என் மலர்
நீங்கள் தேடியது "Nilgiri"
- உணவு பாதுகாப்பு துறையினர் கடைகளில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
- 2 பாக்கெட்டுகள், சாக்லேட் பார்களை பறிமுதல் செய்து அழித்தனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் பேக்க ரிகளில் தயாரிக்க ப்படும் கேக்குகள், காரம் மற்றும் இனிப்பு வகைகளில் அதிகப்ப டியான வண்ண ங்கள் கலக்கப்படுவதாக ஏராளமான புகார்கள் வந்தன.
இதைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அம்ரித் உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்பு துறையின மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் சுரேஷ் மற்றும் குன்னூர் உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகுமார் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
அதன் அடிப்படையில் நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட போது சுகாதாரமற்ற முறையில் உணவுப்பொருள் தயாரித்த ஒரு பேக்கரியில் இருந்த 2 பாக்கெட்டுகள், சாக்லேட் பார்களை பறிமுதல் செய்து அழித்தனர். மேலும் பேக்கரி கடைக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
இதுகுறித்து மாவட்ட நியமன அலுவலர் சுரேஷ் கூறியதாவது:-
நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பேக்க ரியில் தயாரிக்கப்படும் இனிப்பு, கார வகைகள் மற்றும் கேக்குகளில் பரிந்துரைக்கப்பட்ட அளவு மட்டுமே வண்ணங்கள் சேர்க்கப்பட வேண்டும். மாறாக அதிகப்படியான அளவு வண்ணங்கள் சேர்க்க ப்படும் பேக்கரி களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் அனைத்து உணவு வணிகர்களும் தங்களின் உணவகங்கள் மற்றும் பேக்கரிகளில் உணவுப்பொருட்களை சுகாதாரமாக தயாரிக்க வேண்டும். பூச்சிகளை பிடித்து அழிக்கும் எந்திரங்களை தங்கள் வளாகங்களில் பொருத்தியிருக்க வேண்டும். பேப்பர்களில் எண்ணை பலகாரங்களை அடுக்கி வைக்கவோ, பஜ்ஜி போண்டா போன்ற உணவுப்பொருட்களை பேப்பரில் வைத்து பரிமாறவோ கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழ்நாட்டை பொறுத்த வரை ஒரே நாளில் 11 மருத்துவக்கல்லூரிகள் திறந்துவைக்கப்பட்டது.
- ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் 600 படுக்கை வசதிகள் உள்ளன
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் முதலாம் ஆண்டு மாணவ- மாணவிகளுக்கான வெள்ளை அங்கி அணிவிக்கும் நிகழ்ச்சி மற்றும் தமிழ் மன்ற தொடக்க விழா நடந்தது. அமைச்சர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார்.
அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமை தாங்கி மாணவ- மாணவிகளுக்கு வெள்ளை அங்கி வழங்கினார். அதனை தொடர்ந்து மாணவ- மாணவிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
விழாவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசிய தாவது:-
தமிழ்நாட்டை பொறுத்த வரை ஒரே நாளில் 11 மருத்துவக்கல்லூரிகள் திறந்துவைக்கப்பட்டது. இது தமிழ்நாட்டிற்கு கிடைத்த ஒரு மிகப்பெரிய பெருமைக்குரியதாகும். இந்தியாவில் 36 மாநிலங்கள் இருந்தபோதிலும் தமிழ்நாட்டில் ஒரே நாளில் 11 மருத்துவக்கல்லூரி திறந்து வைக்கப்பட்டது ஒரு வரலாற்று சிறப்பு என்றே கூறலாம்.இன்றைய தினம் இத்தலார் பகுதியில் 2 புதிய மருத்துவக்கல்லூரி கட்டமைப்புகள் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள வளரினம் பெண்கள், கர்ப்பிணி தாய்மார்களுக்கு ரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள மக்கள் உயர் சிகிச்சைக்காக வெளி மாவட்டத்திற்கு செல்ல வேண்டிய சூழ்நிலையை தவிர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்டுமான பணிகள் விரைந்து முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியதின் அடிப்படையில் மருத்துவமனை கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள மருத்துவக்கல்லூ ரியில் 150 மாணவர்களுக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு இந்த ஆண்டும் சேர்ந்து மொத்தம் 300 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இதில் கடந்த ஆண்டு முதலாம் ஆண்டு 99 சதவீதம் மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மடிக்க ணினி மற்றும் பாடப்புத்த கங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இன்றைய தினம் 13 மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
சிறிய மாவட்டமான இந்த நீலகிரி மாவட்டத்தில் உள்ள 600 படுக்கை வசதிகள் கொண்ட இந்த மருத்துவமனை வருகிற ஜூலை மாதம் திறக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து மா.சுப்பி ரமணியன் மாணவ- மாணவிக ளுக்கான தனி உடற்பயிற்சி கூடத்தினையும் திறந்து வைத்து பார் வையிட்டார்.
