என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nanguneri"

    • வள்ளியூர் மின்வாரிய கோட்டத்திற்கு உட்பட்ட நாங்குநேரி துணை மின்நிலையத்தில் நாளை ( 8-ந் தேதி ) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • அப்பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

    நெல்லை:

    வள்ளியூர் மின்வாரிய செயற்பொறியாளர் வளன்அரசு வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    வள்ளியூர் மின்வாரிய கோட்டத்திற்கு உட்பட்ட நாங்குநேரி துணை மின்நிலையத்தில் நாளை ( 8-ந் தேதி ) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் அங்கிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான ராஜாக்கள்மங்கலம், சிறுமளஞ்சி, பெருமளஞ்சி கீழுர் மற்றும் மேலூர், ஆச்சியூர், வாகைகுளம், கோவநேரி, ஏ.எம்.ஆர்.எல். தொழிற்கூடம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

    மேலும் மின் பாதைக்கு இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றவும், பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவும் மின்வாரிய பணியாளர்க ளுக்கு பொது மக்கள் ஒத்து ழைப்பு தர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நாங்குநேரி அருகே உள்ள தோட்டக்குடி பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்லசாமி (வயது 47). இவர் பொன்னாக்குடியில் உள்ள ஒரு ஓட்டலில் சப்ளையராக உள்ளார்.
    • சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சண்முக சுந்தரம் மற்றும் போலீசார், பிரகாஷ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    களக்காடு:

    நாங்குநேரி அருகே உள்ள தோட்டக்குடி பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்லசாமி (வயது 47). இவர் பொன்னாக்குடியில் உள்ள ஒரு ஓட்டலில் சப்ளையராக உள்ளார். சம்பவத்தன்று இரவில் இவர் வேலை முடிந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

    அப்போது தோட்டக்குடி நடுத்தெருவில் சென்ற போது, அங்கு அதே ஊரை சேர்ந்த பிரகாஷ் (27) என்பவர் கையில் கம்பை எடுத்து வைத்துக் கொண்டு, போதையில் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தார். இதைப்பார்த்த செல்லசாமி, அவரிடம் தட்டிக் கேட்டார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த பிரகாஷ், செல்ல சாமியை கம்பால் குத்தினார்.மேலும் கொலை மிரட்டலும் விடுத்தார். இதில் பலத்த காயமடைந்த செல்ல சாமியை உறவினர்கள் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து மூன்றடைப்பு போலீசில் புகார் செய்யப் பட்டது. சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சண்முக சுந்தரம் மற்றும் போலீசார், பிரகாஷ் மீது வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • செண்பகராமநல்லூர், பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் கந்தசாமி. இவர் நாங்குநேரியில் ஒட்டல் நடத்தி வருகிறார்.
    • ஆத்திரம் அடைந்த சிவா, கந்தசாமியை மண்வெட்டியால் சரமாரியாக தாக்கினார்.

    களக்காடு:

    நாங்குநேரி அருகே உள்ள செண்பகராமநல்லூர், பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் கந்தசாமி (வயது39). இவர் நாங்குநேரியில் ஒட்டல் நடத்தி வருகிறார். இவருக்கு சொந்தமான வயல் செண்பகராமநல்லூரில் உள்ளது.

    அதில் அவர் கடந்த 5 ஆண்டுகளாக பயிர் செய்யவில்லை. இந்நிலையில் சம்பவத்தன்று கந்தசாமி தனது வயலுக்கு சென்ற போது, பக்கத்து வயலுக்கு சொந்தகாரரான காக்கைகுளத்தை சேர்ந்த சிவா என்பவர், கந்தசாமி வயலில் வேலி கற்களை பிடுங்கி எறிந்து விட்டு, உள்ளே புகுந்து, பனங்கிழங்கை நடவு செய்து கொண்டிருந்தார்.

    இதைப்பார்த்த கந்தசாமி தட்டிக் கேட்டார். இதையடுத்து அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த சிவா, கந்தசாமியை மண்வெட்டியால் சரமாரியாக தாக்கினார். மேலும் கொலை மிரட்டலும் விடுத்தார். இதனால் காயம் அடைந்த கந்தசாமி சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுபற்றி மூலைக்கரைப்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சிவாவை தேடி வருகின்றனர்.

