என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "natural remedies"
- ரசாயனப் பொருள்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
- முடி வளர்ச்சிக்கு ஹார்மோன் ஏற்றத்தாழ்வு காரணமாக அமைகிறது.
இன்று பலரும் சரும ஆரோக்கியத்தில் அதீத ஈடுபாடு காட்டி வருகின்றனர். சருமம் வறண்டு போகுதல், சரும அரிப்பு, எரிச்சல் போன்ற பல்வேறு பிரச்சனைகள் ஏற்படலாம். இது பொதுவான பிரச்சனையாகும். எனினும், இன்னும் சிலருக்கு கன்னங்கள், நெற்றி போன்றவற்றில் முடி வளர்ச்சி அதிகமாக இருக்கும். இது முகத்தின் அழகைக் கெடுக்கும். இந்த முடி வளர்ச்சியை அகற்ற பல்வேறு அழகு சாதனப் பொருள்கள் பயன்படுத்தப்படுகிறது.
முகத்தில் ஏற்படும் முடி வளர்ச்சிக்கு ஹார்மோன் ஏற்றத்தாழ்வு காரணமாக அமைகிறது. முக முடி வளர்ச்சியைக் கட்டுப்படுத்த சில எளிமையான மற்றும் இயற்கையான வீட்டு வைத்தியங்களைக் காணலாம். இந்த வீட்டு வைத்தியங்களை சேர்த்துக் கொள்வதன் மூலம் முக முடிகளை அகற்றுவதன் சருமத்தை பளபளப்பாக வைத்திருக்கலாம்.
முகத்தில் முடி வளர்ச்சி அதிகரிப்பதற்கு கார்டிசோல் ஹார்மோன் அளவு அதிகமாவதும் ஒரு காரணமாகும். ஹார்மோன் சமநிலையின்மை காரணமாக கன்னம், காதுகள், நெற்றி பகுதிக்கு அருகில் முடி வளரத் தொடங்குகிறது.
முகத்தை சுத்தமாக மற்றும் பளபளப்பாக வைத்துக் கொள்ள ரசாயனப் பொருள்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இயற்கையான முறையில் முகத்தில் உள்ள முடிகளை அகற்றும் முறைகளைக் காணலாம்.
பப்பாளி மற்றும் மஞ்சள்
முகத்தில் உள்ள முடிகளை நீக்கவும், முகத்தின் ஈரப்பதத்தை அதிகரிக்கவும் இந்த பேக் உதவுகிறது. பப்பாளி மற்றும் மஞ்சள் பேக் தயாரிக்க முதலில் பப்பாளியை மசித்து, அதில் ஒரு சிட்டிகை மஞ்சள் சேர்த்துக் கொள்ளலாம். பின்னர் இந்த கலவையை முகத்தில் தடவ வேண்டும். இதன் மூலம் முகத்தை சுத்தமாக்கலாம். இதனுடன் முகத்தில் உள்ள முடிகளை அகற்றலாம்.
கடலை மாவு மற்றும் மஞ்சள்
கடலை மாவு மஞ்சள் பேக் முகத்தில் உள்ள முடி பிரச்சனையை நீக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதற்கு ஒரு ஸ்பூன் அளவிலான கடலை மாவில் ஒரு சிட்டிகை மஞ்சள் சேர்க்க வேண்டும். இதில் அரை எலுமிச்சைச் சாறு மற்றும் 1/2 டீஸ்பூன் சந்தன விழுதை எடுத்துக் கொள்ள வேண்டும். இவை அனைத்தையும் கலந்து, முகத்தில் தடவி 10 முதல் 15 நிமிடங்கள் வரை வைக்கவும். அதன் பிறகு, சாதாரண நீரில் முகத்தைக் கழுவிக் கொள்ளலாம்.
