search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mysterious animal"

    • கிருஷ்ணசாமி வளர்த்து வந்த 3 கோழிகளையும் மர்ம விலங்கு கடித்து கொன்றது தெரிய வந்தது.
    • டந்த 2 வருடங்களுக்கு முன்பும் இதே பகுதியில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை மர்ம விலங்கு கடித்துக் கொன்று வந்தது.

    சிவகிரி:

    ஈரோடு மாவட்டம் சிவகிரி அடுத்த தாண்டாம் பாளையம், 3 ரோடு பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி (55). விவசாயி. இவர் மாடு, ஆடு, கோழி போன்ற கால்நடைகளை வளர்த்து வருகிறார்.

    மாடுகளை வீட்டின் பின்பகுதியில் உள்ள தொழுவத்தில் கட்டியிருந்தார். கடந்த 20 நாட்களுக்கு முன்புதான் அவரது மாடு ஒன்று கிடாரி கன்றுக்குட்டி ஒன்றை ஈன்று இருந்தது.

    இந்நிலையில் இன்று காலை எழுந்த கிருஷ்ணசாமி கால்நடைகளை தீவனம் வைக்க வந்தார். அப்போது தொழுவத்தில் இருந்த பிறந்த 20 நாட்களே ஆன கிடாரி கன்றுக்குட்டியை மர்ம விலங்கு கடித்துக்கொன்றது தெரிய வந்தது.

    இதுபோல் அருகே கிருஷ்ணசாமி வளர்த்து வந்த 3 கோழிகளையும் மர்ம விலங்கு கடித்து கொன்றது தெரிய வந்தது. கன்றுக்குட்டியின் பாதி உடலையும், கோழிகளின் பாதி உடலையும் அந்த மர்ம விலங்கு கடித்து தின்று உள்ளது.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கிருஷ்ணசாமி இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அங்கு ஏதும் மர்ம விலங்கு கால் தடங்கல் பதிவாகியுள்ளதா? என்று ஆய்வு செய்து வருகின்றனர்.

    இந்த தகவல் அந்த பகுதியில் காட்டுத்தீ போல் பரவியதால் கிருஷ்ணசாமி வீட்டுக்கு ஏராளமானோர் திரண்டு வந்தனர். இதனால் அந்த பகுதியில் கால்நடைகளை வளர்க்கும் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். கடந்த 2 வருடங்களுக்கு முன்பும் இதே பகுதியில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை மர்ம விலங்கு கடித்துக் கொன்று வந்தது.

    பின்னர் வனத்துறையினரின் தீவிர விசாரணையில் அந்த மர்ம விலங்கு நாய்கள் என தெரிய வந்தது. தற்போதும் மர்ம விலங்கு கடித்து கன்றுக்குட்டி, கோழிகள் இறந்துள்ளதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

    • வனத்துறையினர் விடிய, விடிய ரோந்து
    • கிராம மக்கள் வீட்டிற்க்குள்ளேயே முடங்கினர்

    ஆலங்காயம்:

    வாணியம்பாடி அடுத்த மதனாஞ்சேரி கிராமத்தில் கடந்த சில நாட்களாக மர்ம விலங்கு ஊருக்குள் புகுந்து ஆடுகளை கடித்து குதறுவது தொடர்கதையாக உள்ளது.

    இதுகுறித்து கிராம மக்கள் வாணியம்பாடி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் தொடர்ந்து அந்த கிராமத்தில் கண்காணித்து வந்தனர்.

    இந்தநிலையில் முருகன்குட்டை கிராமத்தை சேர்ந்த திருவேல், கருணாகரன், சங்கத்து வட்டத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் மற்றும் தவமணி ஆகியோர் வளர்த்து வந்த 15 ஆடுகளை மர்ம விலங்கு கடித்து குதறியது.இதில் 7 ஆடுகள் பரிதாபமாக இறந்தது. 8 ஆடுகள் பலத்த காயம் அடைந்தது. கால்நடை ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்து வந்த நிலையில் மேலும் 3 ஆடுகள் பலியானது.