    • முருகனுக்கும், அதே ஊரை சேர்ந்த உத்ரா என்பவருக்கும் திருமணமாகி உள்ளது.
    • உத்ராவின் அண்ணன்கள் ஒலிமுத்து, சுடலைமணி, ஒலிமுத்துவின் மனைவி சுந்தரி, சுடலைமணியின் மகன் சேர்மலிங்கம் ஆகிய 4 பேரும் உத்ராவை எப்படி அடிக்கலாம் என கேட்டு தகராறில் ஈடுபட்டனர்.

    களக்காடு:

    பொதுவாக கணவன், மனைவிகளுக்கிடையே தகராறு ஏற்பட்டால் மனைவி கோபித்து கொண்டு, தாயார் வீட்டிற்கு செல்வது வழக்கம். ஆனால் சமீபகாலமாக கணவர்கள், மனைவியை விட்டு பிரிந்து தாயார் வீட்டிற்கு செல்வது அதிகரித்து வருகிறது. இதை நிரூபணம் செய்யும் வகையில் நாங்குநேரி அருகே சம்பவம் அரங்கேறி உள்ளது.

    நாங்குநேரி அருகே உள்ள தட்டான்குளம், வடக்கு தெருவை சேர்ந்தவர் சுப்பையா. இவரது மனைவி கோமதி (வயது63). சுப்பையா கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் இறந்தார்.

    இவர்களது மகன் முருகனுக்கும், அதே ஊரை சேர்ந்த உத்ரா என்பவருக்கும் திருமணமாகி உள்ளது. அவர்கள் இருவரும் அதே ஊரில் தனியாக வசித்து வருகின்றனர்.

    இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் முருகனுக்கும், அவரது மனைவி உத்ராவிற்கும் தகராறு ஏற்பட்டது. இதனால் முருகன் மனைவியிடம் கோபித்து கொண்டு, அவரை விட்டு பிரிந்து தனது தாயார் கோமதி வீட்டிற்கு துணிமணிகளுடன் சென்று விட்டார்.

    சம்பவத்தன்று கோமதி தனது வீட்டில் மகன்கள் முருகன், சித்திரை வேலு ஆகியோருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த உத்ராவின் அண்ணன்கள் ஒலிமுத்து, சுடலைமணி, ஒலிமுத்துவின் மனைவி சுந்தரி, சுடலைமணியின் மகன் சேர்மலிங்கம் ஆகிய 4 பேரும் உத்ராவை எப்படி அடிக்கலாம் என கேட்டு தகராறில் ஈடுபட்டனர்.

    இரு தரப்பினருக்கு இடையே கடும் வாக்குவாதம் எழுந்தது. இதையடுத்து முருகன் அங்கிருந்து நைசாக தப்பி ஓடி விட்டார். இதில் ஆத்திரம் அடைந்த ஒலிமுத்து உள்பட 4 பேரும் சேர்ந்து, கோமதி, அவரது மகன் சித்திரை வேலையும் கம்பால் சரமாரியாக தாக்கினர்.

    மேலும் கொலை மிரட்டலும் விடுத்தனர். இதனால் காயம் அடைந்த கோமதி, அவரது மகன் சித்திரவேல் ஆகியோர் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுபற்றி விஜயநாராயணம் போலீசில் புகார் செய்யப்பட்டது.

    போலீசார் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ஒலிமுத்து உள்பட 4 பேரையும் தேடி வருகின்றனர்.

    • நாங்குநேரியை சேர்ந்த சிவசக்தி, ஆறுமுகம் மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர்
    • பின்னால் நெல்லை நோக்கி வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது

    களக்காடு:

    நாங்குநேரி அருகே உள்ள செண்பகராமநல்லூர், அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சிவசக்தி (வயது51). தச்சு தொழிலாளி. இவர் சம்பவத்தன்று தனது உறவினர் ஆறுமுகத்துடன் வள்ளியூருக்கு வந்தார்.

    பின்னர் இருவரும் ஆறுமுகத்திற்கு சொந்தமான மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். ஆறுமுகம் மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்றார். சிவசக்தி பின்னால் அமர்ந்திருந்தார்.

    நெல்லை-நாகர்கோவில் நான்குவழிச் சாலையில் வாகைகுளத்தில் இருந்து பட்டர்புரம் செல்ல சர்வீஸ் சாலையில் திரும்பிய போது, பின்னால் நெல்லை நோக்கி வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.

    இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற சிவசக்தி, ஆறுமுகம் ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர். அக்கம், பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து இருவரும் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இதுபற்றி நாங்குநேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவரை தேடி வருகின்றனர்.

