search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்காசி நகராட்சியில் குடிநீர் வினியோகம் செய்ய ரூ.22 லட்சத்தில் லாரி -நகர்மன்ற தலைவர் தொடங்கி வைத்தார்
    X

    புதிய குடிநீர் லாரியை நகர்மன்ற தலைவர் சாதிர் தொடங்கி வைத்த காட்சி. அருகில் துணைத்தலைவர் சுப்பையா மற்றும் பலர் உள்ளனர்.

    தென்காசி நகராட்சியில் குடிநீர் வினியோகம் செய்ய ரூ.22 லட்சத்தில் லாரி -நகர்மன்ற தலைவர் தொடங்கி வைத்தார்

    • தென்காசி நகராட்சியில் குடிநீர் வினியோகம் செய்வதற்காக புதிய குடிநீர் லாரி வாங்கப்பட்டுள்ளது.
    • குடிநீர் லாரி சேவையை நகர்மன்றத்தலைவர் சாதிர் தொடங்கி வைத்தார்.

    தென்காசி:

    தென்காசி நகராட்சியில் குடிநீர் வினியோகம் செய்வதற்காக ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் சுமார் 6 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட புதிய குடிநீர் லாரி வாங்கப்பட்டுள்ளது.

    புதிதாக வாங்கப்பட்டுள்ள இந்த லாரியை பொதுமக்களின் சேவைக்காக நகராட்சி அலுவலகத்தில் வைத்து நகர்மன்ற துணைத்தலைவர் சுப்பையா முன்னிலையில், நகர்மன்றத்தலைவர் சாதிர் தொடங்கி வைத்தார்.

    இதில் நகராட்சி ஆணையாளர் பாரிஜான், பொறியாளர் கண்ணன் மற்றும் சுகாதார அலுவலர் முகம்மது இஸ்மாயில், நகர்மன்ற உறுப்பினர்கள் வசந்தி வெங்கடேஸ்வரன், ராமகிருஷ்ண்ணன், முருகன், அபுபக்கர், ஜெயலெட்சுமிசாமி, பூமாதேவி, மகேஸ்வரி, சுனிதா, கார்த்திகா, கல்பனாகங்காதரன், சுல்தான் ஷெரீப்காமில், ஆசிக்முபினாசன்ராஜா, செய்யதுசுலைமான், ரபீக், சுப்பிரமணியன், நாகூர்மீரான், பிரேம்குமார், பொருளாளர் ஷேக்பரீத், வட்ட நிர்வாகிகள் அருணாசலம், சாரதிமுருகன், அருணாச்சலம், மாணவரணி ராஜன், கங்காதரன், சபரிமெஸ்சங்கர், முரளிரஞ்சித் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் துறைசார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×