- பணியாளர்களுக்கு நல வாரியத்தின் மூலம் ரூ.32.20 லட்சம் மதிப்பிலும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
- மனுநீதி நாள் முகாமில், தையல் எந்திரம் வழங்கப்பட்டது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபா ன்மையினர் நலத்துறையின் சார்பில், இதுவரை 529 பயனாளிகளுக்கு கிராமப்புற பெண் கல்வி ஊக்க த்தொ கையாக ரூ.3.26 லட்சமும், 540 பயனாளி களுக்கு உலமாக்கள் மற்றும் பணியாளர்களுக்கு நல வாரியத்தின் மூலம் ரூ.32.20 லட்சம் மதிப்பிலும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
இதுதவிர 431 பயனாளி களுக்கு முஸ்லிம் மகளிர் உதவும் சங்கத்தின் மூலம் ரூ.50 லட்சம் மதிப்பிலும், 129 பயனாளிகளுக்கு கிறுஸ்துவ மகளிர் உதவும் சங்கத்தின் மூலம் ரூ.22 லட்சம் மதிப்பிலும், 4,898 பயனாளி களுக்கு ரூ.152.28 லட்சம் மதிப்பில், கல்வி உதவி த்தொ கை வழங்கப்பட்டுள்ளது.
2021-2022-ம் கல்வியாண்டில் உள்ள அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 11-ஆம் வகுப்பு பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தைச் 1,294 மாணவி யர்களுக்கு சார்ந்த 1,082 மாணவர்களுக்கு மற்றும் என மொத்தம் ரூ.121 லட்சம் மதிப்பில் 2,376 மிதிவண்டி களும், மிக பிற்படுத்தப்ப ட்டோர் மற்றும் சிறுபான்மை யினர் இனத்தைச் சார்ந்த ஏழை, எளிய 68 மகளிருக்கு ரூ.3.76 லட்சம் மதிப்பில், தையல் எந்திரம் போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
தையல் எந்திரம் பெற்று பயனடைந்த பயனாளி மேக்லின் சத்யபிரியா கூறியதாவது:-
நான் எனது கணவருடன் குன்னூர் மவுண்ட் பிளசண்ட் பகுதியில் வசித்து வருகிறேன். எனது கணவர் சொந்தமாக தொழில் செய்து வருகிறார். நான் குன்னுார் உப்பாசி எம்.பி.ஏ பாலிடெக்னிக்கில் தையல் பயிற்சி பெற்றேன். எனது ஊரில் நடந்த முகாமில் தையல் எந்திரம் வேண்டி விண்ணப்பித்தேன்.
அதனைதொடர்ந்து, எனக்கு பிற்படுத்தப்ப ட்டோர் மற்றும் சிறுபான்மை யினர் நலத்துறையின் சார்பில், அதிகரட்டி பேரூராட்சி காட்டேரி கிராமத்தில், நடந்த மனுநீதி நாள் முகாமில், தையல் எந்திரம் வழங்கப்பட்டது. இதன் மூலம் தையல் தொழில் செய்து வருகிறேன். இதில் வரும் வருமானம் எனக்கும், எனது குடும்பத்திற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. என்னைப் போன்றவர்கள் சுய தொழில் செய்து வாழ்க்கையில், முன்னேற உதவிய முதல்-அமைச்ச ருக்கு நன்றி.
இவ்வாறு அவர் கூறினார்.