    கிராம மக்கள் அச்சம்

    தகவல் அறிந்த வனத்துறையினர் மற்றும் வாணியம்பாடி தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். ஊருக்குள் புகுந்து ஆடுகளை கடித்து குதறிய மர்ம விலங்கால் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.

    இதனால் பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியே வராமல் வீட்டிற்க்குள்ளேயே முடங்கினர்.

    வனத்துறையினர் அந்த பகுதியில் முகாமிட்டு கண்காணித்து வருகின்றனர். மதனாஞ்சேரி, சங்கத்து வட்டம் மற்றும் முருகன்கு ட்டை உள்ளிட்ட பகுதிகளில் வனத்துறை யினர் நேற்று இரவு முழுவதும் விடிய, விடிய ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    மேலும் கிராமத்தில் சுற்றி திரியும் மர்ம விலங்கை விரைந்து பிடிக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

    • மர்மவிலங்கால் பாதிக்கப்பட்ட பகுதியை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
    • விலங்கை பிடிக்க கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளதையும் பார்வையிட்டார்.

    அறச்சலூர்:

    ஈரோடு மாவட்டம் அறச்சலூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள தொழுவங்களில் கட்டப்பட்டுள்ள கால்நடைகளை இரவில் வரும் மர்மவிலங்கு இழுத்து சென்றுவருகிறது. இதனால் அச்சம் அடைந்துள்ள பொதுமக்கள் இது குறித்து ஈரோடு மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

    இதனை அடுத்து வீட்டுவசதித்துறை அமை ச்சர் முத்துசாமி மற்றும் ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா ஆகியோர் அறச்சலூரில் மர்மவிலங்கால் பாதிக்கப்பட்ட பகுதியை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர் சம்பந்தப்பட்ட பகுதிகளில் உலாவும் விலங்கை பிடிக்க கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளதையும் பார்வையிட்டார். இதில் வனத்துறை அதிகாரி சுதாகரும் கலந்து கொண்டார்.

    • கோவிலை சுற்றி அடர்ந்த மரங்கள் உள்ளன.இந்த நிலையில் இந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் தங்கள் ஆடுகளை கோவிலை சுற்றியுள்ள பகுதிக்கு மேய்ச்சலுக்கு விடுவது வழக்கம்.
    • இதில் 3 ஆடுகள் திடீரென காணாமல் போனது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த காருவள்ளி ஊராட்சியில் வெங்கட்ரமண கோவில் உள்ளது. இந்த கோவிலை சுற்றி அடர்ந்த மரங்கள் உள்ளன.இந்த நிலையில் இந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் தங்கள் ஆடுகளை கோவிலை சுற்றியுள்ள பகுதிக்கு மேய்ச்சலுக்கு விடுவது வழக்கம். கடந்த 15 நாட்களுக்கு முன்பு சீனி என்பவர் தனது ஆடுகளை மேச்சலுக்காக அவிழ்த்து விட்டதாக தெரிகிறது. இதில் 3 ஆடுகள் திடீரென காணாமல் போனது. இதையடுத்து ஆடுகளை தேடியபோது அங்குள்ள கரட்டு பகுதியில் 3 ஆடுகளும் மர்ம விலங்கு கடித்து இறந்து கிடந்தது. இதை பார்த்து சீனி அதிர்ச்சி அடைந்தார். இது சம்பந்தமாக சீனி டேனிஷ்பேட்டை அலுவலர் தங்கராஜூக்கு தகவல் கொடுத்தார். மர்ம விலங்கு நடமாட்டம் இருந்தால் கால்தடம் பதிந்து இருக்கும். அப்படி இருந்தால் இந்த பகுதியில் முகாமிட்டு மர்ம விலங்கை பிடித்து விடுவோம் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். 