எலுமிச்சை மற்றும் தேன்
முகப்பொலிவுக்கு ஒரு ஸ்பூன் அளவிலான தேனில் எலுமிச்சைச் சாறு கலந்து அருந்தலாம். இப்போது முகம், கழுத்து மற்றும் கைகளில் தடவலாம். இவ்வாறு 15 முதல் 20 நிமிடங்கள் வரை அப்படியே வைத்து முகத்தைக் கழுவிக் கொள்ளலாம். இதை வாரத்திற்கு இரண்டு முதல் மூன்று முறை பயன்படுத்தலாம்.
முட்டை மற்றும் சோளமாவு
சோளமாவு மற்றும் முட்டையைக் கொண்டு முகத்தில் உள்ள தேவையற்ற முடியை நீக்கலாம். முட்டையின் வெள்ளைக் கருவை தலா ஒரு டீஸ்பூன் அளவிலான சோளமாவு மற்றும் சர்க்கரை சேர்த்து கலக்கலாம்.
இந்த கலவையை பிரஷ் கொண்டு முகம் முழுவதும் மற்றும் முடிகள் உள்ள பகுதியில் நன்கு தடவிக் கொள்ளலாம். இதை 10 முதல் 15 நிமிடம் வரை உலர வைக்க வேண்டும். அதன் பின், முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவலாம். இதன் மூலம் முகத்தில் உள்ள முடிகளை நீக்கி சருமத்தை பளபளப்பாக்கலாம்.
சர்க்கரை மற்றும் எலுமிச்சை
கிண்ணம் ஒன்றில் 1 தேக்கரண்டி அளவிலான சர்க்கரை மற்றும் அரை எலுமிச்சைச் சாறு கலக்க வேண்டும். இதில் தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். இதை நன்கு கலந்து பேஸ்ட்டாக மாற்றி முகத்தில் தடவி பின்னர் கன்னங்கள் மற்றும் நெற்றியில் மெதுவாக தேய்க்க வேண்டும். இந்த ஸ்க்ரப் முகத்தில் உள்ள முடியை நீக்க உதவுகிறது.
பால் மற்றும் மசூர் பருப்பு
முகத்தை வறட்சி மற்றும் முடி பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்க, 2 ஸ்பூன் அளவிலான மசூர் பருப்பை பேஸ்டாக எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் ஒரு ஸ்பூன் பால், தேங்காய் எண்ணெய் மற்றும் 1/2 ஸ்பூன் உளுத்தம்பருப்பு போன்றவற்றைச் சேர்த்து கலக்க வேண்டும்.
இந்த கலவையை முகத்தில் தடவி 30 நிமிடம் வரை வைக்கலாம். இந்த பேக் பயன்படுத்துவது முகத்தில் உள்ள முடிகளை நீக்கி, முகத்தில் உள்ள கறைகளில் இருந்தும் நிவாரணம் அளிக்கிறது.
இந்த ஃபேஸ் பேக்குகளின் உதவியுடன் முகத்தில் தோன்றும் முடியை எளிமையான மற்றும் இயற்கையான முறையில் நீக்கலாம். எனினும், உணர்திறன் மிகுந்த சருமம் என்பதால், புதிய பொருட்களைத் தேர்வு செய்யும் முன் பேட்ச் டெஸ்ட் செய்வது நல்லது.
- குடற்புழுக்கள் குழந்தைகளின் வளர்ச்சியை பாதிக்கிறது.
- உடல் எடை குறைவது, அனீமியா போன்றவையும் உண்டாக்கிவிடும்.
வயிற்றில் குடல் பகுதியில் உருவாகும் புழுக்களைத்தான் குடற்புழு என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இவை நம் உடல் நலனுக்கு கேடு விளைவிப்பவை. குடற்புழுக்கள் குழந்தைகளின் வளர்ச்சியை பாதிக்கிறது. சில சமயம் பெரியவர்களையும் பாதிக்கிறது.
சுத்தமான உணவு, சுத்தமான தண்ணீர், சுத்தமான சூழ்நிலையில் நாம் வாழ வேண்டும். அப்படி இல்லையென்றால், நம் குடலில் குடற்புழு உருவாகி பிரச்சினை ஏற்படுத்திவிடும்.