தையல் இயந்திரம் பெற்ற ஹரிப்ரியா கூறுகையில், நான் கோத்தகிரியில், உள்ள காஸ்ட்லி எஸ்டேட்டில் வசிக்கிறேன். எனது கணவர் சிவா லாரி டிரைவராக உள்ளார். எங்கள் குடும்பம் எளிமையான குடும்பம். முதல்-அமைச்சரின் இலவச தையல் எந்திரம் வழங்கும் திட்டம் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் செயல்படுத்தப்படுவதை உறவினர்கள் மூலம் தெரிந்து கொண்ட நான், அதற்காக விண்ணப்பம் செய்திருந்தேன். இதனை பரிசீலனை செய்த அதிகாரிகள், எனக்கு விலையில்லா தையல் எந்திரத்தினை வழங்கினர். இதன் மூலம் நான் துணியாலான பைகளை தைத்து, வாழ்வாதாரத்தில் முன்னேறி வருகிறேன். எங்களின் இந்த முன்னேற்றத்திற்கு உதவிய முதல்-அமைச்சருக்கு நன்றி என்றார்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை யிலான தமிழக அரசு, பிற்படு த்தப்பட்ட, மிகப்பிற்படு த்தப்பட்ட/ சீரமரபினர் மற்றும் சிறுபா ன்மையின சமூகத்தினர் பயன் பெறும் வகையில் பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி, வாழ்வாதராம் பொருளா தாரம் முன்னேற்றம் அடைந்த நீலகிரி மாவட்ட மக்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
- உருளைக்கிழங்கு கொள்முதல் விலை படிப்படியாக குறைந்து வருகிறது.
- 45 கிலோ எடை கொண்ட உருளைக்கிழங்கு மூட்டை ரூ.1,450-க்கு கொள்முதல் செய்யப்படுகிறது.
கோத்தகிரி
கோத்தகிரி பகுதியில் உருளைக்கிழங்கு அறுவடை தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆனால் கொள்முதல் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தேயிலை சாகுபடிக்கு அடுத்தபடியாக மலைக்காய்கறிகள் விவசாயமே பிரதானமாக உள்ளது. விவசாயிகள் தங்களுக்கு சொந்தமான நிலங்களை பதப்படுத்தி கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, முட்டைகோஸ், காலிபிளவர், முள்ளங்கி, நூல்கோல், பீன்ஸ், பூண்டு உள்ளிட்ட மலைக்காய்கறிகளை பயிரிட்டு வருகின்றனர். ஒரு சில விவசாயிகள் ஏற்றுமதி தரம் வாய்ந்த புரூக்கோலி, ஐஸ்பெர்க் உள்ளிட்ட இங்கிலீஷ் காய்கறிகளையும் சாகுபடி செய்கின்றனர்.
இந்தநிலையில் கோத்தகிரி அருகே உள்ள நெடுகுளா, கூக்கல், கட்டபெட்டு, பனஹட்டி, பில்லிக்கம்பை, கக்குச்சி, ஈளாடா, புதுத்தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான பரப்பளவில் விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் உருளைக்கிழங்கு பயிரிட்டுள்ளனர். மேலும் தங்களது நிலத்தில் விளைந்த உருளைக்கிழங்குகளை தீவிரமாக அறுவடை செய்து வருகின்றனர். ஆனால் மேட்டுப்பாளையம் மற்றும் கோத்தகிரி மார்க்கெட்டில் உள்ள காய்கறி மண்டிகளில் உருளைக்கிழங்கு கொள்முதல் விலை படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:- காய்கறி மண்டிகளில் கடந்த சில மாதங்களாக உருளைக்கிழங்கு கிலோ ரூ.40 முதல் ரூ.45 வரை கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. இதை நம்பி பெரும்பாலான விவசாயிகள் உயர்தர விதைகளான கிரிராஜா, குப்பிரி ஜோதி, ஜலந்தர் மற்றும் பண்ணை கிழங்கு விதைகளை சாகுபடி செய்து வந்தோம். தற்போது கோத்தகிரி காய்கறி மண்டிகளில் உருளைக்கிழங்கு கிலோ ரூ.28 முதல் ரூ.30 வரை, மேட்டுப்பாளையம் காய்கறி மண்டிகளில் 45 கிலோ எடை கொண்ட உருளைக்கிழங்கு மூட்டை ரூ.1,450-க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. அதாவது விலை வீழ்ச்சி ஏற்பட்டு கிலோவுக்கு ரூ.32 மட்டுமே கிடைக்கிறது. மேலும் நல்ல விதை கிழங்குகள் கிடைக்காததாலும், பூச்சி தாக்குதல் ஏற்பட்டு சாகுபடி குறைந்ததாலும் பாதிக்கப்பட்டு வருகிறோம். இதனால் நஷ்டம் ஏற்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