    • சுமார் 100-க்கும் மேற்பட்ட விலங்குகளை மர்ம விலங்கு கடித்து குதறியதால் விவசாயிகள் கால்நடைகளை பாதுகாக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
    • ரவிச்சந்திரன் வன விலங்குகளால் கடித்துக் பரிதாபமாக உயிரிழந்த ஆடுகளை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள நையினார்பாளையம் வனப்பகுதி அருகே உள்ள வீடுகளில் விவசாயிகளின் கால்நடைகளை மர்ம வனவிலங்கு கடித்துக் கொண்டு வருவதால் விவசாயிகள் கடுமையான பீதி அடைந்து உள்ளனர். கடந்த சில மாதங்களாகவே சுமார் 100-க்கும் மேற்பட்ட விலங்குகளை மர்ம விலங்கு கடித்து குதறியதால் விவசாயிகள் கால்நடைகளை பாதுகாக்க முடியாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில் நைனார்பாளையம் வனப்பகுதி அருகே உள்ள ரவிச்சந்திரன் என்பவரது வீட்டில் சுமார் 15 கால்நடைகளை பட்டியில் வழக்கம்போல் அடைத்துள்ளார். இதனை அடுத்து நள்ளிரவில் பட்டியில் புகுந்த மர்ம விலங்குகள் கடித்து கொடூரமாக கடித்ததில் 13 ஆடுகள் ரத்த காயத்துடன் துடி துடித்து பரிதாபமாக உயிரிழந்தன.

    இன்று காலையில் இதனைக் கண்ட ரவிச்சந்திரன் வன விலங்குகளால் கடித்துக் பரிதாபமாக உயிரிழந்த ஆடுகளை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை அதிகாரிகள், வனத்துறை வனவர் சத்தியாபிரியா, வனகாப்பளர் வேல்முருகன், பாபு, அனுமனந்தல் கால்நடை மருத்துவர் சரண்யா மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ரஞ்சித் குமார் ஆகியோர் தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்து ஆடுகளை கடித்த வனவிலங்கு எது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • ஒரு ஆடு மட்டும் காணாமல் போனதால் சகுந்தலா அப்பகுதியில் தேடி பார்த்தார்.
    • வாழைத்தோட்டத்தில் காணாமல் போன ஆடு இறந்து கிடந்தது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள நகலூர் அடுத்த பெருமா பாளையம் அழகு நகரை சேர்ந்தவர் சகுந்தலா. இவர் சுமார் 10-க்கும் மேற்பட்ட வெள்ளாடுகள் வளர்த்து வருகிறார்.

    இந்நிலையில் மேய்ச்சலுக்கு ஓட்டி சென்ற ஆடுகளை சகுந்தலா இரவு வழக்கம் போல் தனது வீட்டின் அருகே கட்டி வைத்துள்ளார்.

    பின்னர் இன்று காலையில் எழுந்து பார்த்த போது ஒரு ஆடு மட்டும் காணாமல் போனதால் அதிர்ச்சி அடைந்த சகுந்தலா அப்பகுதியில் தேடி பார்த்தார்.

    அப்போது அதே பகுதியில் உள்ள சாமி யாத்தாள் என்பவரது வாழைத்தோட்டத்தில் காணாமல் போன ஆடு இறந்து கிடந்தது. கட்டுத்தறியில் கட்டப்பட்டிருந்த ஆட்டை மர்ம விலங்கு கவ்வி சென்று கொன்றிருக்க லாம் என்று கூறப்படுகிறது.

    இந்நிலையில் இது குறித்து நகலூர் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் அந்தியூர் வனத்துறையி னருக்கு தகவல் தெரி விக்கப்பட்டது. மர்ம விலங்கால் ஆடு கொல்ல ப்பட்ட சம்பவம் அப்பகுதி யில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • ஆட்டுப்பட்டியில் தனது வெள்ளாடுகளை அடைத்து வைத்து விட்டு இரவு வீட்டுக்கு சென்று விட்டார்.
    • அரசு கால்நடை மருத்துவ குழுவினர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து ஆய்வு செய்தனர்.

    காங்கயம் :

    திருப்பூர் மாவட்டம் முத்தூர் அருகே உள்ள ரங்கப்பையன்காடு கிராமத்தை சேர்ந்தவர் நல்லக்கண்ணன். கிணறு வெட்டும் தொழிலாளி. இவர் வருமானம் ஈட்டுவதற்காக வெள்ளாடுகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் நல்லக்கண்ணன் சேரம்பாளையம் அஷ்–ட–லட்–சுமி நகர் பகுதியில் தனக்கு சொந்தமான இடத்தில் ஆட்டுப்பட்டி அமைத்து உள்ளார்.