    • நாங்குநேரி கிழக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் ரவீந்திரன், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி நிக்சன் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் மூலைக் கரைப்பட்டி அருகே உள்ள பார்ப்பரம்மாள்புரத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.
    • நாங்குநேரி வட்டாரத்தில் உட்கட்சி தேர்தல் நடத்தாமலேயே மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி மாவட்ட தலைவர் மூலம் புதிய நிர்வாகிகளை நியமிப்பதாக அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.

    மூலக்கரைப்பட்டி:

    நாங்குநேரி கிழக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் ரவீந்திரன், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி நிக்சன் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் மூலைக் கரைப்பட்டி அருகே உள்ள பார்ப்பரம்மாள்புரத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அவர்கள் கூறியதாவது:-

    நாங்குநேரி வட்டாரத்தில் உட்கட்சி தேர்தல் நடத்தாமலேயே மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி மாவட்ட தலைவர் மூலம் புதிய நிர்வாகிகளை நியமிப்பதாக அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். இதனை கேட்பதற்காக நாங்கள் 50 பேர் வாகனத்தில் சென்னை சத்தியமூர்த்தி பவனுக்கு சென்றிருந்தோம். நாங்கள் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. அழைப்பின் பேரில் செல்லவில்லை, அங்கு அவரை சந்தித்து பேசவும் இல்லை. சத்தியமூர்த்தி பவனில் மாநில தலைவரை சந்தித்து பேச நேரம் கேட்டோம். 4 மணி நேரம் காக்க வைத்து விட்டு மாநிலத் தலைவர் சந்திக்காமலேயே புறப்பட்டு சென்றார்.

    அப்போது அங்கு இருந்த அவருடைய ஆதரவாளர்கள் எங்களை அரிவாள், கம்பு மூலம் தாக்குதல் நடத்தினார்கள். நாங்கள் எங்கு போவது என்று சிதறி ஓடினோம். அவர்களது செயல் வேலியே பயிரை மேயும் நிலை அங்கு ஏற்பட்டது. நாங்கள் 40 ஆண்டு காலம் காங்கிரஸ் கட்சியில் பணியாற்றி வருகிறோம். தற்போது மாநில தலைவருடைய செயல்பாடுகளால் மிகுந்த அதிருப்தியில் உள்ளோம். உடனடியாக கட்சி தலைமை மாநில தலைவர் கே.எஸ். அழகிரி மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினார்கள்.

    அப்போது காங்கிரஸ் நிர்வாகிகள் முத்து கிருஷ்ணன், சுப்பிர மணியன், வேல்முருகன், மாரிமுத்து, மயில் ராஜா, வின்சன், சுப்பிரமணி, ஆதவ், தாமோதரன், ஊசி காட்டான், வன்னி நாச்சி யார், மாடசாமி செட்டியார், ருக்மணி யாதவ் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • நாங்குநேரி சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் போலீசார் தென்னிமலை பகுதியில் ரோந்து சென்றனர்.
    • அதே ஊரைச் சேர்ந்த பூல்பாண்டி என்பவர் கையில் சாக்கு பையுடன் நின்று கொண்டிருந்தார்.

    களக்காடு:

    நாங்குநேரி சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் போலீசார் தென்னிமலை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அதே ஊரைச் சேர்ந்த பூல்பாண்டி என்பவர் கையில் சாக்கு பையுடன் நின்று கொண்டிருந்தார். இதைப்பார்த்த போலீசார் அவரிடமிருந்த சாக்கு பையை சோதனையிட முயற்சி செய்த போது, பூல்பாண்டி போலீசாரை பார்த்து அவதூறாக பேசினார்.

    மேலும் அருகில் வந்தால் வெட்டி கொலை செய்து விடுவேன் என்றும் மிரட்டல் விடுத்தார். எனினும் போலீசார் அவரை மடக்கி பிடித்து சோதனையிட்டனர். இதில் அவர் சாக்கு பையில் 20 புகையிலை பாக்கெட்டுகள் பதுக்கி வைத்தி ருந்தது தெரிய வந்தது. இதை யடுத்து போலீசார் அவரை கைது செய்து, புகையிலை பாக்கெட்டு களை பறிமுதல் செய்தனர்.

    • மலையடிப்புதூரில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொருளாளர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.
    • நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.

    நெல்லை:

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் 76-வது பிறந்தநாளை முன்னிட்டு நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் உள்ள களக்காடு அருகே உள்ள மலையடிப்புதூரில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொரு ளாளர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரை யாற்றினார்.