- தடுப்பு சுவர் கட்டும் பணியை கலெக்டர் அம்ரித் தொடங்கி வைத்தார்
- ரூ.1.39 கோடி மதிப்பில் தடுப்புச் சுவர் கட்டுவதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம், உதகை ஊராட்சி ஒன்றியம், நஞ்சநாடு ஊராட்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில், ரூ.1.39 கோடி மதிப்பில் தடுப்புச் சுவர் கட்டுவதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதனை மாவட்ட கலெக்டர் அம்ரித் தொடங்கி வைத்தார். அதன்பிறகு அங்கு நடக்கும் கட்டுமான பணிகளை பார்வை யிட்டார். இதனை தொடர்ந்து கலெக்டர் அம்ரித் நிருபர்களிடம் கூறியதாவது:-
நீலகிரி மாவட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் ஆகிய 4 ஊராட்சி ஒன்றியங்களில் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர், சாலை, மின்சாரம், கழிப்ப றை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொ ள்ளப்பட்டு வருகிறது. அங்கு நடக்கும் பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளை தொடர்ந்து கண்காணித்து, அதனை விரைவாகவும், தரமாகவும் முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
நீலகிரி மாவட்டத்தில், வடகிழக்கு-தென்மேற்கு பருவ மழை காலங்களில் அதிக மழை பெய்வதால், மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் போக்குவரத்து சாலைகள் மற்றும் தடுப்புச்சுவர்கள் சேதமடைய வாய்ப்பு உள்ளது. கடந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை காரணமாக, ஊட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நஞ்சநாடு, இத்தலார் ஆகிய ஊராட்சியில் பல்வேறு இடங்களில் சேதம் ஏற்பட்டது. அப்போது தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், நீலகிரி எம்.பி ஆ.ராசா ஆகியோர் நேரில் பார்வை யிட்டு, கனமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண தொகை வழங்கினர். அப்போது அந்த பகு தியில் வசிக்கும் பொதுமக்கள், கனமழை யால் ஏற்படும் சேதத்தை தடுக்கவும் வீடுகளுக்குள் மழைநீர் புகுவதை தடுக்கவும் சுற்றுச்சுவர் அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
அதனை தொடர்ந்து சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் மூலம் விவரங்களை சேகரித்து, தமிழக அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இதன்அடிப்படையில் அரசிடம் உரிய அனுமதி பெற்று ஊரக வளர்ச்சி முகமை சார்பில், நஞ்சநாடு அம்மனட்டி கிராமத்தில் ரூ.1.39 கோடி மதிப்பில் 3 பணிகளும், இத்தலார் ஊராட்சியில் ரூ.1.21 கோடி மதிப்பில் 5 பணிகளும் என மொத்தம் ரூ.2.60 கோடி மதிப்பில் 8 இடங்களில் தடுப்புச்சுவர் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. மழை காலம் தொடங்குவதற்கு முன்ன தாக பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகா ரிகளிடம் அறிவுறு த்தப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் உமாம கேஸ்வரி, செய ற்பொறியா ளர் செல்வகு மரன், ஊட்டி வருவாய் கோட்டாட்சியர் துரைசாமி, ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன் என்ற மாதன், வட்டாட்சியர் ராஜசேகர், வட்டார வளர்ச்சி அதிகாரிகள் ஸ்ரீதரன், நந்தக்குமார், நஞ்சநாடு ஊராட்சித்தலைவர் சசிகலா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- 10 நிமிட தாமதத்திற்கு பிறகு ஊட்டி புறப்பட்டு சென்றது.
