search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "New project works"

    • கே.கே.நகர் சிவன் பூங்காவை ரூ.4.60 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணி.
    • அம்பத்தூரில் நவீன வசதிகளுடன் கூடிய விளையாட்டு மைதானம்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ், சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் சார்பில் ரூ.39 கோடியே 75 லட்சம் செலவில் போரூரில் டாக்டர் எம்.எஸ்.சுவாமி நாதன் ஈரநில பசுமை பூங்கா, கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகம் மற்றும் சாத்தாங்காடு இரும்பு மற்றும் எஃக்கு சந்தை வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட மேம்பாட்டுப் பணிகளை திறந்து வைத்து, ரூ.70 கோடியே 70 லட்சம் மதிப்பீட்டிலான 10 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பணிகளை தொடங்கி வைத்தார்.

    இதில் போரூர், ராமாபுரத் தில் சுமார் 16.63 ஏக்கர் பரப்ப ளவில் ரூ.15.75 கோடி செலவில் அமைக்கப்பட்ட டாக்டர் எம். எஸ். சுவாமி நாதன் ஈரநில பசுமை பூங்கா, கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தில் ரூ. 4 கோடி செலவில் கண்காணிப்பு கட்டுப்பாட்டு அறை, சூரிய மின்சக்தி அமைப்பு உள்ளிட்ட மேம்பாட்டுப் பணிகள்.

    திருவொற்றியூர், சாத்தாங்காடு இரும்பு மற்றும் எக்கு சந்தை வளாகத்தில் ரூ.20 கோடி செலவில் கண்காணிப்பு கட்டுப்பாட்டு அறை, மின்சார அறை, மின்னணு எடை பாலம், குடிநீர் வடிகால் அமைப்பு உள்ளிட்ட மேம்பாட்டுப் பணிகள் என மொத்தம் ரூ.39.75 கோடி செலவில் 3 முடிவுற்ற பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    காட்டுப்பாக்கம், இந்திரா நகரில் ரூ.19.10 கோடி மதிப்பீட்டிலும், போரூர், கணேஷ் நகரில் ரூ.12.93 கோடி மதிப்பீட்டிலும் கட்டப்பட உள்ள பன்னோக்கு மையங்கள்.

    சென்னை, சேத்துப்பட்டு, அப்பாசாமி தெருவில் 1.43 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள கால் பந்து மைதானம், குத்தம் பாக்கம், பெங்களூர்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிட்கோ மற்றும் புதூர்மேடு ஆகிய இடங்களில் ரூ.1.63 கோடி மதிப்பீட்டில் சாலை சந்திப்புகளை மேம்படுத்தும் பணிகள்.

    குத்தம்பாக்கம், புறநகர் பேருந்து முனையத்தில் எஸ்.இ.டி.சி. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் பேருந்துகளுக்கு ரூ.9.55 கோடி மதிப்பீட்டில் அமைக் கப்படவுள்ள கூடுதல் வாகன நிறுத்துமிடம், சைதாப் பேட்டை, அம்மா பூங்காவை ரூ.3.65 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணி, எம்.எம்.டி.ஏ. காலனி, அரசு மேல்நிலைப் பள்ளி யில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறைகள்.

    கே.கே.நகரில் உள்ள சாலை சந்திப்பு மற்றும் சிவன் பூங்காவை ரூ.4.60 கோடி மதிப்பீட்டில் மேம் படுத்தும் பணி, தாம்பரம், டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் பூங்கா மற்றும் நல்லதண்ணீர் குளத்தை ரூ.5.80 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணி, அம்பத்தூர் பானு நகரில் ரூ.7.01 கோடி மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் கூடிய விளையாட்டு மைதானம் என மொத்தம் ரூ.70.70 கோடி மதிப்பீட்டில் 10 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டி, பணிகளை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தலைமைச் செயலாளர் முருகானந்தம் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • புதிய திட்டப்பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தூத்துக்குடி மாநகராட்சி பேரறிஞர் அண்ணா பஸ் நிலையத்தில் நடைபெற்றது.
    • இதில் அமைச்சர் கே.என். நேரு கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தும், கட்டிடங்களை திறந்து வைத்தும் பேசினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட பஸ் நிலையம் திறப்பு விழா மற்றும் ரூ.200 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட பல்வேறு கட்டடங்கள் திறப்பு விழா, புதிய திட்டப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தூத்துக்குடி மாநகராட்சி பேரறிஞர் அண்ணா பஸ் நிலையத்தில் நடைபெற்றது.

    தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமை தாங்கினார். தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூக நலத்துறை அமைச்சருமான கீதாஜீவன், தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், மீன் வளத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன், நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி வரவேற்று பேசினார்.தொடர்ந்து கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    இதில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தும், கட்டி டங்களை திறந்து வைத்தும் பேசினார்.

    நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாக இயக்குனர் சிவராசு, கலெக்டர் செந்தில்ராஜ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், கூடுதல் கலெக்டர் தாக்கரே சுபம் ஞான தேவ் ராவ். சப்-கலெக்டர் கவுரவ்குமார், மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. மாநகராட்சி கமிஷனர் தினேஷ்குமார், மாவட்ட ஊராட்சி தலைவர் பிரம்மசக்தி உமரி சங்கர், மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்தசேகரன், மாநகராட்சி மண்டல தலை வர்கள், கவுன்சிலர்கள், தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள், வியாபாரி கள் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • ஒடுகத்தூர் பேரூராட்சி கூட்டம் நடந்தது
    • பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூர் பேரூராட்சியில் மாதாந்திர கவுன்சிலர் கூட்டம் நேற்று பேரூராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் சத்தியவதி பாஸ்கரன் தலைமை தாங்கினார், செயல் அலுவலர் உமாராணி முன்னிலை வகித்தார். கூட்டத்திற்கு துணைத் தலைவர் ரேணுகாதேவி பெருமாள்ராஜா அனைவ ரையும் வரவேற்றார்.

    கூட்டத்தில் பேரூராட்சி சுகாதார மேற்பார்வையாளர் சரவணன் முக்கிய தீர்மானங்களை வாசித்தார். அதில் தமிழ்நாடு சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஒடுகத்தூர் பேரூராட்சியில் ஒட்டுமொத்தமாக பணிகளை மேற்கொள்ள ரூ.86.2 லட்சம் நீதி ஒதுக்கீட்டில் ஒப்பந்த தாரருக்கு பணி உத்தரவு வழங்க 15 வார்டு கவுன்சில ர்களின் ஒப்புதலுடன் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    பேரூரா ட்சிக்கு ட்பட்ட 15 வார்டு களிலும் மழைநீர் வடிகால் அமைத்தல், எரி மேடை அமைத்தல், தெரு விளக்கு அமைத்தல், குடிநீர் வசதிகள், சாலை அமைத்தல், சமுதாயக்கூ டம், பொது கழிப்பிடம் போன்ற அனைத்து அடிப்படை வசதிகள் மேற்கொள்ள ஏகமனதாக தீர்மானி க்கப்பட்டது.கூட்டத்தில் பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் அனைத்து வார்டு கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர்.

    • கவுன்சிலர்கள் கூட்டத்தில் தீர்மானம்
    • துப்புரவு பணிக்கு கூடுதலாக 5 பேர் நியமனம்

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா பேரூராட்சியில் மாதாந்திர கவுன்சிலர் கூட்டம் பேரூராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் சுபபிரியா குமரன் தலைமை தாங்கினார், செயல் அலுவலர் உமாராணி முன்னிலை வகித்தார். கூட்டத்திற்கு துணைத் தலைவர் வசீம்அக்ரம் அனைவரையும் வரவேற்றார்.

    கூட்டத்தில் பேரூராட்சி பணியாளர் சந்தோஷ் முக்கிய தீர்மானங்களை வாசித்தார். அதில் தமிழ்நாடு சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பள்ளிகொண்டா பேரூராட்சியில் ரூ.58.30 லட்சம் ஒதுக்கீட்டில் பேவர் பிளாக் சாலை அமைப்பது, ரூ.30.50 லட்சத்தில் கழிவுநீர் கால்வாய் அமைப்பது, ரூ.2.81 லட்சத்தில் புதிய கல்வெர்ட் அமைப்பது எனவும்.

    ஒட்டுமொத்தமாக இந்த பணிகளை ரூ.91.61 லட்சம் நீதி ஒதுக்கீட்டில் ஒப்பந்ததாரருக்கு பணி உத்தரவு வழங்க 18 வார்டு கவுன்சிலர்களின் ஒப்புதலுடன் ஒருமனதாக தீர் மானம் நிறைவேற்றப்பட்டது.

    பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளிலும் மழைநீர் வடிகால் அமைத்தல், எரி மேடை அமைத்தல், தெரு விளக்கு அமைத்தல், குடிநீர் வசதிகள், சாலை அமைத்தல், சமுதாயக்கூடம், பொது கழிப்பிடம், கல்வெர்ட் அமைத்தல் போன்ற அனைத்து அடிப்படை வசதிகள் மேற்கொள்ள ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.

    இப்பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகளில் 120க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன இதில் சுகாதார பணிகளை மேற்கொள்ள துப்புரவு பணியாளர்கள் பணியிடங்கள் 20 நபர்கள் மட்டுமே உள்ளனர்.

    இதனால் அனைத்து வார்டுகளிலும் தூய்மை பணிகள் மேற்கொள்ள இயலாத சூழ்நிலை உள்ளதால் தற்போது தற்காலிகமாக தூய்மை பணி மேற்கொள்ள 5 நபர்கள் பணி அமர்த்திகொள்ள கவுன்சி லர்களின் ஒப்புதலுடன் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    ×