என் மலர்
நீங்கள் தேடியது "NGO"
- சிறுமிகளின் நிறம், உயரம் மற்றும் வயதுக்கு ஏற்ப அவர்களின் 'விலை' நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- சிறுமிகளுக்கு 18 வயது ஆனதாக காட்டுவதற்கு போலியான ஆதார் கார்டுகளை தயார் செய்துள்ளார்.
ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களை கடத்தி விற்கும் புரோக்கர்களிடம் இருந்து பெண்களை விலைக்கு வாங்கி மணப்பெண் தேடும் இளைஞர்களுக்கு ரூ.2.5 முதல் 5 லட்சத்திற்கு 'விற்பனை செய்து வந்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே உள்ள சுஜன்புரா கிராமத்தில் காயத்ரி சர்வ சமாஜ் என்ற அறக்கட்டளையின் அலுவலகம் அமைந்துள்ளது.
ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு திருமணம் செய்து வைப்பதாக கூறி, ஏழை பெண்களை கடத்தி மணப்பெண் தேடும் இளைஞர்களுக்கு இந்த அறக்கட்டளை விற்று வந்துள்ளது.
உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் இந்த அறக்கட்டளை அலுவலகத்தில் இருந்து தப்பித்து வந்து போலீசாரிடம் புகார் அளித்த பின்பு இந்த மோசடி அம்பலமாகியுள்ளது.
சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில், போலீசார் அறக்கட்டளையின் அலுவலகத்தை சோதனை செய்து காயத்ரி, ஹனுமான், பகவான் தாஸ், மகேந்திரா ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக பேசிய காவல் அதிகாரி, பெண்களை கடத்தி விற்கும் கும்பல் ஒன்று பீகார், மேற்கு வங்கம், ஒடிசா மற்றும் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த சிறுமிகளை காயத்ரி சர்வ சமாஜ் அறக்கட்டளையின் இயக்குனரான காயத்ரி விஸ்வகர்மாவுக்கு விற்று விடுவார்கள். காயத்ரி, இந்தப் பெண்களை ரூ.2.5 முதல் 5 லட்சத்திற்கு திருமணம் செய்து கொள்ள விரும்பும் இளைஞர்களுக்கு விற்றுவிடுவார்.
சிறுமிகளின் நிறம், உயரம் மற்றும் வயதுக்கு ஏற்ப அவர்களின் 'விலை' நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் சிறுமிகளுக்கு 18 வயது ஆனதாக காட்டுவதற்கு போலியான ஆதார் கார்டுகளை தயார் செய்துள்ளார். இது மாதிரியான 1500 திருமணங்களை காயத்ரி நடத்தியுள்ளார். அவர் மீது பத்து வழக்குகள் நிலுவையில் உள்ளன" என்று தெரிவித்தார்.
- இனி நீதிமன்றத்திற்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை என்றும் அவர்கள் தனது தந்தையிடம் பொய் கூறினர்
- சில நாட்களுக்குப் பிறகு போலீசார் அவரைக் கைது செய்தனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜகான்பூரில் வசிக்கும் குர்மீத் சிங்கிற்கு 103 வயது. 2018 ஆம் ஆண்டில் அவர் தனது ஐந்து ஏக்கர் நிலத்தை குருத்வாராவிற்கு நன்கொடையாக வழங்க முடிவெடுத்தார்.
இது அவரது மகன்களான கமல்ஜீத் மற்றும் ஹர்பிரீத் சிங்கிற்குப் பிடிக்கவில்லை. தந்தை குருத்வாராவிற்கு நிலத்தை நான் கொடுப்பதைத் தடுக்க விரும்பினர்.
இதனால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கும் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் முதியவரின் மகன்கள் ஒரு தந்திரமான திட்டத்தை வகுத்தனர்.
நிலம் தொடர்பான சட்ட நடவடிக்கைகள் முடிந்துவிட்டதாகவும், இனி நீதிமன்றத்திற்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை என்றும் அவர்கள் தனது தந்தையிடம் பொய் கூறினர். முதியவர் தனது மகன்களை நம்பினார். நீதிமன்றத்திற்குச் செல்லவில்லை.