    இந்த ஆட்டுப்பட்டியில் தனது வெள்ளாடுகளை அடைத்து வைத்து விட்டு இரவு வீட்டுக்கு சென்று விட்டார். பின்னர் காலை ஆட்டுப்பட்டிக்கு சென்று பார்த்த போது உள்ளே இருந்த 10 வெள்ளாடுகளும் ரத்தம் சிந்திய நிலையில், தலை, கழுத்து, உடம்பு பகுதி முழுவதும் மர்ம விலங்கு கடித்து குதறிய நிலையில் அங்கொன்றும், இங்கொன்றுமாக இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது பற்றி தகவல் அறிந்த வெள்ளகோவில் போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதில் போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் , நல்லக்கண்ணன் ஆட்டுப்பட்டிக்குள் நள்ளிரவு நேரத்தில் ஏதோ மர்ம விலங்கு அல்லது வெறி நாய் உள்ளே புகுந்து அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த வெள்ளாடுகளை கடித்து குதறி விட்டு சென்றதும், இதனால் 10 வெள்ளாடுகளும் பரிதாபமாக உயிரிழந்ததும் தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து முத்தூர் அரசு கால்நடை மருத்துவ குழுவினர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து உயிரிழந்த வெள்ளாடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் இறந்த அனைத்து வெள்ளாடுகளும் அப்பகுதியில் குழி தோண்டி புதைக்கப்பட்டன. ஆட்டுப்பட்டிக்குள் மர்ம விலங்கு அல்லது வெறி நாய் புகுந்து கடித்து குதறியதில் உயிரிழந்த 10 வெள்ளாடுகளின் மதிப்பு சுமார் ரூ.80 ஆயிரம் ஆகும்.

    மேலும் உயிரிழந்த வெள்ளாடுகளுக்கு மாவட்ட நிர்வாகம், வருவாய் துறை அதிகாரிகள் மூலம் உரிய இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என்று நல்லக்கண்ணன் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • 3 ஆடுகளை கடித்து கொன்றது
    • 10-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் தொடர்ந்து 3 நாட்கள் முகாமிட்டுள்ளனர்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்டம், கந் திலி யூனியன் சிம்மணபுதூர் பஞ். பழனி வட்டத்தை சேர்ந்தவர் கோவிந் தராஜ். விவசாயி.

    இவர் நிலத்தின் அருகே கொட்டகை அமைத்து கால்நடைகளை வளர்த்து வருகிறார். நேற்று காலை தனது விவசாய நிலத்தில் 3 ஆடுகளை மேய்க்க விட்டு விட்டு வீட்டிற்கு சென்றார்.

    சிறிது நேரம் கழித்து நிலத்துக்கு வந்து பார்த்தார். அப்போது அங்கு மேய்ந்து கொண்டிருந்த 3 ஆடுகளையும் மர்ம விலங்கு கடித்து இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், கடந்த ஒரு மாதமாக வனப்பகுதிகளில் இருந்து இரவு நேரங்களில் மர்ம விலங்கு ஒன்று ஆடுகளை வேட்டையாடிகிறது. தற்போது பகல் நேரங்களிலேயே உலா வர தொடங்கியுள்ளது.

    இதுகுறித்து வனத்துறையினரிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆடுகளைக் கடித்தது வெறிநாய், செந்நாய், சிறுத்தையா என்பது தெரியவில்லை.

    இதனால் பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாமல் அச்சத்தில் முடங்கியுள்ளனர்.

    ஆடுகளை வேட்டையாடும் வனவிலங்குகளை கண்டறிந்து, பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ள அச்சத்தை நீக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதுகுறித்து திருப்பத்தூர் வனத் துறையினரிடம் கேட்டதற்கு, சம்பந்தப்பட்ட பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் இல்லை என்பது உறுதியாகி உள்ளது. ஆடுகள் இறந்த பகுதியில் ஆய்வு செய்த போது அதில் நாய்களின் கால் தடம் மட்டுமே பதிவாகியுள்ளது. இருப்பினும் ஆடுகளை வேட்டை யாடுவது எந்த விலங்கு என கண் டறிய வனசரக அலுவலர் பிரபு தலைமையில் 10-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் தொடர்ந்து 3 நாட்கள் முகாமிட்டுள்ளனர்.