- 25-க்கும் மேற்பட்ட காட்டு எருமைகள் நின்று கொண்டு இருந்தன.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தின் அடையாளமாக மலை ெரயில் சேவை திகழ்ந்து வருகிறது. இது அடா்ந்த வனப் பகுதி வழியாக குறைந்த வேகத்தில் செல்லும். எனவே மலை ரெயிலில் பயணிக்க சுற்றுலாப் பயணிகள் அதிக ஆா்வம் காட்டி வருகின்றனா்.
இந்த நிலையில் அந்த ரெயில் நேற்று காலை குன்னூரில் இருந்து ஊட்டிக்கு புறப்பட்டது. அப்போது டிரைவர் கணேசன் ரெயிலை இயக்கினார். குன்னூரில் இருந்து புறப்பட்ட மலை ரெயில் வெலிங்டன் மேம்பாலப் பகுதி அருகே வந்தது. அப்போது, தண்டவாளத்தின் குறுக்கே 25-க்கும் மேற்பட்ட காட்டு எருமைகள் நின்று கொண்டு இருந்தன. இதனை தற்செயலாக பார்த்த டிரைவர் கணேசன் அதிர்ச்சி அடைந்தார். எனவே அவர் உடனடியாக பிரேக் போட்டு மலை ெரயிலை நிறுத்தினாா். அதன்பிறகு அவா் ரயிலில் இருந்து இறங்கி சென்று தண்டவாளத்தின் குறுக்கே நின்ற காட்டு எருமைகளை காட்டு ப்பகுதிக்குள் விரட்டி னாா். அதன்பிறகு குன்னூ ரில் இருந்து புறப்பட்ட மலை ரெயில், சுமார் 10 நிமிடம் தாமதமாக ஊட்டி க்கு புறப்பட்டு சென்றது.
- தேயிலைக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்ய வேண்டும்.
- அத்தனை கோரிக்கைகளும், மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்
ஊட்டி,
நீலகிரி மாவட்ட விவசாயிகள் சங்கங்களின் தலைவர்கள் தும்பூர் போஜன், தர்மன், ராஜு மற்றும் விவசாயிகள், தமிழக பா.ஜனதா தலைமை அலுவலகத்துக்கு நேரில் வந்து மாநில தலைவர் அண்ணாமலையை சந்தித்தனர். அப்போது அவர்கள் தேயிலைக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்யக் கோரியும், நீண்டகாலமாக தீர்க்கப்படாத தேயிலை விவசாயிகளின் பல்வேறு பிரச்சினைகளையும் கோரிக்கைகளையும் விரிவாக எடுத்துக் கூறினர்.அவர்களின் அத்தனை கோரிக்கைகளும், மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்றும், தேயிலை சாகுபடி செய்யும் நீலகிரி மாவட்ட விவசாயிகள் அனைவருக்கும், பாதுகாப்பையும், ஆதரவையும், பா.ஜனதா தொடர்ந்து வழங்கும் என்றும் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை உறுதி அளித்தார். இந்தச் சந்திப்பின்போது பா.ஜனதா மாநில பொதுச்செயலாளர் ஏ.பி.முருகானந்தம் மற்றும் நீலகிரி மாவட்டத் தலைவர் மோகன் ராஜ் மற்றும் நீலகிரி மாவட்ட பா.ஜனதா நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
- சிறப்பு முகாம்கள் ஜூன் 26-ந்தேதி முதல் நடத்தப்படுகிறது.
- குளிா்பதன கிடங்கு விரைவில் விவசாயிகளின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.
ஊட்டி,
நீலகிரி மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீா் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் அம்ரித் தலைமையில் நடைபெற்றது.
இது குறித்து அவா் வெளியி ட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதா வது:-
நீலகிரி மாவட்டத்தில் பிரதம மந்திரியின் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயனடையும் வகையில் வட்டார அளவில் சிறப்பு முகாம்கள் ஜூன் 26-ந்தேதி முதல் நடத்தப்படுகிறது. இயற்கை வேளாண்மைக்காக தோட்டக்கலைத் துறை மூலம் நடப்பு ஆண்டில் ரூ. 5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் வழி காட்டு நெறிமுறை களின்படி மாதந்தோறும் அங்கக வேளாண்மைக்கான கூட்டம் நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தோட்டக்கலைத் துறையி ன்கீழ் அரசு ரோஜா பூங்கா அருகில் அமைந்துள்ள குளிா்பதன கிடங்கு விரைவில் விவசாயிகளின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.