    இதில் முன்னாள் மாவட்ட தலைவர் தமிழ்செல்வன்,தொகுதி பொறுப்பாளர் அழகியநம்பி, களக்காடு ஒன்றிய சேர்மன் ஜார்ஜ்கோசல், களக்காடு தெற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் அலெக்ஸ், களக்காடு நகராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜார்ஜ்வில்சன், மலை யடிப்புதூர் பஞ்சாயத்து தலைவர் ரமேஷ், மாநில விவசாய அணி செயலாளர் விவேக்முருகன், மாவட்ட துணை தலைவர்கள் சந்திரசேகர், கக்கன் கார்த்தி கேயன், செல்லப்பாண்டி, மாநில மகளிரணி இணை செயலாளர் கமலா, அம்பாசமுத்திரம் தொகுதி முன்னாள் வட்டார தலைவர் சங்கரநாராயணன், பவன், ஏர்வாடி பேரூராட்சி, திருக்குறுங்குடி பேரூராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் ரீமாபைசல், ராசாத்தி அம்மாள்,பாளை தெற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் நளன், களக்காடு வடக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளர் பால்பாண்டி, களக்காடு நகராட்சி தலைவர் சாந்திசுபாஷ், தி.மு.க நகர செயலாளர் மணிசூரியன், கவுன்சிலர்கள் மிகா, வனிதா காமராஜ், கோவிலம்மாள்புரம் பஞ்சாயத்து தலைவி லதா முத்துராமலிங்கம், மாவட்ட பொதுச்செயலாளர் காமராஜ், களக்காடு தெற்கு வட்டாரம்,களக்காடு நகராட்சி காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் டேனியல், காமராஜ், நாங்குநேரி வட்டார காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ராஜா, சுந்தர், ஜெயசீலன், பொன்ராஜ் வட்டார மகளிரணி தலைவி பிரியாமுருகன், களக்காடு வட்டார மகளிரணி நிர்வாகிகள் ராணி, விமலா, பானு, லதா, ஸ்ரீதேவி, சுதா, ஏர்வாடி பேரூராட்சி காங்கிரஸ் கமிட்டியின் நிர்வாகிகள்,களக்காடு வட்டார காங்கிரஸ் கமிட்டியின் நிர்வாகிகள், அன்வர், ஆபிரகாம் மற்றும் களக்காடு, நாங்குநேரி வட்டார காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர்.

    நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.

    • நாங்குநேரி அனுஷியா நகரை சேர்ந்தவர் சுடலைக்கண்ணு (வயது 52). மின்வாரிய ஊழியர். இவரது மகள் அனிதா (20). இவர் பி.காம் படித்துள்ளார்
    • கடந்த 6-ந் தேதி மதியம் அனிதா கடைக்கு செல்வதாக வீட்டில் கூறி விட்டு சென்றார். ஆனால் அதன் பின் அவர் வீடு திரும்பவில்லை

    களக்காடு:

    நாங்குநேரி அனுஷியா நகரை சேர்ந்தவர் சுடலைக்கண்ணு (வயது 52). மின்வாரிய ஊழியர். இவரது மகள் அனிதா (20). இவர் பி.காம் படித்துள்ளார். இவருக்கும், இவரது உறவினருக்கும் திருமணம் நடத்த குடும்பத்தினர் பேசி முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் கடந்த 6-ந் தேதி மதியம் அனிதா கடைக்கு செல்வதாக வீட்டில் கூறி விட்டு சென்றார். ஆனால் அதன் பின் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். எனினும் அனிதா குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து இதுபற்றி அவரது தந்தை சுடலைக்கண்னு நாங்குநேரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி அனிதாவை தேடி வருகின்றனர்.

    • நாங்குநேரி சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் போலீசார் தட்டான்குளம் பகுதியில் ரோந்து சென்றனர்
    • போலீசார் அவர்களிடமிருந்து 1.150 கிலோ கிராம் எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    களக்காடு:

    நாங்குநேரி சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் போலீசார் தட்டான்குளம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் பைக்குகளுடன் நின்று கொண்டிருந்த 2 பேர் கஞ்சா விற்பனை செய்ய முயற்சி செய்தனர். இதைப்பார்த்த போலீசார் அவர்களை பிடித்து விசாரித்தனர்.

