஞர்களை சந்தித்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வலியுறுத்தி வருகின்றனர்.
- வீட்டின் முன்பு சாக்கடை நீர் மற்றும் மழை நீர் தேங்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என நகராட்சி தலைவர் வள்ளிமுருகன் கூறினார்.
சுரண்டை:
சுரண்டை நகராட்சி பகுதியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் காங்கிரஸ் நிர்வாகிகள் இளைஞர்களை சந்தித்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வலியுறுத்தி வருகின்றனர். மேலும் வரும்முன் காப்போம் என்ற அடிப்படையில் சுரண்டை நகராட்சி பகுதி முழுவதும் டெங்கு கொசு ஒழிப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.பொது மக்களும் முன்னெச்சரிக்கையாக குடிதண்ணீரை காய்ச்சி அருந்த வேண்டும். வீட்டில் முன்பு சாக்கடை நீர் மற்றும் மழை நீர் தேங்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என நகராட்சி தலைவர் வள்ளிமுருகன் கூறினார்.
இளைஞர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் பணியில் நகர மன்ற உறுப்பினர்கள் ராஜ்குமார், வேல்முருகன், மாவட்ட பிரதிநிதி சவுந்தர்,இளைஞர் காங்கிரஸ் தலைவர் கஸ்பா செல்வம் என்ற அருணாசலம்,இளைஞர் காங்கிரஸ் மகேந்திரன்,பாலா,ராதா காங்கிரஸ் நிர்வாகிகள் களப்பணி ஆற்றிவருகின்றனர் எனவும் அவர் கூறினார்.
- மக்களின் கோரிக்கைகளை தமிழக முதல்வர் விரைவாக நிறைவேற்றி வருகிறார்.
- நகராட்சிக்கு தேவைப்படும் அனைத்து திட்டங்களும் படி ப்படியாக நிறைவேற்றப்படும்.
கடையநல்லூர்:
கடையநல்லூர் நகர்மன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மக்களுக்கான அரசாக தமிழக அரசு செயல்பட்டு வருகி றது. மக்களின் கோரிக்கைகளை தமிழக முதல்வர் விரைவாக நிறை வேற்றி வருகிறார். நமது நகராட்சியில் பல்வேறு திட்டப்பணிகள் தொய்வின்றி நடைபெற்று வருகின்றன. நகராட்சிக்கு தேவைப்படும் அனைத்து திட்டங்களும் படி ப்படியாக நிறைவேற்றப்படும்.
நகராட்சிக்கு தேவையான திட்டங்கள் குறித்து துறை அமைச்சர்கள், கலெக்டர் ஆகாஷ் ஆகியோரிடம் மனு அளித்துள்ளேன். கடையநல்லூரில் அனைத்து வசதிகளுடன் கூடிய விளையாட்டு மைதானம், அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தி புதிய கட்டிடம் அமைத்தல், தினசரி சந்தை நெருக்கடிகளை குறைத்து மேம்படுத்துதல், அரசு பெண்கள் மேல்நிலை ப்பள்ளியில் இட வசதியை மேம்படுத்தி, சுகாதார வசதியை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன்.
தாமிரபரணி குடிநீர்
கோடை காலங்களிலும் குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைத்திட தேவையான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது 2 நாளைக்கு ஒரு முறை தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. விரைவில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அனைத்து பகுதிகளுக்கும் தாமிரபரணி தண்ணீரை வழங்க வேண்டும் என பொதுமக்களும், நகர்மன்ற உறுப்பினர்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்ததின் அடிப்படையில் அனைத்து பகுதிகளுக்கும் தாமிரபரணி குடிநீரை வழங்குவதற்கான பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் அனைத்து பகுதிகளுக்கும் தாமிபரணி குடிநீர் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- நகர்மன்ற தலைவர் தயாரிக்கும் சினிமா படபிடிப்பு நடந்தது.
- இதன் படப்பிடிப்பு சிவகங்கையை சுற்றியுள்ள வேம்பங்குடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நடந்து வருகிறது.
சிவகங்கை
சிவகங்கை நகர்மன்ற தலைவரும், தி.மு.க. நகர செயலாளருமான துரைஆனந்த், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த தி.மு.க. முப்பெரும் விழாவில் சிறந்த நகர்மன்ற தலைவர் என்கிற விருதை பெற்றார்.
இந்த நிலையில் அவர் ஆன்லைன் சூதாட்டம் குறித்த விழித்தெழு என்கிற திரைப்படத்தை தயாரித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் நடிகை சிநேகாவின் கணவர் பிரசன்னா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பருத்திவீரன் சரவணன், சுஜாதா உள்ளிட்ட நடிகர், நடிகைகள் நடிக்கும் இந்த படத்தை தமிழ்ச்செல்வன் இயக்குகிறார்.
இதன் படப்பிடிப்பு சிவகங்கையை சுற்றியுள்ள வேம்பங்குடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நடந்து வருகிறது.
- மறைந்த ஆன்மீக சொற்பொழிவாளர் கிருபானந்த வாரியாரின் 116-வது பிறந்தநாள் விழா நிகழ்ச்சி நடந்தது.
- நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன் கலந்து கொண்டு கிருபானந்த வாரியாரின் படத்திற்கு மரியாதை செலுத்தினார்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவிலில் தென்னிந்திய செங்குந்தர் மகாஜன சங்கம் மற்றும் செங்குந்தர் அபிவிருத்தி சங்கம் சார்பில் மறைந்த ஆன்மீக சொற்பொழிவாளர் கிருபானந்த வாரியாரின் 116-வது பிறந்தநாள் விழா நிகழ்ச்சி நடந்தது. தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்க துணைத் தலைவரும், செங்குந்தர் அபிவிருத்தி சங்க செயலாளருமான மாரிமுத்து தலைமை தாங்கினார். செங்குந்தர் அபிவிருத்தி சங்க தலைவர் சங்கரசுப்பிரமணியன், பொருளாளர் குருநாதன், துணைச் செயலாளர் சுப்பிரமணியன், முப்புடாதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன் கலந்து கொண்டு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கிருபானந்த வாரியாரின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அனைத்து நிர்வாகிகளும் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதில் தி.மு.க. கவுன்சிலர்கள் மாரிச்சாமி, செல்வராஜ், ராஜாஆறுமுகம், புஷ்பம், முத்துமாரிபிரகாஷ், அ.தி.மு.க. கவுன்சிலர்கள் சங்கரசுப்பிரமணியன், மாரிச்சாமி, முத்துலட்சுமி, தி.மு.க. நகர நிர்வாகிகள் மாரிசாமி, பிரகாஷ், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் சரவணன், செங்குந்தர் அபிவிருத்தி சங்க செயற்குழு உறுப்பினர்கள் முருகேசன், சுப்பிரமணியன், முத்தையா, மற்றொரு சுப்பிரமணியன், சிவராமன், ஆறுமுகம் மற்றும் மாரிமுத்து, மாரியப்பன், நடராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை செங்குந்த முன்னேற்ற சங்க தலைவர் கந்தவேல், செயலாளர் செல்வ கணேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்து இருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்