சிறுநீர் கழித்தல், மலம் கழித்தல், அசுத்தமான மண்ணை குழந்தைகள் கையால் அள்ளி விளையாடும்போதும், செருப்பில்லாமல் அசுத்தமான இடங்களில் நடக்கும்போது இந்த குடற்புழுக்கள் உடலை வந்தடைகிறது.
புழுக்கள் பலவகைப்படும். அவை உருளைப்புழு, நாக்குப்பூச்சி, இதயப்புழு, நாடாப்புழு, கொக்கிப்புழு என்று பல வகைப்படும். இந்த புழுக்கள் நம் உடலுக்கு பல பிரச்சினைகளை ஏற்படுத்திவிடும். கடுமையான வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், குமட்டல், சோர்வு, உடல் எடை குறைவது, அனீமியா போன்றவையும் உண்டாக்கிவிடும்.
இயற்கை வழிமுறைகள்:
1. தினமும் கிராம்மை மென்று தின்னால் குடற்புழுக்கள் அழிந்து மலம் மூலம் வெளியேறும்.
2. தினமும் கேரட்டை சாப்பிட்டுவந்தால் குடற்புழு நீங்கும்.
3. ஒரு கைப்பிடி புதினா சாற்றுடன், எலுமிச்சை சாறு, உப்பு கலந்து குடித்து வந்தால் குடற்புழு ஒழியும்.
4. குடற்புழுக்களால் பிரச்சினை ஏற்பட்டால் கற்பூரவள்ளி எண்ணெயை, எலுமிச்சை சாறுடன் கலந்து குடித்து வந்தால் குடற்புழு வெளியேறும்.
5. சூடான பாலுடன் ஆமணக்கு எண்ணெய் 2 ஸ்பூன் கலந்து குடித்தால் வந்தால் குடற்புழுக்கள் மலம் மூலம் வெளியேறும்.
6. தினமும் ஒரு பல் பூண்டை சாப்பிட்டு வந்தால் குடற்புழுக்கள் பிரச்சினை தீரும்.
7. எலுமிச்சை விதை பொடியை நீருடன் கலந்து குடித்து வந்தால் குடற்புழு ஒழியும்.
- ஹார்மோன் குறைவினால் மாதவிடாய் தாமதம் ஏற்படும்.
- அறிகுறிகள் கருத்தரிக்கும் காலத்தில் தான் வெளியில் தெரிகிறது.
மாதவிடாய் சுழற்சி மாதமாதம் சீராக இல்லாமல் தாமதமாக வெளியாதல் போன்ற நிலை இருந்தால் சினைப்பையின் ஹார்மோன் குறைவினால் மாதவிடாய் தாமதம் ஏற்படும். மாதம் ஒரு சினை முட்டையை சினைப்பை விடுவிப்பது இயற்கையான நிகழ்வு.
இந்நிகழ்வில் தடை ஏற்படும் போது சினைப்பையில் சிறு, சிறு, நீர் கட்டி தோன்றி விடுகின்றன. சினைப்பை நீர்கட்டி என்பது நோயல்ல, குறைபாடுதான். சினைமுட்டைகள் வெளிவராத காரணத்தால் உண்டாகும் இந்த பிரச்சினை பல்வேறு வயதிலுள்ள பெண்களை பாதிக்கலாம். அந்தந்த வயதினருக்கு தகுந்தாற்போல சிகிச்சையளிக்க வேண்டும்.
