search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "new projects"

    • முன்னேற்பாடு பணிகள் குறித்து அமைச்சர் இன்று நேரில் ஆய்வு
    • புதிய திட்டங்களையும் அறிவிக்க உள்ளார்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டத்திற்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 11-ந் தேதி அன்று தருமபுரிக்கு வருகை தருகிறார். இதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து அமைச்சர் இன்று நேரில் ஆய்வு செய்தார்.

    தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே பாளையம் புதூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களுடன் முதல்வர் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். இதற்காக அவர் வருகிற 11-ந் தேதி காலை தருமபுரி மாவட்டத்திற்கு வருகை தருகிறார்.

    பாடு பணிகளை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் இன்று நல்லம்பள்ளி அருகே பாளையம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாவட்ட கலெக்டர் சாந்தி முன்னிலையில் இன்று ஆய்வு செய்தார்.

    ஊரகப் பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் மனுக்கள் பெரும் துறைகள் சார்பில் அமைக்கப்படும் அரங்குகளையும், மேடை அமைய உள்ள இடத்தினையும், பயனாளிகளை அழைத்து வரும் வாகனங்கள் வந்து செல்வதற்கான போக்குவரத்து வசதிகளையும், பொதுமக்களுக்கு கழிப்பிட வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை அம்சங்கள் குறித்தும் அமைச்சர், துறை சார்ந்த அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

    பின்னர் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 3 ஆண்டுகளில் 3 முறை வருகை புரிந்து பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை தருமபுரி மாவட்டத்திற்கு வழங்கியுள்ளார்.

    குறிப்பாக மகளிர் உரிமைத்தொகை பதிவு செய்யும் முகாம் மற்றும் வத்தல்மலை மலை வாழ்மக்களின் 50 ஆண்டு கால கோரிக்கையான பஸ் வசதி, சாலை வசதி மற்றும் அரசு தலைமை மருத்துவ மனையில் கூடுதல் கட்டிடங்கள் என பல்வேறு வளர்ச்சி பணிகளை தொடங்கி வைத்தார்.

    இந்த நிலையில் வருகிற 11-ந் தேதியன்று ஊரகப் பகுதிகளில் வாழும் மக்களின் குறைகளை நிவர்த்தி செய்ய மக்களை நாடிச் செல்லும் தமிழக அரசின் முக்கியமான திட்டங்களில் ஒன்றான மக்களுடன் முதல்வர் திட்டத்தினை தருமபுரி மாவட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

    இந்த விழாவில் பல்வேறு முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியும், புதிய பஸ்களை தொடங்கி வைத்தல், விவசாயிகள், பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் புதிய திட்டங்களையும் அறிவிக்க உள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • புக்குளம் ஊராட்சியில் ரூ.23½ லட்சத்தில் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலக கட்டடத்தை திறந்து வைத்தார்.
    • வடக்கு ஒன்றிய செயலாளர் கிரி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    குடிமங்கலம்:

    தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் தளி பேரூராட்சியில் ரூ.2 கோடியே 17 லட்சம் மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிகளை தொடங்கி வைத்து, முடிவுற்ற பணியினை திறந்து வைத்தார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் லட்சுமணன் தலைமை தாங்கினார்.

    அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:-

    தமிழக முதல்-அமைச்சர் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறைக்காக பங்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். தேர்தல் வாக்குறுதிகளை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் கீழ் மகளிருக்கு மாதம் ரூ.1.000 என்கிற மகத்தான திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து வசதி உள்ளிட்ட பலவற்றை செயல்படுத்திவருகிறார். மகளிர் சுயஉதவி குழு கடன்கள், நகைக்கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்குதல் போன்ற எண்ணற்ற திட்டங்கள் அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியம், அனிக்கடவு ஊராட்சி, நால்ரோட்டில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் பயணிகள் நிழற்குடை, ரூ.6½ லட்சத்தில் சுகாதார வளாகம் மற்றும் ரூ.10.90 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தார். புக்குளம் ஊராட்சியில் ரூ.23½ லட்சத்தில் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலக கட்டடத்தை திறந்து வைத்தார்.