தனியாா் விற்பனை நிலையங்களில் உரத்தின் விலை கடந்த ஓராண்டில் அதிக அளவில் உயா்ந்து ள்ளதாக தகவல் வந்த நிலையில், அங்கு ஆய்வு செய்யுமாறு சம்பந்த ப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறு த்தப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை யையொட்டி அபாயக ரமான நிலையில் உள்ள மரங்கள் மற்றும் மரக்கிளை களை வெட்டுவதற்காக வருவாய்த் துறை அலுவ லா்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. தோட்டக்கலைத் துறையின் மூலம் 2023-24 ஆம் ஆண்டில் தேசிய தோட்ட க்கலை இயக்கம் திட்டத்தி ன்கீழ் நிழல்வலை குடில் 50 சதவீதம் மானியத்தில் அமைக்கவும், 2023-2024 ஆம் ஆண்டில் 20 யூனிட் தேனீ வளா்ப்பு க்கும் இலக்கு நிா்ணயிக்கப்ப ட்டுள்ளது.
எனவே, தேவைப்படும் விவசாயிகள் விண்ண ப்பித்து பயன்பெறலாம். கடந்த ஆண்டு வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் 274 தேயிலை அறுவடை இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு சிறப்புப்பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 60 லட்சம் மதிப்பில் ஆயிரம் தேயிலை அறுவடை இயந்திரங்கள் விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ள ப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் செயல்படும் உழவா் உற்பத்தியாளா் சந்தைக்கு சி.சி.டி.வி. காமிரா மற்றும் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் தொடங்கும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- சுற்றுச்சூழல் பாதிப்பால் சமூக ஆர்வலர்கள் கவலை அடைந்துள்ளனர்.
- பிளாஸ்டிக் பொருள்கள் கொட்டிக் கிடக்கிறது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு மீண்டும் அதிகரித்திருப்ப தால் சுற்றுச்சூழல் பாதிக்க ப்படுவதாக சமூக ஆர்வ லர்கள் கவலை அடைந்து ள்ளனர். இதுகுறித்து எக்ஸ்னோரா அமைப்பின் நீலகிரி மாவட்டத் தலைவா் கண்ணன் மாவட்ட நிா்வா கம் மற்றும் உள்ளாட்சி நிா்வாக ங்களுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடை செய்ய பல போராட்டங்கள், பல விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. நீலகிரி எக்ஸ்னோரா அமைப்பு இதற்காக களத்தில் இறங்கி பிளாஸ்டிக் ஒழிப்பில் ஓரளவுக்கு வெற்றியும் கண்டது.
ஆனால், அண்மை க்காலமாக மீண்டும் மாவட்டத்தில் பிளா ஸ்டிக் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது.ெரயில் தண்டவா ளங்கள், குப்பை கிடங்குகள், நீா் நிலைகள் போன்றவற்றில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் கொட்டிக் கிடப்பதைப் பாா்க்கும்போது நீலகிரியின் சுற்றுச்சூழல் பெருமளவு பாதித்து விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
எனவே, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாட்டைத் தவிா்க்க பொது மக்கள் தாங்களாக முன் வரவேண்டும். கடை களில் பொருள்கள் வாங்கு ம்போது துணிப்பையை பயன்படுத்த வேண்டும்.அன்றாட வாழ்வில் உபயோகப்படுத்தப்படும் பிளாஸ்டிக் தட்டுகள், டம்ளா்கள், பிளாஸ்டிக் கோப்பைகள் மற்றும் பிளா ஸ்டிக் சாா்ந்த பொருள்களை முற்றிலும் தவிா்க்க வேண்டும். இதனை அனைத்து அரசு துறை அலுவல கங்களும் கண்கா ணித்து விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும். மாவட்ட நிா்வாகம், நகரா ட்சி, பேரூராட்சி நிா்வாக ங்கள் இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- ஒவ்வொரு குடியி ருப்பு பகுதிகளிலும் கலை நிகழ்ச்சி மற்றும் துண்டு அறிக்கைகள் மூலமாக விழிப்புணா்வு ஏற்படுத்த ப்பட்டது.