காரணம்:
இந்த நோய்க்கான காரணத்தை அறுதியிட்டு கூற முடியாது. பருவமடைந்த பெண்கள் யாருக்கு வேண்டுமானாலும் இந்நோய் ஏற்படலாம். ஆனால் இதன் அறிகுறிகள் கருத்தரிக்கும் காலத்தில் தான் வெளியில் தெரிகிறது. மரபணு மூலமாக, பரம்பரை பரம்பரையாக கூட வரலாம். அதேபோல ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள், அட்ரீனல் காட்டிகல் ஹார்மோன் சுரப்பு அதிகரிப்பது, டெஸ்டோஸ்டிரான் அதிகமாக சுரப்பது, புரோலாக்டின் அதிகரிப்பது தான் முக்கிய காரணங்களாக சொல்லப்படுகிறது. இதனை அன்றாடம் நம் வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டே வராமல் தடுக்க முடியும்.
வைட்டமின்கள்:
பெண்களின் கருமுட்டை உற்பத்திக்கு தேவைப்படும் சக்திகளில் முதன்மையானது வைட்டமின் டி. கருப்பை கோளாறுகள் வருவதற்கான காரணங்களில் 65 முதல் 85 சதவீதத்தினர் வைட்டமின் டி குறைப்பட்டினால் தான் ஏற்படுகிறது. இதனால் வைட்டமின் டி அதிகமுள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். குறிப்பாக காலை நேர வெயில் படுமாறு உங்களது தினசரிகளை மாற்றிக் கொள்ளலாம். இப்படி செய்வதனால் உங்களது மெட்டபாலிசம் தூண்டப்பட்டு மாதவிடாய் பிரச்னைகள் ஏற்படாமல் தடுத்திடும்.
ஆப்பிள் சிடர் வினிகர்:
ஒரு கிளாஸ் சூடான நீருடன் இரண்டு டீஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகர் இரண்டு டீஸ்பூன் சேர்த்து குடிக்க வேண்டும். இதனை ஒரு நாளில் இரண்டு முதல் மூன்று முறை குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். இப்படி குடிப்பதனால் உடலில் இன்சுலின் அளவு சீராக இருக்கும். இதனால் கருமுட்டை உற்பத்தியாவதும் மாதந்தோறும் அது உடைவதும் சீராக நடைபெறும்.
தேங்காய் எண்ணெய்:
சுத்தமான தேங்காய் எண்ணெய் மூலமாக கூட கருப்பை நீர்க்கட்டிகளை நம்மால் வராமல் தடுக்க முடியும். இதற்கு பாக்கெட்டுகளில் கிடைக்கும் தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவதை தவிர்த்திட வேண்டும், அதில் கலக்கப்பட்டிருக்கும் கெமிக்கல்களால் தேங்காய் எண்ணெயின் முழுபலன்களும் உங்களுக்கு கிடைக்காது. தினமும் ஒரு ஸ்பூன் அளவாவது தேங்காய் எண்ணெய்யை உணவுகளில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதில் ஃபேட்டி ஆசிட், ஆண்ட்டி ஆக்சிடென்ட் இருக்கிறது. சீரான அளவில் இதனை எடுத்துக் கொண்டால் இன்சுலின் சுரப்பை சீராக வைத்திருக்கும். அதேபோல கெட்ட கொழுப்பு ரத்தத்தில் கலப்பதையும் தடுத்திடும்.
ஆமணக்கு எண்ணெய்:
ஆமணக்கு எண்ணெய்யை லேசாக சூடு படுத்திக்கொள்ளுங்கள். அதில் சுத்தமான பருத்தி துணியை கொண்டு எண்ணெயில் முக்கி அடிவயிற்றில் ஒத்தடம் கொடுத்திடுங்கள் அப்படியில்லை எனில் ஆமணக்கு எண்ணெயை வயிற்றில் தடவிக்கொண்டு ஹாட்பேக் ஒத்தடம் கொடுக்கலாம். பின்னர் வயிற்றை சுத்தமாக துடைத்துவிடுங்கள் வாரத்தில் மூன்று அல்லது நான்கு முறை இப்படிச் செய்யலாம். ஆமணக்கு எண்ணெய் சருமத்தில் ஊடுருவும் ஆற்றல் கொண்டது. அதோடு உள்ளுறுப்புகளுக்கு ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. இதனால் ஹார்மோன் மாற்றம் ஏற்படாது. இதனால் கருப்பை கோளாறுகள் ஏற்படாது.