    தளி பேரூராட்சியில் நகர்ப்புற சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.82.20லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி மற்றும் மாநில நிதிக்குழுதிட்டத்தின் கீழ் ரூ.87லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணியை துவக்கி வைத்தும் என மொத்தம் ரூ.2.17 கோடி மதிப்பீட்டில் திட்டபணிகளை துவக்கி மற்றும்முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில், திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலத்தலைவர்இல.பத்மநாபன்,வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன், உடுமலை தாசில்தார் சுந்தரம், வடக்கு ஒன்றிய செயலாளர் கிரி, குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் சுகந்தி முரளி, குடிமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மகேந்திரன்,செந்தில் கணேஷ்மாலா, தளி பேரூராட்சித்தலைவர் உதயகுமார், பேரூராட்சி செயல்அலுவலர் கல்பனா, குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியக்குழு துணை தலைவர் புஷ்பராஜ், குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கவிதா முருகானந்தம், புக்குளம் ஊராட்சி மன்றத்தலைவர் தெய்வாத்தாள், வடக்கு ஒன்றிய செயலாளர் கிரி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • புதிய திட்டங்கள் அறிவிப்புக்கு முதல்-அமைச்சருக்கு மீனவர்கள் நன்றி தெரிவித்தனர்.
    • மீனவர்கள் நலன் கருதி 10 புதிய திட்டங்களை அறிவித்தார்.

    தொண்டி

    கடந்த வாரம் ராமநாத புரத்தில் நடந்த மீனவர் சங்க மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று மீனவர்கள் நலன் கருதி 10 புதிய திட்டங்களை அறிவித்தார்.

    இந்த நிலையில் தற்போது இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டு பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளுக்கு நிவாரணம் வழங்குவதில் விடுபட்டுப்போன 21 விசைப்படகு உரிமையாளர்களுக்கு தலா ரூ.5 லட்சம் மற்றும் 12 நாட்டுப்படகு உரிமையாளர்களுக்கு தலா ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் ஆக மொத்தம் 33 படகு களின் உரிமையாளர்களுக்கு ரூ.1.23 கோடி முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து நிதி உதவி வழங்க அதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு தொண்டி பகுதி மீனவர்கள் முதல்- அமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.

    மேலும் மதுரை உயர் நீதி மன்ற கிளையின் கூடுதல் அரசு வழக்கறிஞர் ஓட வயல் சரவணன், தி.மு.க தெற்கு ஒன்றிய செயலாளர் ஓட வயல் ராஜாராம், தொண்டி பேரூராட்சி தலைவர் ஷாஜஹான் பானு ஜவஹர் அலிகான், பேரூர் கழகம் சார்பில் நவ்பல் ஆதம், மாவட்ட மீனவர் அணியைச் சேர்ந்த மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் டாக்டர் சீனிராஜன், ராமேசுவம் வில்லாயுதம் அகஸ்டெல்லா, தங்கச்சி மடம் பால் மாஸ் ஜோசப், சின்ன ஏர்வாடி உதயக்குமார் ராமநாதபுரம் மலைச்சாமி, உப்பூர் துரைபாலன், பாம்பன் அந்தோணி விஜயன், சாலமன் பாய்வா உட்பட கடலோர பகுதி மீனவர்கள் பலர் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

    • ரூ.1.92 கோடி மதிப்பீட்டில் 42 புதிய திட்டப்பணிகளை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
    • படியூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் புதிய வகுப்பறை கட்டடங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

     காங்கயம்:

    திருப்பூர் மாவட்டம் காங்கேயம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பாலசமுத்திரம்புதூர், சிவன்மலை, படியூர், பாப்பினி, வீரணம்பாளையம் மற்றும் தம்மரெட்டிபாளையம் ஆகிய ஊராட்சி பகுதிகளில் ரூ.1.92 கோடி மதிப்பீட்டில் 42 புதிய திட்டப்பணிகளை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் லட்சுமணன் தலைமையில், தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார். பின்னர் அமைச்சர் கூறியதாவது:-