    மேலும், இரவு நேரங்களில் துல்லியமாக பதிவு செய்யும் அதி நவீன கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதில் மர்ம விலங்கு நடமாட்டத்தை கண்காணிக்கப்படும் என்றனர்.

    • கிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான 20-க்கும் மேற்பட்ட கோழிகளை மர்ம விலங்கு பிடித்து சென்று கடித்து கொன்றது. மர்மவிலங்கு கடித்த இவரது நாய் இறந்துகிடந்தது,
    • மர்ம விலங்கின் நடமா ட்டத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்,

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட காரனூர் கிராமத்தில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் மர்ம விலங்கு நடமாட்டம் இருப்பதாக அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தெரிவித்து வந்தனர்   கடந்த சில நாட்களுக்கு முன்பு காரனூர் கிராமத்தில் கிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான 20-க்கும் மேற்பட்ட கோழிகளை மர்ம விலங்கு பிடித்து சென்று கடித்து கொன்றது    இதனை தொடர்ந்து விளை நிலத்தில் மர்ம விலங்கு கடித்து நாய் இறந்து கிடந்தது. இது குறித்து அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அ தன்படி விழுப்புரம் மாவட்ட வன அலுவலர் சுமே ஷ்சோமன், கள்ளக்குறிச்சி வனச்சரக அலுவலர் கோவிந்தராஜி, வனவர் சின்னதுரை ஆகியோர் காரனுாரில் மர்ம விலங்கு நடமாட்டம் இருப்பதாக கூறப்பட்ட வயல் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்

    . அங்கு விளைநிலத்தில் பதிந்திருந்த மர்மவிலங்கின் கால் தடத்தை ஆய்வு செய்தனர்  மேலும் மர்ம விலங்கின் எச்சத்தை சேகரித்து ஆய்வுக்காக சென்னைக்கு அனுப்பி வைத்தனர். மர்ம விலங்கின் நடமாட்டத்தை கண்காணிக்க 2 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்துவதாகவும், இரவு நேரங்களில் பொது மக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என வனத்துறை அதிகாரிகள் பொதுமக்களிடம் அறிவுறுத்தியுள்ளனர்  இதேபோல் ஊராட்சி நிர்வாகம் சார்பில் மர்ம விலங்கு சுற்றி திரிவதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும், கால்நடைகளை பாதுகா ப்பாக வைத்து கொள்ளவும் ஒலிப்பெருக்கி மூலம் அறிவுறுத்தப்பட்டது   கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் குறிப்பாக நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வயல் பகுதிகளில் மர்ம விலங்குகளின் நடமாட்டம் இருப்பதாகவும், இந்த விலங்கு செந்நாய், சிறுத்தை, கரடி, காட்டுப் பூனை ஆகிய வற்றில் ஏதாவது ஒன்றாக இருக்கலாம் எனவும் அப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர்   மர்ம விலங்கின் நடமா ட்டத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளதாகவும், வனத்துறையினர் இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆவுடையானுர் ஊரணி அருகே ஆசாரி தெருவில் வசித்து வருபவர் மஞ்சிஈஸ்வரன். இவர் தனது கோவிலின் நேர்த்திக் கடனுக்காக 2 ஆடுகளை வாங்கி வளர்த்து வந்துள்ளார்.
    • முதலில் ஆடுகளை நாய்கள் தான் கடித்ததாக கூறப்பட்ட நிலையில் பொதுமக்கள் பலரும் அதனை கண்டு நாய்கள் கடிக்கவில்லை. வேறு ஏதேனும் மர்ம விலங்கு கடித்து உள்ளது என கூறிவருகின்றனர்.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆவுடையானுர் ஊரணி அருகே ஆசாரி தெருவில் வசித்து வருபவர் மஞ்சிஈஸ்வரன். இவர் தனது கோவிலின் நேர்த்திக் கடனுக்காக 2 ஆடுகளை வாங்கி வளர்த்து வந்துள்ளார்.