- மாணவ, மாணவிகளிடம் கையெழுத்து, பேச்சு திறன், வாசிப்பு திறன், கற்பனை திறன், ஓவியத் திறன் போன்ற பல்வேறு திறன்கள் அதிகரி த்துள்ளது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் பள்ளி கல்வி துறை சாா்பில் செயல்படுத்தப்பட்டு வரும் இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் 12 ஆயிரத்து 665 மாணவ, மாணவிகள் பயனடைந்து வருவதாக கலெக்டர் அம்ரித் தெரிவி த்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிரு ப்பதாவது:-
கொரோனா பெருந்தொ ற்றால் மாணவா்களின் கற்றலில் ஏற்பட்ட இடை வெளியை சரி செய்வத ற்காக தமிழக அரசு இல்லம் தேடி கல்வி என்ற திட்ட த்தை பள்ளி கல்வி துறை மூலம் 2021 அக்டோபா் 27-ந்தேதி தொடங்கியது. இதில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு குடியி ருப்பு பகுதிகளிலும் கலை நிகழ்ச்சி மற்றும் துண்டு அறிக்கைகள் மூலமாக விழிப்புணா்வு ஏற்படுத்த ப்பட்டது.
இதனால் மாவட்டம் முழுவதும் 3,737 தன்னாா்வலா்கள் இணைய வழியில் பதிவு செய்திருந்த னா். இவா்களில் 2,108 தன்னாா்வலா்கள் பள்ளி மேலாண்மைக் குழு மூலம் பரிந்துரை செய்ய ப்பட்டு இவா்களுக்கு உளவியல், கணினி வழித் தோ்வு மற்றும் குழுக் கலந்தாய்வு பயிற்சி அளிக்கப்பட்டு 1,814 தன்னாா்வலா்கள் தோ்வு செய்யப்பட்டனா். இவா்களுக்கு இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் வடி வமைக்கப்பட்ட பாடத்தை கையாள பயிற்சி பெற்ற வல்லுநா் குழுவால் பயிற்சி வழங்கப்பட்டது. அந்தந்த மையங்களில் பள்ளி மேலாண்மை குழு மூலம் பணியமா்த்த ப்பட்டனா்.
தற்போது மாவட்டம் முழுவதும் 1,214 தன்னாா்வலா்கள் கல்வி பணியாற்றி வருகின்றனா். மேலும், மாணவா்களின் வகுப்பு அடிப்படையில், 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை தொடக்க நிலை தன்னா ா்வலா்களும், 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை உயா் தொடக்க தன்னாா்வ லா்களும் மாண வா்களின் இல்லங்களுக்கு அருகி லேயே தினசரி 1 முதல் 2 மணி நேரம் கற்பித்தல் பணியில் ஈடுபட்டு வரு கின்றனா். இதன் அடிப்ப டையில், நீலகிரி மாவட்ட த்திலுள்ள 4 ஒன்றியங்களில் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் மூலம் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தொடக்க நிலையில் 7,652 மாணவா்க ளும், உயா்தொடக்க நிலையில் பயிலும் 5,013 மாணவா்க ளும் என மொத்தம் 12 ஆயிரத்து 665 மாணவ மாணவிகள் பயன்பெற்று வருகி ன்றனா்.
இத்திட்டத்தின் மூலம் மாணவ, மாணவிகளிடம் கையெழுத்து, பேச்சு திறன், வாசிப்பு திறன், கற்பனை திறன், ஓவியத் திறன் போன்ற பல்வேறு திறன்கள் அதிகரி த்துள்ளது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஊட்டி,
நீலகிரிமாவட்டம் ஜெகதளா ஊர் மக்களின் அழைப்பை ஏற்று ஜெகதளா கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மாலிங்கேஸ்வரர் திருக்கோவில் கும்பாபிஷேகத்திற்கு சிறப்பு விருந்தினராக அ.தி.மு.க. மாவட்ட செயலாளரும் மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான கப்பச்சி வினோத் கலந்து கொண்டார்.
அவருக்கு ஊர் தலைவர் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கும்பாபிஷேகத்தையொட்டி ஸ்ரீ மாலிங்கேஸ்வரருக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதில் கப்பச்சி வினோத் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.