கிரீன் டீ:
சூடான நீரில் கிரீன் டீ மற்றும் தேன் கலந்து குடிக்கலாம். ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று கப் கிரீன் டீ வரை குடிக்கலாம். இதில் இருக்கும் ஆன்டி ஆக்சிடென்ட்கள் கருப்பை சீராக வேளை செய்வதற்கான ஹார்மோன்களை தூண்டிடும். அதிக எடை கூட கருப்பை கோளாறுகள் வருவதற்கு ஒரு வகை காரணமாக இருக்கிறது. கிரீன் டீ குடிப்பதனால் கெட்ட கொழுப்புகள் உடலில் சேராது. இதனால் அதீத உடல் எடையும் தவிர்க்கப்படும்.
கற்றாழை:
கற்றாலை ஜூஸ் காலை உணவுக்கு முன்பு சாப்பிட்டு வர வேண்டும். இதனை தினமும் கூட சாப்பிடலாம். கற்றாழையில் ரத்தத்தில் இருக்கும் கொலஸ்ட்ராலை நீக்கும் ஆற்றல் கொண்டது. அதோடு கருப்பை இயங்குவதற்கான ஆற்றலையும் கொடுக்கிறது. மாதவிடாய் பிரச்னை இருப்பவர்கள் இதனை தினமும் குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். அதோடு கருப்பை நீர்க்கட்டிகள் வராமல் தடுத்திடும்.
நெல்லிக்காய்:
ஒரு டம்ளர் நீருடன் அரைகப் நெல்லிக்காய் சாறு கலந்து குடிக்க வேண்டும். இதனையும் நீங்கள் தினமும் குடிக்கலாம். உங்களுக்கு வேறு சில உடல் உபாதைகள் அல்லது செரிமானம் தொடர்பான பிரச்சினைகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது. நெல்லிக்காய் உடலில் புரோட்டீன்களின் அளவை அதிகரித்து, கொழுப்புக்களை குறைத்து, உடல் பருமனை தடுக்கும். நெல்லிக்காயில் ஆன்டி-ஆக்சிடென்ட்டுகள் அதிகம் உள்ளது. முக்கியமாக இதில் சூப்பராக்சைடு டிஸ்முடேஸ் என்னும் உட்பொருள் உள்ளது. இது ப்ரீ-ராடிக்கல்களிடம் இருந்து பாதுகாப்பளித்து, புற்றுநோயில் இருந்து நம்மைத் தடுக்கும். நெல்லிக்காய் உடலில் உள்ள டாக்சின்களை முழுமையாக வெளியேற்றி, உடலையும், ரத்தத்தையும் சுத்தம் செய்யும். மேலும் நெல்லிக்காய் ஜூஸ் குடித்தால் ரத்த அணுக்களின் அளவு அதிகரிக்கும்.
சீரகம்:
தினமும் தண்ணீருடன் சிறிது சீரகத்தை போட்டு நன்கு கொதிக்க வைத்து 'சீரகக் குடிநீர்' தயார் செய்து வைத்துக் கொள்ளவும். இதை, நாள்முழுவதும், அவ்வப்போது பருகி வர, எந்தவித அஜீரணக் கோளாறுகளும் வராது. நீர்மூலம் பரவும் நோய்களை தடுக்கலாம். பசியைத் தூண்டும். சீரகத்தில் இருக்கும் டாக்சின்கள் ரத்ததை சுத்தப்படுத்துகிறது, அதோடு உடலில் தேவையற்ற கொழுப்புகளை நீக்க உதவுகிறது.