    காங்கேயம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பாலசமுத்திரம்புதூர் ஊராட்சி அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் அய்யனாரப்பன் குட்டை புனரமைக்கும் பணி, ரூ.1.80 லட்சம் மிதிப்பீட்டில் ரெட்டிபாளையம் காலனியில் ஆயில் மில் அருகில் 1-வது குறுக்கு வீதியில் சிமெண்ட் கான்கீரிட் தளம் அமைக்கும் பணி, ரூ.9.10லட்சம் மதிப்பீட்டில் கத்தாங்கன்னியில் புதிய கதிரடிக்கும் களம் அமைக்கும் பணி , ரூ.13.16 லட்சம் மதிப்பீட்டில் ரெட்டிபாளையத்தில் புதிய நியாய விலைக்கடை அமைக்கும் பணி என மொத்தம் ரூ.1.92 கோடி மதிப்பீட்டில் 42 புதிய திட்டப்பணிகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும் படியூர் ஊராட்சியில் கனிமம் மற்றும் சுரங்க நிதியிலிருந்து ரூ.19.60 லட்சம் மதிப்பீட்டில் படியூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் புதிய வகுப்பறை கட்டடங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளது என்றார்.

    இந்நிகழ்ச்சியில் காங்கயம் யூனியன் சேர்மன் மகேஸ்குமார், தெற்கு ஒன்றிய செயலாளர் சிவானந்தன், சிவன்மலை பஞ்சாயத்து தலைவர் துரைசாமி, துணை தலைவர் சண்முகம், வார்டு உறுப்பினர் சிவகுமார், படியூர் பஞ்சாயத்து தலைவர் ஜீவிதா சண்முக சுந்தரம் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • எத்திலப்ப நாயக்கன்பட்டி கிராமத்தில் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் புதிய சமுதாய நல கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
    • பணிகளை கனிமொழி எம்.பி. கொடியசைத்து தொடங்கி வைத்து பொது மக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டார்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட எத்திலப்ப நாயக்கன்பட்டி, தலை காட்டுப்புரம், நீராவி புதுப்பட்டி, ராமனூத்து உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் களம் முகாம் நடைபெற்றது.

    முகாமில் தூத்துக்குடி எம்.பி. கனிமொழி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், விளாத்திகுளம் எம்.எல்.ஏ., மார்கண்டேயன், மாவட்ட கலெக்டர் செந்தில் ராஜ், கூடுதல் கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    முகாமில் எத்திலப்ப நாயக்கன்பட்டி கிராமத்தில் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் புதிய சமுதாய நல கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா, நீராவி புதுப்பட்டி-பருவக்குடியில் ரூ.198 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார் சாலை, ராம னூத்து-பருவக்குடியில் ரூ.78 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைப்பதற்கான பணியை கனிமொழி எம்.பி. கொடியசைத்து தொடங்கி வைத்து பொது மக்களிடம் மனுக்களை பெற்றுக ்கொண்டார்.

    நிகழ்ச்சியில் விளாத்தி குளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்ன மாரிமுத்து, புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி, புதூர் மத்தி ஒன்றிய செய லாளர் ராதாகிருஷ்ணன், விளாத்திகுளம் பேரூராட்சி தலைவர் சூர்யா அய்யன் ராஜ், எட்டயபுரம் நகர இளைஞரணி துணை அமைப்பாளர் அருள் சுந்தர், ராமனூத்து ஊராட்சி மன்ற தலைவர் வீரம்மாள், தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் மகேந்திரன், இம்மானுவேல், சமூக வலைதள பொறுப்பா ளர் ஸ்ரீதர் உட்பட கலந்து கொண்டனர்.

    • முடிவுற்ற பணிகளை திறந்தும் வைத்தனர்.
    • 12 சாலை பணிகளை தொடங்கி வைத்தனர்.

     தாராபுரம்:

    மூலனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை சிறப்பிக்கும் வகையில் இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் மூலனூர் மற்றும் தாராபுரம் ஊராட்சி ஒன்றியங்களில் ரூ.15.11 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிகளை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர். கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை தாங்கினார்.

    மூலனூர் ஊராட்சி ஒன்றியம் குமாரபாளையம் ஊராட்சி வடுகபட்டியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.44 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கால்நடை மருத்துவமனையை திறந்து வைத்து, முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.1.02 கோடி மதிப்பீட்டில் வண்ணாபட்டி முதல் சம்மங்கரை வரை சாலை அமைக்கும் பணி மற்றும் வேளாம்பூண்டி ஊராட்சி, அரிக்காரன்வலசில் ரூ.24.50 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணி, எரிசனம்பாளையம் பகுதியில் முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.1.7 கோடி மதிப்பீட்டில் எரிசினம்பாளையம் முதல் மேட்டூர் வரை சாலை அமைக்கும் பணி மற்றும் ரூ.76.34 லட்சம் மதிப்பீட்டில் தட்டாரவலசு முதல் நாரணாவலசு வரை சாலை அமைக்கும் பணி உள்பட மொத்தம் ரூ.6.90 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிகளை துவக்கி வைத்தும், முடிவுற்ற பணிகளை திறந்தும் வைத்தனர்.