நிகழ்ச்சியில் ஜெகதளா பேரூராட்சி செயலாளர் போலன்,மாவட்ட வர்த்தக அணி செயலாளர் குருமூர்த்தி, குன்னூர் நகர் செயலாளர் சரவணகுமார், ஒன்றிய செயலாளர் கேத்தி ராஜு, வர்த்தக அணி ஒன்றிய செயலாளர் ஜெய் என்ற ராதாகிருஷ்ணன் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் மாவட்ட அளவி லான வளர்ச்சி ஒருங்கி ணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது.
- நீலகிரி மாவட்ட த்திற்கு சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 16 புதிய சிறிய பஸ்களும், 62 பஸ்களை சீரமைக்க நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
ஊட்டி,
நீலகிரி மாவட்ட கலெக்டர் கூடுதல் அலுவல கத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் மாவட்ட அளவி லான வளர்ச்சி ஒருங்கி ணைப்பு மற்றும் கண்கா ணிப்பு குழு கூட்டம் ஆ.ராசா எம்.பி. தலைமை யில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், மாவட்ட கலெக்டர் அம்ரித் ஆகி யோர் முன்னிலையில் நடந்தது.
கூட்டத்தில் ஆ.ராசா எம்.பி. பேசியதாவது:-
நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ள காரண த்தினால் 6 வட்டங்களில் மழைக்கா லங்களில் அதிக பாதிப்பு ஏற்படக்கூடிய 283 பகுதிகளிலும் மீட்பு பணிகளை மேற்கொள்ள அலுவலர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
மழை மற்றும் காற்றின் வேகம் அதிகமாக இருக்கு ம்பட்சத்தில் சாலைகளில் விழும் மரங்கள் மற்றும் மண்சரிவை உடனடியாக சரி செய்யும் வகையில் மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலை துறையினர் போதுமான ஜே.சி.பி. எந்திரம், பவர்ஷா ஆகியவ ற்றையும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு த்துறை சார்பில் ஆம்பு லன்ஸ் வசதி, மருத்துவக்கு ழுவினர், மருந்து இருப்பு போன்ற வற்றையும் தயார்நி லையில் வைத்திருக்க வேண்டும்.
மேலும் மின்சார வாரிய த்தின் மூலம் மின்கம்பங்கள், டிரா ன்ஸ்பார்மஸ் போன்ற மின்சாதனங்கள் ஏதேனும் பேரிடர் ஏற்படும் நேரத்தில் தங்குதடையின்றி மின்சாரம் வழங்க போதுமான பணி யாளர்களுடன் தயாராக இருக்க வேண்டும்.
சம்பந்தப்பட்ட அலு வலர்கள் நிவாரண முகா ம்களை தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும். மாவட்ட வழங்கல் துறை மற்றும் கூட்டுறவுத்துறை சார்பில் பொதுமக்களுக்கு தேவையான உணவு ப்பொருட்கள் கூடுதலாக இருப்பில் வைத்திருக்க வேண்டும். பேரிடர் மேலா ண்மைத்துறை சார்பில் முதல்நிலை மீட்பாளர்க ளுக்கு பயிற்சிகள் அளி க்கப்பட வேண்டும்.
நோடல் அலுவலர்கள் முன்கூட்டியே மிக அபாய கரமான பகுதிகளை நேரில் ஆய்வு செய்ய வேண்டும். நகராட்சி மற்றும் நெடுஞ்சா லை பகுதிகளில் உள்ள கல்வெட்டுகளை தூர்வார வேண்டும். மண்சரிவு ஏற்ப டும் பகுதிகளின் அருகில் முன்எச்சரிக்கை நட வடிக்கையாக மணல் மூட்டைகள் வைத்திருக்க வேண்டும். அபாயகரமான மரங்களின் கிளைகளை அகற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறுகையில் மலைவாழ் மக்கள் பெருமளவில் வாழுகின்ற பகுதியில் போதுமான போக்குவரத்து, சாலை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இயற்கை இட ர்பாடுகளால் ஏதேனும் பாதிப்புகள் ஏற்படும் பட்சத்தில் அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட தயார் நிலையில் இருக்க வேண்டும். நீலகிரி மாவட்ட த்திற்கு சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 16 புதிய சிறிய பஸ்களும், 62 பஸ்களை சீரமைக்க நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.