என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Nadal"
- டென்னிஸ் போட்டிகளில் இருந்து ரபேல் நடால் விலகுவதாக அறிவிப்பு.
- இந்தியன் வெல்ஸ் அல்லது மியாமி டென்னிசில் என்னால் போட்டியிட முடியாமல் போனதில் வருத்தம்.
முன்னனி டென்னிஸ் வீரர் ரபேல் நடால். ஸ்பெயினை சேர்ந்த அவர் சமீப காலமாக காயத்தால் அவதி அடைந்து வருகிறார்.
அவருக்கு இடுப்பு பகுதியில் தசை கிழிந்து இருப்பது தெரியவந்தது. இதற்கு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் இந்தியன் வெல்ஸ் மற்றும் மியாமி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டிகளில் இருந்து ரபேல் நடால் விலகுவதாக அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறும்போது, " இந்தியன் வெல்ஸ் அல்லது மியாமி டென்னிசில் என்னால் போட்டியிட முடியாமல் போனதில் வருத்தமாக உள்ளது. எனது அனைத்து அமெரிக்க ரசிகர்களையும் மிஸ் பண்ணுவேன்" என்று கூறியுள்ளார்.
- முதல் செட்டை நடால் 2-6 என்ற கணக்கில் நடால் இழந்தார்.
- பெண்கள் ஒற்றையர் பிரிவில் இகா ஸ்வியாடெக் (போலந்து) 2-வது சுற்றில் ஸ்டெப்ஹென்சை எதிர்கொண்டார்.
நியூயார்க்:
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.
உலக தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ளவரும், 22 கிராண்ட்சிலாம் பட்டம் வென்றவருமான ரபெல் நடால் (ஸ்பெயின்) 2-வது சுற்றில் இத்தாலியை சேர்ந்த பேபியோ போக்னியை எதிர் கொண்டார்.
இதன் முதல் செட்டை நடால் 2-6 என்ற கணக்கில் இழந்தார். அதன் பின்னர் அவர் சுதாரித்து விளையாடி தொடர்ந்து 3 செட்களில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். ஸ்கோர் 2-6, 6-4, 6-2, 6-1.
மற்ற ஆட்டங்களில் 3-வது வரிசையில் உள்ள கார்லோஸ் அல்காரஸ் (ஸ்பெயின்), 11-ம் நிலை வீரரான சின்னர் (இத்தாலி), ஆகியோர் வெற்றி பெற்றனர்.
17-வது வரிசையில் இருக்கும் டிமிட்ரோவ் (பல்கேரியா), போர்னா கோரிக் (குரோஷியா) ஆகியோர் அதிர்ச்சிகரமாக தோற்றனர்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் நம்பர் ஒன் வீராங்கனையான இகா ஸ்வியாடெக் (போலந்து) 2-வது சுற்றில் அமெரிக்காவை சேர்ந்த ஸ்டெப்ஹென்சை எதிர் கொண்டார். இதில் இகா 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
இன்னொரு ஆட்டத்தில் 9-வது இடத்தில் உள்ள அமெரிக்க வீராங்கனை ஜெசிகா பெகுலா 6-4 , 6-4 என்ற நேர் செட் கணக்கில் அலியா சாண்ட்ராவை ( பெலாரஸ்) வீழ்த்தினார்.
மற்ற ஆட்டங்களில் 6-வது இடத்தில் உள்ள ஷபலென்கா (பெலாரஸ்) 9-வது வரிசையில் உள்ள முகுருஜா (ஸ்பெயின்), 19-ம் நிலை வீராங்கனையான டேனிலி கோலின்ஸ் ( அமெரிக்கா ) , 21-வது வரிசையில் உள்ள பெட்ரோ கிவிட்டோவா ( செக் குடியரசு ) ஆகியோர் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.
4-வது வரிசையில் உள்ள பவுலா படோசா (ஸ்பெயின்) 7-6, (7-5), 1-6, 2-6 என்ற கணக்கில் பெட்ரோ மேட்ரிக்கிடம் (குரோஷியா) அதிர்ச்சிகரமாக தோற்றார்.
- நடால் 2-வது சுற்றில் இத்தாலியை சேர்ந்த பேபியோ போக்னினியை சந்திக்கிறார்.
- எம்மா ரடுகானு முதல் சுற்றிலேயே தோற்று அதிர்ச்சிகரமாக வெளியேறினார்.
நியூயார்க்:
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.
உலகின் இரண்டாம் நிலை வீரரும், 22 கிராண்ட் சிலாம் பட்டம் வென்ற சாதனையாளருமான ரபேல் நடால் (ஸ்பெயின்) முதல் சுற்றில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ரிங்கி ஹிஜிகடாவை எதிர்கொண்டார்.