    மேலும் தாராபுரம் ஊராட்சி ஒன்றியம், தொப்பம்பட்டி ஊராட்சி தொப்பம்பட்டியில் முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.8.21 கோடி மதிப்பீட்டில் 12 சாலை பணிகளை தொடங்கி வைத்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சியின் திட்ட இயக்குநர் லட்சுமணன், திருப்பூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் முருகேசன், துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) ஜெகதீஸ்குமார், திருப்பூர்மாநகராட்சி 4-ம் மண்டலத்தலைவர் இல.பத்மநாபன், மூலனூர் பேரூராட்சித்தலைவர் தண்டபாணி, மூலனூர் ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் சுமதி கார்த்திகுமார், வட்டார மருத்துவ அலுவலர் பாலமணி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். 

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி தூத்துக்குடி மாநகராட்சி வளர்ச்சி பெற புதிய திட்டப்பணிகள் தொடங்கப்படும் என மேயர் ஜெகன்பெரியசாமி கூறினார்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சியின் அவசர கூட்டம் மாநகர கூட்ட அரங்கில் நடைபெற்றது, மேயர் என்.பி.ஜெகன் பெரியசாமி தலைமை தாங்கினார்.துணைமேயர் ஜெனிட்டா செல்வராஜ், ஆணையாளர் சாருஸ்ரீ முன்னிலை வகித்தனர். 

    மண்டல தலைவர்கள் கலைச்செல்வி திலகராஜ், அன்னலட்சுமி கோட்டுராஜா, நிர்மல்ராஜ், பாலகுருசாமி, நகரமைப்பு குழு தலைவர் ராமகிருஷ்ணன், பணிக்குழு தலைவர் கீதாமுருகேசன், சுகாதார குழு தலைவர் சுரேஷ்குமார், 

    கல்விக் குழுத் தலைவர் அதிர்ஷ்டமணி, அதிகாரிகள் ரூபன், பொன்னையா, அருண்குமார், சரவணன், காந்திமதி, பிரின்ஸ், சேகர், ராமச்சந்திரன், மற்றும் கவுன்சிலர்கள் டாக்டர் சோமசுந்தரி, விஜயகுமார், சுயம்பு, பச்சிராஜ், முத்துவேல், ராஜதுரை ஆகியோர் கலந்து கொண்டனர்.

    மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ் தீர்மானங்களை வாசித்தார். கூட்டத்தில், மாநகராட்சி மேயர் என்.பி.ஜெகன்பெரியசாமி தொடக்க உரையாற்றி பேசுகையில், மாநகராட்சியில் அனைத்து வார்டுகளிலும் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது,

     தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி சாலைகளில் மழைநீர் தேங்காமல் இருக்கும் வகையில் வடிகால்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதே நேரத்தில் மாநகராட்சியில் புதிய சாலைகள் அமைத்தல், குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைத்தல் உட்பட, இருக்கும் நிதியை கொண்டு வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று பேசினார். 

    மேலும் தூத்துக்குடி மாநகராட்சியில் மேற்கொள்ள உள்ள வளர்ச்சிப் பணிகள் குறித்த தீர்மானங்களை வாசிக்க கூறினார். அதன்படி15-வது நிதிக்குழு மானியம் 2021-2022 நிதியின் கீழ் மேற்கொள்ளவுள்ள 48வகையான திட்ட பணிகளுக்கு அனுமதி கோருதல், மண்டலங்கள் வாரியாக வடகிழக்கு பருவமழை காரணமாக சேதமடைந்த சாலைகளை மக்கள் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் சீரமைக்க நடவடிக்கை எடுத்தல், பொதுப் போக்குவரத்துக்கு இடையூறாகவும், 

