என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "NADAR SANGAM"
- திருவொற்றியூர் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் நாடார் சங்கங்கள், நாடார் பேரவை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- கவர்னர் உரையில் தலைவர்களின் பெயரை உச்சரிக்காததை கண்டித்து கவர்னர் மாளிகை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்.
திருவொற்றியூர்:
தமிழ்நாடு நாடார் அமைப்புகளின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் எர்ணாவூர் நாராயணன் தலைமையில் திருவொற்றியூர் தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தமிழக அரசு தயாரித்து அளித்த கவர்னர் உரையில் தலைவர்களின் பெயரை உச்சரிக்காத கவர்னரை கண்டித்து நாளை (வியாழக்கிழமை) மதியம் 3 மணி அளவில் கவர்னர் மாளிகை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதென கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
நாடார் பேரவை பொருளாளர் கண்ணன், தலைமை நிலைய செயலாளர் தங்கமுத்து, காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் ஸ்ரீராம், வடசென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் விஜயன், வடசென்னை மேற்கு மாவட்ட செயலாளர் வில்லியம்ஸ், வடசென்னை நாடார் பேரவை மாவட்ட செயலாளர் சீனிவாசன், தட்சிணாமாறநாடார் சங்க சென்னை இயக்குனர் என்.ஏ தங்கதுரை, ஆர் கே நகர் பகுதி செயலாளர் ராஜேஷ், திருவொற்றியூர் பகுதி முத்துக்குமார், நிர்வாகிகள், கருப்பையா, பாக்யராஜ் சுப்பிரமணி வெள்ளைச்சாமி, சேவியர், சிவகுமார், பத்மநாபன், ஸ்டாலின், மகளிர் அணி நிர்வாகிகள் குணசுந்தரி, மீனா, ஆனந்தி, அனிதா மற்றும் நாடார் சங்கங்கள், நாடார் பேரவை நிர்வாகிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
- திருச்சியில் நாடார் நலச்சங்கம் சார்பில் நடைபெற்ற பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன
- நாடார் மகாஜன சங்க பொது செயலாளர் ஜி.கரிக்கோல்ராஜ் நாடார் கலந்து கொண்டு பெருந்தலைவர் காமராஜரின் திருவுருவப்படத்தை திறந்து வைத்து பேசினார்
திருச்சி:
ஸ்ரீரங்கம் பகுதி நாடார் நலச் சங்கத்தின் 8-ம் ஆண்டு விழா மற்றும் பெருந்தலைவர் காமராஜரின் 120-வது பிறந்தநாள் விழா ஸ்ரீரங்கம் ரங்கபவனம் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
விழாவுக்கு ஸ்ரீரங்கம் பகுதி நாடார் நலச்சங்க தலைவர் எஸ்.செல்வ முருகன் நாடார் தலைமை தாங்கினார். செயலாளர் என்.வி.ராஜா நாடார் வரவேற்று பேசினார். துணைத் தலைவர் பி.சிவசாமி நாடார் ஆண்டறிக்கை வாசித்தார்.
அமைப்புச் செயலாளர் ஜெ.மகேஸ்வரன் நாடார் வாழ்த்துரை வழங்கினார். டி.வெங்கடேச பிரபு நாடார், சங்க ஆலோசகர் ஆர்.செல்வம் நாடார், இணைச் செயலாளர் எம்.செந்தில் குமார் நாடார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் நாடார் மகாஜன சங்க பொது செயலாளர் ஜி.கரிக்கோல்ராஜ் நாடார் கலந்து கொண்டு பெருந்தலைவர் காமராஜரின் திருவுருவப்படத்தை திறந்து வைத்து பேசினார்.
அப்போது நாடார் சமூகம் ஒரு நூற்றாண்டு காலமாக அரசியல், வணிகம், கல்வியில் சிறந்து விளங்குகிறது. இந்த பெருமையை அடுத்தடுத்த தலைமுறைகளும் தக்க வைத்து மேம்படுத்திக் கொள்ள வழி வகுக்க வேண்டும் என்றார்.
இதில் மதுரை இலக்கிய மன்ற நிறுவனர் அவனி மாடசாமி, பம்பாய் திருவள்ளுவர் மன்ற பொதுச் செயலாளர் ஜேம்ஸ் தேவதாசன், தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர் மற்றும் ஸ்ரீரங்கம் பகுதி நாடார் நலச் சங்கத்தின் சட்ட ஆலோசகர் எம்.ராஜேந்திர குமார், திருச்சி அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் மணி பிரகஷ்பதி, நெல்லை நாடார் உறவின்முறை சங்க தலைவர் எஸ். ராஜன் பிரேம்குமார், ஸ்ரீரங்கம் காமராஜர் நலன் நிதி சங்க தலைவர் கே.கே.செல்வம் நாடார், தென்னூர் ரங்கநாயகி பட்டாணி கடை
டி. சரவணன் நாடார் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கேக் வெட்டி இனிப்பு வழங்கி பேசினர். விழாவில் தமிழ்நாடு நாடார் பேரவை திருச்சி மாவட்ட தலைவர் ஆர்.இளங்கோ நாடார், தமிழ்நாடு பாரத பெருந்தலைவர் காமராஜர் பேரவை நிறுவனர் வே.மூர்த்தி நாடார், திருச்சி நாடார் உறவின்முறை சங்க துணைச் செயலாளர் சு.ப.கண்ணன் நாடார் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
மேலும் நாடார் மகாஜன சங்க துணை தலைவர் எஸ்.ஜெ.மணி நாடார், கே.டி.எம்.மளிகை தொழிலதிபர் ஏ.ஜெயக்குமார், மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர் சங்க தலைவரும், சங்க சட்ட ஆலோசகருமான எஸ்.சுரேஷ் நாடார், மகாஜன சங்க துணை தலைவர் முருகேசபாண்டியன்,
மாவட்ட பா.ஜ.க. வக்கீல் பிரிவு முத்துக்குமார், கதிரேசன் நாடார், திருவானைக்காவல் வணிகர் சங்க நிறுவன தலைவர் வெற்றிவேல் நாடார், மேலூர் காமராஜர் நற்பணி மன்ற தலைவர் நாராயணன் நாடார், ஸ்ரீரங்கம் அ.தி.மு.க. வட்டச் செயலாளர் மகேஸ்வரன், தொழிலதிபர் குழந்தைவேல் நாடார், ஸ்ரீரங்கம் பாரத் பழமுதிர்ச்சோலை குமார் நாடார்,
ஸ்ரீரங்கம் பகுதி நாடார் நலச்சங்க பகுதி பொறுப்பாளர்கள் மற்றும் விழா கமிட்டியை சேர்ந்த எல்.சேகர் நாடார், வெங்கடேஷ் பாபு, ஆறுமுகம் நாடார், சிலம்பேஸ்வரன் நாடார், விஸ்வநாதன் நாடார், வேலாயுதம் நாடார், செந்தில்குமார் நாடார், சின்னமணி நாடார், மாசி மாரிமுத்து நாடார், ஐயன் பெருமாள் நாடார் மற்றும் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்