ஆனால் மகன்கள் கமலும் ஹர்ப்ரீத்தும் தொடர்ந்து நீதிமன்றத்திற்குச் சென்று வந்தனர். எனவே விசாரணைகளுக்கு ஆஜராகத் தவறியதற்காக குர்மீத்துக்கு நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்தது. சில நாட்களுக்குப் பிறகு போலீசார் அவரைக் கைது செய்தனர். அதன்படி முதியவர் கைது செய்யப்பட்டு கடந்த 18 மாதங்களாக சிறையில் இருந்துள்ளார்.

இதற்கிடையே சிறைக்குச் சென்ற உள்ளூர் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் உறுப்பினர்கள் குர்மீத்தைப் பற்றி அறிந்து கொண்டனர். அவருடைய கதையைக் கேட்டு அவர்கள் நெகிழ்ச்சியடைந்தனர்.
குர்மீத்தை விடுதலை செய்வதற்கான முயற்சிகள் தொடங்கியுள்ளன. இந்த முயற்சிகளை குர்மீத்தின் மகன்கள் முறியடிக்க முயன்றனர். ஜாமீன் கிடைக்காமல் இருக்க அவர்கள் நிறைய முயற்சி செய்தனர்.
இருப்பினும், அந்த தொண்டு நிறுவனத்தின் உறுப்பினர்கள் பின்வாங்கவில்லை. பல மாத முயற்சிக்குப் பிறகு, குர்மீத்துக்கு ஜாமீன் கிடைத்தது.
அவர் சில நாட்களுக்கு முன்பு சிறையில் இருந்து வெளியே வந்தார். இதன்மூலம் அவரது கதை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தனது மகன்கள் செய்த காரியத்தால் அவர் மிகவும் மனமுடைந்து போயுள்ளார். எந்தத் தந்தைக்கும் தன்னைப் போன்ற ஒரு நிலைமை வரக்கூடாது என்று அவர் கண்ணீர் மல்க கூறுகிறார்.
- மூன்றாவது நாளாக 40 டிகிரி செல்சியஸைத் தாண்டி வெப்ப அலை வீசி வருகிறது.
- பெரும்பாலான உடல்கள் வீடற்றவர்கள் மற்றும் தெருக்களில் போதைக்கு அடிமையானவர்களுடையது.
பாகிஸ்தானின் மிகப்பெரிய நகரமான கராச்சியில் வெப்ப அலை தாக்கியதில் கடந்த நான்கு நாட்களில் 450க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தாக ஒரு முன்னணி தன்னார்வ தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானின் துறைமுக நகரமான கராச்சி, கடந்த சனிக்கிழமை முதல் கடுமையான வெப்பமான காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து மூன்றாவது நாளாக 40 டிகிரி செல்சியஸைத் தாண்டி வெப்ப அலை வீசி வருகிறது. குறிப்பாக, கடலோரப் பகுதிகளில் மிக அதிகமாக வெப்பநிலை வீசுகிறது.
இந்நிலையில், கடந்த நான்கு நாட்களில் குறைந்தது 427 உடல்களைப் பெற்றதாக எதி அறக்கட்டளை கூறியுள்ளது. இது சிந்து அரசாங்கம் நேற்று 23 உடல்களை மூன்று அரசு மருத்துவமனைகளில் இருந்து பெற்றதாக தெரிவித்துள்ளது.
எதி டிரஸ்ட் என்பது பாகிஸ்தானின் மிகப்பெரிய நலன்புரி அறக்கட்டளை மற்றும் ஏழைகள், வீடற்றோர், ஆதரவற்றக் குழந்தைகள், தூக்கி எறியப்பட்ட குழந்தைகள் மற்றும் தாக்கப்பட்ட பெண்களுக்கு பல்வேறு இலவச அல்லது மானிய விலையில் சேவைகளை வழங்குகிறது.
இதுகுறித்து, அறக்கட்டளையின் தலைவர் பைசல் எதி கூறுகையில், " கராச்சியில் அறக்கட்டளையின் கீழ் நான்கு சவக்கிடங்குகள் செயல்படுகின்றன. மேலும் எங்கள் பிணவறைகளில் அதிக உடல்களை வைக்க இடமில்லாத நிலையை நாங்கள் அடைந்துள்ளோம்.