    விபத்து ஏற்படும் வகையிலும் சாலை நடைபாதைகளில் நாள் முழுவதும் வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடுக்கும் வகையில் இருசக்கர வாகனத்திற்கு 5 ரூபாயும், நான்கு சக்கர வாகனத்திற்கு 10 ரூபாயும், கட்டணம் வசூலிப்பது, மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களை கண்டறிந்து பாதுகாத்தல், அனுமதியற்ற, கட்டிடங்கள், வரை படத்தை மீறிய கட்டிடங்கள், ஆக்கிரமிப்புகள் மீது நடவடிக்கைகள் எடுப்பது,

    பொதுசுகாதாரம் திடக்கழிவு மேலாண்மை பிரிவில் பணியாற்ற போதிய பணியாளர்களை தேர்ந்தெடுக்க நிர்வாக அனுமதியுடன் ஒப்பந்தப்புள்ளி மூலம் நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளுதல், மாநகராட்சியில் தினசரி சேர்க்கப்படும் குப்பைகள் திடக்கழிவு, மக்கும் கழிவுகள் சாலையோரம் உள்ள கருவேல மரங்களை அகற்றும்பணிகள், சுகாதார பிரிவிற்கு பொது பயன்பாட்டிற்குபுதிய வாகனங்கள் கொள்முதல் செய்தல்,

     தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் அமைந்துள்ள முத்துநகர் கடற்கரை பூங்கா தற்போது சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் நிலையில் மாநகராட்சிக்கு வருவாய் பெருக்கும் வகையில் பூங்காவில் நிறுத்தப்படும் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களுக்கு கட்டணம் வசூலிப்பது, வணிக வளாகம் பகுதிகடைகளில் ஒப்பந்தப்புள்ளிகள் மூலம் வருவாயை பெருக்குதல், 

    தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தில் உள்ள 59 கடைகளில் வாடகை பாக்கி வசூலிப்பது, தூத்துக்குடி- மீளவிட்டான் ரெயில் நிலையத்திற்கு இடையே ரெயில் தடத்தில் சுரங்கப்பாதை அமைக்க நடவடிக்கை மேற்கொள்வது, மற்றும் மாநகராட்சி நிர்வாக பணிகள் உட்பட 35 வகையான பொருட் குறிப்புகள் குறித்த தீர்மானங்கள் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

    நடைபாதை வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கும் முறையை கண்டித்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெற்றிச்செல்வன், மந்திரமூர்த்தி, ஜெயலட்சுமி சுடலைமணி ஆகியோர் எதிர்க்கட்சித் தலைவர் வீரபாகு தலைமையில் வெளிநடப்பு செய்தனர்.
    • அரவக்குறிச்சி எம்.எல்.ஏ. இளங்கோ தொடங்கி வைத்தார்
    • புஞ்சை தோட்டகுறிச்சி பேரூராட்சியில்கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்கள் திறக்கப்பட்டது

    கரூர்,

    கரூர் மாவட்டம் புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சியில் பூமி பூஜை விழா மற்றும் கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்கள் திறப்பு விழா நடைபெற்றது.புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சி தளவாபாளையம் பகுதியில் அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.12 லட்சம் நிதியில் அங்கன்வாடி மையம் கட்டி முடிக்கப்பட்டு அதன் திறப்பு விழா, கணபதி பாளையம் புதூர் பகுதியில் ரூ.10 லட் சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட சமுதாயக் கூடம் திறப்பு விழா, தளவா பாளையம் ஆதிதிராவிடர் தெருவில் ரூ 2 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை, மலையம்பாளையம் பகுதியில் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை, வீரராஜபுரம் விநாயகர் கோவில் அருகில் ரூ5 லட்சம் மதிப்பீட்டில் பொதுக்கழிப்பிடம் கட் டுவதற்கான பூமி பூஜை 15 வது நிதி குழு மானியத்தில் ரூ17 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட பூங்கா திறப்பு விழா நடைபெற்றது.பூமி பூஜை மற்று திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக அரவகுறிச்சி எம்.எல்.ஏ., மொஞ்சனூர் இளங்கோ கலந்து கொண்டு கட்டி முடிக்கப்பட்ட சமுதாயக்கூடம், அங்கன்வாடி மையம் மற்றும் பணி முடிவுற்ற பூங்கா ஆகியவற்றை திறந்து வைத்தும் புதிதாக கட்டப்படும் பணிகளுக்கு பூமி பூஜையும் செய்து பணியினை தொடங்கி வைத்தார்.இதில் பேரூராட்சித் தலைவர் ரூபா முரளிராஜா, துணைத் தலைவர் சதீஸ், செயல் அலுவலர் ரமேஷ் மற்றும் வார்டு உறுப்பினர்கள், அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.