'வைல்டு கார்டு' வீரரான ரிங்கி முதல் செட்டை 6-4 என்ற கணக்கில் வென்று அதிர்ச்சி கொடுத்தார். ஆனால் பின்னர் நடால் சுதாரித்து விளையாடி தொடர்ந்து 3 செட்களையும் வென்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். ஸ்கோர் 4-6, 6-2, 6-3, 6-3
நடால் 2-வது சுற்றில் இத்தாலியை சேர்ந்த பேபியோ போக்னினியை சந்திக்கிறார்.
செபாஸ்டியனுக்கு (அர்ஜென்டினா) எதிரான ஆட்டத்தில் 3-வது வரிசை யில் உள்ள கார்லோஸ் அல்காரஸ் (ஸ்பெயின்), 7-5, 7-5, 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தார்.அப்போது செபாஸ்டியன் காயத்தால் வெளியேறினார். இதனால் அல்காரஸ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
மற்ற ஆட்டங்களில் ஜான் இஸ்னெர் (அமெரிக்கா), சின்னெர் (இத்தாலி), டிமிட்ரோவ் (பல்கேரியா) போன்ற முன்னணி வீரர்கள் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் 8-வது வரிசையில் உள்ள ஜெசிகா பெகுலா (அமெரிக்கா) தொடக்க சுற்றில் சுவிட்சர்லாந்தை சேர்ந்த கோல் பிக்கை எதிர்கொண்டார்.
இதில் பெகுலா 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வென்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்ற முதல் சுற்று ஆட்டங்களில் ஸ்டெப் ஹென்ஸ் (அமெரிக்கா), யுலியா புதின் சேவா (ரஷியா) ஜூலி நெய்மா (ஜெர்மனி) ஆகியோர் வெற்றி பெற்றனர்.
11-வது வரிசையில் உள்ள எம்மா ரடுகானு (இங்கிலாந்து), முதல் சுற்றிலேயே தோற்று அதிர்ச்சிகரமாக வெளியேறினார். பிரான்சை சேர்ந்த அலிசியா தோர்னெட் 6-3, 6-3 என்ற நேர்செட் கணக்கில் ரடுகானுவை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
இதே போல 16-வது வரிசையில் உள்ள ஜெலீனா ஒஸ்டாபென்கோ (லாத்வியா), 24-ம் நிலை வீராங்கனையான அமண்டா அனிஷ்மோவா (அமெரிக்கா), 25-வது வரிசையில் உள்ள எலீனா ரைபகினா (கஜகஸ்தான்), 32-வது இடத்தில் இருக்கும் மெர்டன்ஸ் (பெல்ஜியம்) ஆகியோரும் முதல் சுற்றில் அதிர்ச்சிகரமாக தோற்றனர்.
இந்த ஆண்டின் 2-வது கிராண்ட்சிலாம் போட்டியான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் இன்று தொடங்குகிறது. ஜூன் 9-ந்தேதிவரை இந்த போட்டி நடக்கிறது.
உலகின் முதல்நிலை வீரரான ஜோகோவிச், நடப்பு சாம்பியனும், 2-ம் நிலை வீரருமான ரபெல் நடால் (ஸ்பெயின்), ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து), டொமினிக் தீயெம் (ஆஸ்திரியா), அலெக்ஸாண்டர் ஸ்வரேவ் (ஜெர்மனி) போன்ற முன்னணி வீரர்கள் பங்கேற்கிறார்கள்.
பெண்கள் பிரிவில் முதல் நிலை வீராங்கனை ஒசாகா, நடப்பு சாம்பியன் சிமோனா ஹாலெப், கரோலினா, கெர்பர் மற்றும் 10-ம் நிலை வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா), போன்ற முன்னணி வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.
பிரெஞ்ச் ஓபன் போட்டியில் நடால் இதுவரை 11 பட்டங்களை வென்றுள்ளார். 2005, 2006, 2007, 2008, 2010, 2011, 2012, 2013, 2014, 2017, 2018 ஆகிய ஆண்டுகளில் பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை வென்று இருந்தார். அவர் 12-வது முறையாக பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை வென்று சாதிப்பாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒட்டுமொத்தமாக 18-வது கிராண்ட்சிலாம் பட்டத்துக்காக காத்து இருக்கிறார்.
ஜோகோவிச், பெடரர் ஆகியோர் அவருக்கு கடும் சவாலாக விளங்குவார்கள். பெடரர் 20 கிராண்ட்சிலாம் பட்டம் வென்று முதல் இடத்திலும், ஜோகோவிச் 15 பட்டம் வென்று 3-வது இடத்திலும் உள்ளனர்.
பெண்கள் பிரிவில் செரீனா வில்லியம்ஸ் 24-வது கிராண்ட்சிலாம் பட்டத்தை வென்று முத்திரை பதிப்பாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அவர் இதுவரை 23 பட்டம் வென்றுள்ளார். பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை 3 முறை கைப்பற்றி உள்ளார். அவருக்கு ஒசாகா, சிமோனா ஹாலெப், முகுருஜா போன்ற முன்னணி வீராங்கனைகள் கடும் சவாலாக இருப்பார்கள்.
ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரில் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில், ஆடவர் ஒற்றையர் காலிறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் நாட்டின் முன்னணி வீரரான ரபேல் நடால், ஸ்டான் வாரிங்காவை எதிர்கொண்டார். துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய நடால், 6-1, 6-2 என்ற நேர்செட்களில் எளிதில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
இதன்மூலம் ஏடிபி மாஸ்டர்ஸ் போட்டித் தொடர்களில் 70 முறை அரையிறுதிக்கு முன்னேறி உள்ளார். இன்று நடைபெற உள்ள அரையிறுதி ஆட்டத்தில் நடால், ஸ்டெபானிசை எதிர்கொள்கிறார்.
மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஐந்தாம் தரநிலைவீரர் டொமினிக் தீமிடம் 3-6, 7-6(11), 6-4 என்ற செட்கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார். வெற்றி பெற்ற டொமினிக் தீம், அரையிறுதியில் நோவக் ஜோகோவிச்சுடன் மோதுகிறார்.
மற்றொரு ஆட்டத்தில் 9-ம் நிலை வீரரான மரின் சிலிச் லாஸ்லோ டேர்-ஐ எதிர்கொண்டார். முதல் செட்டை மரின் சிலிச் 4-6 என அதிர்ச்சிகரமாக தோற்றார். அதன்பின் சுதாரித்துக்கொண்ட சிலிச் 2-வது செட்டை 6-3 எனவும், 3-வது செட்டை 6-2 எனவும் கைப்பற்றி பெற்றி பெற்றார்.
6-ம் நிலை வீரரான ஜப்பானின் நிஷிகோரி வாவ்ரிங்காவிடம் 6-3, 7(7)-6(3) என நேர்செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார். 5-ம் நிலை வீரரான தியெம் 6-4, 7-5 என போக்னினியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
காலிறுதியில் 1-ம் நிலை வீரரான ஜோகோவிச் 9-ம் நிலை வீரரான மரின் சிலிச்சை எதிர்த்து விளையாடுகிறார். ரோஜர் பெடரர் தியெம்-ஐ எதிர்த்தும், அலெக்ஸாண்டர் ஸ்வெரேவ் டிசிட்சிபாஸ்-ஐ எதிர்த்தும் பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.
இன்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 2-வது இடம் வகிப்பவரும், 3 முறை சாம்பியனுமான ரபேல் நடால் (ஸ்பெயின்) 6-3, 6-4 என்ற நேர்செட்டில் கிராஜ்னோவிச்சை (செர்பியா) தோற்கடித்து கடந்த 3 ஆண்டுகளில் முதல்முறையாக காலிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு ஆட்டத்தில் ரஷிய வீரர் கரன் கச்சனோவ் 6-4, 7-6 (7-1) என்ற நேர்செட்டில் அமெரிக்காவின் ஜான் இஸ்னரை சாய்த்து காலிறுதிக்குள் அடியெடுத்து வைத்தார். காலிறுதியில் கரன் கச்சனோவ், ரபேல் நடாலை சந்திக்கிறார்.
இன்னொரு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) 6-1, 6-4 என்ற நேர்செட்டில் 23-ம் நிலை வீரரான கைல் எட்முன்டை (இங்கிலாந்து) விரட்டியடித்து காலிறுதிக்குள் நுழைந்தார். இந்த வெற்றியை பெற அவருக்கு ஒரு மணி நேரமே தேவைப்பட்டது.
மற்ற ஆட்டங்களில் பிரான்ஸ் வீரர் மான்பில்ஸ் 6-0, 6-2 என்ற நேர்செட்டில் கோல்ஸ்கிரீபரையும் (ஜெர்மனி), ஆஸ்திரியா வீரர் டொமினிக் திம் 6-4, 6-3 என்ற நேர்செட்டில் கார்லோவிச்சையும் (குரோஷியா), கனடாவின் மிலோஸ் ராவ்னிக் 6-4, 6-3 என்ற செட்டில் ஜான் லினார்ட் ஸ்டிரப்பையும் (ஜெர்மனி), போலந்து வீரர் ஹூபர்ட் ஹர்காக்ஸ் 7-6 (7-3), 2-6, 6-3 என்ற செட் கணக்கில் டேனிஸ் ஷபலோவையும் (கனடா) தோற்கடித்து காலிறுதியை எட்டினர்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதி ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ளவரும், 2 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவருமான கார்பின் முகுருஜா (ஸ்பெயின்) 0-6, 1-6 என்ற நேர்செட்டில் 20 வயதான கனடா வீராங்கனை பியான்கா ஆன்ட்ரீஸ்குவிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார். இந்த ஆட்டம் 52 நிமிடம் நடந்தது.
மற்றொரு ஆட்டத்தில் தரவரிசையில் 6-வது இடத்தில் இருக்கும் எலினா ஸ்விடோலினா (உக்ரைன்) 4-6, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் மார்கெடா வோன்ட்ரோசோவாவை (செக் குடியரசு) வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றார். #IndianWellstennis #Federer #Nadal
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்