    இதில் அவர்கள் மறுகால்குறிச்சியை சேர்ந்த சிவா என்ற சிவசுப்பு (வயது 23), முருகன் (23) என்பதும், இருவரும் கஞ்சாவை பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 1.150 கிலோ கிராம் எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    • நெல்லை மாவட்டம், நாங்குநேரி அருகே உள்ள மறுகால்குறிச்சியை சேர்ந்தவர் செல்லையா (வயது50) கூலி தொழிலாளி.
    • செல்லையா தனது வீட்டு முன் நின்று கொண்டி ருந்தார். அப்போது அங்கு வந்த ராஜாவுக்கும், செல்லையாவிற்கும் தகராறு ஏற்பட்டது. இருவருக்குமிடையே கடும் வாக்குவாதமும் எழுந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த ராஜா, செல்லையாவை கம்பால் சரமாரியாக தாக்கினார்.

    களக்காடு:

    நெல்லை மாவட்டம், நாங்குநேரி அருகே உள்ள மறுகால்குறிச்சியை சேர்ந்தவர் செல்லையா (வயது50) கூலி தொழிலாளி.

    இவருக்கு மாரியம்மாள் (48) என்ற மனைவியும், 2 மகள்களும் 1 மகனும் உள்ளனர். அதே ஊரைச் சேர்ந்தவர் மணி மகன் ராஜா (27).

    இவரை செல்லையாவின் மகன் மாரியப்பன் கிண்டல் செய்துள்ளார். இது சம்பந்தமாக மாரிய ப்பனுக்கும், ராஜாவிற்கும் தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வந்தது.

    இந்நிலையில் செல்லையா தனது வீட்டு முன் நின்று கொண்டி ருந்தார். அப்போது அங்கு வந்த ராஜாவுக்கும், செல்லையாவிற்கும் தகராறு ஏற்பட்டது. இருவருக்குமிடையே கடும் வாக்குவாதமும் எழுந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த ராஜா, செல்லையாவை கம்பால் சரமாரியாக தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த அவர் அலறினார்.

    சத்தம் கேட்டு, ஓடி வந்த அக்கம், பக்கத்தினர் செல்லையாவை மீட்டு சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரி வித்தனர்.

    இதுபற்றி நாங்குநேரி போலீசாருக்கு தகவல் கொ டுக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தி ராஜாவை கைது செய்தனர். அவரிடம் போலீசார் விசாரித்த போது, என்னை மாரியப்பன் கிண்டல் செய்தது தொடர்பாக செல்லையாவிடம் தட்டி கேட்டேன். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவரை கம்பால் தாக்கினேன். இதில் அவர் இறந்துவிட்டார் என கூறி உள்ளார். அதனை போலீசார் வாக்குமூலமாக பதிவு செய்து கொண்டனர்.

    • நாங்குநேரியில் வாகன ஓட்டிகளிடையே தலைகவசம் அணிவது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக போலீசார் மோட்டார் சைக்கிள் ஊர்வலம் நடத்தினர்.
    • நிகழ்ச்சியில் நான்குநேரி சப் இன்ஸ்பெக்டர்கள் ஆழ்வார், தாமரை லிங்கம், பெருமாள் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.

    களக்காடு:

    நாங்குநேரியில் வாகன ஓட்டிகளிடையே தலைகவசம் அணிவது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக போலீசார் மோட்டார் சைக்கிள் ஊர்வலம் நடத்தினர். நாங்குநேரி சுங்கச்சாவடி அருகே நாங்குநேரி இன்ஸ்பெக்டர் செல்வி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து நான்குநேரி, மூன்றடைப்பு, மற்றும் மூலைக்கரைப்பட்டியில் இருந்து வந்திருந்த போலீசார் மற்றும் டோல்கேட் ஊழியர்கள் தங்களது மோட்டார் சைக்கிளில் தலைக்கவசம் அணிந்தவாறு ஊர்வலத்தில் பங்கேற்றனர்.

    புறவழிச்சாலை வழியாக சென்ற ஊர்வலம் நாங்குநேரியில் உள்ள முக்கிய வீதிகளில் வலம் வந்தது. அப்போது ஒலிப்பெருக்கி மூலம் தலைக்கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. தலைக்கவசம் அணிந்தால் விபத்தில் சிக்கினால் கூட உயிர் தப்பலாம் என்று பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து இந்த ஊர்வலம் நாங்குநேரி திசையன்விளை செல்லும் ரோட்டில் நிறைவு பெற்றது. இந்நிகழ்ச்சியில் நான்குநேரி சப் இன்ஸ்பெக்டர்கள் ஆழ்வார், தாமரை லிங்கம், பெருமாள் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.

    ×