    • குலசேகரன்பட்டினத்தில் புதியதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள ஊராட்சி மன்ற கட்டிடத்தை நாளை காலை 10 மணிக்கு திறந்து வைக்கிறார்.
    • படுக்கப்பத்தில் புதியதாக அமைய உள்ள துணை மின் நிலையத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார்.

    உடன்குடி:

    தமிழக மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உடன்குடி ஒன்றியம் குலசேகரன்பட்டி னத்தில் புதியதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள ஊராட்சி மன்ற கட்டிடத்தை நாளை (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு திறந்து வைக்கிறார்.

    தொடர்ந்து காலை 11 மணிக்கு சாத்தான்குளம் ஒன்றியம் படுக்கப்பத்தில் புதியதாக அமைய உள்ள துணை மின் நிலையத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார்.

    பின்பு உடன்குடி ஒன்றியம் குதிரை மொழி ஊராட்சி சோலை குடியிருப்பில் காலை 11.30 மணிக்கு புதிய மேல்நிலை நீர் தேக்ககுடிநீர் தொட்டியை திறந்து வைக்கிறார்.

    நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், மற்றும் மாவட்ட வட்டார அரசு அதிகாரிகள் தி.மு.க. கூட்டணி கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொள்கின்றனர்.

    உடன்குடி ஒன்றிய பகுதியில் நடைபெறும் நிகழ்ச்சியில் உடன்குடி மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளரும் உடன்குடி யூனியன் சேர்மனுமான பாலசிங், துணை சேர்மன் மீரா சீராசுதீன், உடன்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் இளங்கோ, ஊராட்சி மன்ற தலைவர், துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள் கலந்து கொள்கின்றனர்.

    • ஜூலை 2-ந் தேதி கரூர் வருகை தரும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்
    • நலத்திட்ட உதவிகளும் வழங்குகிறார்

    கரூர்:

    ஜூலை 2-ந் தேதி கரூர் வருகை தரும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, முடிந்த பணிகளை தொடங்கி வைக்கவுள்ளார் என மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.

    கரூர் மாவட்டத்துக்கு ஜூலை 2-ந் தேதி முதல்வர் வருகை தந்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளதையடுத்து விழா நடைபெறும் திருமாநிலையூர் திடலை அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முதல்வரின் வருகையை முன்னிட்டு நடைபெற்ற முன்னேற்பாடு பணிகள் குறித்த அனைத்து அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது,

    தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கரூர் மாவட்டத்திற்கு ஜூலை 2-ந் தேதி வருகை தந்து, 76 ஆயிரம் பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். மேலும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, முடிந்த பணிகளையும் தொடங்கி வைக்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    நான்கு சட்டப்பேரவை தொகுதிகள் அடங்கிய கரூர் மாவட்டத்தில் முதல்வர் பதவியேற்ற ஒராண்டில் 76 ஆயிரத்தற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வருகை தரும் அவரை மாவட்ட நிர்வாகம் சார்பில் வரவேற்கிறோம்.

    கடலில் காற்றாலைகள் நிறுவி மின் உற்பத்தி செய்வது தொடர்பாக ஸ்காட்லாந்து சென்று, அங்கே கடலில் காற்றாலைகள் எவ்வாறு நிறுவப்பட்டிருக்கிறது, திட்டச் செலவுகள் எவ்வளவு செலவாகும் என ஆய்வு செய்த பின்னரே இத் திட்டம் முழுவடிவம் ெபறும்.

    தமிழகத்தில் இந்த திட்டத்தை நிறைவேற்ற முதல்வர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசித்து முடிவெடுப்போம். சுமார் 50 கி.மீ. கடலுக்குள் கேபிள் அமைத்துத்தான் கடல் காற்றாலையில் மின் உற்பத்தியை பெற முடியும் .

    இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

    • முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி தொடங்கி வைத்தார்.
    • சோலார் மின் விளக்கு அமைக்கப்படுகிறது. சோலார் மின் விளக்கு அமைக்கப்படுகிறது.

    வாணியம்பாடி:

    திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி வாரச்சந்தை மைதானம் பின்புறம் ஜின்னா சாலை முதல் இக்பால் சாலை வரை சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை மற்றும் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் சுற்றுச்சூழல் பாதுகாக்கும் வகையில் தடுப்பு வேலி, சோலார் மின் விளக்குகள் ஆகியவற்றை அமைக்கும் பணிகளை பூமி பூஜை போட்டு தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு கோ.செந்தில்குமார் எம்எல்ஏ தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ. கோவி.சம்பத்குமார், அ.தி.மு.க. நகர செயலாளர் ஜி.சதாசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர பொருளாளர் தன்ராஜ் அனைவரையும் வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி கலந்துகொண்டு சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் நடக்க இருக்கும் ரூ.20 லட்சம் மதிப்பிலான பணிகளை பூமி பூஜை போட்டு தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் நாட்றம்பள்ளி ஒன்றிய செயலாளர் சாமராஜ், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர்கள் பாரதிதாசன், கோவிந்தசாமி, ராமசாமி, செல்வராஜ், உதயேந்திரம் பேரூராட்சி கழக செயலாளர் சரவணன், ஆலங்காயம் பேரூர் கழக செயலாளர் சிவக்குமார், முன்னாள் பேரூராட்சி தலைவர் டி.பாண்டியன், ஆலங்காயம் பேரூர் கழக அம்மா பேரவை செயலாளர் கந்தன், அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் முனுசாமி, அம்மா பேரவை சதீஷ்குமார், ஆலங்காயம் கிழக்கு ஒன்றிய துணை செயலாளர் எம்.ஜி என்கின்ற ஜெய்சங்கர், ஜாப்ராபாத் ஊராட்சி மன்ற உறுப்பினர் சையத் சபியுல்லா, ரபீக் அஹமத் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    குமாரசாமி தாக்கல் செய்துள்ள கர்நாடக பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் எதுவும் இல்லை என்று நடிகரும், முன்னாள் மந்திரியும், காங்கிரஸ் பிரமுகருமான அம்பரீஷ் கூறினார்.
    மண்டியா :

    மண்டியாவில் நடிகரும், முன்னாள் மந்திரியும், காங்கிரஸ் பிரமுகருமான அம்பரீஷ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    முதல்-மந்திரி குமாரசாமி தாக்கல் செய்த பட்ஜெட்டில் மண்டியா மாவட்டத்தின் வளர்ச்சிக்காக குறைந்தது ரூ.400 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் வெறும் ரூ.162 கோடி தான் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது மண்டியா மாவட்ட மக்களுக்கு திருப்தி அளிப்பதாக இல்லை.

    சுற்றுலாத்துறை மற்றும் தொழில் துறைக்காவது அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று நினைத்தேன். அதுவும் இல்லை. புதிய திட்டங்கள் ஏதும் அறிவிக்கப்படவில்லை.

    கே.ஆர்.எஸ். அணை அருகே அமைந்துள்ள பிருந்தாவன் பூங்காவை மேம்படுத்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதி, சித்தராமையா முதல்-மந்திரியாக இருந்தபோது அறிவிக்கப்பட்டதுதான். அதைத்தான் குமாரசாமியும் அறிவித்துள்ளார். ககனசுக்கி நீரீவீழ்ச்சி சுற்றுலா தலத்தை மேம்படுத்தவும் நிதி ஒதுக்கப்பட்டு இருக்கிறது. இதுவும் முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் அறிவிக்கப்பட்ட ஒன்றுதான்.

    மண்டியாவில் உள்ள மிம்ஸ் அரசு ஆஸ்பத்திரியை மேம்படுத்தவும், கிராமங்களில் குடிநீர் பிரச்சினையை போக்க, குடிநீர் திட்டத்தை செயல்படுத்தவும் நிதி ஒதுக்கப்பட்டு இருக்கிறது. இது 2 மட்டும்தான் மண்டியா மாவட்டத்திற்கு கிடைத்துள்ள புதிய திட்டங்கள் ஆகும்.

    இவ்வாறு அம்பரீஷ் கூறினார். 
    ×