    இந்நிலையில் நேற்று இரவில் தனது வீட்டின் முகப்பு பகுதியில் வழக்கம் போல் 2 ஆடுகளையும் கட்டி போட்டுவிட்டு வீட்டின் உள்ளே தூங்கியுள்ளார். இன்று காலையில் எழுந்து ஆடுகளை பார்த்த பொழுது 2 ஆடுகளையும் மர்ம விலங்கு கடித்து குதறி போட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    முதலில் ஆடுகளை நாய்கள் தான் கடித்ததாக கூறப்பட்ட நிலையில் பொதுமக்கள் பலரும் அதனை கண்டு நாய்கள் கடிக்கவில்லை. வேறு ஏதேனும் மர்ம விலங்கு கடித்து உள்ளது என கூறிவருகின்றனர்.

    இதனால் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆடுகளை கடித்து குதறிய மர்ம விலங்குகள் என்னவென்று வனத்துறை அதிகாரிகள் இன்று காலையில் வந்து ஆய்வு செய்து உள்ளனர்.

    ஏற்கனவே அப்பகுதியில் சில நாட்களுக்கு முன்பு ஒரு வீட்டில் வைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிராவில் சிறுத்தை போன்ற மர்ம விலங்கு ஒன்று சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. எனவே பொதுமக்களும் தற்பொழுது அந்த விலங்காக தான் இருக்குமோ என்று அச்சத்தில் உறைந்துள்ளனர்.

    • மர்மவிலங்கு தாக்கி 50க்கும் மேற்பட்ட ஆடுகள் உயிரிழந்தன.
    • வனத்துறை சார்பில், கேமரா அமைத்து கண்காணிக்கப்பட்டது.

    உடுமலை :

    உடுமலை சின்னவீரம்பட்டி, பெரியகோட்டை சுற்றுப்பகுதிகளில் சில மாதங்களுக்கு முன் மர்மவிலங்கு தாக்கி 50க்கும் மேற்பட்ட ஆடுகள் உயிரிழந்தன. இதையடுத்து வனத்துறை சார்பில், கேமரா அமைத்து கண்காணிக்கப்பட்டது.

    இதில் எந்த தீர்வும் எட்டப்படவில்லை. இந்நிலையில் சின்னவீரம்பட்டி இந்திராநகரைச்சேர்ந்த விவசாயி தங்கவேலு பட்டியில் மர்மவிலங்கு புகுந்து ஆடுகளை தாக்கியுள்ளது.இதில் பலத்த காயமடைந்த 2 ஆடுகள் உயிரிழந்தன. அப்பகுதிகளில்மர்மவிலங்கும் நடமாட்டம் மீண்டும் துவங்கியுள்ளது விவசாயிகளிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • திகினாரை அருகே உள்ள ரங்கசாமி கோவில் அருகில் மானாவாரி நிலத்தில் மர்ம விலங்கு கடித்து நாய் ஒன்று இறந்து கிடந்தது.
    • இதனால் அப்பகுதி விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.

    தாளவாடி:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரங்கள் உள்ளன. இதில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. வனவிலங்கு அவ்வப்போது விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்வதும், கால்நடைகளை வேட்டையாடி வருவதும் தொடர்கதை ஆகிய வருகிறது.

    இந்த நிலையில் இன்று காலை ஜீர்கள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட திகினாரை அருகே உள்ள ரங்கசாமி கோவில் அருகில் மானாவாரி நிலத்தில் மர்ம விலங்கு கடித்து நாய் ஒன்று இறந்து கிடந்தது. இது பற்றி ஜீர்கள்ளி வனத்துறைக்கு அப்பகுதி விவசாயிகள் தகவல் அளித்தனர்.


    இதே போல் கடந்த சில நாட்களுக்கு முன்பு நாய் இதே பகுதியில் மர்ம விலங்கு கடித்து உயிர் இழந்தது குறிப்பிடத்தக்கது. புலி அல்லது சிறுத்தை வனப்பகுதியில் இருந்து வந்து நாயை வேட்டையாடி இருக்கலாம் என விவசாயிகள் கருதுகின்றன. இதனால் அப்பகுதி விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.

    ×