வெந்தயம்:
நம் உடலுக்கு தேவையான அனைத்து விதமான பயன்களும் வெந்தயத்தில் உள்ளது. வெந்தய விதைகளில் புரதம், சர்க்கரை, வைட்டமின், உலோகச்சத்து, அமினோ அமிலங்கள் ஆகியவை அடங்கி இருக்கின்றன. வெந்தய இலைகளிலும், தண்டுகளிலும் கால்சியம், இரும்புச்சத்து நிறைந்துள்ளது. உடலுக்கு குளிர்ச்சி அளிப்பதுடன் உடலை சமநிலையில் வைக்கவும் வெந்தயம் பயன்படுகிறது.
இப்போது வெளிச்சமான இடத்தில் அமர்ந்து, கண்ணாடியைப் பார்த்து பிளாக் ஹெட்ஸ் இருக்கும் இடங்களில் பிளாக் ஹெட் ரிமூவரால் (பேஷியல் கிட்டில் இருக்கும்) மெதுவாக அழுத்த வேண்டும். இப்படியே மூக்கில் உள்ள பிளாக், ஒயிட் ஹெட்ஸ் முழுவதுமாக நீக்கி விடலாம்.
இப்போது குளிர்ந்த நீரில் மூக்கினை நன்றாக கழுவினால் போதும். மூக்கிற்கு மேக்கப்போடும் போது நமது மூக்கு ஷேப்பை கவனித்து அதற்கு தகுந்தாற்போல் மேக்கப் செய்யவேண்டும். சப்பையான மூக்கு உள்ளவர்கள் முகத்திற்கு பவுண்டேஷன் மற்றும் பவுடர் அப்ளை செய்த பிறகு, முகநிறத்தை விடகொஞ்சம் ஒரு ஷேடு குறைவான டார்க் நிறத்தில் உள்ள ரூஜை மூக்கின் இரு ஓரங்களிலும், அதாவது இருபுருவத்தின் ஆரம்பங்களிலிருந்தும் மூக்கு அடி வரை, நேராக தடவ வேண்டும்.
இப்போது நடுபக்கம் மட்டும் லைட்டாகவும், ஓரங்கள் பளிச்சென்று தெரியாதது போலவும் இருக்கும். சப்பை மூக்கு என்று பார்த்தால் தெரியாது. இதே போல் ஒரு பக்கம் சிறிது அகலமாகவும், ஒரு பக்கம் சரியாகவும் உள்ள மூக்கு தோற்றமுள்ளவர்கள் ஒரு பக்கம் மட்டும். நார்மலான மூக்கு ஷேப் உள்ளவர்களும் செய்து கொள்ளலாம், மூக்கு அழகாக தெரியும்.
சேர்க்கவேண்டியவை: இரவில் தூங்கும்போது, நான்கு மிளகைத் தூளாக்கி ஒரு ஸ்பூன் தேன் கலந்து லேசாக சூடாக்கி கால் டம்ளர் தண்ணீரில் கலந்து பருகலாம். இருமல் நீங்கி இதமான தூக்கம் வரும். மதிய உணவில் தூதுவளை ரசம், மிளகு ரசம் சேர்ப்பது அவசியம். மோர் பித்தம் நீக்கி, கபத்தைக் குறைக்க உதவும்.
தவிர்க்கவேண்டியவை: சுரைக்காய், வெண்பூசணி, மஞ்சள் பூசணி, பீர்க்கங்காய் போன்ற நீர்ச்சத்துள்ள காய்கறிகளை சில காலம் தவிர்க்கலாம். ஒருவேளை அதை சாப்பிடவேண்டும் என்றால், மிளகுத்தூள் தூவி சாப்பிடலாம்.
பால், தயிர், இனிப்பு இந்த மூன்றும் நுரையீரலில் சளியை சேர்க்கக்கூடியன என்பதால், தவிர்க்கவும். எலுமிச்சை, கமலா ஆரஞ்சு மற்றும் திராட்சை மற்றும் ஐஸ்கிரீம், சாக்லேட் தவிர்ப்பது நல்லது. இரவில் பாசிப்பயறைத் தவிர்க்கவும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்