வருத்தமான உண்மை என்னவென்றால், இந்த உடல்களில் பல கடுமையான வானிலையிலும், நிறைய சுமை கொட்டும் பகுதிகளில் இருந்து வந்தவை.
பெரும்பாலான உடல்கள் வீடற்றவர்கள் மற்றும் தெருக்களில் போதைக்கு அடிமையானவர்களுடையது.
இந்த மக்கள் நாள் முழுவதையும் தங்களின் வாழ்வாதாரத்திற்காக முழு நாளையும் செலவிடுவதால் தீவிர வெப்ப அலை அவர்களுக்கு ஏற்பட்டது.
நேற்று மட்டும் 135 உடல்கள் தங்கள் பிணவறைக்கு வந்ததாகவும், திங்கட்கிழமை அன்று 128 உடல்கள் கிடைத்தது" என்றார்.
- என்.ஜி.ஓ தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் வடமேற்கு டெல்லியில் உள்ள சுல்தான்புரியில் அமைத்துள்ள பள்ளி ஒன்றில் பயிற்சியாளராக வந்துள்ளார்.
- மாணவியின் உறவினர்கள் மற்றும் அண்டை வீட்டார் போலீஸ் நிலையம் முன் திரண்டு பயிற்சியாளருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.
டெல்லியில் பள்ளி மாணவிகளுக்குத் தற்காப்பு சொல்லித்தருவதற்காக வந்தபயிற்சியாளர் 11 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. மாணவிகளுக்கு தங்களை ஆபத்துகளிலிருந்து தற்காத்துக் கொள்ளும் வகையில் பயிற்சி அளிப்பதற்காக ஒப்பந்த அடிப்படையில் சதீஸ் என்ற நிபுணர் ஒருவர் என்.ஜி.ஓ தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் வடமேற்கு டெல்லியில் உள்ள சுல்தான்புரியில் அமைத்துள்ள பள்ளி ஒன்றில் பயிற்சியாளராகச் சேர்ந்துள்ளார்.
இந்நிலையில் பள்ளியில் படித்து வந்த 11 வயது மாணவிக்கு தற்காப்பு சொல்லித்தருவதாகக் கூறி தனியாக அழைத்துத் தகாத இடங்களில் தொட்டு பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதை அந்த மாணவி தனது பெற்றோர்களிடம் கூறிய நிலையில் மாணவியின் உறவினர்கள் மற்றும் அண்டை வீட்டார் போலீஸ் நிலையம் முன் திரண்டு பயிற்சியாளருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.இதனைத்தொடர்ந்து இந்த புகார் குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று டெல்லி அரசு தெரிவித்துள்ளது.
கேரளாவில் வரலாறு காணாத மழை பெய்து வருவதால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அணைகள் நிரம்பியதால் தண்ணீர் திறக்கப்பட்டதையடுத்து வெள்ளப்பாதிப்பு அதிகரித்துள்ளது. உயிர் இழப்பும் அதிகரித்து வருகிறது.
வீடு,உடமைகளை இழந்து உணவு, உடையின்றி மக்கள் தவிக்கிறார்கள். கேரளாவை புரட்டிப் போட்ட மழையால் சாலை, ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
கேரள அரசுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.5 கோடி நிவாரண உதவி வழங்கப்பட்டது. இந்த நிலையில் தமிழக அரசு ஊழியர்கள் சார்பாகவும் நிதியுதவி வழங்க முடிவு செய்துள்ளனர்.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஒருநாள் சம்பளத்தை பிடித்தம் செய்து கொள்ள தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய (என்.ஜி.ஓ.) சங்கம் முடிவு செய்துள்ளது.
இது குறித்து சங்கத்தின் மாநில தலைவர் இரா.சண்முகராஜன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

எங்களது ஒருநாள் ஊதியத்தை பிடித்தம் செய்து நிவாரண நிதி வழங்க உரிய ஆணை வழங்குமாறு தமிழக முதல்-அமைச்சரை அரசு அலுவலர் ஒன்றியம் கேட்டுக் கொள்கிறது.
இதற்கு முன்உதாரணமாக தமிழகத்தில் ஏற்பட்ட பல்வேறு நிகழ்வுகளில் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் இதுபோன்று தங்கள் பங்களிப்பை வழங்கி உள்ளார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார். #KeraraFloods #KeralaRains